பஸ் கிராயூரை அடைந்ததும் நான் இறங்கி கொஞ்சம் தயங்கியபடியே அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகே இருந்த ஒரு பஞ்சாயத்து டிவி வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன். நான் அங்கிருந்து அவள் வீட்டின் வாயிலை நோக்கியபடியே அவள் முன்னால் தென்பட வேண்டுமென கடவுளை பிரார்த்தித்தேன். அன்றும் கடவுள் என் பக்கமே இருந்தார். நான் நினைத்த இரண்டாவது நிமிடம் அந்த வீட்டினின்றும் அவள் வெளியே வந்தாள். ஆனால் முகத்தில் ஒரு பதட்டம் தெரிந்தது. அவளைக் கண்டதும் ஓடிச்சென்று பேச எண்ணிய போதும், அவள் தவறாக எண்ணிக் கொள்வாளோ என்று நினைத்து அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னால் சென்று மறைய முற்பட்டேன்.. ஆனால் அவள் என்னைப் பார்த்துவிட்டாள் என்பதும் என்னை நோக்கி வருகிறாள் என்பதையும் உணர்ந்து முன்னால் வந்தேன்.
அவள் அவசரமாக ஓடி வந்து என்னிடம் "ஆனந்த், நல்லவேளை நீங்க வந்தீங்க.. கொஞ்சம் என்கூட வாங்க" என்றபடி அவள் வீடு நோக்கி சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து சென்ற நான் வீட்டின் வாயிலில் நின்றேன். "உள்ள வாங்க" என்றாள். நான் தயங்கியபடி நிற்க அவள் என் கரம் பற்றி உள்ளே அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தாள். அப்போதுதான் கவனித்தேன் அந்த அறையின் ஒரு ஓரத்தில் எங்களுடன் படிக்கும் சிவா என்கிற சிவசங்கரி படுத்திருந்தாள். "சிவாவுக்கு ஈவ்னிங் வந்ததிலிருந்தே வயித்து வலி. யார்கிட்ட ஹெல்ப் கேக்கறதுன்னு தவிச்சுட்டு இருந்தேன். வெளியே வந்ததும் உங்களைப் பார்த்தேன். அவளை மோகனூர் வரை கூட்டிட்டு போகணும்." தன் கைப்பையை எடுத்தபடி பேசிய ரமாவிடம் ஒன்றும் பேசாமல் சிவாவின் அருகில் சென்றேன்.அதற்குள் ரமாவும் வந்துவிட இருவரும் அவளைக் கைத்தாங்கலாய் பிடித்து மெதுவாய் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்து வந்தோம். அந்த ஊரில் ஆட்டோவோ, டாக்சியோ இல்லாத காரணத்தால் பஸ்ஸிலோ, ட்ராக்டரிலோ தான் மோகனூர் செல்ல வேண்டும்.
சில மணித்துளிகள் காத்திருப்புக்குப் பின் பேருந்து ஒன்று அங்கு வர, எங்கள் இருவரின் உதவியுடன் பஸ்ஸில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள் சிவா. அருகில் துணைக்கு ரமாவும் அமர நான் அருகிலிருந்த கம்பியில் சாய்ந்தபடி நின்றிருந்தேன். மோகனூர் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு நான் வெளியே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் வெளியே வந்த ரமா என்னிடம் மருந்து சீட்டு ஒன்றைக் கொடுத்து வாங்கி வரும்படி சொன்னாள். மாதக் கடைசி என்பதால் என் கையில் அவ்வளவாக பணம் இல்லை. நான் நிற்பதை பார்த்து தன கைப்பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து என் கையில் திணித்தாள் . அதை வாங்கும்போது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. மருந்துகளை வாங்கி வந்ததும் "ஆனந்த், லேட் ஆயிடுச்சு..இப்பவே பசிக்குது. இனி வீட்டுக்கு போய் சமைக்கிறது நடக்காத காரியம். பக்கத்துல கடையில ஏதாவது பரோட்டா வாங்கி வர முடியுமா.. மூணு பேருக்கும் வாங்கி வந்துடுங்க. நாம வீட்டுக்கு போய் சாப்பிடலாம்." என்றவாறே மீண்டும் பணத்தை எடுக்க தன் கைப்பையை திறக்க, நான் "மருந்து வாங்கினது போக பாக்கி இருக்கு.. அது போதும்" என்று சொல்லிவிட்டு கடைக்கு சென்றேன்.
