இன்ட்ரோ
பார்க்க போனதென்னவோ "எஸ்கேப் ப்ளான்". அத்தோட திரும்பியிருக்கலாம். விதி எங்க விட்டுது. வளரும் இயக்குனர்களை நம்மளே ஊக்குவிக்கலேன்னா அவங்க எங்க போய் ஊக்கு விப்பாங்க? என்ற நல்ல எண்ணத்துல இதுக்கும் டிக்கட் வாங்கி போய் உட்கார்ந்தா, வழக்கம் போல முகேஷ் வந்தாரு. என்னடா எப்பப்பாரும் இதையே போட்டு (முகேஷை??) சாவடிக்கிறாங்கன்னு பீல் பண்ணின அஞ்சு நிமிஷத்துல முகேஷ் படத்தையே இன்னும் ஒரு பத்து நிமிஷம் சேர்த்து பார்த்திருக்கலாம்ன்னு தோணிச்சு. ரெண்டு மூணு காட்சிகள் கூட ஓடியிருக்காது உலக சினிமா ரசிகன் தெறிச்சு வீட்டுக்கு ஓடிட்டார். நம்ம தான் எவ்வளவோ கொடூரப் படத்தையும் கடைசி வரை பாக்குற ஆளாச்சே. பார்த்து தொலைச்சேன்.! சரி கதைக்கு வருவோம்.
கதை
இந்தியாவின் பல பகுதிகளிலும் குண்டு வெடிக்க வைத்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டி ஒரு அண்டை நாடு இரண்டு தமிழர்களை சுவிட்சர்லாந்திலிருந்து சென்னைக்கு அனுப்புகிறது. (கிட்டத்தட்ட சீனா கவர்மெண்ட் டோங் லீ ய அனுப்பின மாதிரி). வந்த இடத்துல வீடியோ கேம்ஸ் விளையாடுவதும், இனியாவை லவ்வுவதுமாக ஹீரோவும், அப்பாவி பெண்ணை வசைபடுத்தி மோசம் செய்வதும், மெகா சைஸ் ஓட்டைகளுடன் ப்ளான் போடுவதுமாக வில்லன் என இருவரும் பிசியாக இருக்கின்றனர். கடைசியில் தமிழ் கலாச்சாரப்படி ஹீரோ திருந்தி வில்லனை தண்டிக்கிறார்.
ஆக்க்ஷன்
படத்தின் ஹீரோ ரிஷ்கதிர் STR ன் சாயலில் இருந்தாலும் நடனம், முகபாவங்கள் இன்னும் கற்றுத் தேற வேண்டும். வில்லனாக வரும் ஜெயபாலா கொஞ்சம் பரவாயில்லை. கதையில் உள்ள தொய்வினால் இவர் நடிப்பு பளிச்சிடவில்லை.இனியா இனிக்கவில்லை. "இனியா"வது நடிப்பை நிறுத்தினால் நலம்.கஞ்சாகருப்பு கிரேன் மனோகரின் காமெடிகள் கடுப்பை கிளப்புகின்றன. மற்ற கதாபாத்திரங்களும் வீணடிக்கப்பட்டே இருக்கிறது..
இசை-இயக்கம்
ஜெபியின் இயக்கத்தில் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன.ஒரு சில காட்சியமைப்பு நன்றாக இருக்கிறது. காதல் காட்சிகளில் கிரியேட்டிவிட்டி மிகக் குறைவு. கோபிநாத்தின் இசையில் இரண்டு பாடல்கள் மெல்லிய தாலாட்டு. வேகமாக கொண்டு செல்லவேண்டிய திரைப்படத்தில் தேவையற்ற காட்சிகளால் படம் பார்ப்பவருக்கு சோர்வை கொடுக்கிறது. பின் பாதியில் மக்களின் சுயநலத்தை விளக்கும் காட்சிகள் மட்டுமே சிறப்பு.தீபாவளி படங்கள் வரவிருக்கும் நிலையில் இதுபோன்ற டம்மி பீஸு கள் தீபாவளி படங்களுக்கு மாஸ் ஓபனிங் கொடுக்க தயாராக இருந்தாலும் மக்கள், மேல் சொன்ன படத்த தவிர்ப்பது .
Aavee's Comments - NO COMMENTS..
நுகம் உங்களுக்கு சோகம்.!!!
ReplyDeleteஆமா, வாத்தியாரே!!
Deleteநுகம் : நல்ல பேரை வச்சவங்க கொஞம் கதையும் வச்சிருக்கலாம். . .
ReplyDeleteபேரு வச்சவங்க எல்லாம் சோறு வக்கிறாங்களா??
Deleteபடத்தையும் முழுசாக பார்த்து...விமர்சனமும் போட்ட உங்க வீரம்...தைரியம்...பராக்கிரமம்... எனக்கு ஏன் இல்லாமல் போனது?
ReplyDeleteநீங்க நிறைய நல்ல படங்களையே பார்த்துதான் அதுக்கு காரணம்னு நினைக்கிறேன்..
Deleteதலைப்பை அழகா வச்சிகிட்டு படத்தை சொதப்பிட்டாங்களா ?
ReplyDeleteடம்மி பீஸு... நன்றி...
ReplyDeleteநுகம்ன்னா என்ன...?
ReplyDeleteதலைப்பு வித்தியாசமா இருக்கு
இப்படியெல்லாம் கூட படம் எடுக்குறாங்களா?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபடத்தின் விமர்சனம் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நுகத்தைப் பார்க்கப் போய் நகத்தைக் கடிச்சுகிட்டே இருந்தீங்களா ,ஆவி ?
ReplyDeleteஇனியா இனிக்கவில்லை. "இனியா"வது நடிப்பை நிறுத்தினால் நலம்...
ReplyDeleteஹி ஹி... நுகம்னா என்ன அர்த்தம்...
நன்றி.
ReplyDelete