ஒவ்வொருத்தரும் ஒரு பதிவு எழுதறதுக்குள்ள டங்குவார் அறுந்து போகுதுங்கிறது பதிவெழுதற ஒவ்வொருத்தருக்கும் தெரியும். கஷ்டப்பட்டு சுமந்து பிரசவித்த ஒரு குழந்தையை இன்னொருத்தன் சொந்தம் கொண்டாடுறது எந்த விதத்திலும் நியாயமில்லை.. பதிவு பிடிச்சிருந்தா அதை மற்றவர்களுடன் ஷேர் பண்றது தப்பில்லே.. ஆனா எழுதின பதிவருக்கு கிரெடிட் கொடுக்காம அத பிரசுரிக்கிறது திருடறதுக்கு சமம்.. சினிமா திருட்டு விசிடி ல ஆரம்பிச்சு இன்னைக்கு பதிவுகள திருடறதுல வந்து நிக்குது..
இனியவை கூறல் தளத்திலிருந்து (Apr 16, 2013)
பகிரப்பட்ட முகநூல் குழுமத்திலிருந்து.. ( Nov 18, 2013)
இனியவை கூறல் தளத்தில் உள்ளது (March 8,2013)
பகிரப்பட்ட தகவல்.. (Today, Nov 19, 2013)
நேற்று இவர் வலைதளத்தில் இவர் எழுதிய "பூச்சியுண்ணும் தாவரம்" என்னும் கட்டுரையை முகநூலில் பகிர்ந்திருக்கிறார். அதை அப்படியே காப்பி எடுத்து தன் பெயரில் முகநூலில் பதிவு செய்துள்ளார்கள். இது என்னுடைய பதிவு என்று அவர் இட்ட பின்னூட்டங்களையும் டெலீட் செய்துள்ளார்கள். (பார்க்க: மேலுள்ள படம்) இது முதல் முறையல்ல. அது மட்டுமல்லாமல் அவரை ப்ளாக்கும் செய்துவிட்டார்கள். இதுபோல் பல பதிவுகளை எடுத்துக் கொண்டு முறையான அங்கிகாரம் அளிக்காமல் ஷேர் செய்யும் இவர்களை என்ன செய்யலாம் மக்களே? இதற்கு பதிவர்களாகிய நீங்கதான் ஒரு வழி சொல்லணும். தன் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரத்தை இழந்து வலியுடன் இருக்கும் நம் சக பதிவர் கலாகுமரன் அவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்.. சொல்லுங்க!!
முகபுத்தகத்தில் அடிகடி இதுபோல் நடக்கிறது. . .தவிறிக்க முடியவில்லை
ReplyDeleteஏதாவது செய்யணும் வாத்தியாரே!!
Deleteம்ம் பதிவுகள் பகிர படுவதும், அதை பயன்படுத்துவதும் தவறில்லை.. ஆனால் உரியவரிடம் அனுமதி கோரலாம்.. அல்லது குறைந்த பட்சம் கிரடிட்ஸ் ஆவது இணைக்கலாம்..
ReplyDeleteஅனுமதி கூட வேண்டாம்ப்பா.. இன்னார்தான் எழுதியதுன்னு அவர் பேர் போடலாமே.. கேட்கப்போன அவரை Block செய்து விட்டார்கள்..
Deleteதெரிந்து சில தெரியாமல் பல திருட்டுகள் நடக்கத்தான் செய்கிறது. தடுக்கவோ கண்டிக்கவோ வழி தான் இல்லை.
ReplyDeleteகண்டிப்பாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.. இன்னைக்கு அவருக்கு நடந்தது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்!
Deleteஇதுப்போல நாம பண்ணக்கூடாதுன்னு தோணுது.
ReplyDeleteஇல்ல அக்கா.. பகிர்தல் தவறில்லை.. உரியவருக்கு கிரெடிட் கொடுத்து செய்தால் போதும்.
Deleteஅயோக்யத்தனம். அவ்வளவுதான். மற்றபடி இவர்களை என்ன செய்ய முடியும் ஆவி?
