Monday, December 23, 2013

ஆவி டாக்கீஸ் - வீரம் (Music)

                                                     

                       "ஆரம்பம்" பட வெற்றிக்கு பின் அஜித்குமார் தமன்னாவுடன் இணைந்து நடித்து அடுத்து வரவிருக்கும் தமிழ்ப்படம் "வீரம்". தேவி ஸ்ரீ பிரசாத் (DSP ) இசையமைக்க அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார் விவேகா. கிராமிய பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

            1. இசையமைப்பாளர் DSP தான் இசையமைக்கும் எல்லா படத்திலும் நாயகனுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஒரு பாடலை  பாடி அசத்துவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். இதில் வரும் அறிமுகப் பாடல் "நல்லவன்னு சொல்வாங்க" அதிகம் இரைச்சல் இல்லாமல் நாயகனின் பெருமை பேசுகிறது. "யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான்" என்ற வரிகள் 'தல' ரசிகனை நிச்சயம் திருப்தி படுத்தும்.

              2. "இவள்தானா" பாடல் சாகர் மற்றும் ஸ்ரேயா கோஷலின் குரல்களில் ஒலிக்கும் டூயட். 'டிஜிட்டலில் செதுக்கிய குரல் இவள்தானா' என்ற வைரமுத்துவின் வரிகளுக்கு பொருத்தமாய் இருக்கிறது ஸ்ரேயா கோஷலின் தித்திக்கும் குரல்.

              3. 'வெண்கலக் குரலோன்'  அதனன் சாமி, பிரியதர்ஷினி இணைந்து பாடியிருக்கும்  "தங்கமே, தங்கமே" பாடல் முதல் முறை கேட்கும் போது 'காத்தாடி போல என்னை சுத்த வைக்கிற' பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.  துடிப்பான இந்தப் பாடலுக்கு 'தல' போடப் போகும் நடனத்தை நினைத்தால் தான் இப்பவே கொஞ்சம் கண்ணை கட்டுகிறது.

              4. "ஜிங் சக்கா" கிராமிய குத்துப் பாடல் புஷ்பவனம் குப்புசாமி, மகிழினி மணிமாறன் பாடியிருக்கின்றனர். ஊர் மக்கள் பாடும் பாடலாக வரும் பாடல் அருமையான குத்துப் பாடல். மைனாவின் ஜிங்கு ஜிங்கு பாடலையும் கும்கியின் சொய்ங் சொய்ங் பாடலையும் சரிவிகிதத்தில் கலந்தது போல இருக்கிறது.

              5. வீரம் பட ஆல்பத்தின் சிறப்பான படைப்பு "ரத கஜ துரக பதாதிகள்" பாடல். சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஒரு சில நொடிகளே வந்து போகும் டீசரில் இந்தப் பாடலுக்கென படமாக்கப்பட்ட காட்சி மக்களின் பாராட்டை பெற்றது. பாடலை கேட்டவுடன் உள்ளுக்குள் வீரம் பொங்க வைக்கும் பாடல் 'தல' படப்பாடல்களில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.

                 
              அஜித்தின் நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு இருக்கும்படி இசையமைப்பாளரிடம் இயக்குனர் சிறுத்தை சிவா கூறியிருப்பாரோ என்னவோ, வேகமான இசை "ரத கஜ" பாடலை தவிர எதிலும் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கே DSP க்கு ஒரு "ஓ" போடலாம். வீரம் படப் பாடல்கள் "தல" ரசிகர்களை மட்டுமல்ல எல்லோரையும் குஷிப்படுத்தும்.

பின்வரும் சுட்டியில் பாடல்களை கேட்டு மகிழலாம்..
http://gaana.com/album/veeram





5 comments:

  1. இனிமேல் தான் கேட்க வேண்டும் நண்பா...!

    ReplyDelete
    Replies
    1. சுட்டி கொடுத்துள்ளேன்.. கேட்டுப் பாருங்க DD..

      Delete
  2. பாடல் பகிர்வுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails