சென்னை செல்லும் திட்டத்துடன் கோவையில் இன்டர்சிடி எக்ஸ்பிரஸ்ஸைப் பிடித்த சமயம், சென்னையில் பல புதிய அனுபவங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்ததே தவிர, ரயிலிலேயே ஒரு வித்தியாசமான அனுபவத்தைச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் ரிசர்வ் செய்திருந்த எண்ணைக் கண்டுபிடித்து இருக்கையில் அமர்ந்து, 'விண்ட்மில்ஸ் ஆஃப் காட்' புத்தகத்தை எடுத்து மேயத் தொடங்கினேன். அப்போ என் எதிர் சீட்ல அந்தப் பெண் வந்து உட்கார்ந்தாள். சுமாராக 30 வயது மதிக்கலாம். ஜன்னலோரமாக நின்றிருந்த அவளின் பெற்றோர் அட்வைஸிக் கொண்டிருந்தனர். "பாத்துப் போம்மா... அங்க போய்ச் சேர்ந்ததும் ஃபோன் பண்ணு" போன்ற வார்த்தைகளால் அந்தப் பெண் தனியாகப் பயணிக்கப் போவதை உணர்ந்து நிமிர்ந்து அவளைக் கவனித்தேன்.
வட்ட முகம், கோலிக்குண்டு கண்கள் என லேசாய் நஸ்ரியா சாயலில் இருந்தாள். (டேய் ஆவி... நீ நஸ்ரியாவை இழுக்காம இருந்தாதான் எல்லாரும் ஆச்சரியப்படுவாங்கன்னு ஒரு குரல் அசரீரியாய் ஒலித்தது). 'எங்கேயோ பார்த்த முகம்' என்று என் மனதிற்குள் ஒரு மணி அடித்தது. அடுத்த சில நிமிடங்களில் ரயில் நகர ஆரம்பிக்க, உள்ளே திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். என் பக்கத்து இருக்கைகளும் சரி, அவள் அருகில் இருந்த இருக்கைகளும் சரி காலிதான்... கீழே குனிந்து ஸிப்பை சரியாகப் போட்டிருக்கிறேனா என்று சரிபார்த்துக் கொண்டேன். அட.. எல்லாம் கரெக்ட்... என்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறாள். நானும் ஒரு புன்னகையைச் சிந்தினேன். வாத்தியாரின் நம்பரை டயல் செய்து, "சார், வண்டியை எடுத்துட்டாங்க" என்றேன். "எடுக்கறதுக்கு அதென்ன டெட் பாடியாய்யா? வண்டி கிளம்பிருச்சு, நான் கோவைய விட்டுக் கிளம்பிட்டேன்னு வேற ஏதாவது வார்த்தைல சொல்லக் கூடாதா?" என்ற அவரின் பதிலுக்கு வாய்விட்டுச் சிரித்தேன். அவள் திரும்பி என்னைப் பார்க்க... மறுபடி 'எங்கோயோ பார்த்திருக்கோமே...' என்று என்னுள் அடுத்த மணி!
ரயில் திருப்பூரை அடைந்தபோது ஐந்து வயதுச் சிறுவனுடன் ஏறிய ஒரு ஆசாமி இருக்கை எண்ணைச் சரிபார்த்து அவள் அருகில் அமர்ந்தார். 'விண்ட்மில்'லின் தீவிரம் என்னை இழுகக, சில பக்கங்கள் படித்துவிட்டு நிமிர்ந்தபோது அவள் அந்த ஆசாமியுடன் சகஜமாக பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் என் காதோரம் லேசாய்ப் புகை! அந்தச் சிறுவன் மூளை வளர்ச்சியடையாத சிறுவன் என்பது பார்த்தாலே தெரிந்தது. இவர்கள் இருவரையும் மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டிருந்தான். "ஏய்... இந்த மாதிரி செப்பல்ஸ் நான் ராஜஸ்தான்ல லாட்டா வாங்கிட்டு வந்துருவேன். உங்க கடைய விட, எங்க கடையில இன்னும் சீப் ரேட்ல விக்கறோம் தெரியுமா...?" என்று அவன் சொன்னதை வைத்து அவள் அப்பாவும், அவனும் செருப்புக் கடை ஓனர்கள் என்பது புரிந்தது.
