இன்ட்ரோ
கதை
நண்பர்களாய் இருந்த இருவர் பிரிந்து தனித்தனியே அரசியல் கட்சிகளில் சேர்ந்து வடசென்னையை கூறு போட்டுக் கொள்ள, மூன்று தெருக்கள் இணையும் ஒரு முச்சந்தியில் இருக்கும் ஒரு சுவர் இருவருக்கும் இடையில் பிரச்சனையாக வருகிறது. அந்த சுவற்றை ஆக்ரமிக்க இரண்டு குடும்பத்தின் வாரிசுகளும் உடன் இருபுறமும் நிற்கும் பொதுமக்களும் வெட்டிக் கொண்டு சாகிறார்கள். கடைசியில் அந்த சுவர் யாருக்கு சொந்தமாகிறது என்பதே கதை..!
இதற்கிடையில் கார்த்தி- கலையரசன் நட்பு, வடசென்னை மக்களின் அன்றாட வழக்கங்கள், விளையாட்டுகள், கார்த்தி-கேத்ரீன் காதல் என பயணிக்கிறது இந்த மெட்ராஸ். கேரம் போர்டு, கால்பந்து, குழாயடி சண்டைகள், வடசென்னையின் எதார்த்தங்களை அழகாக பதிவு செய்ய நினைத்து அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள். (கார்த்தியின் உச்சரிப்பை தவிர)

ஆக்க்ஷன்
கார்த்தி, இதற்கு முன் வந்த படங்களைக் காட்டிலும் சிரத்தையுடன் நடித்திருப்பது தெரிகிறது. இருப்பினும் காதல் காட்சிகளில் சொதப்பல் தொடர்கிறார். இவர் பேசும் வடசென்னை ஸ்லாங் ஒட்டாமல் இருப்பது அந்த ஸ்லாங் தெரியாதவர்களுக்கும் எளிதில் தெரிந்து விடுவது பரிதாபம். ஆக்க்ஷன் காட்சிகள் இயல்பாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. கார்த்தியை பொருத்தவரை இன்னும் சில வாய்ப்புகள் கொடுக்கலாம். அன்புவாக வரும் கலையரசன் படத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். கார்த்தி கேத்ரின் ரோமேன்ஸை விட கலையரசன்-ரித்விகா (பரதேசி) ஜோடியின் காட்சிகள் தத்ரூபமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.
கேத்ரீன் தெரேசா ஆந்திர இறக்குமதி. வடசென்னை பெண்ணாக வரும் இவர் "உலகப் பேரழகி டயானாவுக்கு மோனலிசா கெட்டப்" போட்டது போல் இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் படத்திற்கு வேகத்தடை. கொஞ்சமும் ரசிக்க முடியாத காதல் காட்சிகள். கதாநாயகியின் குணாதிசயங்கள் படத்திற்கு தேவைப்படாத போது அதற்காக செலவிட்ட பத்து நிமிடங்கள் விரயமாய் போகிறது. என் உயிர்த் தோழன் ரமா கார்த்தியின் அம்மாவாக வருகிறார். மாரி, மற்ற நண்பர்கள், எல்லோரும் வடசென்னை ஸ்லாங்கில் பேசி நடித்த போதும் ஜானி கேரக்டரில் வருபவர் மனதில் நிற்கிறார்.

இசை- இயக்கம்
சந்தோஷ் நாராயணன் அசத்தல் பின்னணி இசை. படம் முழுக்க வியாபித்திருப்பது சந்தோஷின் கைவண்ணமே! பாடல்கள் பெரிதாய் பேசப்படாவிட்டாலும் 'நான்-நீ' பாடல் நல்ல மெல்லிசை. 'கானா பாலா' வின் ஒப்பாரி பாடலும் அருமை. ரஞ்சித்தின் இயக்கத்தில் குறை இல்லையென்றாலும் ஒற்றை சுவர் மட்டுமே எல்லா கதாபாத்திரங்களும் பேசும் ஒரே பொருளாய் அமைந்து விடுவதால் ஒரு கட்டத்தில் சலிப்பை கொடுக்கிறது. 'புதுப்பேட்டை' போன்றதொரு படமாக வந்திருக்க வேண்டியது, இரண்டாம் பாதி கொஞ்சம் வலுவிழந்து போனதால் மெட்ராஸ் கரையேறுவது கொஞ்சம் சந்தேகமே..!
ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி
டெக்னிக்கல் மிரட்டல்களோ, காமெடியோ இல்லாத இந்தப் படத்தில் நாயகியும் கவர்ந்திழுக்காததால், இசைக்காகவும் இயக்கத்திற்காகவும் வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்..!
Aavee's Comments - It's Just a Wall!
டைரக்ஷன் இருக்குல ஆவி! ம்ம்ம் அது முக்கியமாச்சே! ஸோ அதுக்காகப்பார்க்காலாம்ன் சொல்றீங்க....பாத்துட்டா போச்சு!
ReplyDeleteஇசைக்காகவும்,இயக்கத்திற்காகவும் பார்க்கலாம்னு சொல்லுறீங்க...பார்க்க வேண்டும். விமர்சனம் அருமையாக இருக்கிறது. நன்றி சகோ.
ReplyDeleteமெட்ராஸ் வெற்றியின்னு சொல்லுறீங்க... கார்த்தி சமீப படங்களில் சொதப்பினாலும் அவருக்கு வாய்ப்புக்கள் வருவது சினிமா குடும்பப் பின்னணியால்தானே... இல்லையென்றால் மற்றவர்கள் போல் இவரும் காணாமல் போயிருக்கலாம்...
ReplyDeleteநகைச்சுவைக்குப் பஞ்சமா ஆவி?
ReplyDeleteதிங்கட்கிழமையாவது பார்த்துவிட வேண்டும்...
ReplyDelete//என் உயிர்த் தோழன் ரமா கார்த்தியின் அம்மாவாக வருகிறார். // இது என்னது புரியல
வணக்கம்
ReplyDeleteஆவியப்பா.
தங்களின் பார்வையில் விமர்சனம் அருமையாக உள்ளது படத்தை பார்க்க வேண்டும் என்ற உணர்வு. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பகிர்வுக்கு நன்றி ஆவி!
ReplyDeleteவிமரிசனம் படிக்கையில் படத்தைப் பார்க்கும் ஆவல் எழுகிறது...
ReplyDeleteஇது வெற்றிப் படம்னு போட்டி போட்டுக்கிட்டு டி.வி.-ல சொல்லிட்டு இருக்காங்களே!
ReplyDelete