Saturday, October 26, 2013

"தல" டா !!


                     தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வருடம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வரவிருக்கும் படம் தான் "ஆரம்பம்"!!




                       ** யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி மக்கள் மனதில் ஒட்டிக் கொண்டது. "என் ப்யுஸும் போச்சு" இளமை மெலடியாகட்டும், "ஆரம்பமே அதிருதடா" பாடலாகட்டும். "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" பாடலின் துள்ளல் இசையாகட்டும், "ஸ்டைலிஷ் தமிழச்சி" ஹிப்-ஹாப் ஆகட்டும் ஒவ்வொன்றும் அருமை.


                       ** "தல' அஜித்தின் 53 வது படம் இது.

                       ** இதற்கு முன் தீபாவளிக்கு வெளிவந்த படம் தான் "அட்டகாசம்". இந்தப் படத்தில் தான் முதன் முதலில் அல்டிமேட் ஸ்டாரை ரசிகர்கள் செல்லமாக "தல" என்று அழைக்க ஆரம்பித்தனர்.



                        ** மங்காத்தாவில் வைத்த "சால்ட் அண்ட் பெப்பர்" லுக்கை இந்தப் படத்திலும் தொடர்கிறார் "தல".. ஹாலிவுட்டின் ஜார்ஜ் க்லூனிக்கு பிறகு இந்த ஹேர்ஸ்டைல் அதிகம் பொருந்துவது நம்ம "தல" ஐக்கு தான்.



சரி விஷயத்துக்கு வருவோம்,

           
                         ** "ஒப்பனிங் கிங்" என்று பெயர் பெற்ற அஜித் அவர்களின் படங்கள் இன்றைய தேதிக்கு முதல் மூன்று தினங்களில் ஆகும் வசூல் தென்னிந்திய நடிகர்கள் எல்லோரையும் விட மிக அதிகமாகும்.



                         ** இந்த முறையும் இதவரை எந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத எண்ணிக்கையில் திரையரங்குகள் ஆரம்பம் படத்திற்கு கிடைத்துள்ளது.

                       ** தமிழகமெங்கும் சுமார் ஐநூறு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சென்னையின் எல்லா முக்கிய தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது.

                        ** சென்னை மாயாஜாலில் ஒரே நாளில் 91 காட்சிகள் "ஆரம்பம்" மட்டுமே திரையிடப்படுகிறது.



                         ** கோவை ஈரோடு, திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 75 திரையரங்குகளில் 50 இல் ஆரம்பம் வெளியாகிறது. கோவையில் மட்டும் 15 அரங்குகளில் வெளியாகின்றது.

                         ** அமெரிக்காவில் தென்னிந்திய திரைப்படம் ஒன்று முதல் முறையாக 72 தியேட்டர்களில் வெளியாகிறது.



                         ** UK யில் 32 அரங்குகளிலும், மற்ற உலக நாடுகள் சேர்த்து 25 அரங்குகளிலும் வெளியாகிறது.

                         ** அஜித், ஆர்யா, ராணா (தெலுங்கு), நயன்தாரா, தாப்சி என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு களமிறங்கும் ஆரம்பத்தின் ட்ரைலர் அசத்தலாக இருந்தது.

                         ** அஜித்-விஷ்ணுவர்த்தன் கூட்டணி இணைந்த "பில்லா" மாபெரும் வெற்றி பெற்றது யாவரும் அறிந்ததே!



                       ** இந்தப் படத்திற்காக மணிக்கணக்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து உடலை "பிட்"டாக்கிய 'தல" சில துணிகர ஸ்டன்ட் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.



                       "வரலாறு" காணாத "ஆரம்பம்" காணப் போகும் இந்தப் படத்திற்கு "தல" ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தமிழ் ரசிகர்களும் ஆவலாக இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. "தல" ராக்ஸ்!!


                                                       **********

31 comments:

  1. * தீனா படத்தில் ‘தல’ என்று அவரை அழைப்பார்கள். அதன்பின்தான் அவருக்கு ‘தல’ என்று பெயர். அட்டகாசத்தினால் அல்ல ஆவி!
    * ‘ஓப்பனிங் கிங்’ அவர்ங்கறது சரிதான். சில சமயம் ஃபினிஷிங் சரியில்லாம அவர் படங்கள் கவுந்துடும். இந்த முறை சொல்லி அடிக்க வாழ்த்துவோம்!
    * இந்தப் படத்தை முதல்நாளே பாத்து நீ மட்டும் ‘தல’தீபாவளி கொண்டாடப் போற... அவ்வ்வவ்வ்!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஸார். தீனா வில் மகாநதி சங்கர் அஜித்தை தல என்று அழைப்பதுபோல் டைரக்டர் அவ்வாறு காட்சிகளை வைத்திருப்பார் சார்.. ஆனா ரசிகர்கள் போஸ்டர்கள் பேனர்கள் என எல்லாவற்றிலும் "தல" என அழைத்து மகிழ்ந்தது "அட்டகாசம்" படத்தின் போது தான்.

      Delete
  2. உங்க 'தல'பாசம் என்னை புல்லரிக்க வைக்குது ஆவி !

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. நன்றி பகவான்ஜி.. இது 'தல' பாசம் இல்ல.. 'தல' வெறி.. :)

      Delete
  3. எத்தனை திரையரங்கு தகவல்கள் உட்பட "தல" புராணம் சூப்பர்...!

