Friday, October 25, 2013

ஆவி டாக்கீஸ் -சுட்ட கதை


இன்ட்ரோ  
                             கொரிய மொழிப் படத்த பால் கூட ஊத்தாம அப்படியே பிளாக் காப்பி போட்டுட்டு பிளாக் காமெடிங்கிற பேர்ல உலவ விட்றவுங்க மத்தியில "சுட்ட கதை" ன்னு பேர் வச்சிருக்கிற இவங்க நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா எங்கிருந்தாவது சுட்டாவது படமெடுத்திருக்கலாம்னு கடைசில தோணிச்சு.. சரி விடுங்க, இந்தப் படத்துல கண்டிப்பா ட்விஸ்ட் இருக்குன்னு நான் படம் தொடங்கிய பதினைந்தாம் நிமிடத்தில் உலகசினிமா ரசிகனிடம் சொன்னேன். அதே போல் இரண்டாம் பாதி முழுக்க ட்விஸ்ட் தான்!!




கதை        
                                திருட்டுப் பசங்க நிறைஞ்ச ஒரு மலையோர கிராமத்துல ஒரு போலிஸ் ஸ்டேஷன். எல்லா நேரமும் தூங்குற இன்ஸ்பெக்டர் (நாசர்) நேர்மையாக வேலை செய்யும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ( பாலாஜி மற்றும் வெங்கடேஷ்), எப்போதும் பகையுடன் அலையும் அரச குடும்பம் ( சிவாஜி ) மற்றும் பழங்குடி இனத்தவர் ( MS பாஸ்கர், லக்ஷ்மிப்ப்ரியா ). ஆண் போல் அசத்தும் பழங்குடிப் பெண் லக்ஷ்மியை இரு தலையாய் (?!!) காதலிக்கின்றனர் கான்ஸ்டபிள் பாலாஜி மற்றும் வெங்கி. ஆனால் அவளோ தன் தந்தையை கொன்றவனை பழிவாங்க செல்கிறாள். குடி போதையில் முகம் தெரியாத ஒருவரை பாலாஜி சுட்டுவிட அதைத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளே கதையின் முடிச்சு.

                                                                                                                     ஆக்க்ஷன் 
                                ஹீரோவாக புரமோஷன் பாலாஜிக்கு, நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார். நண்பராக வரும் வெங்கடேஷ் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.. இருவரும் சேர்ந்து சொதப்பும் காட்சிகள் சில நம்மை சிரிக்க வைக்கின்றன. உதாரணம் சைக்கிள் திருடனை துரத்தும் காட்சி.. கதாநாயகி லக்ஷ்மிப் பிரியா, இந்திய கிரிக்கட் அணியில் இருந்தவராமே. கௌரவம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை அருமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுத்தால் நல்ல உயரம் போகலாம். ஜெயபிரகாஷ், நாசர், ms பாஸ்கர், சிவாஜி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.

                              கான்ஸ்டபிள் சிங்கமாக வருபவர் வரும்போதெல்லாம் தண்ணி டேங்க் சப்தம்  கொடுப்பது நல்ல ஹ்யூமர். கதாநாயகனின் திருட்டு குணம், மற்றொருவனுக்கு காது கேட்காதது என சின்ன சின்ன விஷயங்கள் படத்தின் காமெடி ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது. இடையிடையே சாம்பசிவம் துப்பறியும் நாவல் காமெடி புதிய டெக்னிக்.



                                                                                                          இசை-இயக்கம்
                            இசை மேட்லி ப்ளுஸ் - படத்தின் லாஜிக் ஓட்டைகளை அடைக்க இசைதான் உதவுகிறது. பாடல்களுக்கு SPB மற்றும் MSV ஆகியோரை பயன்படுத்தியிருப்பது இனிமை. காட்டுக்குள் சென்று இப்படி ஓர் படம் எடுத்த இயக்குனர் சுபுவுக்கு பாராட்டுகள். அதே சமயம் கொஞ்சம் கதையுடன் சேர்த்து படம் எடுக்கும் போது மக்களும் ரசிக்க முடியும். 


                                                                         ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                            ஸ்லோவாக போய்க் கொண்டிருக்கும் படத்தை சரியான சமயத்தில் ஸ்டடி செய்யும் டிங்கு டாங்கு குத்து சாங்கு பாடல் SPB யின் குரலில் நம்மை நிமிர்ந்து உட்கார செய்கிறது. ஹீரோயினின் ATTITUDE படத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கிறது. பலத்த விவாதத்திற்கு இடையில் புலி உறுமும் சப்தம் கேட்க "உஷ்.. பேசிகிட்டு இருக்கோம்ல" எனும் காட்சி நல்ல நகை. சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மொக்கை இல்லை.


                  Aavee's Comments - Comedy rarely tickles us.                           

26 comments:

  1. வணக்கம்
    ஆனந்(அண்ணா)

    பதிவு அதிரடியாகத்தான் உள்ளது ..ஆவி என்றால் சும்மாவா???வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அப்போ படம் அவ்ளோ தானா?

    ReplyDelete
    Replies
    1. ஒருமுறை பார்க்கலாம்!! :)

      Delete
  3. படத்தோட ட்ரைலர் கூட சுவாரிசியமா இல்ல ஆவி......2 நிமிஷ ட்ரைலரே ரொம்ப ஸ்லோவா போச்சு.. படமும் அப்படி தான் போல..

    ReplyDelete
    Replies
    1. ராஜ், ட்ரைலர் மாதிரியே தான் இருந்தது படமும்.. அதுல இருந்த அளவு காமெடி எல்லாமே, கூடவும் இல்ல குறையவும் இல்லே..

      Delete
  4. சுட்ட கதை தயாரிப்பாளர் கையைச் சுட்டுவிட்டதா?
    பதிவு அருமை.

    ReplyDelete
    Replies
    1. அவர் கையை சுட்ட கதையை பார்ட்-2 வா எடுப்பாரோ?

      Delete
  5. அந்த டைரக்டரோட நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு!படம்................தெரியல,நெட் ல வந்தா பாப்போம்!!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை பாருங்க.. அவ்வளவுதான் ஒர்த்!

      Delete
  6. அந்த ஒருமுறை கூட டி.வி.டி.ல கிடைக்கறப்ப பாத்துக்கலாம்னு நெனக்கிறேன் ஆவி. சரிதானே...!

    ReplyDelete
    Replies
    1. நூற்றி இருபது கொடுக்காம சின்ன தியேட்டர்ல வேணும்னா பார்க்கலாம். இல்லே நீங்க சொன்ன மாதிரியும் பண்ணலாம். ஹஹ்ஹா.

      Delete
  7. மொக்கை...மரண மொக்கை...யாயா என்ற வகைகளில் இப்படத்தை எந்த வகையில் சேர்ப்பது? என குழம்பிப்போயிருந்தேன்.
    உங்கள் பதிவு தெளிவாக்கியது.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. யாயா ன்னு தனியா ஒரு வகையே உருவாக்கிய உமது "நய்யாண்டி" யை ரசிக்கிறேன்..

      Delete
  8. வாத்தியார் சொன்னது போல் நானும் நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. டிடி பாஸ், எந்த தலைவர்ன்னு தெளிவா சொல்லுங்க.. மேலே எங்க வாத்தியார் பாலகணேஷ் இருக்காக , உலக சினிமாவின் வாத்தியார் இருக்காக, தமிழ் சினிமா உலகின் வாத்தியார் எம்ஜியார் இருந்தாக.. நீங்க யார் சொன்னது மாதிரி நினைக்கறீங்க.. ஒரே குழப்பமா இருக்கு..

      Delete
  9. ஒரு படத்த விடுறது கிடையாது... உங்க மாதிரி ஆள் இருக்கதால தான்யா நாங்கல்லாம் தைரியமா படத்துக்கு போக முடியுது...

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் பெருமையா.. கடமை.. கடமை.. :)

      Delete
  10. பாக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. ஒன்னும் பிரச்சனையில்ல.. ஆரம்பம் புக் பண்ணியாச்சா?

      Delete
  11. இன்றுமுதல் நீர் "விமர்சகர் ஆவியாக" அழைக்கப்படுவீர் ....! வீ(ர்)ல் ... வீ(ர்)ல் ..!வீ(ர்)ல் ..!

    ReplyDelete
    Replies
    1. மகாபாரதம் பார்க்குறது அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.. பராக் பராக்க விட்டுட்டீங்க மிஸ்டர் சுப்புஊஊ ஊ ஊ !!

      Delete
  12. சுடச்சுட விமர்சனம் செய்த ஆவிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...