Friday, November 1, 2013

ஆவி டாக்கீஸ் - ஆரம்பம்


இன்ட்ரோ  
                          'தல' அஜித்தின் நடிப்பில் வந்திருக்கும் அதிரடி படம் இந்த ஆரம்பம்.  பிளாக் காமெடிகளும், மொக்கை காமெடிகளும் பார்த்து அலுத்துப் போயிருந்த நமக்கு ஆரம்பம் ஒரு ஆக்க்ஷன் ரிலீப். இந்த வருடத்தின் சிறந்த படம் இது என்று சொல்லுமளவிற்கு இல்லையென்றாலும் நல்ல ஒரு பிரச்னையை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் கதை என்பதே சிறப்பு. 'தல' யின்  தீவிர ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் பல காட்சிகள் உள்ளது என்றாலும் அவை எதுவும் கதை ஓட்டத்திற்கு வெளியே செல்லவில்லை என்பது ஆறுதல். சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் மட்டுமல்ல சிறப்பான நடிப்பையும் தனக்கே உரிய பாணியில் கொடுத்திருக்கிறார் நம்ம தல.



கதை         
                            காவல்துறை மற்றும் ராணுவத்தில் நடக்கும் ஊழல் மற்றும் அரசியலால் நண்பன் மற்றும் குடும்பத்தை இழந்த ஒருவன் அந்த மாபெரும் சக்திகளை எதிர்த்து எப்படி போராடி வெற்றி பெறுகிறார் என்பதே கதை. இதற்கு உதவ வரும் ஒரு டெக்கி (Techie), அவர் காதல்  என பயணிக்கிறது படம். சுபா  மற்றும் விஷ்ணுவர்தன் கைவண்ணத்தில் வசனங்களும் அருமை. பஞ்ச் டயலாக்குகளை மக்கள் ரசித்த காலம் கடந்துவிட்டது  என்பதை இயக்குனர்கள் உணரவேண்டிய தருணம் இது. ஹேக்கிங், கடத்தல் போன்ற ஓரிரு காட்சிகளை வைத்து ஹாலிவுட்டிலிருந்து சுட்ட படம் என்று முத்திரை குத்துவது அபத்தம்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                             'தல' அறிமுகத்தில் ஆகட்டும், "டொக் டொக்" என சீரியஸ்ஸாக கொண்டு செல்வதாகட்டும், "டுகாட்டி" பைக்கில் அசத்தலாக ஓட்டுவதாகட்டும், ஆர்யாவிற்கு உரிய ஸ்பேஸ் கொடுத்து சில இடங்களில் அவருக்கு முக்கியத்துவம் தருவதாகட்டும், அஜித் ஈஸ் தி அல்டிமேட் ஸ்டார். ஆனாலும் இதுபோன்ற படங்களில் பாடல்கள் மட்டுமே ரிலீப் என்பதால் அதை இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் படமாக்கியிருக்கலாம். ( 'தல' ரசிகன் என்ற போதும் அவருடைய நடனம் அவ்வளவு ஈர்க்கும்படி இல்லை என்பது குறிப்பட வேண்டுமென நினைக்கிறேன்)  அதே போல முதல் பகுதியில் ஆர்யாவின் காலேஜ், காதல் போன்றவை கதைக்கு தேவைப்பட்டாலும் திரைக்கதை தூங்கி வழிவது என்னவோ உண்மை. முதல் பாதியில் முதல் ஒரு மணி நேரம் ஸ்லோவாக செல்லும் ஸ்க்ரீன்ப்ளே அடுத்த ஒன்றரை மணிநேரம் ஸ்பீட் எடுத்து ஜெட் வேகத்தில் செல்கிறது. குறிப்பாக அஜித் அநாயாசமாக செய்திருக்கும் அந்த போட் காட்சிகள் மற்றும் காவலர்களிடமிருந்து தப்பி செல்லும் காட்சியும் மயிர் கூச்செறிய வைக்கிறது.

