Wednesday, October 16, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (மனசுக்குள் மத்தாப்பு (தொடர்ச்சி) ) -11




                       "ம்ம்.. பிடிச்சிருக்கு.. ஆனா.." என்ற அவளின் முகத்தையே உற்று நோக்கிய என்னிடம் " ஆனா, அதுக்காக காலேஜ் கட் அடிச்சுட்டு ஊர் சுத்த கூப்பிடக் கூடாது" " இதுவரைக்கும் அப்படி ஒரு ஐடியா இல்லை, நீ சொன்னதுக்கப்புறம் தான் தோணுது." " ம்ம்.. (என்று சிணுங்கியபடி) என்னை முழுசா சொல்ல விடுங்க.. மறந்திடுவேன்." என்று கெஞ்சிய  அவளின் சிறுபிள்ளைத்தனத்தை ரசித்தேன். "அப்புறம், இப்போதைக்கு இத யார்கிட்டவும் சொல்ல வேணாம், சங்கீதாவுக்கு கூட தெரிய வேணாம், நீங்களும் பாஸ்கர் கிட்ட இப்ப சொல்லாதீங்க. அப்புறமா சொல்லிக்கலாம்." "எனக்கே, இன்னைக்கு தான் தெரிஞ்சிருக்கு, அவங்களுக்கு அப்புறம் தெரிஞ்சா ஒண்ணும் பிரச்சனையில்ல. அவ்வளவுதானா, வேற ஏதும் இருக்கா?" "ம்ம்.. இப்போ அவ்வளவுதான். சரி லேட்டாச்சு, நான் கிளம்பட்டுமா?" என்றவளிடம் "உடனே போகணுமா. கொஞ்சம் பேசிட்டு போலாமே."

                          நான் சொல்வதற்காய் காத்திருந்தவள் போல் " சரி, சொல்லுங்க." " உன் கை பிடிச்சிக்கலாமா" "ம்ஹூம்" என்றபடி தன் கைகளை பின்னுக்கு இழுத்தவள் என் முகம் மாறியதைக் கண்டு "யாராவது பார்த்தா தப்பா நினைச்சுக்குவாங்க" என்றபடி கையை முன்னுக்கு கொண்டு வந்தாள். அவள் கைகளை எடுத்து என் கைகளில் வைத்துக் கொண்டு "நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?" என்றதும்  "எவ்ளோ" கண்களை சிமிட்டியபடி அவள் கேட்டது அழகாய் இருந்தது. அவளுடைய மற்றொரு கையை என் இடக் கையால் பிடித்து அகல விரித்து "இவ்ளோ" என்றேன். "ஓஹோ, இவ்வளவு தானா" என்று செல்லமாய் கோபிப்பது போல் முகத்தை திருப்பினாள். "இல்ல.. ரொம்ப நிறைய" என்றதும் சிரித்துவிட்டு "சரி, நான் போகட்டுமா" என்றாள். "ம்ம்" என்றதும் ஒரு மான்குட்டியை போல் துள்ளி ஓடினாள்.

                      கதவருகில் சென்றவள் நின்று என்னைப் பார்த்து "நானும் இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்" என்று கூறினாள். "எவ்ளோன்னு நான் கேட்க மாட்டேன்" "ஏன்" "எனக்கே தெரியும்" அவள் மெலிதாய் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர முயல "ரமா" என்று உரக்க விளித்தேன். "ம்" என்று திரும்பி பார்த்தாள். "நான் வேணும்னா வண்டிகேட்ல சைக்கிள் வாடகைக்கு எடுத்து உன்னை கிராயூர்ல விடட்டுமா" என்றேன். "ம்ம்.. அதுசரி, அதுக்குள்ளயேவா.. அதெல்லாம் வேணாம்பா.. ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க. வண்டிகேட்ல எனக்காக பிரெண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..நான் போகட்டுமா".. "சரி" என்றேன் அரை மனதாய்..

                        அவள் சென்றதும் மெதுவாய் என் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு உள்ளத்தில் இனம் புரியா இன்பம் குடிகொள்ள ஏக குஷியோடு கல்லூரியை விட்டு வெளியேற, வழியில் ஓடிவந்து என்னோடு நடக்க ஆரம்பித்தான் அன்பு.. "என்ன சார் ஒரே ஹேப்பியா இருக்கார் போல" அவனைப் பார்த்ததும் நடந்த எல்லாவற்றையும் சொல்ல "சூப்பர்டா" என்று என் மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டான். வரும் வழியில் வண்டிகேட்டில் ஒரு மெக்கானிக் ஷாப்பில் பாஸ்கர் உட்கார்ந்திருந்தான். இவன் இங்கே எதற்கு உட்கார்ந்திருக்கிறான் என்று எண்ணியபடியே அன்புவுடன் கவுண்டர் காம்ப்ளெக்ஸை அடைந்தோம். 