இந்த இடத்தில் அவளிடம் பணம் வாங்காமல் நான் செலவு செய்திருக்க வேண்டுமென தோன்றியது. மனதில் அது ஒரு சஞ்சலமாகவே இருந்தது. காசு இல்லாதவனுக்கு காதல் தேவையா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றியது. பரோட்டாவை வாங்கிக் கொண்டு அவர்கள் இருவருடன் பஸ் ஏறினேன். பஸ் புறப்பட சிறிது நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு நடத்துனர் இறங்கிச் சென்றார். காலியாக இருந்த அந்த வண்டியின் கடைசி இருக்கையில் சிவா படுத்துக் கொள்ள அவள் தலையை தன் மடியில் வைத்தபடி ரமா அமர, ரமாவுக்கு அருகில் நான் அமர்ந்தேன். "ஆனந்த், கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம கடவுள வேண்டிகிட்டு இருந்தேன். வெளிய வந்து பார்த்தா நீங்க நிக்கறீங்க. ஆமா நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க அங்கே" என்று கேட்டதும் ஒரு நிமிடம் தடுமாறி பின் சுதாரித்து "உனக்கு ஏதோ உதவி தேவைப்படுதுன்னு கடவுள் தான் இந்த தேவதூதனை அனுப்பி வைத்தார்" என்று சொல்லவும் சிரித்துவிட்டு "எனிவே, ரொம்ப தேங்க்ஸ் ஆனந்த். உங்களை கடைக்கு எல்லாம் போகச் சொல்லி ரொம்ப கஷ்டப் படுத்தீட்டனா?" "ஏய், என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அதுசரி டாக்டர் என்ன சொன்னாங்க?"
"ஜஸ்ட், கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் தானாம். வேற ஒண்ணும் இல்லையாம்" என்றவளிடம் "எனக்கு ஒரு டவுட்டு." "என்ன" "இல்ல இன்னைக்கு நீ செய்த பாயாசத்தை அவ குடிச்சிருப்பாளோன்னு தான்" என்றதும் ஓரிரு நொடிகள் யோசித்து பின் அர்த்தம் புரிந்ததும் என் தோள்களில் செல்லமாய் ஒரு குத்து விட்டாள். நடத்துனர் ஏறி டிக்கட் கொடுக்க பஸ் புறப்பட்டது. "ஆனந்த், நம்ப விஷயத்த கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரியாம பார்த்துக்கணும். சரியா".. "நம்ப விஷயமா, என்னது அது?" என்று கேட்கவும் ரமா என்னை முறைக்க "ஒ..நம்ப லவ் மேட்டர் சொல்றியா" என நான் உரக்க கேட்கவும் "நான் எதுவும் கேட்கல" என்றாள் சிவா கண்களை மூடிக் கொண்டே. மூவரும் ஒருசேர சிரிக்க பஸ் கிராயூரை அடைந்தது. அவர்கள் வீட்டில் மூவரும் உண்டுவிட்டு பின் அவர்களிடமிருந்து விடைபெற்று இரவு பத்து மணிக்கு மேல் பஸ் எதுவும் இல்லாததால் வண்டிகேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இரண்டரை கிலோமீட்டர் தூரத்தையும் ரமாவைப் பற்றிய நினைவுகளோடு என்னால் எளிதாக கடக்க முடிந்தது.
சந்தோஷ எண்ணங்கள் அலைமோத நான் காம்ப்ளெக்சுக்கு வந்து சேர்ந்தேன். படுக்கையில் கிடந்தவுடன் அன்றைய நிகழ்வுகளை மனம் அசை போட்டது. ரமா தன் காதல் சொன்ன கணம் தேனாய் என் எண்ணங்களில் தித்தித்தது. மாலையில் மருத்துவரிடம் சென்ற போது அவள் பணம் கொடுத்ததை நினைத்தபோது மனதில் மீண்டும் ஒரு சஞ்சலம். பெற்றோரின் காசில் காதலிக்கு வாங்கிக் கொடுக்கும் மல்லிகைப் பூ மணக்குமா? அது நியாயமாகவும் இருக்காது என்று என் மனம் எனக்கு எதிராக வாதாடியது.. ஒரு முடிவுக்கு வரும்முன் உறங்கிப் போனேன்.
