Tuesday, September 16, 2014

கடோத்கஜா மெஸ் - பர்மா கார்னர்

மு.கு: பின் வரும் பதிவு பொது வெளியில் சுகாதாரமற்ற சூழலில் உருவாக்கப்படும் உணவு வகைகள். சுத்தம் சோறு போடும்,  சுகாதாரம் கொழம்பு ஊத்தும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இதை படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஆதி மனிதன் ஹைஜீனிக் தெரிந்தா வாழ்ந்தான், எங்க கிடைச்சா என்ன, சுவையான உணவு தான் நமக்கு முக்கியம்ன்னு நினைக்கிறவங்க தொடரலாம்.



இடம்:  சென்னை, பர்மா பஜார், ஸ்டேட் பாங்க் பின்புறம்.


         "சாப்பாட்டு ராமன்" புகழ் ரூபக் போன் செய்து பர்மா உணவை சுவைக்கலாம் என்று அழைத்ததும் ஒரு நிமிடம் 'இஞ்சி' இடுப்பழகி இலியானா கண் முன் தோன்றி "அத்தோ, மொய்ஞோ, பேஜோ என்று "நண்பன்" திரைப்படத்தில் சொல்லும் டயலாக் தான் நினைவுக்கு வந்தது. படை திரட்டி சென்று தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தால் வாத்தியாரைத் தவிர எல்லோரும் "நான் ரொம்ப பிஸி" என ஓவர் சீனு போட, ஐ மீன் சீன் போட மூவர் குழு களத்தில் இறங்கியது. ஒரு தள்ளுவண்டியில் வைத்து சமைத்து தரப்படும் இந்த உணவுகளில் சுவை கேரண்டி.. சமையல் செய்ய ஒருவர், எடுத்துக் கொடுக்க இரண்டு பேர் என மூன்று பேர் வேலை செய்கிறார்கள். சரி உணவுக்கு வருவோம்.

கடை ஓனர் ஸ்டைலாக போஸ் கொடுத்த போது ..!


அத்தோ ( A Thoke) 

                      ஆங்கிலத்தில் சாலட் (Salad ) என்று சொல்லப்படும் வகையை சேர்ந்தது இந்த அத்தோ.   பல விதமான அத்தோக்கள் உள்ள போதிலும் நம்ம ஊர் டேஸ்டுக்கு ஏற்ப இவர்கள் நமக்கு அத்தோ என்ற பெயரில் செய்து தருவது சமோசா அத்தோ. கொஞ்சம் ரைஸ் நூடில்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், புதினா, மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட பேல்பூரியில் நூடுல்ஸ் சேர்த்தது போல சுவைக்கிறது.


ரைஸ் நூடுல்ஸ் 



அத்தோ- சுவைக்க தயார்  நிலையில் 


அத்தோ பிரை 


                     முன்பே தயாரிக்கப்பட்ட அத்தோவுடன் முட்டையை உடைத்து ஊற்றி வறுப்பது அத்தோ ப்ரை என்று அழைக்கின்றனர். அத்தோவை ஒப்பிடும் பொழுது இதன் சுவை கொஞ்சம் குறைவுதான். 

அத்தோ பிரை 

மொய்ஞா (mohinga )

                     மொய்ஞா சூப் வகையை சேர்ந்தது. தாய்லாந்தின் டோபு (TOFU ) வகை உணவை ஒத்த சுவை இதற்கு. வழக்கமாக மீன் சூப்பில் ரைஸ் நூடுல்ஸை இட்டு கொதிக்க வைப்பது வழக்கம். நம்ம ஊருக்காக இதை மீன் சூப் அல்லாமல் வெஜிடபிள் சூப்பில் செய்கிறார்கள். ஒரு முழு Bowl மொய்ஞா குடித்து முடிக்கையில் நம் வயிறு நிறைந்திருக்கும்.


அடுப்பில் தயாராகும் மொய்ஞா


மொய்ஞாவை ஒரு கை பார்க்கும் கடோத்கஜனும், சாப்பாட்டு ராமனும் 

எக் ப்ரை 

                       கடைசி ஐட்டமாக நாங்கள் சுவைத்தது எக் பிரை..! வேகவைத்த முட்டைக்குள் மசாலாவை அடைத்துக் கொடுக்கின்றனர். அதை ஒரே வாயில் உள்ளே செலுத்தும் போது ஒரு பரவச நிலையை உணர முடிந்தது.



