"OKOK" இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி , காஜல் நடித்து வெளிவரும் இப்படத்திற்கு இசை தமன். இந்த ஆல்பமும் வழக்கமான ராஜேஷ் படங்களின் இலக்கணத்துடன் வெளிவந்திருக்கிறது.
"ஆல் இன் ஆல் " என்று தொடங்கும் டைட்டில் பாடலில் பெல்லிராஜ் மற்றும் குழுவினரின் அதிரடி அதகளம் தெரிகிறது. பாஸ் என்கிற பாஸ்கரன் பாடல் போல சாயல் தோன்றினாலும் அறிமுகப் பாடலுக்கு ஏற்ற துள்ளல் இசை.
"என் செல்லம்" பாடல் என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்" பாடல் மெட்டில் ஆரம்பித்து மெலடி மெட்டாய் நம் காதுகளை வருடுகிறது. ஒரு பெண்ணை வர்ணிக்கும் இந்தப் பாடல் இளைஞர்கள் விருப்பப் பாடலாகப் போவது உறுதி.
"உன்னை பார்த்த நேரம்" பாடல் விஜய் ஏசுதாசின் குரலில் இனிமையான டூயட். எண்பதுகளின் மெட்டில் ஓர் இசை தாலாட்டு. மற்ற எல்லாப் பாடல்களை விட இது இனி எல்லா தொலைக்காட்சிகளிலும் இடம்பிடிக்கலாம்.
"யம்மா, யம்மா" பாடல் கமெர்ஷியல் குத்து. சூரஜ் சந்தோஷ் மற்றும் ஸ்ரேயா கோஷலின் குரலில் தாளம் போட வைக்கும் ஐட்டம் நம்பர். இந்தப் பாடலுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு இருக்கும்.
ஜாவேத் அலி தன் மென்குரலில் பாடிய "ஒரே ஒரு வரம் " பாடல் "மாங்கல்யம் தந்துனானே" என்று ஆரம்பித்து தன் காதல் உணர்வை சொல்லும் பாடல். உன்னைப் பார்த்த நேரம் பாடலின் சாயல் தெளிக்கப் பட்டிருக்கிறது. காதல் ரசம் சொட்டும் பாடல் இது.
All in All Azhagu Raja பாடல்கள் இதற்குமுன் வெளியான ராஜேஷ் படப்பாடல்கள் அளவுக்கு வெற்றி பெறுவது சந்தேகம்
\
பாட்டு ஓக்கேன்னா!? படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடுமே!?
ReplyDeleteநன்றி அக்கா
Deleteபடம் வெற்றி பெறட்டும்
ReplyDeleteநன்றி சார்
Deleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி நண்பா
Deleteவணக்கம்
ReplyDeleteஆவி(அண்ணா)
வெற்றிப்படமாக அமையட்டும் படம் பற்றிய பதிவுஅருமை.....வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்..
Delete"உன்னை பார்த்த நேரம்" பாட்டு எனக்கு பழைய இளையராஜா பாட்டை ரீமேக் பண்ணுன மாதிரியே இருக்கு. மத்த பாட்டு எல்லாம் ரொம்பவே சுமார் தான்.
ReplyDeleteபாஸ், உங்க blog இன்னும் தமிழ்மணம் databaseல "http://kovaiaavee.blogspot.com/" அப்படிங்கற பேருல தான் இருக்கு. பதிவை இணைக்க தமிழ்மணம் front pageல "இடுகைகளைப் புதுப்பிக்க" அப்படிங்கிற பெட்டியில மேல சொன்ன அட்ரெஸ் குடுங்க. அப்படி இல்லாட்டி உங்க தமிழ் மனம் codeல மாற்றம் செஞ்சுக்காங்க.. :):)
ReplyDeleteஎல்லாம் ஒரு பொது சேவை தான்.. :):)
Thanks Raj
Delete