தீப ஒளியாம் தீபாவளி
தீபாவுக்கு மட்டும் ஏன் இல்லை முகத்தில் ஒளி?
கட்டம் போட்ட சட்டையும், நீல நிற ஜீன்ஸுமே,
வட்ட வட்ட பொட்டுடன் வண்ண சுடிதாருமே,
காரின் மீது ஏறியே கடைக்கு சென்று வாங்குவோம்.
கழுத்தாரம், கடியாரம் ஒரு வாரம்,
லோலாக்கும், மிதியடியும் மறு வாரம்,
செல்வத்தின் மிகுதியினை உலகிற்கு காட்டுவோம்.
திரைப்படத்தை கண்டிடவே சில ஆயிரம்,
ஒரு நேரம் உண்டு மகிழ சில ஆயிரம்,
ஆடம்பர வாழ்க்கைமுறை இதை பறைசாற்றுவோம்.
இருப்பதற்கு மாளிகை போல் ஒரு வீடு,
அடிக்கடிதான் மாற்றிக்கொள்ளும் செல்பேசியோடு,
மேல்தட்டின் மேன்மையை நாம் உணர்த்திடுவோம்.
சிகையதனை திருத்திடுவோம் சீரோடு,
வகைதொகையாய் சுற்றிடுவோம் ஊரோடு,
வருமானப் பெருக்கத்தின் வளர்ச்சியையும் காட்டிடுவோம்.
சாலையிலே, சந்தினிலே, மூலையிலே,
பசியோடும், ஏக்கத்தோடும், வருத்ததோடும்
ஆங்காங்கே சந்திக்கும் ஒரு பெண் தான் நம் தீபா.
மண்ணில் பிறந்ததிவள் குற்றமில்லை,
மன்றாடி பெற்றுக்கொள்ள யாருமில்லை,
வறுமைக்கோடெனும் வெம்மையான கூரையின் கீழ் வாழும் இவளுக்கு,
பலகாரம், பட்டாசு, பட்டாடை தேவையில்லை,
வேண்டுவது மூன்று வேளை உணவேயன்றி வேறு இல்லை,
பகட்டான வாழ்க்கைக்கு மத்தியில் நாம்,
இயன்றதையே மனமுவந்து கொடுத்திடலாம்.
ஊரெங்கும் கொண்டாடும் தீபாவளி!
தீபாவின் முகத்தினிலே ஏற்றிடலாம் நீங்களும் ஒளி!!
*******************
ரூபன் அவர்களின் தீபாவளிச் சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பும் கவிதை இது.. எப்படியிருக்குன்னு உங்க கருத்துகளை சொல்லுங்க..
அன்பின் ஆவி - சிந்தனை நன்று - செய்ய வேண்டுய நற்செயல் - வழக்கமாகச் செய்யும் செயல்களில் சிலவற்றைக் குறைத்துக் கொண்டு இச்செயலைச் செய்யலாம் - நல்வாழ்த்துகள் -நட்ட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteஅழகான கவிதை நண்பரே...
ReplyDeleteகொடுத்தலில் கிடைக்கும் இன்பம் அலாதியானது..
இல்லை என்போருக்கு இயன்றதை தருவோம்..
அவர் முகம் காட்டும் மகிழ்ச்சியில் தீப ஒளியினைக் காண்போம்
என உரைக்கும் ஆழமான கவிதை..
வாழ்த்துக்கள்..
நன்றிங்க.. வருகைக்கும் வாழ்த்துக்கும்!!
Deleteவாழ்த்துக்கள் ஆவி....இன்னும் அனுப்பலன்னா இன்னும் கொஞ்சம் வெட்டல் ஒட்டுதல் வேலை பார்த்து அனுப்பவும்....கருத்து அருமையானது...(theme)
ReplyDeleteநன்றி சதீஷ்.. அனுப்பிட்டேன்.. ( தவிர, நான் ஒரு தடவ டைப் பண்ணீட்டா என் கையால டெலீட் பட்டன நானே தொட மாட்டேன்..
Deleteசும்மா காமெடிக்காக தான் அப்படி சொன்னேன். சங்கத்து ஆள், சரியா புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.. :)
Deleteஉங்க கருத்துகள் திருத்திக் கொள்ள உதவியாய் உ=இருந்தது.. அடுத்த முறை இந்த தவறுகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteவார்த்தைகளை சுருக்குங்கள்...வாசகனின் மனத்திரையில் ‘பிக் கேன்வாசில்’ ஒரு சித்திரம் விரிய வேண்டும்.
ReplyDeleteஎல்லாவற்றையும் சொல்லில் சொல்வது கவிதை அல்ல.