அடுத்த ஸ்டேஷனில் இன்னும் சிலர் ஏறவும், என் அருகாமை இருக்கைகளும் எதிர் இருக்கைகளும் நிரம்பின. அவர்கள் இருவருக்கும் அருகில் ஒரு வயதான பெண்மணி வந்து அமர்ந்தார். மீண்டும் நான் புத்தகத்தில் மூழ்கி சில பக்கங்களைக் கடந்துவிட்டு நிமிர்ந்து பார்த்த பொழுது, அவள், அவன் தோளில் சாய்ந்து குறுந்தூக்கம் மேற்கொண்டிருந்தாள். இப்போது லேசாய் அல்ல... பலமாகவே புகை! ஹஹ்ஹஹ்ஹா...! 'போங்கடா நீங்களும் உங்க நெர்ர்ருக்கமும்' என்று மனதுக்குள் சபித்தபடி மீண்டும் மர்மத்தை அள்ளித் தெளித்த புத்தகத்தின் பக்கங்களில் ஆழ்ந்து போனேன்.
மூன்றாவது முறையாக புத்தகத்தை கீழே கிடத்திவிட்டு நான் நிமிர்ந்தபோது அவள் இருக்கையில் இல்லை. அவன் அருகில் அமர்ந்திருந்த அம்மாள் சொல்லிக் கொண்டிருந்தாள். "கோயமுத்தூர்ல நல்ல ஹாஸ்பிடல் இருக்கு. ............. ஹாஸ்பிடல் எனக்குத் தெரிஞ்ச இடம்தான். அங்க பையனைக் கூட்டிட்டுப் போனா நல்லா ட்ரீட்மெண்ட் கொடுப்பாங்க..." என்று சொல்லவும், அவள் சீட்டில் வந்து அமரவும் சரியாக இருந்தது. (இல்லாவிட்டால் என்ன குடிமுழுகி விடும்?) அவளிடமும் அதையே அந்த அம்மாள் சொல்ல, அவள் புன்சிரித்து, "பாக்கணும்.." என்றாள். ஓ...! இவர்கள் கணவன் மனைவி தானா? அடுத்த ஸ்டேஷனில் அவன் ஏறியதால் நான்தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேனோ அவர்களை...? என்று என் தலையில் நானே குட்டிக் கொண்டேன் - மானசீகமாய்!
பொதுவாக பயணங்களில் அருகில் வருபவர்களிடம் பேச்சுக் கொடுத்து, அசடு வழியும்/வாங்கிக் கட்டிக் கொள்ளும் ரகம் அல்ல நான் என்பதால் இதைப் பற்றி மேலே எதுவும் நினைக்காமல் மீண்டும் புத்தகத்தில் ஆழ்வதும், அவ்வப்போது நிமிர்கையில் அவர்களின் நெருக்கத்தைக் கவனிப்பதுமாக பொழுது ஓடிக் கொண்டிருந்தது - ரயிலும் கூடத்தான்! இத்தனைக்கு இடையிலும் 'எங்கே பார்த்தேன் இவளை?' என்ற கேள்விப் புழுவும் மனதில் குடைந்து கொண்டேதான் இருந்தது.
சென்னை சந்திப்பில் ரயில் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு நிற்பதற்கான ஆயத்தமாக மெதுவான சமயம் புத்தகத்தை மடித்து என் பேகில் வைத்துவிட்டு நான் நிமிர்ந்தேன். அவர்கள் இருவரும் கண்ணில் படவில்லை. ரயிலிலிருந்து இறங்குவதற்காக நின்ற க்யூவில் நானும் சேர்ந்து கொண்டபோது எனக்கு இரண்டு பேருக்கு முன்னே அவள் நின்றிருந்தாள். அவன்...? என்று நினைத்தபடியே நான் கீழே இறங்க, எனக்கு முன்னால் இறங்கியிருந்த அவளை இரண்டு முதிய தம்பதிகள் வரவேற்று, "பயணம்லாம் சுகமா இருந்திச்சா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து நான் முன்னேற, கம்பார்ட்மெண்ட்டின் முன் வாசல் படிகளில் தன் மகனுடன் இறங்கிக் கொண்டிருந்தான் அவன். அவள் இருக்கும் பக்கமே திரும்பாமல் விறுவிறுவென நடந்து சென்று விட்டான்.
