ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் இளையதளபதி விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் ஜில்லா. டி.இமானின் இசையில் இப்படத்தின் பாடல்கள் எப்படி இருக்குன்னு இங்கு பார்ப்போம்..
1. "எப்ப மாமா ட்ரீட்டு" - இமான், பூஜா மற்றும் ஸ்னிக்தா குரலில் பார்ட்டி சாங் போல் இருக்கிறது. படமாக்கும் விதத்தில் ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
2. இளையதளபதி விஜய், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருக்கும் டூயட் பாடல் "கண்டாங்கி கண்டாங்கி" முதல் முறை கேட்கும் போதே பிடித்து போகிறது.விஜய் முன்பே பல பாடல்கள் பாடியிருந்தாலும் இதில் ஒரு தேர்ந்த பாடகரை போல் பாடியிருப்பது இன்னும் சிறப்பு. வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு அழகு சேர்க்கிறது.
3."ஜில்லா Theme" - வழக்கமான நாயகன் புகழ் பாடும் பாடல். மோகன்லாலுக்கும் சேர்த்து போட்டதாலோ என்னவோ ஆங்காங்கே செண்டை மேளம் கொட்டி மலையாள வாடையுடன் வாசித்திருக்கிறார் இமான். எப்பவும் போல விஜயின் இந்த அறிமுகப் பாடலையும் எழுதியிருப்பது கவிஞர் விவேகா தான்!
4. " வெரசா போகையில" - பார்வதி எழுதியிருக்கும் இந்தப் பாடலையும் இமான் தான் பாடியிருக்கிறார். ஏனோ கும்கி பாடலை மீண்டும் கேட்பது போன்றிருக்கிறது. இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.
5. சுனிதி சவ்ஹான் ரஞ்சித்துடன் இணைந்து பாடியிருக்கும் குத்து பாடல் "ஜிங்குனமணி". கிளைமாக்ஸுக்கு முந்தைய பாடலாக இருக்கலாம். தாளம் போட வைக்கும் இசை கண்டிப்பாக சி சென்டர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
6. சிம்மக் குரலுக்கு சொந்தக்காரர் ஷங்கர் மகாதேவனும், 'நம்ம' SPB யும் பாடியிருக்கும் பாடல் "பாட்டு ஒண்ணு". விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து திரையில் தோன்றும் பாடல் இது.
"சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா,
எதிர்க்க நின்னா எவனும் தூசுடா"
வரிகள் நிச்சயம் இளைய தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். தன் தனித்துவமான இசையால் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான இசை படைக்கும் இமான் இதிலும் அசத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கண்டாங்கி பாடல் கவர்கிறது உண்மையே.
ReplyDeleteநானும் கேட்டேன்..
ஹிந்தோள ராகத்தின் சாயல் நன்றாகத் தெரிகிறது.
balma mane naa என்னும் இந்தி பாடலை கேட்பது போல் இருந்தது.
http://www.youtube.com/watch?v=xU7DSfFxkA8
that was also based on Raag Hindolam.
just the beat is slowed down.
anyway shreya goshal is superb.
சுப்பு தாத்தா.
ஆமா தாத்தா..என் ப்ளே லிஸ்டில் ரிபீட் மோடில் ஓடிக் கொண்டிருக்கிறது.
Deleteஐ.. சரோஜா தேவி ஹிந்தியில் நடிச்சுருக்காங்களா.. புதிய தகவல் எனக்கு.. ராகம் அதே போல் இருப்பதை உணர முடிகிறது..டெம்போ கொஞ்சம் பாஸ்ட்..
நீங்க FB யில் இருக்கீங்களா தாத்தா?
தாத்தா, உங்களை Sury Siva என்ற பெயரில் தேடினேன். கிடைக்கவில்லை.. என் பெயர் Anand Vijayaraghavan என்ற பெயரில் இருக்கும்.. ரிக்வஸ்ட் ப்ளீஸ்!!
Deleteface book லே ஆனந்த் விஜயராகவன் பெயரிலே 3 பேர் இருக்கின்றார்கள்.
Deleteஅதிலே யார் ஆவி எப்படி கண்டுபிடிப்பது ?
சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
கண்டாங்கி கண்டாங்கி பாடலின் ஆரம்ப இசை!
ReplyDeleteசூப்பரா இருக்கு சார் இது..
Deleteஆரம்ப இசை ன்னு நீங்க சொல்ல வர்றது என்னன்னு எனக்கு புரியல, சாரி!!
பாடல் நன்றாயிருக்கிறது. ஆரம்ப இசை Very attractive.
Deleteஓக்கே அப்ப டவுண்லோட் பண்ணி கேட்டுபுடுவோம்! தாங்க்ஸ்!
ReplyDeleteகேளு தம்பி!!
Deleteகேட்கிறேன்.....
ReplyDelete