உ.ம். முகிலினங்கள் அலைகிறதே...முகவரிகள் தொலைந்தனவோ...
முகவரிகள் தொலைந்ததினால் அழுதிடுமோ...
இதோடு வரிகளை நிறுத்தினால் அது சிறந்த கவிதை.
‘அது மழையோ’...என அடுத்த வரியை விவரித்து விட்டதால் இது பாமரனுக்கும் புரிய வைரமுத்து இறங்கி வந்ததையே எடுத்துக்காட்டுகிறது.
முதல் வரிகளிலே உள்ள இலக்கிய ரசனை...
இந்த ஒரு வரியிலேயே
அடிபட்டுப்போகிறது.
இன்னும் சிறப்பாக முயற்சித்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நல்லா சொல்லி விளங்க வச்சீங்க.. இதை ஆல்ரெடி அனுப்பிட்டேன்.. அடுத்த முறை உங்க வார்த்தையை மனசில் வச்சுக்கறேன்..
Deleteமிகவும் அருமை... கலந்து கொண்டதற்கு நன்றி... நடுவர்களுக்கு இணைப்பை அனுப்பி வைக்கிறேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்.. உங்க மெயில் ஐடி க்கும் அனுப்பியிருக்கேன்..
Deleteமுதல் பரிசு பெற வாழ்த்துகள்
ReplyDeleteமுதல் பரிசு பெரும் அளவுக்கு இல்லை அக்கா.. எப்பவுமே நஸ்ரியா பத்தி மட்டுமே இவன் எழுதுவான்னு மக்கள் நினைச்சிடக் கூடாதில்லையா.. ஆவிக்கும் சமூகப் பொறுப்பு இருக்குன்னு சொல்ல வேண்டிதான் என் மனசில் இருந்ததை வார்த்தைகளா போட்டு அனுப்பினேன்.. பரிசுக்காக அல்ல..:)
Deleteஅருமையான சிந்தனையுடன் கூடிய
ReplyDeleteஅற்புதமான கவிதை
வாழ்த்துக்கள்
நன்றி ஐயா..
Deletetha.ma 5
ReplyDeleteநன்றி..
Deleteஒரு தடவை டைப்பினா... அவ்வவ்வ்! பஞ்ச் டயலாக்ஸ் பேசற கும்பல்ல ஆவியும் சேர்ந்திடுச்சா? ஆனா... ஆவிக்கும் சமூகப் பருப்பு... ச்சே, பொறுப்பு இருக்குன்னு நிரூபிச்ச கவிதை அசத்தல்! என்னைப் போன்ற பாமரனும் புரிந்து கொள்கிற அளவுக்கு எளிமையான வரிகள்ல அமைஞ்சிருக்கறது இன்னும் சிறப்பு!
ReplyDeleteஹஹஹா.. நன்றி சார்..
Deleteஎதை பற்றிய தாக்கமும் இல்லாமல் கவிதை எழுத இயலாது !!!! நீங்கள் இதை எழுதியதும் அவ்வாறே!
ReplyDeleteபலருக்கும் சந்தோசம் கொடுக்கும் பண்டிகைகள் சிலருக்கு ஏக்கத்தை மட்டும் கொடுத்துவிட்டு கடந்து விடும்.
அந்த ஏக்கத்தை அழகாய் கோர்த்து, உணர்வை வரிகளாக்கிய உங்களுக்கு என் பாராட்டுகள் !!
வெற்றிப் பட்டியலில் இந்த கவிதை இடம்பெற என் அன்பான வாழ்த்துக்கள் !
நன்றிங்க கௌசல்யா..
Deleteகோவையில் இரண்டு வருடங்கள் முன்பு ஒரு நண்பருடன் "உதவும் கரங்கள்" போயிருந்தேன். அங்கே ஆதரவற்ற சிறுவர் சிறுமிகள் அத்துணை பேர் உள்ளார்கள்.. எதோ நம்மால் முடிந்த சிறு உதவியும் அவர்கள் படிப்புக்கு, உணவுக்கு, உடைக்கு உதவும் என நண்பர் சொன்னதும் கொஞ்சம் கலங்கி விட்டேன்.. என்னால் முடிந்த சிறு உதவிகளை செய்து வருகிறேன்.. இதை பதிவு செய்ய நினைத்தேன் அவ்வளவுதான்.. பரிசாய் நான் வேண்டுவது உங்கள் பாராட்டுக்கள் மட்டுமே!! :)
தீபாவளி கவிதை போட்டி உங்கள் மனதில் ஏதோ ஒரு தீரா வலியை கொடுத்தது போல் உணர்கிறேன் !