ஆஹா...! அவனுக்கு அவள் சம்சாரம் என்று நான் நினைத்தது தப்பா? இது சம்சாரம் அல்ல, சமாச்சாரமா? என்னடா இது கொடுமை...! என்று மனதுக்குள் புலம்பியபடியே நான் வந்து கொண்டிருந்த சமயத்திலும் 'எங்கே பார்த்திருக்கிறோம் அவளை?' என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரிந்த பாடில்லை. "சரிதான்... விடை தெரிஞ்சுட்டா மட்டும் என்ன பண்ணிடப் போறோம்? விட்டுத் தள்ளு இந்த நினைப்பை" என்று என்னை நானே கடிந்தபடி ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தேன். சென்னை என்னை வரவேற்றது...! அங்கு சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் எல்லாம்...
( இது என்னுடைய இருநூறாவது பதிவு.. இதுவரை எனக்கு நீங்கள் அளித்து வந்த ஊக்கமும், ஆதரவும் இனியும் தொடர வேண்டுகிறேன். வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!! )
டிஸ்கி : மேலே உள்ளது என் அனுபவம், ஆயினும் அதை உள்வாங்கி எழுத்தில் வடித்து உங்களுக்கு படைத்தது ஒரு பிரபல பதிவர். எழுத்து நடையை வைத்து யாரென்று கணியுங்கள் பார்க்கலாம்!!

.....இன்னும் வரும்...!

இருநூறாவது பதிவுக்கு இனிய் வாழ்த்துகள்..!
ReplyDeleteThanks Amma..
Deleteஅடடா.... சமாச்சாரமா? கஷ்டம் தான்...!
ReplyDelete200 : மென்மேலும் கலக்க வாழ்த்துக்கள்...
Nandri DD
Deleteஇனிய வாழ்த்துகள் 200க்கு.
ReplyDeletenandringa.. varugaikkum vaalthukkum!!
Delete200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeletenandri manimaaran avargale!!
Delete200 விரைவில் 2000 ஆக வாழ்த்துக்கள்.
ReplyDelete.....இன்னும் வரும்...!
சீக்கிரம்...
nandri akkaa!
Deleteவாழ்த்துக்கள் ஆனந்த்..அடுத்த தொடர்கதை ஆரம்பமாயிடுச்சுன்னு நினைச்சேன்....எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் துப்பறியும் நாவல் மாதிரி ஆரம்ப பத்திகள்........
ReplyDeletehahaha.. avaroda kaivannam appadi..
DeleteAnubavam Arumai dear AAVEE! My heartful happy wishes to you for your double century. Surely you will hit many more centuries for us. Enakkennamo intha anubavaththai eluthinathu namma cheenu payalaga irukkumnu than thonuthu.
ReplyDeleteவாத்தியாரே நீங்களுமா ..........
Deletenaanum appadiththaan ninaikkiren vaaththiyaare!! ;-)
DeleteSeenu- hahaha!
Deleteஅஜித் வாழ்க. நஸ்ரியா வாழ்க. ஆவி வாழ்க வாழ்க.
ReplyDeletehahaha.. nandri boss!
Delete200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! இதை எழுதுவது சீனு என்று நினைக்கிறேன்! வித்தியாசமான அனுபவம்தான்!
ReplyDeleteஅண்ணே தளிர் அண்ணே சத்தியமா நான் எழுதலன்னே இத.. இது ஏதோ எதிர் வலைபூகாரன் ஏவல்ன்னு நினைக்கிறன்... எனக்கும் இதுக்கு சத்தியமா சம்மந்தம் இல்ல
Deleteaduththavarin anubaththai ulvaangi eluthuvathil seenu killadi thaan. but idhu avar eluthale.. hehehe
Deleteseenu- hahaha
Deleteஇன்னும் வரும்னு இழுக்குறத பார்த்தா தி.கொ.போ.சீ போலத்தான் தெரியுது ....!
ReplyDeleteஒருவேள டிஸ்கி யே லோலாயி யா இருக்கவும் வாய்ப்புள்ளது ....!
இருநூறு ---- அடிபொலி ... அடிபொலி ...அடிபொலி ....!
அடிங்..... :-)))))))))
Deleteடிங் டிங் டிங் .......----------------------))))))))))))))))))))
DeleteDiski lolai, ading!! enna maathiriyaana thamizh samoogathil vaalgirom naam.. ;-)
Deleteஓடிக் கொண்டிருந்தது - ரயிலும் கூடத்தான்! இது போன்ற சுஜாதா டச் அருமை..