                                நயன்தாரா இனி அக்கா கேரக்டர்கள் முயற்சி செய்தால் நன்றாக இருக்கும். நல்லவேளை அஜித்துக்கும் அவருக்கும் லவ் என்று ஒரு பிளாஷ்பேக் வருமோ என்று பயந்து கொண்டிருந்த எனக்கு அப்படி ஒரு அதிர்ச்சி தரவில்லை இயக்குனர். ஆர்யா திரையுலகின் 'ரோஹித் ஷர்மா', எப்பவாவது நடிக்கிறார். காதல் காட்சிகளில் அவர் என்ன முயன்றாலும் சிப்பு சிப்பா தான் வருகிறது. கிடைத்த பல நல்ல வாய்ப்புகளையும் வீணாக்குகிறார். குண்டாக இருப்பவர்களை கிண்டலடிக்கும் மட்டமான காமெடிகள் தவிர்த்திருக்கலாம். தாப்சி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கிஷோர் அதுல் குல்கர்னி அருமையான நடிப்பு. ராணா மாமிச மலையாக தெரிகிறார் 'தல' க்கு முன். நல்ல அறிமுகம். 17 வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் சுமா ரங்கநாத் சிறப்பாய் செய்திருக்கிறார்.



இசை-இயக்கம்-தயாரிப்பு
                         
                                    ஏ.எம் ரத்னத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டம் தெரிகிறது. யுவனின் இசையில் இரண்டாம் பகுதி பின்னணி இசை தூள் பறக்கிறது. விஷ்ணுவர்த்தன் டச் மிஸ்ஸானது போன்ற உணர்வு. காமெடி மற்றும் படத்தின் திருப்புமுனையாய் இருக்க வேண்டிய கதாப்பாத்திரத்தை எக்ஸ்பிரஷனே இல்லாத ஆர்யாவுக்கு கொடுத்ததற்காக விஷ்ணுவுக்கு ஒரு கொட்டு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதும் நிறைவேற்றியதற்காக ஒரு ஷொட்டு..

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                               
                                    "என் ப்யுஸும் போச்சு" பாடல் அருமை. அஜித் "டுகாட்டி" பைக்கில் ரசிகர்ளின் விசில் ஒலிக்கு நடுவே பறப்பது அருமை. நல்ல கதை, இன்னும் கொஞ்சம் சிறப்பாக படமாக்கியிருக்கலாம் என்பது ஆவி என்னும் "தல" ரசிகனின் கருத்து. லாஜிக் பார்க்காத சினிமா ரசிகர்கள் ஒரு முறை நல்ல ஆடியோ செட்டப் உள்ள தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

                  Aavee's Comments - Mass Hit-u No Doubt-u.




36 comments:

  1. /// அவருடைய நடனம் அவ்வளவு ஈர்க்கும்படி இல்லை... ///

    'தல' ரசிகன் என்றாலும் இப்படித்தான் இருக்க வேண்டும்...

    இனிய 'தல' தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நியாயமா சொல்லணும் இல்லையா DD.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்!!

      Delete
  2. வணக்கம்

    விமர்சனம் நன்று வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...ஆவி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்..தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  3. விஜய் படப்பாடல்கள் ஹிட்டடிக்கும் அளவுக்கு அஜித் படப்பாடல்கள் ஹிட்டடிப்பதில்லை. தல அதுல கொஞ்சம் இண்ட்ரெஸ்ட் எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் அக்கா.. நானும் இதை உணர்ந்தேன்.. தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா. பலகாரம் பார்சல் அனுப்பிடுங்க.. இப்போ எஸ்ஸாக முடியாதில்ல.. ஹஹஹா..

      Delete
  4. சமூக வலைத் தள யுகத்தில்,பல விமர்சனங்கள் வருகின்றன.ஒவ்வொருவர் பார்வையும் வேறு,வேறு!உங்கள்,விமர்சனம் நன்று!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்பிரமணியம்.. தீபாவளி வாழ்த்துகள்

      Delete
  5. நல்ல விமர்சனம்...
    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  6. இந்த தீபாவளி ‘ஆரம்பமே அமர்க்களம்’.

