இன்ட்ரோ
கதை
ஒரு ஊர்ல ஒரு அண்ணன் தம்பி, அப்படியே அலப்பறை பண்ணிக்கிட்டு ஊர் சுத்திகிட்டு இருக்கிறாங்க. போற போக்குல ஒரு குத்துவிளக்கை பார்த்து அண்ணன் மனச பறிகொடுக்க தம்பியின் ஐடியாவால் காதலியின் மனசுல சீட் போடறார். ஆனா ஒரு கட்டத்துல அதே தம்பியால இவங்க காதல் பிரியவும் செய்யுது. வானவராயன் "வைத்தீஸ்வரி"ய கண்ணாலம் கட்டிகிட்டாரா இல்லையான்னு சொல்றது தான் கதைங்கோவ்..!
'என் தம்பிகள நான் அடிப்பேன், யாரும் கேக்கக் கூடாது. என் தம்பிகள யாராவது அடிச்சா நான் கேப்பேன்" ன்னு பசும்பொன் படத்துல பிரபு ஒரு டயலாக் பேசுவார். அதே போலத்தான் இந்த பிரதர்ஸும் அடிச்சுகிட்டே பாசத்தை பொழியறாங்க.. பட் ஒரு கட்டத்துல இவங்க சண்டையில வெறுப்படையறது ஊர் மக்களோட சேர்ந்து நம்ம ஆடியன்ஸும் தான்! ஆனா அந்த முதல் பாதி மொக்கைகள் பின்பாதிக்கு வலுசேர்க்கும் போது அந்த வெறுப்பை மறந்து ரசிக்க ஆரம்பிச்சுடறாங்க. என்னமோ போங்க, இப்படி தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு கதையை கொடுத்த ஆனந்தத்துல புரொட்யுசர் இனி நிம்மதியா தூங்குவார்..!

ஆக்க்ஷன்
கிருஷ்ணா கழுகு, யாமிருக்க பயமேன் படங்களில் நன்றாக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம்பெறவில்லை. இந்தப் படம் அவருக்கு பி & சி சென்டர் ரசிகர்களை பெற்றுத் தரும். அண்ணன் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மெருகேறி விடுவார். மா பா க ஆனந்த்- சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு புரொமோஷன். முதல் படத்துக்கு ஒக்கே. ஆனா தொடர்ந்து நடிக்க நிறைய ஒர்க் அவுட் செய்ய வேண்டும். கிளைமாக்ஸ் காட்சி தவிர மீதி காட்சிகளில் எல்லாம் சுமார் ஆக்டிங் தான். ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, கோவை சரளா, மீரா கிருஷ்ணன், எஸ்.பி.பி சரண் வந்து போகிறார்கள்.
மோனல் கஜ்ஜர்- ஒரு அறிமுக நாயகிக்கு ஒரே நாளில் இரு படங்கள் வெளியாவது தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை என நினைக்கிறேன். அழகு, நடிப்பு, உடல்மொழி, உதட்டசைவு இப்படி எல்லாவற்றிலும் கோட்டை விட்ட போதும் எதோ ஒன்று நம்மை உத்துப் பார்க்க வைக்கிறது. அது அவருடைய பளீர் சிரிப்பு. அம்மணி கோடம்பாக்கத்தில் கரையேற பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பின் சௌகார் ஜானகி, பேரனிடம் அவன் காதலிக்கும் பெண்ணுக்கு லிப் டூ லிப் கொடுக்க சொல்லும் தமிழ் சினிமாவின் அபத்தங்களுக்கு பலியான அபலைப் பாட்டி.

இசை- இயக்கம்
யுவன் இசை படத்திற்கு பக்க பலம். முதல் பாதியில் திகட்ட திகட்ட ஒலிக்கும் பாடல்களும் பின்னணி இசையிலும் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். இயக்குனர் இராஜமோகனின் திரைக்கதை பலம் கதையின் பலவீனத்தை மறைக்கிறது. ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் எண்பதுகளின் 'குடும்ப' மசாலா படத்தை இன்றைய டாஸ்மாக் இளைஞர்களோடு சேர்த்து படைத்திருக்கிறார்.
ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி
பாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு இனிமை. சில பாடல்களின் நடன அசைவுகள் ரசிக்கும்படி இருந்தன. இன்னொரு பிரபலத்தின் காமெடி செம்ம ரகளை. மொத்தத்தில் வானவராயன் வல்லவராயனை ஒருமுறை பார்க்கலாம்..!
Aavee's Comments - Brother-O-phobia!
மோனல் கஜ்ஜர்...? பேரைக் கேட்டாலே ஏதோ வடக்கத்தி டிபன் மாதிரில்ல இருக்கு...? எண்பதுகளின் ஸ்டைல்ல படங்களை எடுக்கறதை இன்னுமாலேய் சினிமா விடலை..? இருந்தாலும் இந்தப் படத்தை தியேட்டர்ல போய்ப் பார்த்த ஆவியோட ஒரே மன தைரியத்தைப் பாராட்டி ஒரு ‘ஓ’ போட்டுட்டு நான் கழண்டுக்கறேன். ஹா..‘ ஹா.. ‘ ஹா...
ReplyDeleteமுதலுக்கு மோசமில்லை சார்!
Deleteஆவி ஜி ,படம் வெளியிடத் தடையென்று செய்தி !படத்தைப் பார்த்து விமர்சனமும் எழுதிய நீங்கள்தான் உண்மையான 'வல்லவ'ராயன் !
ReplyDeleteத ம 3
ஹஹஹா, அப்ப என்கூட உட்கார்ந்து பார்த்த பத்து பேருமே ராயர் பிரதர்ஸ் தானோ?
Deleteநன்றி நண்பரே
ReplyDeleteதம 4
நன்றி பாஸ்!
Deleteமுதலுக்கு மோசம் என்று ஒரு விமர்சனம் படித்தேன்...
ReplyDeleteமோசமில்லைன்னு சொல்றீங்க...
அதான் சொன்னேனே, மொக்கை ஆகியிருக்க வேண்டியது, மயிரிழையில் தப்பித்தது.
Deleteஎனக்குப் பிடிக்கலை!
ReplyDeleteமுதல் பாதி மொக்கைகளால் பாதிக்கப்பட்டு இருக்கீங்கன்னு தெரியுது நண்பா!
Deleteவிமர்சனம் - நல்லா இருக்கு. யார் முதலுக்கு மோசமில்லை, ரசிகனுக்கா.. தயாரிப்பாளருக்கா..?
ReplyDeleteஹஹஹா.. எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்
Deleteஅப்போ படத்தை பார்த்திறலாம் இல்லையா....நானும் "சின்னதம்பி பெரியதம்பி" படத்தை ரீமேக் பண்ணிட்டாங்களோன்னு நினைச்சுட்டேன்.
ReplyDeleteஒருமுறை ஜாலியா பார்த்துட்டு வரலாம்ண்ணே
Deleteநல்ல விமர்சனம்.....
ReplyDeleteபடம் பார்க்க முடியாது ஆவி. :))))
Deleteஹஹஹா.. உங்க ஊர்ல ரிலீஸ் ஆகலையா?
படம் பார்க்கிறதை விட்டு ரொம்ப நாளாச்சு! பகிர்வுக்கு நன்றி! இசை விமர்சனம்! பட விமர்சனம் தவிர்த்து கவிதை கதைகளும் எழுதுங்க பாஸ்!
ReplyDeleteSure Suresh!
Delete