இ.ஆ. பாலகுமாராவுக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் பண்ணையாரும் பத்மினியும். காரை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை என்று சொல்லப் படுகின்ற இந்தப் படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன். மறைந்த நம் வாலிபக் கவிஞர் வாலி பாடல்களை எழுதி இருக்கிறார். இசையமைப்பாளரும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். சோனி நிறுவனம் இதன் ஆடியோவை வெள்ளியன்று வெளியிட்டது.
1. SPB சரண் மற்றும் அனு ஆனந்த் பாடியிருக்கும் பாடல் "எனக்காக பொறந்தாயே" எனும் பாடல். இரைச்சல் இல்லாத இசையில் நமக்கு பழைய SPB பாடலை கேட்பது போல் இருக்கிறது. ஏ.ஆர். ரகுமானின் டச் ஆங்காங்கே தெரிகிறது.
2. இதே பாடல் மீண்டும் "ஒனக்காக பொறந்தேனே" என்று பல்ராம் மற்றும் சந்தியாவின் குரல்களில் ஒலிக்கிறது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமான இசை நம்மை இன்னும் கொஞ்சம் பழைய காலத்திற்கு அழைத்து செல்வதை உணரலாம்.
3. "பேசுறேன்..பேசுறேன்" பாடலை இசையமைப்பாளர் தன்னுடைய சொந்தக் குரலில் பாடி இசை விருந்து படைத்திருக்கிறார். இடையிடையே கிராமத்து பாட்டிகளின் ஒப்பாரியையும் டிஜிட்டலில் பதிவு செய்திருக்கிறார். ஒரு சாயலில் யுவனின் குரலை நினைவுபடுத்திப் போகிறார்.
4. "எங்க ஊரு வண்டி" நெய்வேலி ஸ்ரீராம், அகிலேஷ், அல்லான், கௌதம், ஹரிப்ரியா, அஞ்சனா, யாழினி ஆகியோர் இணைந்து பாடியிருக்கும் குதூகலப் பாடல். காரின் பெருமை பேசும் இந்தப் பாடல் நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான பாடலாக இருக்கும்.
5. காந்தக் குரலுக்கு சொந்தக் காரன் 'கார்த்திக்' மற்றும் பிரசாந்தினி பாடியிருக்கும் டூயட் "காதல் வந்தாச்சோ". கிராமத்தில் இருவருக்குள் காதல் தோன்றும் தருணம் பாடலாய் வருகிறது.
முதல் முறை கேட்கையிலேயே மனதை வருடிச் செல்கிறது. குத்துப் பாடல்களோ, ஹீரோ இன்ட்ரோ சாங்கோ இல்லாமல் வந்திருக்கும் இந்த ஆல்பம் நிச்சயம் அந்த "பத்மினி" காரைப் போலவே பழையதாய் தோன்றினாலும் எப்போதும் "OLD is GOLD" அல்லவா?
நன்றி பகிர்வுக்கு!.....கேட்போம்.....ஹூம்....!
ReplyDeleteகேளுங்க யோகா.. அதிலும் எனக்காக பொறந்தாயே பாடல் இப்போ ரிப்பீட் மோடில்..
Deleteகவிஞர் வாலி அவர்களின் வரிகளை வாசிக்க வேண்டும்... நன்றி...
ReplyDeleteமூன்று பாடல்கள் மனதில் நிற்கும் பாடல்கள்..
Deleteகார்த்திக் பாடல் மட்டும் காதில் விழும்போது கேட்டுப்பார்க்க விருப்பம்!
ReplyDeleteநல்ல பாலிசி.. :)
Deleteபண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரில் விஜய் சேதுபதி நடித்த ஒரு குறும்படம் வந்திருக்கிறது.... அதைத் தழுவியே இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்... குறும்படம் பார்க்க..
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=ZxLOIpRn65k
அந்த குழு தான்.. இப்படக்குழு
Deleteஅதே தான் பாஸு.. ஆனா கொஞ்சம் கதை மாற்றப் பட்டிருப்பதாய் தகவல்..
