இன்ட்ரோ
ஒரே ஒரு பாடல் ஒரு ரசிகனை திரையரங்குக்குள் இழுக்குமா என்று சந்தேகப்படுபவர்கள் இந்தப் படத்தின் முதல் காட்சிக்கு சேர்ந்த கூட்டம் கட்டியம் கூறும். விவேகமாக புதன்கிழமையே வெளியிட்டு காந்தி ஜெயந்தி விடுமுறையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட அறிவிற்கு ஒரு சல்யுட். சரி கதைக்கு வருவோம்.
கதை
அலுவலகம், காதலி என இருபுறமும் பிரஷர் அதிகரிக்க குடி ஒன்றே தீர்வு என்று முடிவெடுத்து போதையில் ஒரு விபத்தில் மாட்டிக் கொள்ளும் பாலா மற்றும், எதிர்த்த வீட்டுப் பெண் குமுதா ஹீல்ஸ் செருப்பாய் பாவித்த போதும், அவரது தந்தை அடியாட்கள் வைத்து அடித்த போதும் களங்கப்படாத தன் காதலுக்காக துடிக்கும் சுமார் மூஞ்சி குமார் ஆகியோர் எப்படி காதலில் வென்று குடியையும் விடுகிறார்கள் என்பதே கதை.
ஆக்க்ஷன்
படத்தின் இயக்குனர் உலகத்துக்கு எதோ செய்தி சொல்ல வருகிறார் என்று இன்டர்வெல் போடும்போது புரிந்தது. ஆனால் அவர் சொன்ன அதே விஷயத்தை படம் போடுவதற்கு முன் முகேஷ் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சொல்லி விடுவதால் இவர் இரண்டரை நேரம் கழித்து சொல்லும் மெசேஜ் குமுதாவை மட்டுமே ஹேப்பியாக வைக்க உதவுகிறது. கடைசி அரை மணி நேரம் தவிர மீண்டும் யாயா பார்ட் டூ பார்ப்பது போன்ற உணர்வு. (சீட்டின் முன்னும் பின்னும் நகர்ந்து எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது.) சென்னைத் தமிழ் என்ற பெயரில் ரொம்ப கலீஜாக டயலாக் பேசும் விஜய் சேதுபதி குடும்பம். அதற்கு எதிர்த்த வீட்டில் இருக்கும் ராஜா குடும்பத்தினர் சென்னைத் தமிழ் பேசாதது முரண். மங்காத்தா "அஸ்வின்" ஒக்கே.. ஆனால் ரோமென்ஸ் காட்சிகளில் இன்னும் தேர்ச்சி அவசியம்.விஜய் சேதுபதி பீட்சா, சூது கவ்வும் படங்களில் காட்டிய டிக்கேஷனை, சாரி டெடிக்கேஷனை இந்தப் படத்தில் காட்டவில்லையோ என்று தோன்றியது. காமெடி என்ற பெயரில் பசுபதியின் முன் இவர் செய்யும் சேஷ்டைகள் அறுவை. கொஞ்சம் வேறு மாதிரியான ரோல்களை தேர்வு செய்யாவிடில் "மிர்ச்சி" சிவாவின் நிலைதான் இவருக்கும். சுவாதி அழகான அடங்காப்பிடாரி. தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை பாங்காய் செய்கிறார். மற்றொரு கதாநாயகி நந்திதா. இவருக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பிருந்தும் பெரிதாய் ஒன்றும் செய்ததாய் தெரியவில்லை. சொற்ப காட்சிகளில் வரும் M.S. பாஸ்கர், ராஜேந்திரன், சூரி ஆகியோர் கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.
இசை-இயக்கம்
இசை சித்தார்த் விபின் பாடல்கள் தவிர பின்னணி இசையில் சுமார் மூஞ்சி குமாருக்கு கம்பெனி கொடுக்கிறார். இயக்கம் "ரௌத்திரம்" படம் இயக்கிய கோகுல். காமெடி படம் கொடுக்க நினைத்து பல்பு வாங்கியிருக்கிறார். இவர் இனி சீரியஸ் படங்களை இயக்குவது நலம்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
மிகவும் பிடித்த "ப்ரேயர் சாங்" படமாக்கிய விதம் சுமார் என்றாலும் இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் ஆனந்த ராசா என்று கூறுவது போல் இருந்தது. "ஏனென்றால் இன்று உன் பிறந்த நாள்" பாடல் அருமை. நகைச்சுவை என்பது கஷ்டமான ஒன்றுதான் என்பது இதுபோன்ற படங்களை பார்க்கும்போது தெரிகிறது.