படமெடுக்க கேமிரா எடுப்பதற்குள் மூன்று காலி 




எக் ப்ரை  - முட்டை மசால் 




                    தெருவோரக் கடைகளின் பாசிடிவ் விஷயமே நியாயமான விலை தான். அத்தோ நாற்பது ரூபாயும், அத்தோ ப்ரை மற்றும் மொய்ஞா ஐம்பதும் விலை வைத்திருக்கிறார்கள். முட்டை மசால் ஒன்று பன்னிரண்டு ரூபாய்! அடிக்கடி சாப்பிட உகந்ததில்லை என்றாலும் பட்ஜெட்டில் நண்பர்களுடன் சாப்பிட ஏற்ற கடை..! மொத்தத்தில் கடோத்கஜன் ஹேப்பி..!


33 comments:

  1. எனக்கு அத்தோ பிடிச்சது... அதைவிட அத்தோ ப்ரை ரொம்பப் பிடிச்சது. அதைல்லாம்விட எக் ப்ரை.. சான்ஸே இல்ல... கடோத்கஜன் காமிராவை எடுக்கறதுக்குள்ள சாப்பாட்டு ராமன் கைலருந்து மூணை அபேஸ் பண்ணது அடியேன் தான். ஹி.... ஹி... ஹி....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. நீங்க தானா அது?

      Delete
  2. அது சரி... இதைல்லாம் ஒரு கை பார்த்துட்டு குடிச்ச ஸ்பெஷல் ஜுஸ் பத்தி எழுத மறந்துட்டியே ஆனந்து....?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி.. அது அடுத்த பதிவுல..!

      Delete
  3. பரவசத்தை அடைய முடியவில்லை... இன்னொரு நாள் சென்று பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா கண்டிப்பா என்னையும் சேர்த்துக்கோங்க!

      Delete
  4. இந்த பக்கம் எத்தனை தடவை போய் இருக்கிறேன்! கவனிக்கவே இல்லையே ! !.

    ReplyDelete
    Replies
    1. நானும் இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்.. :)

      Delete
  5. Boss, try the same in Madurai Meenakshi Bazaar too ! It is so tasty.....mmmmmm Next time I will also join with you !

    ReplyDelete
    Replies
    1. Sure Buddy.. Oct 26 வர்றீங்க தானே?

      Delete
  6. ஆஹா, பார்க்கும்போதே......

    ReplyDelete
    Replies
    1. போதே.. சொல்லுங்க ஜி..! ஹஹஹா

      Delete
  7. ரெண்டு லார்ஜ் உள்ளே தள்ளிகிட்டு போயி சாப்பிட்டா செமையா இருக்கும் போல இருக்கு படங்கள் !

    ReplyDelete
    Replies
    1. அடடே, அது நல்ல ஐடியாவா இருக்கும் போலிருக்கே!!

      Delete
  8. பெயரைச் சொல்லவே நாக்கு சுளுக்கிக்கும் போல இருக்கே...அத்தோ ஃப்ரையைப் பார்த்தல் எதோ ஒரு உயிரினம் மேல் குப்பை விழுந்தாற்போல இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் சொன்னா நாங்க சாப்பிடாம விட்டுடுவோமா சார்..! நாங்க அந்த உயிரனத்தையும் சேர்த்து சாப்பிடுவோம்ல..! :)

      Delete
  9. இதெல்லாம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. வியாசர்பாடியில் தங்கியிருந்த பொது பக்கத்தில் பர்மா நகரிலும் இதை சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு பீர் சாப்பிட்டு இந்த அத்தோவை ஒரு மணி நேரமா சாப்பிடுவோம். தேவாமிர்தமா இருக்கும். பாரிஸ் கார்னருக்கு மாலை நேரங்களில் செல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதை சாப்பிடுவதுண்டு

    ReplyDelete
    Replies
    1. மனோ அண்ணே.. இங்கே ஒருத்தர் நீங்க சொன்னதை முன்னமே ட்ரை பண்ணியிருக்கார்.

      //தேவாமிர்தமா இருக்கும்//

      எனக்கும் ரொம்ப பிடிச்சது..