ReplyDeleteத.ம 6
கவிதைப் போட்டி அல்ல.. சமூகத்தின் அவலங்கள்.. மாலில் நூற்றி இருபதை கத்தையாய் கொடுக்கிறார்கள்.. கடைத்தெருவில் காய்கறி விற்கும் அம்மாவிடம் இரண்டு ரூபாய்க்கு பேரம் செய்கிறார்கள்.. ம்ம்ம்..
Deleteநெஞ்சை சுட்ட கவிதை, நல்லாருக்கு!///வெட்ட+ஒட்ட மாட்டேன்னு சொல்லிட்டீங்க.என்ன,வசன நடையில இருக்கு,பாத்துக்குங்க.இன்னும் பயிற்சி வேணும்.
ReplyDeleteவெளிப்படையான கருத்துக்கு நன்றி சுப்பிரமணியம் ஜி! அந்த கருத்து சதீஷ் அவர்களுக்கு விளையாட்டாய் போட்டது.. சுட்டிக்காட்டப்பட்ட என் தவறுகளை என்றும் நான் திருத்திக் கொள்ள மறுப்பதில்லை.. நன்றி..
Deleteவெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteநன்றிப்பா.. வெற்றி(வேலை) தம்பியாய் பெற்ற எனக்கு வேறு வெற்றிகள் எதற்கு? :)
Deleteவிழிப்புணர்வுக் கவிதை. உணர்வுள்ள கவிதை.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் ஸார்..
Deleteவெற்றி பெற வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteதேங்க்ஸ் டூட்!!
Deleteசிறப்பான சிந்தனையுள்ள கவிதை! பண்டிகைகளை பலருக்கும் சொந்தமாக்குவோம்! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பா!!
Deleteகவிதை அருமை..! வெற்றி நமதே...!!
ReplyDeleteவாப்பா.. வலை மூலமா தான் பார்க்கவே முடியுது தம்பி உன்ன!!
Deleteசதீஷ் அண்ணா கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்... கருத்துக்களில் இருக்கும் வலிமை வார்த்தையாக வெளிப்படும் பொழுது கொஞ்சம் குறைவது போல் தோன்றுகிறது.. உங்கள் ஆவிப்பா உங்கள் கவிதைகளுக்கு சிறந்த உதாரணம், உங்களில் நான் ரசித்த மற்றொரு கவிதை காதல் கடித போட்டிக்கு எழுதியது... அதைப் போல் முயலவும்...
ReplyDeleteம்.. கண்டிப்பா சீனு.. பாராட்டுக்கள் மட்டுமல்ல, அவ்வப்போது இதுபோல் குட்டுகளையும் கொடுத்து என் எழுத்துகளை மெருகேற்றியதற்காக எல்லோருக்கும் நன்றி கூற வேண்டும். எழுதியதும் அனுப்பி விட்டேன். பிறகுதான் இங்கு பிரசுரிக்கவே செய்தேன். அடுத்த முறை இந்த தவறுகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன்.
Deleteநல்ல விழிப்புணர்வுக் கவிதை சகோ!
ReplyDeleteவரிகள் ஒவ்வொன்றும் அற்புதம்!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
சகோ.. க்விலிங் பற்றி நீங்கள் கேட்டதற்கு இன்று என்பதிவில் பகிர்ந்துள்ளேன்..:)
Deleteநேரங்கிடைப்பின் வந்து பாருங்கள்! நன்றி சகோ!
படித்துவிட்டேன் சகோ.
Deleteவாழ்த்துக்கு நன்றி சகோ!!
Deleteஅருமையான கவிதை..சமூக ஏற்றத்தாழ்வை அழகாக சொல்லிவிட்டது..
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துகள்!
நன்றிங்க கிரேஸ்..
Deleteஆவியின் அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteபரிசு பெற வாழ்த்துகள்..!
நன்றி அம்மா..
Deleteதீபாவின் வலியை சொல்லி மனதை நெகிழ்த்தி விட்டீர்கள்.
ReplyDeleteநாம் ஒவ்வொருவரும் இந்த மாதிரிக் குழந்தைகளின் முகத்தில் ஒளி வரச் செய்ய வேண்டும். நல்ல வார்த்தைகளில் கோர்க்கப்பட்ட நல்ல கவிதை வெற்றி பெற வாழ்த்துகள்.
நன்றி அம்மா..
Deleteவணக்கம்
ReplyDeleteஆவி(அண்ணா)
தங்களின் மின்னஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Thanks Rupan!
Delete