ReplyDeleteகேட்கப் போனவரை block செய்துவிட்டார்கள். என்ன கொடுமை பாருங்க..
Deleteதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
ReplyDeleteஅப்படின்னு விட்டுட முடியாதில்லையா.. இன்னைக்கு அவருக்கு நடந்தது நாளைக்கு யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம். அதை தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும்.
Deleteபதிவுல இருந்து சுட்டு, பதிவுல போட்ட ஆளுகளையே ஒன்னும் பண்ண முடியலை..விடுங்க சாமி!
ReplyDeleteஅப்படி பதிவு போடலேன்னா என்ன?
Deleteஎனது பதிவையும் திருடினார்கள். இன்னும் திருடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களைப் போலவே கோபத்தில் ” எனது பதிவை காப்பி அடித்த பதிவர் http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_20.html ” என்று ஒரு பதிவைத்தான் எழுத முடிந்தது.
ReplyDeleteஉங்க பதிவை படித்தேன்.. அங்கே அவர் தலைப்பை மாற்றியாவது எமாற்றியிருந்தார்.. இங்கே இவர் அதைக் கூட செய்யாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறார்.. வருகைக்கு நன்றி ஐயா..
Deleteகுறைந்தபட்சம், எல்லோரும் சேர்ந்து திருடுபவரை தட்டிக்கேட்கலாம். காரணம், எல்லோரும் நமக்கென்ன என்று இருப்பதால் தான இந்த மாதிரி திருடுறாங்க. அவங்கவங்க பதிவ திருடும் போது தான் நமக்கான வேதனையும் நமக்கு தெரியும். சமீபத்துல என்னோட கவிதைய திருடி போட ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு விசயமும் ஆழ்ந்து யோசிச்சு எழுதுற நமக்கு தான் இப்படி திருடுரவங்க பண்ற துரோகம் புரியும். இதே போல் எனக்கு தெரிந்த ஒருத்தரின் கவிதையை திருடி ஒருவர் பாராட்டு வாங்கியிருந்தார். நான் நேரடியாக அந்த குழுவில் சென்று கேட்டேன். மிகப்பெரிய போராட்டமாக இருந்தது அது. பின், இனிமேல் யாராக இருந்தாலும் கவிதை எழுதியவரின் பெயரையும் சேர்த்து போடுங்கள் என்று கூறி விட்டு வந்தேன். எல்லாம் சுபம் என்று நினைத்து திரும்புகையில் அந்த குழுவின் நிர்வாகி, அட்மின், வெறும் புகழுக்காக நான் அதை எல்லாம் செய்ததாக என் மீது சேறு அள்ளி தெளித்தார். அத்தனை வாக்குவாதங்களையும் நான் அப்படியே screen shot எடுத்து வைத்துள்ளேன். அதை பற்றி பதிவு ஒன்று போடா வேண்டும் என்று எண்ணி கொண்டே தான் இருந்தேன், இதோ, இதை பார்த்ததும், மீண்டும் அதை எழுத மனம் தூண்டுகிறது...
ReplyDeleteகண்டிப்பா, நேர்மையா சொந்த பதிவுகள போடுற எல்லா பதிவர்களும் அவங்க எதிர்ப்பை சம்மந்தப்பட்ட நபரிடம் காட்டத்தான் வேண்டும்... நான் தயார்
கண்டிப்பா எழுதுங்க காயத்ரி.. இது போன்ற பதிவுத் திருடர்களை அப்படியே விட்டுவிட கூடாது.. கஷ்டப்பட்டு எழுதும் எழுத்துக்கு அட்லீஸ்ட் அங்கீகாரமாவது கிடைக்க வேண்டும்.
Deleteவேதனைதான்! திருடனாய் உணர்ந்து திருந்தாவிட்டால் வேறு வழியில்லை!
ReplyDeleteஐயா, அவங்களா திருந்துவது நடக்காத காரியம்.. நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்..
Deleteஇந்த மாதிரி கிறுக்கு பயலுக நிறைய பேரு திரியிரானுங்க 'பாசு'.. இவனுங்கள என்ன செய்யறதுனுதான் தெரியல.. முகநூலில் மட்டுமில்ல பதிவுலகிலும் இருக்கிறானுங்க.. முடிஞ்ச அளவுக்கு நமது எதிர்ப்பை தெரிவிப்பது மட்டும்தான் நமக்கான வழி..
ReplyDeleteகண்டிப்பா நம்ம எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். பதிவுலகிலும் முகநூலிலும் இதுபோன்றவர்களின் முகத்தை காட்டிவிட்டாலே அவர்களின் ஆட்டம் குறைந்துவிடும்.
Deleteடங்குவார் என்றால் என்ன?
ReplyDeleteஹஹஹா.. அப்பாதுரை சார். அருமையான கேள்வி. "தாவு தீர்ந்து போச்சு.." , "தாலி அறுக்கிராணுக" போன்றதொரு கலைச்சொல் அது..உயிரைக் கொடுத்து செய்வது என்று பொருள்படும். :)
Deleteவணக்கம்
ReplyDeleteஆவி(அண்ணே)
ஆதாரத்துடன் பதிவை வெளியிட்ட விதம் நன்று...இவர்கள் திருந்தாத ஜென்மங்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன், இவர்களை பதிவுலகிலும், முகநூலிலும் துகிலுரித்து காட்டினால் அடங்கிவிடுவார்கள்.
Deleteயேய் யாருப்பா அது....? அந்த பேமானியப் புட்சி யானைக் காலாண்ட மிதிக்க வுடுபா...
ReplyDeleteநைனா, சொல்லிட்டு அப்பாலிக்கா ஜகா வாங்கினா எப்டி? ;)
Deleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... (த.ம. +1)
Deleteயானை குட்க மிடியாட்டாலும்... இத்துனூண்டு அங்குசமாவது குட்த்துகினேம்பா...
தலையில் களிமண் வைத்து இருப்பவர்கள்
ReplyDeleteஅடுத்தவரின் மூளையைத் திருடத்தான் செய்வார்கள்.
வருகைக்கும் உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி. இவர்களை அப்படியே விடக்கூடாது.. நமக்கு தெரிந்தவர்களுக்கு இவர்கள் முகத்தை பதிவிலோ, முகநூலிலோ காட்டிவிட்டால் கொஞ்சம் திருந்த முயற்சிப்பாங்கன்னு நினைக்கிறேன்..
Deleteஇது போன்று நிறைய பேர் திரிகிறார்கள்... முதலில் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும்....
ReplyDeleteஎன்னுடைய கூகிள் பிளஸ் வட்டத்தில் பகிர்ந்துள்ளேன்...
நன்றி ஸ்கூல் பையன். நல்ல வேலை செய்தீங்க.. மற்றவர்களும் இதுபோல் தாங்கள் கேள்விப்படும் பெயர்களைப் பொதுவில் பகிர்ந்தால் அந்த திருடர்கள் அடுத்த முறை செய்ய பயப்படுவார்கள்.
Deleteஎன்ன செய்ய,இது போன்ற திருட்டுக்களை தவிர்க்க முடிவதில்லையே?பதிவிடும் ஒவ்வொருவரும் அதிலுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு தவிர்த்தல் வேண்டும்.இல்லாத பட்சத்தில்,"மூலம்"என்று குறிப்பிடுதல் பதிந்தவருக்கு மரியாதை செய்வது போலாகும்!செய்வார்களா?செய்ய வேண்டும்!!!
ReplyDeleteகண்டிப்பாக செய்ய வேண்டும் ஸார்
Deleteஇது வலையுலகத்தை பொறுத்தவரை சகஜமாகி விட்டது. இவர்களையெல்லாம் பொதுவில் ஆளாலுக்கு பதிவு போட்டு அசிங்கப்படுத்தனும். திருட்டு நாதாரிகள்.
ReplyDeleteஇந்த பதிவு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.. போனால் போகட்டும் என விட்டுவிடக் கூடாது..
Deleteஉரியவரிடம் சொல்லாமல் பதிவை திருடுவது வாடிக்கை ஆகிவிட்டது.... இவர்கள் திருந்தப்போவதில்லை...