தொடரும்..
வணக்கம்
ReplyDeleteகதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.. உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி..
Deleteநியாமான எண்ணம் தான் மனதில்...! என்ன முடிவு முடிவில்...?
ReplyDeleteஆவலுடன்...
தொடர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது தனபாலன்.. நேற்று கொஞ்சம் முயற்சி செய்து முகப்பில் "Tab" ஐ வைத்துவிட்டேன்.. உங்க Tips உதவியாக இருந்தது.
Deleteமிகவும் சிம்பிளா அழகாக உள்ளது...
Deleteநன்றி DD
Deleteநன்றி ஐயா.. முதல் வருகைக்கும் கருத்துக்கும்..
ReplyDeleteபெற்றோரின் காசில் காதலிக்கு வாங்கிக் கொடுக்கும் மல்லிகைப் பூ மணக்குமா?
ReplyDelete>>
த்தோ பாருடா! பொறுப்பு வெளக்கெண்ணை. அதுக்காக, 10 வதுலயே சமபாதிக்க முடியுமா!? கல்லூரியில் படிக்கும்போது அப்பா காசில் காதலிக்கலாம். ஆனா, மணம் முடிக்கும்போது சொந்த காசுல மாலை வாங்கனும்.
// பொறுப்பு வெளக்கெண்ணை.//
Deleteஇப்படி அன்பா சொல்லி வழிகாட்ட ஒரு அக்கா இல்லே எனக்கு.. அதனால தான் கொஞ்சம் பொறுப்பா இருந்துட்டேன் அக்கா.. ;-)
உறங்கிப் போன ஆனந்த்'பொன் மகள் வந்தாள்'னு அடுத்து கனவு காணுவாரோ?
ReplyDeleteத.ம 4
ஹஹஹா.. பகவான்ஜி.. அந்த நேரம் "எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா" தான்!!
Deleteபரவாயில்லையே..நியாயமாக யோசித்திருக்கீங்க...இப்படி எல்லோரும் யோசிச்சா நல்லாயிருக்கும்...
ReplyDeleteஅப்பாடா, நமக்கு சப்போர்ட் பண்ணவும் ஒரு ஆள் இருக்காங்கப்பு..
Deleteபெற்றோரின் காசில் காதலிக்கு வாங்கிக் கொடுக்கும் மல்லிகைப் பூ மணக்குமா? //
ReplyDeleteஉங்களுக்கு செலவுக்கு தந்த காசை நீங்க செலவு பண்ணாம காதலிக்கு மல்லிப்பூ வாங்கி கொடுத்தது நிச்சயம் மணக்கவே செய்யும் - அனுபவம் ஹி ஹி
ஆனாலும் ஒரு குற்ற உணர்வு இருந்தது அண்ணே..
Deleteவாழ்த்துக்கள்... தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றிங்க குமார்..
DeleteWritten very decently. Please keep it up.
ReplyDeleteThanks Mohan!!
Deleteகாதலுக்கு கண்ணுஇல்லனு சொன்னாலும் உணர்வு இருக்காம் பாருங்க என்னமா யோசிக்கிறாங்க... அவங்களுக்கு வீட்டில ராஜி அக்கா மாதிரி அன்பா சொல்லி திருத்த ஒரு அக்கா இல்ல போல..ஹஹஹ
ReplyDeleteஆமாங்க, அவங்க திட்றதே எவ்வளவு அழகா இருக்கு பாருங்க..!!
Deleteஅப்புறம் கதை என்ன ஆச்சு?
ReplyDeleteகொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஜி.டி.!!
Deleteசுவாரஸ்யம் அதிகரிக்கிறது! தொடர்கிறேன்!
ReplyDeleteவாங்க நண்பா..
Deleteஆங்...! அப்றம் .....!
ReplyDeleteஐ லைக் பொறுப்பு வெளக்கெண்ணை..... :-)
இதெல்லாம் தவறாம லைக் பண்ணிடுவியே!!
Deleteகாசு இல்லாதவனுக்கு காதல் நிச்சயம் சுமை தான்... அர்த்தம் உணர்ந்த வரிகள் :(
ReplyDeleteநன்றி ரூபக். ஒருத்தராவது இத பீல் பண்ணியிருக்கீங்களே!!
Delete