Saturday, July 9, 2016

பொதுவில் சொல்லக் கூடிய வார்த்தையா F**K? 18+

Disclaimer : இந்தக் கட்டுரையில் நிறைய F***K வார்த்தைப் பிரயோகம் உள்ளது.


மேற்கத்திய நாகரீகம் மெல்ல மெல்ல நம்மை ஆக்ரமித்துக் கொள்ள, நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது உடை மற்றும் பழக்க வழக்கங்கள் மட்டுமல்ல. அவர்களுடைய மொழியையும் சேர்த்துதான். ஆனால் இந்த நாகரீக மாற்றத்தை ஏற்றுக் கொள்கையில் நாம் தவற விட்ட விஷயங்கள் சில. சரியான முறையில் புரிந்து கொள்ளப்படாத எந்த ஒரு விஷயமும், தவறான விஷயங்களாகவே புரிந்து கொள்ளப்படும்.


மேலைநாட்டின் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தாற் போல அங்கு பனிபொழியும் மாதங்களில் கோட் சூட் அணிந்தும், கோடைக் காலங்களில் மெல்லிய ஆடை அணிவதையும் காண முடியும். ஆனால் இந்தியா போன்ற வெப்பநிலை உள்ள தேசத்தில் (மலைவாசஸ்தலங்களைத் தவிர்த்து)  வியர்வை ஒழுக ஒழுக முழுக்கைச் சட்டை அணிவதே சிரமம் என்ற நிலையில் சிலர் கோட் அணிந்து பணிக்குச் செல்வதைப் பார்க்கும் போது அதைப் பார்த்து சிரிப்பதை ஏனோ தவிர்க்க முடிவதில்லை.அதே போல் தான் "so called" மேல் நாட்டிலிருந்து நாம் அரைகுறையாக கற்று வந்த ஒரு வார்த்தை. FUCK. இந்த வார்த்தையின் நேரடி அர்த்தம் வேண்டுமானால் உடலுறவு கொள்வது, வன்புணர்வு என்ற பொருளில் வரும். ஆனால் இந்த வார்த்தையுடன் வேறு வார்த்தைகளை சேர்த்துப் பயன்படுத்தும்போது அதன் பொருள் முற்றிலும் வேறு. அதனைப் பிரித்துப் பார்த்து பொருள் கொள்ளும் அபத்தங்கள் பலவற்றை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

குறிப்பாக "FUCK-off" என்ற சொல்லின் பொருள், கோபத்தில் இருக்கும் போது "கண்ணு முன்னாடி நிக்காத" "ஓடிடு" "இந்த எடத்த விட்டுப் போ" என்றெல்லாம் கூறுவோமே, அதே பொருளில்தான் வரும். அதே போல "I'm Fucked up"  என்ற வரிக்கு நேரடி பொருள் கொள்வது அபத்தம். நான் ஏமாற்றப்பட்டேன், நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்ற பொருளில் வரும்.

 "Why did you bring me to this fucking movie" என்று யாராவது கேட்டால் எதற்காக என்னை இந்த "பிட்டு" படத்துக்கு  அழைத்து வந்தாய் என்று பொருள் அல்ல. இந்த பாடாவதியான/ திராபையான/ மொக்கை படத்திற்கு எதற்கு என்னை அழைத்து வந்தாய் என்பதே சரியான பொருள். இதே போலத்தான் Fucking Design, Fucking Pen, Fucking Art என மோசமான பொருட்களுக்கு எல்லாம் முன்னால் Fucking என்ற  வார்த்தையை சேர்த்துப் பயன்படுத்துவது மேலை நாகரீகம்*.இது மட்டும் என்றில்லை, What the Fuck? என்ற சொல் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு எமோஷனல் வார்த்தைதான். அதே போல "Shut the Fuck Up"  என்பதும்  கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல்லே தவிர உடலுறவு என்ற வார்த்தைக்கு பத்து வீடு தள்ளி கூட இல்லை என்பதுதான் உண்மை. அதனால், சரியான முறையில் புரிந்து கொள்ளப்படாத எந்த ஒரு விஷயமும், தவறான விஷயங்களாகவே புரிந்து கொள்ளப்படும். இது மோசமான வார்த்தை, இதெல்லாம் பேசக் கூடாது. பேசுபவர்கள் எல்லோரும் "பீப்" சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்என்றெல்லாம் கிடையாது என்ற  புரிதல் வேண்டும்.