ReplyDeleteஆமாங்க.. நாம தான் இப்படி பதிவு, முகநூல்ன்னு அவங்க முகத்திறைய கிழிக்கனும்.
Deleteஉண்மையில் மிகவும் வருத்தப்பட வேண்டிய செயல் தான். இன்றைய சூழலில் நிறைய நல்ல விஷயங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தான் எளிதாக தெரிந்து கொள்ளமுடிகிறது. இப்படி திருடப்படுவதால்,நல்ல விஷயங்களை பகிர்ந்துகொள்ள முன்வருவதற்கு எல்லோரும் யோசிப்பார்கள். சிலருடைய திருட்டு புத்தியால் பாதிக்கப்படுவது பலரும் தான். திருடுபவர்களுக்கு பதிவை பறிகொடுத்தவர்களின் வேதனையும், மனவருத்தமும் எங்கே தெரிய போகுது??
ReplyDeleteவாங்க பாஸ்.. கஷ்டப்பட்டு ஒரு பத்து பதிவாவது எழுதினால் தானே அந்த வருத்தம் தெரியும்..
Deleteதன்னிடத்தில் எதுவும் இல்லாதவன் தான் அடுத்தவரிடமிருந்து திருடுவான். இது மாதிரி ஜீவன்களைப் பார்த்து பரிதாபப் படத்தான் என்னால் முடிகிறது!
ReplyDeleteஆமாம் வாத்தியாரே, இந்த பதிவை முகநூலில் உங்க நட்பு வட்டத்துக்கும் பகிர்ந்து விடுங்க.. நிறைய பேருக்கு தெரியட்டும்..
Deleteஇணையத்தில் இதை தடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. திருட்டு சிடி, டிவிடி வந்தபிறகு இதைத் தடுக்க முடியாது ,விஞ்ஞான வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கமல் சொன்னபோது திரையுலகமே கொதித்தெழுந்தது . ஆனால் தற்போது ஏற்றுக் கொண்டு விட்டார்கள் . அதுபோலவே எழுதுவதும் . நம் கருத்தும் எழுத்தும் பிடித்திருக்கிறது என்பதால்தானே அவர்கள் காப்பி பேஸ்ட் செய்கிறார்கள். அதுவே நமக்கான அங்கீகாரமாக நினைத்து சந்தோசப் படவேண்டியதுதான் . ஆனால் குறைந்த பட்ச நாகரிகமாக பதிவிட்டவரின் பெயரைக் குறிப்பிடலாம் .அது தவறுதான் .
ReplyDeleteபகிரட்டும் சந்தோசம் தான்.. இன்னார் எழுதியது எனக்கு பிடித்ததுன்னு சொல்லி பகிர்ந்தா வேண்டாம்னா சொல்லப்போறோம்..
Deleteஎதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை ஆவி... எனது பதிவுகள் இன்றும் கூட திருடப்படுகின்றன... பதிவு எழுதும் முறையை (உரையாடல் போல) மாற்றியும் எழுதுகிறேன்... அப்படியும் அதில் உள்ள சில பகுதியை மட்டும் திருடுகிறார்கள்... வேண்டுமானால் திருடனை நண்பனாக்கி கொள்ளலாம்... அப்படியும் திருடுவது போகவில்லை... ஹா... ஹா... தெரிந்து கொள்ள வேண்டுமா...?
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speed-Wisdom-2.html
//திருடனை நண்பனாக்கி கொள்ளலாம்./
Deleteஹஹஹா.. இது நல்ல ஐடியாவா இருக்கே..
#பூச்சியுண்ணும் தாவரங்கள் எலியை உண்ணுமா ?
Deleteஇப்படி # போட்டு எழுதினா யார்யார் எழுதி இருக்காங்க சர்ச் பண்ணுபோது கிடைக்கும்.
பகிர்கையில் குறைந்த பட்சம் மூலத்தைக் குறிப்பிடும் நாகரிகம் கூட இல்லை!
ReplyDeleteஆமாங்க அதுதான் வருத்தமே!
Delete