ReplyDeleteயோவ் போயா யோவ் எங்க ஆவி தான் ரொம்ப நாளைக்கு அப்றமா உருப்படியா ஒரு பதிவு எழுதி இருக்குன்னு நினைச்சேன்.. ஆவி பாஸ் உங்க சமீப கால பதிவுகளுக்கும் இதுக்கு பெரிய வித்தியாசம் என்று படிக்கும் போதே தோன்றியது... ஆனால் எழுத்து வேறொருவருடையது என்று அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்...
எழுத்தில் ஆங்காங்கே சுஜாதா டச்... எனக்குத் தெரிந்த வரையில் இது ரூபக்ஆக இருக்கலாம்... நீங்கள் எழுதியதாக இருந்தாலும் இதைப் போலவே தொடரவும்
en meethu abaara "nambikkai" vaiththatharku nandri. irunoorai sirappikkum vithamaga nam "thalaivar" elithik koduththathu idhu.. :-)
Deleteஇருநூறுக்கு வாழ்த்துக்கள் வோய்..
ReplyDeletenandri seenu!!
Deleteசுஜாதா டச் , சுஜாதா இச் சுன்னு இன்னிமே யாராவது எழுதுனாவோ , சொன்னாவோ அவிய்ங்க கொரவலைய புடிச்சு கடிக்கப்போறேன் ...! கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர் .....!
ReplyDelete//வா.ம - சுஜாதா எழுத்து நடை ? எனக்கு அப்டி தெரியலை ....!சுவாரஸ்யமா எழுதுபவர் மறுப்பதற்கில்லை ...பெரும்பாலும் கட்டுரை போன்ற பதிவுகள் .
Deleteநான் வாசிச்ச வரையில பி.பி & சமுத்ரா (வார்த்தைகளில் இருந்து மவுனத்திற்கு )... ரெண்டு பேரோட எழுத்துகளிலும் சுஜாதா டச் இருப்பது போல உணர்வு . சமுத்ரா வோட எழுத்துகள் ஆரம்ப கால சுஜாதவைபோல ரெம்ப இன்டெலேக்ச்சுவலா இருக்கும். பட் ரெம்பவே நீஈஈஈஈண்ட பதிவுகளா இருக்கும் //
http://goundamanifans.blogspot.in/2013/10/blog-post.html
FY Kind Impramation you aanar :-))))))))))))))
hahaha.. adhuvum aavee kooda compare pannikittu.. iru eluththaalargalukkum vera vera style nnu solla vareenga, appadithaane subbu? ;-)
DeleteSeenu- koththu vittutaye paratte!!
Delete@ சீனு ...!
Deleteயோவ் அது நேத்து எழுதுனது .... ! இது இன்னைக்கு எழுதனது .....! நல்லா பாரு இன்னிமே ன்னுதான் எழுதிருக்கேன் ......!
மைண்ட்(!?) வாய்ஸ் : கடசில என்னையும் அரசியல்வாதியா ஆக்கீட்டாய்ங்களே ........ ! ஆஆஆஆஆஆஆ.....வி! ஆஆஆஆஆஆஆ.....வி .....!
ippothaan neenga arasiyalvathi aagiyirukkeengalaakkum? idha naanga nambanum?
Delete@ ச்சீஈஈeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeenu...!
ReplyDeleteநீ நல்லா வாருவ ...! சாரி நல்லா வருவ .....!
:-)
Deleteபிரபல பதிவர்னா நீங்களாத்தான் இருக்கணும். நீங்களேதான் எழுதறீங்க. கண்ணதாசன் கவிதை அனுபவம் மாதிரி! நஸ்ரியாவும் ஆவியும் என்ற தலைப்பில் சீனு ஒரு பதிவு எழுதுவாராக!
ReplyDeleteBoss, adhu baalaganesh sir eluthinathu.. thalaippu mudharkondu ellaam avare.. kadhai mattum ennathu!! :-)
Delete//நஸ்ரியாவும் ஆவியும் என்ற தலைப்பில்//
Deletethalaippe asaththalaa iruke!!
மறந்துட்டேனே... அந்த மயிலை எனக்கும் பார்த்த மாதிரிதான் இருக்கு. திரும்பிப் போகும்போது(ம்) மயில் எதிரில் அமர்ந்தால் நான் விசாரித்ததாகச் சொல்லவும்!
ReplyDeletehahaha....kattaayam solren sriram sir!
Deleteஇருநூறுக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆர்வத்தைக் கிளறும் மயில்..
நன்றி அப்பாதுரை சார்..
Delete200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete