கதை
நீல் ப்ளோம்கம் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தில் மேட் டேமன், ஜுடி பாஸ்டர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 2154 ஆம் வருடம் உலகில் உள்ள வசதி படைத்த மக்கள் எல்லோரும் பூமியை விட்டு சற்று தள்ளி மனிதர்களால் உருவாக்கப்பட்ட "எலிசியம்" என்னும் விண்வெளி தளத்தில் குடியிருக்கிறார்கள். பூமி மக்கள் தொகைப் பெருக்கத்தால் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடும் இடமாக இருக்கிறது. ஆனால் எலிசியத்திலோ ஆடல், பாடல் கேளிக்கைகள், நீச்சல் குளம் வசதியான வாழ்க்கை, எல்லாவற்றையும் விட எல்லா வகையான நோய், உடல் குறைகள் நீக்கும் உபகரணங்கள் இருப்பதால் இங்குள்ள மக்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்.
ஆக்க்ஷன் & கிராபிக்ஸ்
படத்தில் எந்தெந்த காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது எது கிராபிக்ஸ் என்று பிரித்தறிய முடியாத வண்ணம் பிரமாதமான முறையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. மேட் டேமன் ஆரம்ப காட்சிகளில் ரோபோக்களிடம் கலாய்ப்பதாகட்டும், பின்னர் உடல்நிலை மோசமாகி தளர்ந்த நடையுடன் போராடுவதாகட்டும் செம்ம ஆக்டிங். இவருக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் ஜூடி பாஸ்டர். ஆட்சியை தன்வயப்படுத்த சதித்திட்டம் தீட்டுவதும் பின் தன் தவறுக்கு உணரும் போதும் அசத்தல் பெர்பார்மென்ஸ். வயசானாலும் அந்த அழகும் ஸ்டையிலும் அப்படியே தான் இருக்கு. வில்லன் ஸ்பைடராக வேக்னர் நம்மை மிரட்டுகிறார். அதுவும் வெடிகுண்டு வெடித்து முகத்தை இழந்த இவருக்கு எலிசியத்தில் முகம் மீண்டும் வளரும் காட்சியில் மிரண்டு தான் போகிறோம்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
அந்த பிரம்மாண்டமான எலிசியத்தை கண்ணில் காட்டி பிரமிக்க வைத்த காட்சி. மேக்சுக்கும் ஸ்பைடருக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. லுக்கேமியாவால் பாதிக்கப்பட்ட சிறுமி கதை சொல்லும் காட்சியும் அருமை. கற்பனை விண்வெளி தளத்தின் வீடுகளின் கட்டமைப்புகளும், ஹெலிகாப்டர், போன்ற சாதனங்களும்.. மனித மூளையையே ஹார்ட் டிஸ்காக பயன்படுத்திக் கொள்ளும் கிரியேட்டிவிட்டியும் ரசிக்க வைத்தன. அமெரிக்க பாட்டி எலிசியத்தில் சுடும் வடையை ஜாலியாக சுவைக்கலாம்.
Aavee's Comments - Awesome Graphics and Creativity.
தமிழ் படமே புரிய தகராறு பண்ணும். இதுல இங்க்லீபீசு படமா?! ரைட்டு.
ReplyDeleteஹஹ்ஹா.. இதெல்லாம் பார்க்க சொல்லி சொல்லமாட்டேன்.
Deleteமனித மூளை ஹார்ட் ஹார்ட் டிஸ்க்யளவு போச்சா..?
ReplyDeleteஅது ஒரு நல்ல சிந்தனையாக எனக்கு தோன்றியது. மனித மூளையில் 3% தான் உபயோகப் படுத்துகிறோம். மீதம் உள்ளது வீணாகத்தானே போகிறது.
Deleteநம்ம பொருட்காட்சி ‘ஜெயண்ட் வீலைத்தான்’ எலிசியமாக்கி விட்டார்கள் ஹாலிவுட்காரர்கள்.
ReplyDeleteஹஹஹா.. "ஜெயன்ட் சைஸ்" ஜெயன்ட் வில்..
Deleteஇந்த படத்தை தமிழில் எடுத்து ரஜினி அல்லது கமல் நடித்து இருந்தால், படத்தின் கதை இன்னும் சுவாரசியமா இருந்திருக்குமோ ??
ReplyDeleteசுப்பு தாத்தா.
www.wallposterwallposter.blogspot.in
ஹஹஹா.. சூப்பர் சிந்தனை தாத்தா.. ஆனா இந்தப் படத்துக்கு கமல் ரஜினிய விட கேப்டன் தான் பொருத்தமா இருப்பாரு.. உலகத்தை காப்பாத்தற கதையாச்சே!! :-)
Deleteஹாலிவுட் படம் எப்போதாவது சன் டீவியில் பார்ப்பதுண்டு! உங்கள் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது! நன்றி!
ReplyDeleteநன்றி நண்பா..
Deleteபாஸ், இந்த படத்தை பார்த்து மண்டை காஞ்சி போச்சு, எனக்கு என்னவோ பிடிக்கவே இல்லை.
ReplyDelete