மேலை நாகரீகம் என்றதும் அங்குள்ள எல்லோரும் இப்படித்தான் பயன்படுத்துவார்கள் என்று அர்த்தமல்ல. அலுவலகங்களில் இந்த சொற்களின் பயன்பாடு அதிகம் இல்லையென்றாலும் பொது இடங்களில்
குறிப்பாக இளைஞர்களிடையே பரவலாக கேட்கக் கூடிய சொற்கள் தான் இவை. ஆயினும் இவற்றை குழந்தைகள் (பருவ வயதிற்கும் குறைவான ) பயன்படுத்துவதை  பெற்றோர்களோ, பள்ளி நிர்வாகமோ ஊக்குவிப்பதில்லை. (அவை மரியாதைக் குறைவான சொற்கள் என்பதால்)


பின்குறிப்பு: இது Knowledge Sharing என்ற முறையில் பகிர நினைத்த சில விஷயங்களே தவிர இதில் கூறப்பட்ட வார்த்தைகளை நம்ம ஊரில் உபயோகித்து கன்னம் பஞ்சரானால் கம்பெனி பொறுப்பேற்காது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.12 comments:

 1. :)

  இங்கே வடக்கில் நாலு வார்த்தைக்கு ஒரு முறை கெட்ட வார்த்தை பிரயோகம் உண்டு. பெண்களுக்கு எதிரிலும், வீட்டிலும், குழந்தைகளிடமும் கூட... இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் இங்கே இருப்பவர்கள்.

  ReplyDelete
 2. சரியான புரிதல் இருந்தால் கண்டுக்காம போயிடனும் .உச்ச கோபத்தில் எதுவும் செய்ய முடியாத சூழலில் அன்ட் puzzles போட முடியாட்டியும் மேலும் சின்ன விஷயத்துக்கெல்லாம் கூட இந்த வார்த்தை வரும் .இந்த வார்தைகளை அதிகம் பிரயோகிப்பவர்கள் நம்ம நாட்டிலும் உண்டு ..எங்க ஏரியா ஆங்கிலோ இந்தியர் அடிக்கடி யூஸ் பண்ணுவாங்க அதனால இங்கே வெளிநாட்டில் கேக்கும்போது அதிரிச்சியடையலை ..நீங்க சொன்ன மாதிரி இங்கே அலுவலகம் மற்றும் சில இடங்களில் தடா தான் இந்த வார்த்தைகளுக்கு ..ஸ்கூல் பிள்ளைங்க சொன்னாலும் டீச்சர்கள் கவனமுடன் கையாள்வார்கள் ..காதில் விழாத மாதிரி இருப்பாங்க இல்லைனா மாணவரை அழைச்சி ..//would you like me saying that word to you ?// என்று கேட்பாங்க அந்த குட்டி தலையை குனிஞ்சி no என்று சொல்லும் ..மீண்டும் அப்பிள்ளை அடிக்கடி அவ்வார்த்தையை பயன்படுத்தினா ஆசிரியர் detention கொடுப்பாங்க அப்படியும் திருந்தலைனா கை கழுவிட்ருவாங்க ..சில விஷயங்களை பெரிசு படுத்தினாதான் ரொம்ப பப்லிசிட்டி ஆகிடும் for example that song ..

  ReplyDelete
 3. இன்னொன்னும் சொல்லியாகணும் இங்கே கணவருடன் வேலை செய்யும் ஒரு பிரிட்டிஷ்கார் வேலை செய்யும்போது ஏதோ கம்பியூட்டர் எர்ரர் பிரச்சினையில் இந்த வார்த்தையை கோபத்தில் சொல்லிட்டார் சொல்லிட்டு பயந்திடுச்சி மனுஷன் ..ஏன் தெரியுமா ..:) அந்தாள் பைபிளையே கரைச்சி குடிச்சி பிரசங்கம் செய்யும் ஒரு lay preacher ..அதனால் படிக்காதவன் தான் சொல்வான் ரவுடிதான் இந்த வார்த்தையை சொல்வான் என்ற வரைமுறையெல்லாம் கிடையாது ஏதோ கோபத்தில் சட்டென வரும் வார்த்தை அவ்வளவே

  ReplyDelete
 4. இந்த வார்த்தையை இங்கு பலரும் கெட்ட வார்த்தையாகவே நினைக்கின்றார்கள் மட்டுமல்ல அதை உபயோகிக்கவும் தெரியாமல் ஒரு சிலர் குறிப்ப்பாக விடலைப் பசங்க அந்த வார்த்தையைக் கேட்டால் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் விதம் ...

  நீங்கள் சொல்லியிருப்பது போல் சரியான புரிதல் இருந்தால் நோ பிரச்சனை....சரியா சொல்லியிருக்கீங்க..ஆவி

  கீதா

  ReplyDelete
 5. இத படிச்சு முடிக்கையில் எனக்கு ஓஷோவின் பதில் தான் நினைவுக்கு வருகிறது..
  http://www.oshonews.com/2012/01/18/fuck/ கட்டாயம் வாசித்துப்பாருங்கள் .. ROFL

  ReplyDelete
  Replies
  1. https://m.youtube.com/watch?v=6D7rWLzloOI

   மேற்படியின் Video வடிவம்

   Delete
 6. அட நம்ம வடசென்னையில 99% பேரும் மூச்சுக்கு முண்ணூறு தரம் யூஸ் பண்ற "த்தா" மாதிரிதாங்க இதுவும்..!!!!

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு...
  நம்ம ஊரில் பயன்படுத்தினால் அவ்வளவுதான்..

  ReplyDelete
 8. மேலை நாகரீகம் அப்படியே நாமும் பின்பற்றத்தேவை இல்லை! மொழி அறிவு வார்த்தைகளை பிரயோகிக்கையில் தேவை என்பதை அறிந்தேன்! நன்றி!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...