காத்திருந்தேன் கவலையின்றி மணிக்கணக்காய்
காதலியின் முகம் காண,
சினிமாவை நான் காண,
சந்தோஷப் பூக்கள் பூத்திடுமே என் முகத்தில்,
பஸ்ஸிலிருந்து இறங்கிடும் அவளை காண்கையில்,
டிக்கட் கவுண்டர் ஒப்பன் செய்திடும் அக்கணத்தில்,
மின்சாரம் சுர்ரென்று பரவியதே உடலெங்கும்,
வண்டியில் என் பின்னால் அவள் அமர்ந்து என் தோளில் கைவைத்தபோது,
முதல் காட்சி கண்டிடவே முந்தி நானும் இருக்கையில் அமர்ந்திட்ட போது,
உள்ளே ஓர் இனம்புரியா அமிலமுமே சுரந்ததுவே,
ஆளில்லா சாலையிலே அப்பகலில் சும்பனமும் நிகழ்ந்திட்ட போது,
ஆதர்ச நாயகனும் வெள்ளித் திரையினிலே தோன்றித் தெரிந்த போது,
இல்லையென தெரிந்தபோதும் நெஞ்சினிலே ஒரு சலனம் நொடிப்பொழுதில்,
முத்தத்தில் காமத்தை கண்டு கோபித்துக் கொள்வாளோ?
வில்லனின் வஞ்சக வலையில் வல்லவனும் வீழ்ந்திடுவானோ?
சுகம் தேடும் மூளையின் நரம்புகளின் பணிச் சிறப்பின் காரணமாய்,
மாதம் ஒன்றிரண்டு எனக்கிட்டிய அன்பின் அடையாளங்கள் அளவற்றதாயின..
மாதம் ஒன்றிரண்டு எனக்கிட்டிய அன்பின் அடையாளங்கள் அளவற்றதாயின..
ஆசை எனும் மோகத்தை அடுத்த கட்டம் கொண்டு செல்ல,
இச்சமூகங்கள் வகுத்திட்ட ஒரு வழியாம் திருமணம் பேச,
கல்வி கற்ற மாணவன் போல் ஒரு படத்தை இயக்க எண்ணி,
காகிதத்தில் அச்சடித்த செல்வம் தான் எல்லாவற்றுள்ளும் தலை என உணர,
தேடித்தேடி அவமானங்கள் கூட, பொருள் தேடி,
தேடித்தேடி அவமானங்கள் கூட, பொருள் தேடி,
விலையில்லா அறிவுரைகள் வீட்டுக்கே வந்திடவே,
காதல் திருமணத்தின் கேவலங்கள் பலர் கூற,
சினிமாவில் ஜெயித்தவர்கள் சில பேர் தான் என ஓத,
மண்ணில் இன்னும் மனிதத்தின் மிச்சங்கள் இருப்பதனால்,
நல்ல உள்ளங்களும், நண்பர்களும் உதவிட நிறைவேறியது ஒருவழியாய்
நல்ல உள்ளங்களும், நண்பர்களும் உதவிட நிறைவேறியது ஒருவழியாய்
'முப்பதும்', 'அறுபதும்' பழமொழிகள் அல்ல,
வாழ்வியலின் அங்கங்களென உணர்ந்திட்ட போது,
திரையில் வரும் காட்சிபோல உறவில் விரிசல் விழ,
மனதில் வைத்த காதலுக்கு, மக்கள் அபிமானமின்றி கலையங்கே மரித்து விழ,
சிந்திக்கத் தோன்றுதடி "சித்திரமே",
உனைத் தவிர்த்து நானும் சமூகத்தின் வழி போயிருக்கலாமோ?
உனைத் தவிர்த்து நானும் சமூகத்தின் வழி போயிருக்கலாமோ?
திரைத்துறை மெது தணியாத காதல் கொண்டவனின் அந்தக் கடைசி இரு வரிகள் அருமை
ReplyDeleteஆனாலும் சாரே எனக்கொரு டவுட்டு :-)))))
நம்ம அரசவைக் கவிஞரின் கவிதைகளை அதிகம் படிக்க ஆரம்பித்து விட்டீர் என்று நினைக்கிறன், அவரின் அழகான அற்புதமான தாக்ககங்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறதே.. கழகத்திற்கு விரைவில் ஒரு கண்மணி காத்துள்ளது....
நானெல்லாம் வெறும் "குட்டை" தான்.. (உயரத்தை சொல்லலே..)
Deleteநீங்களும் "குட்டை" தானா?
Deleteஸ்.பை இந்த கோர்த்து விடற வேலை தானே வேணாங்கிறது.. ;)
Delete//மெது தணியாத காதல்//
Deleteசீனு மெது வட சாப்பிட்டுட்டுகிட்டே டைப்பீருப்பார் போல ...!
ஏதோ "டிக்சனரி ஆப் ஸ்பை" ப்ராஜெக்ட் ல ரெண்டு பேரும் இணைஞ்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்..
Deleteசினிமா என்ற காதலியை காதலிப்போம்... ‘காடு’ போகும் வரை.
ReplyDeleteசினிமா வாழ்க!! காதல் வளர்க!!
Deleteநிழல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்... நிஜம் வேறு...
ReplyDeleteநிழலையே நிஜமாய் நேசித்து வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்களே!!!
Deleteகவித்துவம் நிறைந்த தங்களது கவிதையில் வாளி வாளியாய் தண்ணீர் ஊற்றியிருப்பது தெரிகிறது... வாழ்க சினிமா, வளர்க ரசிகர்கள்...