                       "இந்த சந்தோசத்தை கொண்டாட வேலூர் போறோம். நல்ல ஹோட்டல்ல சாப்பிடறோம், நைட்டு வர்றோம்" என்ற அன்புவிடம் "இல்லடா, அவளைப் பார்க்கணும் போல இருக்கு. நான் கிராயூர் போறேன்." "நான் துணைக்கு வரட்டுமா" "இல்லடா, யார்கிட்டவும் இப்போ சொல்ல வேணாம்னு சொன்னா. எனக்கு உன்னைப் பார்த்ததும் எல்லாமே சொல்லனும்னு தோணிச்சு.. அதான் சொல்லிட்டேன்.. தெரிஞ்சா வருத்தப் படுவா" "சார் இப்போவே மேடத்துக்கு ரொம்ப பயப்படற மாதிரி தெரியுது" "இல்லடா" என்று நான் விளக்க ஆரம்பிப்பதற்குள் "நீ ஒன்னும் சொல்ல வேணாம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நீ போ.. இருட்டிட்டா பார்க்குறது கஷ்டம்" "ஆமாமா" என்றபடி கைக்கு கிடைத்த ஒரு டி-ஷர்ட்டை மாற்றிக் கொண்டு கிளம்பினேன். 

                     வழியில் பாஸ்கரை பார்த்து நின்றேன். இப்போது அந்த ஒர்க் ஷாப்புக்கு அருகில் நின்றிருந்த டீக்கடையில் நின்றிருந்தான். நான் பஸ்சுக்காக நின்றிருந்த நேரம் அவனைக் கவனித்தேன். அடிக்கடி ஒர்க் ஷாப்பை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தான். பஸ் வருவதைப் பார்த்த நான் ஓடிச்சென்று ஏறினேன். பஸ்ஸில் அமர்ந்து அந்த இருக்கையில் இருந்து பார்த்த பின் தான் எனக்கு தெரிந்தது. அவன் பார்த்துக் கொண்டிருந்தது ஒர்க் ஷாப்பை அல்ல, அதன் அருகில் ஒரு சிறிய சந்தில் உள்ள வீட்டையும் அதன் முன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணையும் என்று..


தொடரும்..



22 comments:

  1. வணக்கம்
    ஆனந் (அண்ணா)

    பதிவு எழுதிய விதம் நன்று வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவை........

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்.. முதல் வருகை மகிழ்ச்சியை தந்தது.

      Delete
    2. ஐ மீன் இந்த பதிவுக்கு..:-)

      Delete
  2. விசயம் அப்படி போகுதோ....? சுவாரஸ்யம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா DD, பயபுள்ள எதோ ரூட் விட்டுகிட்டு இருக்கு..

      Delete
  3. அதான என்னடா ஆவி கதையில ரொம்பநாளா ரொமான்ஸ் இல்லாம இருக்கேன்னு பார்த்தேன்... இனி ஒரே நம்தன நம்தன நம்தன தானா... :-))))))

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. வேற மாதிரி கமெண்ட்ஸ் எதிர்பார்த்தேன் நான் ..

      Delete
  4. அதுக்காக காலேஜ் கட் அடிச்சுட்டு ஊர் சுத்த கூப்பிடக் கூடாது.


    >>

    கட்டடிச்சுட்டு காதல் பண்ணக் கூடாதுன்னா அப்புறம் எதுக்கு காலேஜ் போகனும்?! லவ்வனும்!? வேஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. எதோ அறியாத வயசு.. தெரியாம சொல்லிடுச்சு விட்டுடுங்க..

      Delete
  5. உன் கை பிடிச்சிக்கலாமா" "ம்ஹூம்" என்றபடி தன் கைகளை பின்னுக்கு இழுத்தவள்
    >>
    ம்ஹூம் இந்த பொண்ணு உனக்கு செட்டாகாது. வேணாம் வந்துடு ஆவி, நாம வேற நல்ல பொண்ணா கைப்பிடிக்குற பொண்ணா பார்த்துக்கலாம்!!

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ, கடந்த காலத்தை திருத்தி எழுத முடியாது அக்கா..!

      Delete
  6. ரொமான்ஸா போகின்ற போது யாரு அந்த புள்ள.. அடடா சொல்லாம விட்டுட்டுங்களே.

    ReplyDelete
    Replies
    1. சொல்றேன்.. சொல்றேன்..

      Delete
    2. ரொமான்ஸா போகின்ற போது யாரு அந்த புள்ள.. அடடா சொல்லாம விட்டுட்டுங்களே.

      அது வேற யாருமில்லங்க ஆவிக்கு சோடியாய் வந்த(வரப் போகிற )துணை ஆவீங்க :)))))))

      Delete
    3. சகோ, அவங்க கேக்குறது பாஸ்கர் பார்த்திட்டு இருந்த பொண்ணை பற்றி..

      Delete
  7. உங்க டிராக் காதலில் முடிஞ்சதும்.... இன்னொரு டிராக் இப்ப ஆரம்பமாகப் போகுதா...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. இப்போதானே ஆரம்பம் ஆகியிருக்கு.. அதுக்குள்ள முடிஞ்சதும் ன்னு சொல்றீங்களே? ;-)

      Delete
  8. வருகைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  9. AAVIYIN kathal track smooth aga take off agi irukku. At the same time Baskar also looking (sight Adiching?) another girl. IRANDU PER... IRANDU KATHAL... Mmmm. Enna Than Nadakkuthunnu Aduthadutha Nigalvugalukka Avaludan Kathirukken.

    ReplyDelete
    Replies
    1. //Nigalvugalukka Avaludan Kathirukken.//

      எவளுடன்?? ;-)

      Delete
  10. இரண்டாம் season சந்தோஷத்துடன் தொடங்குகிறது :)

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...