Deleteபேசுறேன் .பேசுறேன் பாடல குரலுக்கு சொந்தக்காரர் யாருன்னு நானும் மனைவியும் பேசிக்கொண்டிருந்தோம் .......நன்றி...எங்க ஊரு வண்டி...வெயில் படத்து வெயிலோடு விளையாடி பாட்டை நியாபகப்படுத்துகிறது எனக்கு மட்டும்தானா? முக்கிய குறிப்பு: இன்னும் டிரைலர்ல வர்ற ரெண்டு வரியா கேட்டுதான் இவ்வளவு பெரிய ஆராய்ச்சி ஓடுது என்கூட்ல ...அவ்வ்வ்வவ்
ReplyDeleteஇசையமைப்பாளர் ஜஸ்டின், எனது நண்பன் ஆன்டோ மூலம் பழக்கம், இசை வெளியீட்டு விழாவிற்கு சென்று வந்த அனுபவத்தை எழுத வேண்டும் என்று முயல்கிறேன், ஹ்ம்ம்ம்ம்ம் காலம் அனுமதிக்க மறுக்கிறது.. ஒருவேளை எழுதினால் அதுவே அடுத்த பதிவாக இருக்கும்...
Deleteஜஸ்டினின் இசைக்கு நான் ரசிகன்... நல்ல நண்பர் (ஆனால் அதிகம் பேசமாட்டார் ) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Deleteசதீஷ்- நல்லா பாடியிருந்தார்.. முதல் முறை கேட்டபோது யுவன் என்றே நினைத்தேன்..
Delete//(ஆனால் அதிகம் பேசமாட்டார்//
Deleteநல்லவேளை.. பேசிட்டா அப்புறம் அவர்கிட்டவும் பல அவதானிப்புகள் பாயுமே!! ;-)
//, இசை வெளியீட்டு விழாவிற்கு சென்று வந்த அனுபவத்தை எழுத வேண்டும் என்று முயல்கிறேன், //
Deleteஎழுதுப்பா சீக்கிரம்..
அருமை. பாடல்களைக் கேட்கின்றேன்.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஏலே மக்கா... அப்புடிச் சொல்லுதியாலே...?
ReplyDeleteசர்தாங் கழுதையைக் கேட்டு வப்போம்லே...
கழுதையா, நான் பாட்ட இல்லே கேக்க சொன்னேன்.. ;-)
DeleteVintage Songs ....! நேத்துலருந்து கேட்டுட்டு இருக்கேன் ... டிரைலர்ல வருவது போல slow motion காட்சிகளுக்கு match பண்ணும் விதமாக இசை ....!
ReplyDeleteஜி.வி.பி , அனிருத் வரிசையில் அடுத்த இசைப்பாலகன் :)
பண்ணையாரும் பத்மினியும் - இதுல பத்மினிங்குறது கார் பேராம்ல...! ( நா மட்டுந்தானா ...?)
இப்படித்தாம்லே நானும் i Padmini ன்னு ஏதோ எழுதி இருக்காங்களேன்னு உள்ளே போனேன், அது பத்மினி இல்லே iPad mini யாமே?? ;-)
Deletenice share. i too like that song.. onakaga porantheney :)
ReplyDeleteவாங்க மேடம்.. முதல் வருகைக்கு நன்றி..
Deleteகேட்ருவோம், பாட்டை
ReplyDeleteகேளும்மா தங்கச்சி, கேட்டுட்டு சொல்லுமா எப்படி இருக்குன்னு..
DeleteGood boss
ReplyDeleteஎது குட், விமர்சனமா பாடல்களா? விம் ப்ளீஸ்..
DeleteMusic reviews
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகேட்கணும் ஆவி.... இப்பவே கேட்கறேன்...
ReplyDeleteத.ம. 6
கேளுங்க பாஸ்
Deletetamilmanam plus 7!
ReplyDeleteநன்றிங்க..
Delete