ReplyDelete"கவித்துவம்", " தண்ணீர்" போன்ற மக்களுக்கு புரியாத குறியீடுகள் இல்லாம பேச எப்போ, எந்த ஸ்கூல்ல கத்துக்கப் போறீங்க ஸ்கூல்பையன்.. ;-)
Deleteஇதுவும் கடந்து போகும்... வேறென்ன சொல்ல.
ReplyDeleteபஸ் ஸ்டாண்டில நிக்கும்போது இப்படி சொல்லித்தாங்க நிறைய மிஸ் பண்ணிட்டேன்.. ( நான் பஸ்ஸ சொன்னேன்.. :) )
Deleteவாழ்க தமிழ் சினிமா... உம் புகழ் பரவட்டும் நஸ்ரியா வரை...
ReplyDeleteஏம்பா, நஸ்ரியாவ ஏதோ கன்னியாகுமரி மாதிரி சொல்லியிருக்கியே, வளர்க நஸ்ரியா புகழ்ன்னு சொல்லியிருந்தா பொருத்தமா இருந்திருக்குமில்ல..
Deleteபொழிப்புரை தெளிவுரையோடு ஒரு கவிதை அடடா (?)
ReplyDeleteஎன்ன சார்.. அதுல சில உள்ளர்த்தம் பொதிந்த குறியீடுகளை வைத்திருந்தேன்.. நீங்களோ, உலக சினிமா ரசிகனோ கண்டுபிடிப்பீங்கன்னு பார்த்தா, இப்படி ஏமாத்தீட்டீங்களே?
Deleteகாதலும், சினிமாவும் ஒரே மாதிரித்தான். வாழ்க்கையின் வெற்றியும் சினிமாவின் வெற்றியும் கணிக்க முடியாதது. இரண்டும் பணம் என்ற அடித்தளத்தின் மேலேயே கட்டப் படுவது. சித்திரம் என்ற வார்த்தை (- உவமையணி. ) ஒன்றே இரண்டும் ஒன்றுதான் வேறல்ல என்பதை மறைபொருளாக உணர்த்துகிறது. போதுமா...?
Deleteபின்னீட்டீங்க சார், இன்னும் ஒரு விஷயம்- சந்தோஷமான நிகழ்வுகள எனக்கு பிடிச்ச நீலத்திலும், கஷ்டமான தருணங்களை சிவப்பிலும் சொல்லியிருந்தேன்..:)
Deleteஉச்சகட்ட சோகத்தை உணர்த்த கடைசி வரிகளுக்கு கருப்பு மை பூசியிருந்தேன். :)
Deleteஉனைத் தவிர்த்து நானும் சமூகத்தின் வழி போயிருக்கலாமோ?
ReplyDelete>>
அப்படி போய் இருந்தாதான் உருப்பட்டு போயிருப்பியே!!
அப்பப்போ கிளம்பி வந்து தலையில் கொட்டி வழிநடத்த அக்கா இல்லாம போனத நினைச்சு இப்போ பீல் பண்றேன் அக்கா..
Delete'சும்பனமும்' என்றால் என்ன?
ReplyDeleteஆங்கிலத்தின் "லிப் டு லிப்" தான் தமிழில்..
Deleteசினிமா காதலுக்கு வயதில்லை! தொடர வாய்ப்பு இருக்கிறது! முயற்சியுங்கள்! சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பா.. அது என் வாழ்க்கையில்லை.. நான் சினிமாவில் முயற்சி செய்யவுமில்லை.. அது நண்பர்கள் பலர் சொல்லக் கேட்டதை தொகுத்திருக்கிறேன் அவ்வளவுதான்.. :)
Deleteவாழ்த்துக்கு நன்றி..
Deleteஅப்படி பாத்தா, சினிமாவுல போராடுறவங்க காதலிக்கவே கூடாதா? சமூகம் அப்படி தான் சொல்லுது :(
ReplyDeleteசினிமாவுக்கும் சரி, காதலுக்கும் சரி இன்னும் சமூகத்தில் அங்கீகாரம் கிடைத்தபாடில்லை.. அதே சமயம் காதல் கல்யாணம் செய்துகிட்டவங்களும் அதை ஒரு நீண்ட கால பந்தமா எண்ணாம போயிடறது தான் அதுக்கு முக்கிய காரணமா கூட இருக்கலாம்.
Deleteஎனக்கு தனியாக கோனார் உரை போடவும் ....! பிரில ....!
ReplyDeleteஎதுப்பா பிரில.. சொல்லு அக்குவேறு ஆணி வேறா பிரிச்சிடுவோம்..
Deleteவிரைவில் உமக்கு சங்கம் சார்பாக பாராட்டு விழா எடுக்கப்படும் என்பதை ஆராவாரமாக தெரிவித்த்துக் கொள்கிறேன் ப்ரோ ...
ReplyDeleteஅந்தளவுக்கு எல்லாம் நான் ஒர்த் இல்ல ப்ரோ.. :)
Deleteaaah! Kavithai! yappa... me escapeda samee....!
ReplyDeleteசார்.. கவிதையும் இலக்கியத்தில் ஒரு பகுதிதான்.. As an எழுத்தாளர் நீங்க அதையும் படிக்கத்தான் வேண்டும். எஸ்ஸாக முடியாது என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..
Deleteவணக்கம்
ReplyDeleteபதிவு அருமை வாழ்த்துக்கள் ......வாழ்க சினிமா வளர்க ரசிகர்கள்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Thanks Rupan!
Deleteஅருமை
ReplyDeleteThanks Sir
Delete