Aavee's Comments - Could've done better to make Audience laugh.
ஆசைப்பட்டது தேறி விட்டது தானே...? இருப்பதிலேயே சிரிக்க வைப்பது சிரமமான ரோல் தான்... நல்ல விமர்சனம்...
ReplyDeleteஆஹா, நல்லா இருந்தா சந்தோஷப்படற முதல் ஆள் நான்தானே..
Delete‘பால குமாரனை’ பார்த்து புண் பட்ட மனதை ‘ராஜா ராணி’ பார்த்து ஆற்றவும்.
ReplyDeleteஇன்று எனக்கு அதிர்ஷ்ட தினம் போலும்... ‘பாலகுமாரனிடமும்...அருண் தமிழ் ஸ்டூடியோவிடமும்’
இனி கஷ்டப்பட வேண்டி இருக்காது.
உங்களை தண்ணி தெளிச்சி விட்டாச்சு அங்க இருந்து..சந்தோசப்படுவீங்களா..அதை விட்டுட்டு..
Deleteமறுபடியும் ராஜாராணியா??
Deleteஅன்னிக்கே சொன்னார் பாஸ்கரன் சார்...இந்தப்படம் ஓடாது அப்படின்னு...நீதான் சூது கவ்வும் அப்படின்னு மகாபாரதம் ராமாயணம் கதை எல்லாம் சொல்லி ஓடும்னு சொன்ன...இப்போ பார்த்தியா...பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி...இனியாவது அடக்கமா சொல்றத கேளு மச்சி..
ReplyDeleteஆமா மச்சி.. நேம் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆயிடுச்சி.. மகாபாரதம் இதிகாசமாமே.. நாவல்ல சேர்த்தி இல்லையாமே.. ;-)
Deleteஇவர் எடுத்த ஆக்ஷன் படமும் மொக்கையாக தான் இருந்தது
ReplyDeleteஇத விட அது பரவாயில்ல பாஸ்!!
Deleteபயங்கர காமெடி படமாக இல்லை என்றாலும் பரவாயில்லை ரகம் தான்
ReplyDeleteகடைசி அரைமணி நேரம் ஒக்கே.
Deleteவிஜய் சேதுபதிக்கு முதல் தோல்வி?
ReplyDeleteஇன்று சேர்ந்த கூட்டத்தைப் பார்த்தால் சுமாராக ஓடிவிடும் என்றே தோன்றுகிறது.
Deleteஸோ, பார்க்க வேணாங்கறீங்க, நல்லது!
ReplyDelete'நடுவுல கொஞ்சம்...' பார்த்து இவரது நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. பீட்ஸா லேயும் விஜய் சேதுபதி தானே?
எல்லோரும் விஜய சேதுபதியை பாராட்டறாங்க! நீங்க சரியா நடிக்கலைன்னு சொல்றீங்க! வித்தியாசமான பார்வைதான்!
ReplyDeleteஒவ்வொரு பகுதியையும் விளக்கி விமர்சனம் கொடுத்தது ரசிக்க வைத்தது...... இப்போ பார்க்கனுமா, வேண்டாமா அப்படின்னு தோணுது !
ReplyDeleteஇசை, பாடல்கள் : கோவை ஆ.வி...???
ReplyDeletevisit : http://worldcinemafan.blogspot.in/2013/10/blog-post.html
hahaha,.. paarthen boss..
Deleteவிமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html
சென்னைப்பயணம் முடிந்ததா ?
ReplyDeleteவாங்க வாங்க வலைச்சரத்திலும் ஆவி புகுந்து விட்டதாம்..
http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html?showComment=1381289857959#c6032878679408769451