    ReplyDelete
  7. ஆங்காங்கே ஷொட்டுக்களும் சில கொட்டுக்களும் வைத்த தங்கள் விமர்சனம் வெரி குட்டு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Thanks Nanbaa.. Unga veettula ellorukkum en deepaavali vaalthugala sollidunga!!

      Delete
  8. சுவாரசியமான விமரிசனம்.
    kbjana.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஜனா.. தீபாவளி வாழ்த்துகள்..

      Delete
  9. நல்லவிமர்சனம். தீபாவளி நல்வாழ்த்துகள்!.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க மாதேவி.. தீபாவளி வாழ்த்துகள்..

      Delete
  10. இப்போச் சந்தோசமாய்யா?......நல்ல விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. குமுதா ஹேப்பி அண்ணாச்சி.. :)
      தீபாவளி வாழ்த்துகள்..

      Delete
  11. ஒரே படத்துல ஒன்பது விதமா நடிப்பாரு கமல் & ஒன்பது படத்துல ஒரே விதமா நடிப்பாரு விமல்! எல்லா கேரக்டருககாகவும் மெனக்கெடுவார் சூர்யா & எந்தக் கேரக்டருக்காகவும் மெனக்கெட மாட்டார் ஆர்யா! அந்த ஆர்யாகிட்ட நடிப்பை எதிர்பார்க்கற தப்பை தொடர்ந்து செய்யற ஆவியை தொடர்ந்து ஒரு நாள் பூரா ‘யாயா’ படம் பாக்கச சொல்லி தண்டனை தரணும்! ஆக விமர்சனம் மூலமா ‘தல ராக்ஸ்’ன்னு தெரியுது. படத்துல என் நணபர்களின் வசனம் எப்படின்னு ஒரு வார்த்தையும் சொல்லலையே ஆவி...! என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஆவிககும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அட, அசத்தீட்டீங்க வாத்தியாரே..
      எவ்வளவு மேட்சுல சொதப்பினாலும் ரோஹித்துக்கு வாய்ப்பு தரும் தோனி மாதிரி தான் நானும்.. :-P
      தீபாவளி வாழ்த்துகள்..

      Delete
    2. ஆவி பாஸ் .... You Know ரோஹித் இப்ப Full Form ....! World record Holder...

      Delete
  12. ஆரம்பம் படத்திற்கு நடுநிலைமையான விமர்சனத்திற்கு பாராட்டுக்கள், டான்ஸ் எல்லாம் ஒரு மேட்டரா தலைவா! அவரால் ஏன் ஆட முடியாது என்பது தங்களுக்கு தெரியும். அப்புறம் என்ன! அவன் அவனுக்கு நடிக்கவே தெரியாம நடிகன் னு சொல்லிட்டு திரியராங்கே.. எப்பவும் தல தல தான் சகோதரரே. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். அவர் திரையில் வந்து நின்னா மட்டும் போதும்..

      தீபாவளி வாழ்த்துகள்..

      Delete
  13. இனிய தீப ஒளி வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி.. லேட் வாழ்த்துகள்..

      Delete
  14. ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்டு அட்ரஸ் ப்ளீஸ்.. வழி தெரியாம நின்னுகிட்டு இருக்கேன்..

      Delete

  15. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  16. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பா நன்றி விமர்சனத்திற்கு நான் படம் இனிமே தான் பார்க்க போறேன்

    ReplyDelete
    Replies
    1. இப்போ பார்த்துடீங்கன்னு நினைக்கறேன்..

      Delete
  17. நல்ல விமர்சனம்.ஆனால் ஆர்யாவை மட்டம் தட்டி எழுதியது ஏனோ? இன்னும் பாலாபிசேகம் செய்யும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று இந்தப்பட ரிலீஸ் அன்று டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஆர்யா பிடிக்கும் சார்.. இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன் வேணும்.. குறிப்பா இந்தப் படத்துல அவருக்கு முக்கியமான ரோல்..இன்னும் பெட்டரா செய்திருக்கலாம்..

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...