    "தல" ராக்ஸ்...! நீங்களும் தான்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி 'தல' - நீங்களும் தான்!!

      Delete
  4. //* ‘ஓப்பனிங் கிங்’ அவர்ங்கறது சரிதான். சில சமயம் ஃபினிஷிங் சரியில்லாம அவர் படங்கள் கவுந்துடும்//

    ஹா..ஹா..நான் ஒன்னும் சொல்லலைப்பா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாப்பா, எல்லாருமே முதல் மூணு நாள்லயே பார்த்துடுறாங்க.. என்ன செய்யறது? ;)

      Delete
  5. கதாநாயகி நஸ்ரியா இல்லையா ஆவி?
    படம் வெற்றியடையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் ஸார்.. ஒரு விஷயம் தெரியுமோ உங்களுக்கு. நஸ்ரியாவுக்கு பிடிச்ச தமிழ் ஹீரோவும் "தல" தானாம்!! இதுவல்லவோ ப்ராப்தம்.. (கர்மம் கர்மம் ன்னு நீங்க சொல்றது கேக்குது..)

      Delete
    2. வாழ்த்துக்கு நன்றி சார்.

      Delete
  6. வணக்கம்
    ஆவி(அண்ணா)

    தல பற்றியும் தல படம் பற்றிய தகவல் சுப்பர்...வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இது என் கடமை ரூபன்!! ஹஹஹா..

      Delete
  7. Replies
    1. செம்ம அக்கா.. ஹை பை (HI-FI)

      Delete
  8. காண்பதற்காகக் காத்திருக்கிறேன், ஆவலாய்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாய் விருந்தாய் இருக்கும் ஸ்பை.. புக் பண்ணியாச்சா?

      Delete
  9. "..தல" - ஓப்பனிங் கிங்(கு) ... பினிசிங் சங்(கு)...!

    ஸ்தல புராணம் மாதிரி தல புராணம் ....! படத்த பார்க்குரவனுக்கு ரணமாகமா இருந்தா சரி ...!

    ReplyDelete
    Replies
    1. ஓ.. நீங்க அந்த குருப்பா தம்பி.. அப்படி தள்ளிப் போய் விளையாடுங்க.

      Delete
  10. நீண்ட இடைவேளைக்கு பின் தல அஜித் திற்கு ஆரம்பம் ஒருஅசத்தல் படமாக அமைந்துள்ளது. கலக்கட்டும்! வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஒய் பாஸ். மங்காத்தா, பில்லா 2 வும் அசத்தல் தானே.. என்ன பில்லாவில் மசாலா அதிகம் இல்லாததால் எல்லோரையும் ஈர்க்கவில்லை.

      Delete
  11. உங்கள் பகிர்வுக்கு,'தல' ரசிகனான என் நன்றிகளும்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்ங்க.. "தல" யால் இணைந்தோம். :)

      Delete
  12. படம் பார்க்க இப்பவே தயாராகிவிட்டீர்கள் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ட்ரையிலர் சாதாரணமாகத்தான் இருக்கிறது. அதாவது ஜேம்ஸ் பாண்டு படத்தில் வரும் மாதிரி. ஹைலி ப்ரடிக்கபிள். பல படங்களில் பார்த்துபழகிப்போன காட்சிகள். இன்றைய தமிழ்ப்படங்கள் எவ்வளோ தொலைவு வந்துவிட்டன. அஜித்தின் படங்கள் அங்கேயே நிற்கின்றன போலும்.

    அஜித்தின் லுக்கும் ப்ரடிக்கபிள். நீங்களே சொல்லிவிட்டீர்கள்: தொடர்கிறார் என்று. யலன்டாக இருக்கும்பொல தெரிகிறது. அவரின் ஆண் இரசிகர்களுக்காக படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இனியும் தொடர்ந்தால் நீங்களே போதுமென்று சொல்லிவிடுவீர்கள்.

    படத்தில் வலுவான கதையும் எடுக்கப்பட்ட விதமும் நடிகர்களின் ஃபெர்மான்ஸும் இருந்தால் படம் பரவலாகப் பேசப்படும். வெறும் வயலன்ஸ். அஜித்தின் முகம் - அதான் குலூனி லுக் - இவை மட்டுமே இருந்தால் இரசிகர்களால் மட்டுமே பேசப்படும். அவர் ஃபேனுக்கான நடிகர் என்ற ஏற்கனவே பதிக்கப்பட்ட முத்திரை நன்கு பதியப்படும்.
    இசை நன்றாக இருந்தால் அவை வெகுநாட்களுக்கு பலவிடங்களில் கேட்கப்படும். என்ன படம் என்று தெரியாமலே பல பாடல்கள் அப்படி புகழடையும். 'இதயத்தில் நீ'' 'இதயக்கமலம்' பாடல்கள் சூப்ப்ர்ஹிட். படங்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்தன. இசையும் கதையும் நடிப்பும் இணைந்திருந்தால் சுவடு எப்போதுமே இருக்கும். பாசமலர்.

    எனினும் உங்கள் நம்பிக்கை வீணாகமலிருக்கும் என நம்புவோமாக.

    ReplyDelete
    Replies
    1. unga karuththugalukku nandri.. idharkaana pathilai padam velivantha pinbu solgiren,

      Delete
  14. படம் பார்க்க தயார் ஆகிட்டீங்க... வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...