      Delete
  10. இனிய வணக்கம் நண்பரே... இன்று தெருவோரங்களில்
    இதுபோன்ற தெற்காசிய நாட்டு உணவு வகைகளை
    பார்க்க முடிகிறது... நம்ம கையில இருக்கிற பணத்துக்குள்
    வயிறு நிறைய சாப்பிடுவதனால் சுவைத்துப் பார்த்தல் நலம்...
    மிகவும் அருமையான பதிவு...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் விலைக்கேற்ற நிறைவான உணவு.

      Delete
  11. கடோத்கஜா! அத்தனை உணவு வகைகளையும் கபளீகரம் செய்ய வாழ்த்துகள்! :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் சார்..! ஹஹஹா

      Delete
  12. ச்ச எப்படி தான் இந்த ஹைஜீனிக் இல்லாத உணவு வகைகள சாப்புடுறீங்களோ.. இதனால ஏகப்பட்ட உபாதைகள் இருக்குது பாஸ்..

    நான் காலையில வீட்டில் இருந்து கிளம்புனா தி பார்க் ல டிபன், லீ மெரிடியன்ல லஞ்ச் அப்டியே ஈவ்னிங் கிரான்ட் ஜீ.ஆர்.டீ ல ஒரு கப் டீ. நைட் ஷெராட்டன்ல டின்னர்.. சாப்ட்டா இப்படி சாப்டனும் பாஸ்.. அதவுட்டுட்டு... ;-)

    ReplyDelete
    Replies
    1. Barista ல காபிய விட்டுட்டீங்க..! ;)

      Delete
    2. கருப்பண்ண சாமி எங்க போனாருன்னு கேளுங்க ஆவி சீனு கிட்ட

      Delete
  13. கடோத்கஜா!சென்னையைக் கலக்கப்பா!
    பாலகணேஷ் போட்டோ எங்கே?

    ReplyDelete
    Replies
    1. அவர் தானே நாங்கள் நிற்கும் படத்தை எடுத்தது.

      Delete
  14. கண்ட மேனிக்குச் சாப்பிட்டு உடம்பை ரிப்பேர் பண்ணிக்காதீக...
    சொல்லிப்போட்டேன்.
    இன்னும் ஒரு மாசத்துலே நம்ம பதிவர் திருவிழா வருது.


    அதுவரைக்கும் உடம்பை பத்திரமா பாத்துக்கங்க...

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. தாத்தா, பதிவர் சந்திப்புக்கு அப்புறம் கெட்டுப்போனா பரவாயில்லையா? ஹஹஹா..
      எப்பவாவது தான் தாத்தா இங்க எல்லாம்..!

      Delete
    2. ஐயோ தாத்தா! நிறைய அவர் ப்ளாக்ல ஃபுட் பத்தி எழுதிருக்காரு, பகிர்ந்துருக்காரு......தாத்தா முன்னாடி பேச பயமா இருக்கு...ஹாஅஹாஅ

      Delete
  15. yu choy என்பது இதே போன்ற மலேசியன் சிக்கன் சூப்...அன அதையே வெஜ் உடன் வீட்டில்! இதுவும் அதே ஸ்டைலில் செய்தத்துண்டு...ஆவி அது ரைஸ் நூடுல்ஸ்? ம்ம்ம்ம்...ஓ! மற்ற நார்மல் மைதா நூடுல்ஸ் தான் போடுவதுண்டு....ரைஸ் நூடுல்ஸ் ட்ரை பண்ணிட்டா போச்சு....

    ஃப்ரென்ச் நூடுல்ஸ் சூப் கிட்டத்தட்ட இதே போன்றுதான் என்றாலும் அதில் ஃப்ரென்ச் ஹெர்ப்ஸ் ரோஸ்மேரி, தைம், ஒரெகானொ எல்லாம் போட்டு, நூடுல்ஸ் பதில் மாக்கரோனி, ஸ்பாகட்டி போட்டுச் செய்வதுண்டு.....இதுவும் நல்லாருக்கும் ஆவி! கீதா வீட்டுக்கு வாங்க உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க கிடைக்கும் ....ஆனா என்ன வெஜ் தான்....கோச்சுக்காதீங்க...

    ஃபுட் ரசிகர்கள் இங்கும்உண்டு! ஒண்ணு வெஜ்.....இண்ணுன்னு ரெண்டும்....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...