Thursday, October 31, 2013

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-1)


முன்குறிப்பு: நண்பர்களே,  நான் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் எழுதிய (என் கன்னி முயற்சி) ஒரு க்க்க்க்க்ரைம் தொடர். இப்போது படிக்கையில்  பல அபத்தங்கள்  என் கண்ணுக்கே புலப்படுகிறது. ஆயினும்  அதை ஒரு  பொருட்டாக்காமல் இந்த கதையை படித்து உங்கள் மேலான விமர்சனங்களால்  என்னை ஒரு நல்ல எழுத்தாளனாக்கும்  சீரிய பணியில்  நீங்களும்  ஈடுபடுவீர்களாக!!                              அவர் சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். அவருக்குச் சுமார் நாற்பது, நாற்பத்தியிரண்டு வயதிருக்கலாம். "தேவர் மகன்' ஸ்டைலில் மீசை. "குருதிப் புனல்" ஸ்டைலில் கட்டிங். கண்களில் கம்பீரம் அவரது காக்கி உடுப்பு  அவரது போலிஸ் உத்தியோகத்தை சுட்டிக் காட்டியது. அவர் பேட்ச் சிவஞானம் IPS என்று பறை சாற்றியது. அவருக்கு எதிரில் இந்தி நடிகர் அமீர்கானை நினைவு படுத்தும் முகத்துடன் டிடக்டிவ் ஏஜென்ட் சுந்தர் அமர்ந்திருந்தான். அவனுக்கு சற்று தள்ளி அவனது அசிஸ்டன்ட் ஆனந்த் அமர்ந்திருந்தான்.
                           
                                  சிவஞானம் பேச ஆரம்பித்தார் "மிஸ்டர் சுந்தர், இப்ப நான் சொல்லப் போற விஷயம் ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும். கடந்த ஒரு மாசத்துல நடந்த இரண்டு கொலைகளைப் பத்தி பேப்பர்ல படிச்சிருப்பீங்களே? " "ம்ம்.. சொல்லுங்க.." "நான் ஸ்ட்ரேயிட்டா  விஷயத்துக்கு  வர்றேன். " என்றபோது ஆனந்த் " அப்ப இவ்வளவு நேரம் க்ராஸா  கிராஸா  வந்துட்டு இருந்தீங்களா?" என்ற ஆனந்தைப் பார்த்து " ஆனந்த், பீ சீரியஸ்" என்று கூறிவிட்டு சுந்தர் சிவஞானத்திடம் " ப்ளீஸ் கண்டின்யு ஸார் "  ஆனந்தை முறைத்தவாறே  "அந்த ரெண்டு கொலைகளும் திட்டமிட்டு செய்யப்பட்ட கோல்ட் ப்ளட்டட்  மர்டர்ஸ்." "ப்ளான் பண்ணி பண்ணியிருக்காங்களா" என்று வடிவேலு தொனியில் கேட்ட ஆனந்தை இருவரும் முறைத்துவிட்டு "ரெண்டு பேருமே பெரிய பிஸினஸ்  மேக்னட்ஸ். இந்த ரெண்டு கொலைகளையும் கொலைகாரர்கள் அல்லது கொலைகாரன் சர்வ ஜாக்கிரதையா ஒரு சின்ன தடயத்தைக் கூட மிஸ் பண்ணாம சாமர்த்தியமா பண்ணியிருக்கான். எங்க டிபார்ட்மெண்ட் எவ்வளவோ முயன்றும் அவனைப் பிடிக்க முடியல. சோ வீ நீட் யுவர் ஹெல்ப் டு பைண்ட் ஹிம்.." என்றார்.

                                    " ஹிம் முன்னு நீங்களே முடிவு பண்ணிட்டா   எப்படி?"  என்று குறுக்கிட்ட ஆனந்த்தை சுட்டெரிக்கும் பார்வையால் அமர்த்திவிட்டு சுந்தர் அவரிடம் "கொலை செய்யப்பட்ட அழகேந்திரன், பத்ரிநாத் ரெண்டு பேரோட வீட்டையும் நான் சேர்ச் பண்ணனும்.  பர்மிஷன் வாங்கித் தாங்க. எங்க வேலையில எங்களுக்கு பூரண சுதந்திரம் இருக்கணும்.  எக்காரணம் கொண்டும் இந்த விசாரணையை  பாதியில நிறுத்த சொல்லக் கூடாது. மற்றபடி வீ வில் ட்ரை  அவர் பெஸ்ட். நீங்க போயிட்டு வாங்க." என்று கூறினான். 

                             அவர் சென்றபின் ஆனந்திடம் "அவர் சொன்னதிலிருந்து   உனக்கு என்ன தோணுது.?" "சூடா ஒரு கப் காபி சாப்பிடனும்னு தோணுது"  என்றான். "ஆனந்த் கமான், யுவர் ஹ்யூமர் இர்ரிடேட்ஸ்  சம்  டைம்ஸ்" " என்ன தோணுது.. அவர் என்னமோ வந்தாரு, எதோ மொட்டைத்தலையன்  குட்டையில விழுந்த மாதிரி ஒரு கதைய சொன்னாரு. இத பாரு சுந்தர், அந்த ரெண்டு கேஸும் தமிழ்நாடு போலீஸால  அக்கு வேறா  ஆணி    வேறா   ஆராயப்பட்டு தோல்வி கண்ட கேஸ். நாம என்ன செய்ய முடியும்?" "ஏதாவது செய்யணும் ஆனந்த். அப்பத்தான் நம்ம கோல்டன் ஈகிள் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு மக்கள் மத்தியில ஒரு நல்ல பேர் கிடைக்கும்." "ஆனந்த் இட்ஸ் எ சேலஞ்ச்  பார் மீ" "பார் அஸ் ஸுன்னு  சொல்லு" என்றவாறு இருவரும் சிரித்தனர். பின் ஆனந்த் சுந்தரிடம் "ஒக்கே சுந்தர். லெட்  அஸ்  ஸீ  டுமார்ரோ, மை வுட் பீ வில் பீ வெயிட்டிங் பார் மீ" என்று கூறிவிட்டு தன் யமஹாவில் கிளம்பினான். சுந்தர் அவனை அனுப்பிவிட்டு  உள்ளே சென்றான்.

      
தொடரும்...


17 comments:

 1. ம்ம்ம்ம்... கிரைம் தொடரா... ஆரம்பிங்க....

  அது சரி... ஆனந்து ரொம்ப சூட்டிகையா இருக்காரே...

  ReplyDelete
  Replies
  1. Boss, unga ratham parkkin alavukku ellam ethirpaarkka koodaathu.. ithuvum chinna thodar thaan..

   Delete
 2. வணக்கம்

  பதிவை அசத்திபோட்டிங்கள்.... வாழ்த்துக்கள்

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. &பல அபத்தங்கள் என் கண்ணுக்கே புலப்படுகிறது& என்னென்ன அபத்தங்கள்னு சொல்லி, உன்னோட ‘கன்னன்’ முயற்சியில எழுதின கதையை நான் குதறப் போறதில்லை. ஆரம்ப கால எழுத்து நடையை விட இப்ப நீ எழுதற ஸ்டைல் மேம்பட்டிருக்கறது உனக்கே புரிஞ்சிருக்கும். எழுத எழுதத்தான் பயிற்சி! அதுபோகட்டும்... என்னதான் க்ரைம் தொடராப் போடப் போறதா முடிவு பண்ணிட்டயின்னாலும் மூணே மூணு பாரா போட்டுட்டு தொடருமா... ஆவிக்கே அடுக்குமா இது!

  ReplyDelete
  Replies
  1. Hahaha.. innaikku ethaavathu oru post podanum. draft la micham irundhaadhu onne onnu kanne kannunnu indha pathivu mattum thaan adhuvum moonu paaraa thaan.. aduththa pathivil neelaththai kandippai kotti vidugiren..

   Delete
 4. அவ்வ்வவ்வ்.... இதுகெல்லாம் நான் பயப்பட மாட்டேன்

  ReplyDelete
 5. கன்னி முயற்சி நல்லா இருக்குது நண்பரே..
  எப்படியும் சில வருடங்களுக்கு முன்னர்
  எழுதியிருபீங்க...
  தொடருங்கள்.. தொடர்ந்து வருகிறேன்...
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. நல்ல ஆரம்பம்... சஞ்சலமில்லாமல் தொடருங்கள்... பாராட்டுக்கள்...

  ReplyDelete
 7. நாம சிங்கப்பூர் போகும் போது ஒரு முக்கியமான இடத்துல உட்கார்ந்து படிச்சேனே...அந்த நாவலா......

  ReplyDelete
 8. நம்ம ஒரு காலத்துலே எழுதியது, நமக்கே பிற்காலத்துலே அபத்தமா தோணுவது என்பது இயற்கை தான்.

  இப்ப நீங்க எழுதுவதை எல்லாம் நீங்க என் வயசாகும்பொழுது என்ன இவ்வளவு அபத்தமா எழுதி இருக்கிறேன் என்று கூட வருத்தப்படலாம், இல்லை, சிரித்து மகிழலாம்.

  சாமர் செட் மாம் தன்னுடைய வாழ்க்கை சரிதத்தை 60 ல் எழுதியவர் 80ல் படித்துவிட்டு அதையே தான் சொன்னார் . அது மட்டுமல்ல, தனது ஆட்டோ பயோக்ராபி யை தானே தவறு, சரியல்ல, என்று இன்னொரு முறை எழுதினாராம்.

  ஆவி ஒரு சமயம் திடப்பொருள் ஆக இருக்கும். இன்னொரு சமயம் லிக்விட் ஆக இருக்கும். ஆனாலும், ஒண்ணு தான் இல்லையா ?

  கதை ஸ்டார்டிங் சூப்பர்.

  தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 9. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
  மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

  ReplyDelete
 10. ஆரம்பத்துலயே கலக்கி இருக்கே ஆவி!

  ReplyDelete
 11. கோவையில் கிரைம் ஆவி பறக்குதோ?

  Typed with Panini Keypad

  ReplyDelete
 12. ஆர்வமுடன் தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. மீளவும்........ஆனாலும்,நன்றாகவே வரைந்து...ச்சீ....எழுதியிருக்கிறீர்கள்!அந்தக் காலத்து தேவர் மகன்,குருதிப் புனல் எல்லாம் இந்தக் காலத்துடன் (மீசை)ஒட்டவில்லையே தவிர சிறப்பாக இருந்தது,எழுத்து நடை!

  ReplyDelete
 14. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...