Thursday, September 18, 2014

ஆவி டாக்கீஸ் - கத்தி (Music Review)

                        'இளம் புயல்' அனிருத் இசையில், விஜய் சமந்தா நடிப்பில் முருகதாஸ்  இயக்கத்தில் வரவிருக்கும் படம் கத்தி. இதன் பாடல்கள் எப்படியிருக்குன்னு பார்ப்போமா?



1. பக்கம் வந்து - ஹிப்ஹாப் தமிழாவின் அதிரடி ராப் இசையில் நம்மை மூச்சு வாங்க வைக்கும் விறுவிறு பாடல். நிறைய வெஸ்டர்ன், கொஞ்சம் Folk  கலந்து இசைக்கும் பாடல். இளையதளபதியின் நடன அசைவுகளுக்கு அரங்கத்தில் விசில் பறக்கப் போவது உறுதி.

2. பாலம் - ஷங்கர் மகாதேவன், ஸ்வேதா மோகன் பாடியிருக்கும் டூயட் பாடல்.  மெல்லிய இசையாக ஆரம்பித்து வேகமான பீட்டில் முடிகிறது பாடல்.

3. கத்தி தீம் - டொட்டடொட்ட  டொட்டடோய்ங் டொட்டடொட்ட  டொட்டடோய்ங்

4. விஜய் சுனிதி சௌஹான், அனிருத் பாடியிருக்கும் பாடல் "செல்பி புள்ள" ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ஸ்டைலாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது.  கூகிள் கூகிள் போலல்லாமல் இது சி சென்டர் ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் அழகாய் வந்திருக்கிறது.  சாதாரண டீ கிளாசில் ஊற்றப்பட்ட ஹை-பை காக்டெயில்..!

5. நீ யாரோ - நீண்ட இடைவெளிக்கு பின் யேசுதாசின் மென் குரலில் ஒரு சோகப் பாடல். "விடுகதையா இந்த வாழ்க்கை' சாயலில் அமைந்திருக்கும் பாடல்.

6. "ஆத்தி" பாடல் இசை ஆதிக்கம் நிறைந்த பாடல். விஷால் தத்லானி, அனிருத் பாடியிருக்கும் பாடல். அழகாக ஆரம்பிக்கும் பாடல் கடைசியில் நேஷனல் ஏந்தம் மறந்த ஸ்கூல் பையன் வேகவேகமாக பாடி முடிப்பது போல பாடியிருப்பது "சிறப்பு".

                       மொத்தத்தில் கத்தி 'செல்பி' புள்ளையை நம்பி களமிறங்கியிருக்கும் ஆல்பம்! ஷார்ப் கம்மி!

28 comments:

  1. செல்பி பாட்டு மட்டும் குல்பி மாதிரி இருக்குங்கறே.... மத்ததெல்லாம் கேக்கச் சொல்லி நீ கத்தி கத்தி சொன்னாலும் கேக்க மாட்டோம்லே....

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. அந்த தீம் ம்யுசிக்கை நீங்க கேக்கணுமே..கீபோர்டிலேயே நலந்தானா வாசிச்சிருக்கார் அனிருத்..

      Delete
  2. "செல்பி புள்ள" ஆமாம் மாப்ள இந்த ஒரு பாட்டு மட்டும்தான் தேறுது..

    ReplyDelete
    Replies
    1. "பக்கம் வந்து" கேட்கக் கேட்க பிடிக்குது

      Delete
  3. Aathi Ena Nee - இந்த பாட்டு ஒன்னும் புரியல..

    ReplyDelete
    Replies
    1. mmm.. வெஸ்டர்ன் டைப் .. அதும் கடைசில எதோ போல இருக்கு!

      Delete
  4. ' இளம்புயல் ' ஜெயம் ரவி தான ? இது என்ன புது பட்டமா இருக்கு ?

    VIP -ல அடிவயித்துல இருந்து கத்திகத்தி எதுக்குடா இந்த பயபுள்ள கத்துதுனு நினைச்சேன் !! அப்புறம்தான் சொன்னாய்ங்க ! 'கத்தி' பாடுனாதான் , 'கத்தி' - ல சான்ஸ் கிடைக்கும்னு.

    எப்படியோ 'கத்தி' பாடி , 'கத்தி'யிலயும் கத்தி பாடிட்டாரு !!

    ReplyDelete
  5. வேண்டாம் வேண்டாம்னு ஒதுங்கிப் போனாலும் காதில் விழாமலா போகப் போகுது? ம்ம்ம்... பார்ப்போம்...ச்சே... கேட்போம்!

    எஸ் பி பி, ஹரிஹரன், ஆலாப் ராஜு இவிங்களை எல்லாம் இப்போ பாட அழைப்பதில்லையா ஆவி?

    ReplyDelete
    Replies

    1. நல்ல பாடகர்களுக்கெல்லாம் இப்போ சான்ஸ் கிடைக்கறதில்லே ;)

      Delete
    2. ஸ்ரீ ராம் சார் நாங்க கேட்க நினைத்தது...நீங்க கேட்டு ஆவி பதிலும் சொல்லிட்டாரு...இப்பலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் பாடறாங்க...இனி ஒரு பாட்ட பாலரும் பாடறா மாதிரி வந்தாலும் வரலாம் க்ரூப் சாங்கா இல்லனாலும்.......அதுக்குதான் விஜய் டிவி பாட்டு ஸ்கூல்னு ஒண்ணு....சூப்பர் சிங்கர் இருக்குதே....ஆட்கள மஷ்ரூம் மாத்ரி இறக்கி விட.....

      Delete
  6. மகிழ்ச்சி.

    நன்றி. கேட்கின்றோம்.

    ReplyDelete
  7. பாட்டுங்க கூட தேறலைன்னா படம் எப்படியிருக்குமோ? பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஏ .ஆர் முருகதாஸ் படம் ஓடிடும்..

      Delete
    2. மினிமம் கியாரண்டி கொடுத்துடுவாரு?!!!

      Delete
  8. உங்களுக்காக ஒரு விருது என் தளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்
    nigalkalam.blogspot.com/2014/09/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. ஐ..சூப்பர் சூப்பர்.. நன்றி..!

      Delete
  9. செல்பி புள்ள நல்லாயிருக்கு...

    ReplyDelete
  10. கேட்டுப் பார்க்கிறேன் ஆவி!

    ReplyDelete
  11. வருகைக்கும் வாக்கிற்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  12. கத்தி தீம் - டொட்டடொட்ட டொட்டடோய்ங் டொட்டடொட்ட டொட்டடோய்ங்///

    அடஅட அட....நம்மள மாதிரி டொட்டடோய்ங்க் வாசிக்கிறீங்க...ஹாஹாஹ் புரியுது கத்தி படம் பத்தி.....

    ஆமாம் கத்தி வெளில வரதுக்கு கத்தி முடிச்சுட்டாங்களா ஒருவழியா?!!!

    ஜேசுதாஸ் (தாசேட்டன்!) ??!! க்ரேட்! கேக்கணும்....பாடல்கள்...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...