Wednesday, July 20, 2016

கனவு அரசியல்!

ரசியலில் எல்லாம் எனக்கு ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை என்ற போதும் நேற்றைய கனவு எனக்கே சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதில் நான் வடக்கத்திய அரசியல்வாதிகள் மோடிஜி, தெற்கத்திய 'காதல் மன்னன்' ஷைனிங் ஸ்டார் போன்றோர் அணிந்து பிரபலப்படுத்திய அந்த கொட்டுடன் இணைந்த பைஜாமாவை அணிந்திருக்கிறேன். என்னைச் சுற்றி நாலைந்து அமைச்சர்கள். ஒரு சீரியசான விவாதம் நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறி அங்கே தென்பட்டது. ஒரு மந்திரி "நாட்டில் விலைவாசி மிகவும் உயர்ந்துவிட்டது, பெட்ரோல் ஒரு லிட்டர் இருநூறு ரூபாய். இப்படியே சென்றால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்வார்கள்" அதை ஆமோதிப்பது போல் நான்கைந்து வழுக்கை மண்டைகள் தலையை ஆட்டின.

இன்னொரு வெள்ளை வேட்டி பேசத் துவங்கியது, “அமெரிக்காவின் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த விலைவாசி ஏற்றத்தையோ, மக்கள் பிரச்சனைகளையோ தடுத்து நிறுத்தவே முடியாது.” என்கிறார். “உங்கள் மீது உள்ள நல்ல அபிப்ராயத்தினால்தான் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நமது கட்சிக்கு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர வைத்தார்கள். இப்போது இந்தப் பிரச்சனையைத் தீர்க்காவிட்டால் அடுத்த தேர்தலில் நாம் ஆட்சிக்கு வருவது சந்தேகம்தான்" என்று தன் பங்குக்கு குரல் கொடுத்தார் ஒரு தாடிவாலா.



அதுவரை அமைதியாக இருந்த நான் அருகே இருந்த பானையிலிருந்து நீர் எடுத்து அருந்துகிறேன். குரலை செருமிக் கொண்டு பேசத் துவங்குகிறேன். இவை எல்லாமே உறக்கத்தில்தான் நிகழ்கிறது என்றபோதும் நான் என்ன பேசப் போகிறேன் என்ற ஆவல் எனக்கே தோன்றி நானே என்னை கவனிக்கத் துவங்குகிறேன்.”நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான். நாட்டின் இப்போதைய தேவை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் விலைவாசியை கட்டுக்குள் வைப்பதும்தான். நான் அதற்கு ஒரு யோசனை வைத்திருக்கிறேன்.” என்றதும் அனைவரது கண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. பாதி குடித்து வைக்கப்பட்டிருந்த காபி கோப்பையின் மீது அமர்ந்திருந்த ஈ கூட குடிப்பதை நிறுத்திவிட்டு என்னை உற்று நோக்கியது.


"நான் சொல்லப் போற விஷயம் ஒருவேளை நமது கட்சியில் உள்ளவர்களுக்கும் பாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. யாரும் இந்த யோசனையை ஏற்றுக் கொள்வார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் நான் நேற்று குடியரசுத் தலைவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவரும் இந்த யோசனை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் இதற்கென புதிய அவசர சட்டம் போட்டு உடனே அமலுக்கு கொண்டு வரலாம் எனவும் கூறினார்" பாதகமான விஷயமா, அது என்னவாக இருக்கும் என ஒவ்வொருவரும் சிந்திக்கத் துவங்கியிருந்தார்கள். அப்போது அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ஏ.ஸி யிலிருந்துஅந்த டைல்ஸ் தரையில் விழுந்த நீரின் சப்தம் துல்லியமாகக் கேட்டது.


கையில் வைத்திருந்த குவளைத் தண்ணீரை காலி செய்துவிட்டு "அந்தத் திட்டம் இதுதான்.” என்றதும் என்னோடு சேர்த்து அந்த ஐந்து அமைச்சர்களும், ஈயும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாரானோம். எங்களோடு கூட்டணியில் சேர அறைக்கு வெளியே ஒரு பல்லியும் தயாராக இருந்தது. “நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க ஆயிரம் சட்டம் போட்டாலும் செயல்படுத்தினாலும் நம் பிரச்சனைகள் தீரப் போவதில்லை. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது ஒரு சிலரிடம் ஒளிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது தான்.” என்றதும் 'ஃப்பூ, இவ்வளவுதானா? இதை அந்தக்காலத்திலேயே சிவாஜி படத்துல ஷங்கர் சொல்லிவிட்டார்' என்பது போல ஒரு ஏளனப் பார்வையை தவழ விட்டார் தாடிவாலா.


நான் தொடர்ந்தேன் "அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை நானும் அறிவேன். ஆனால் என்னுடைய யோசனை மூலம் அதை எளிதாக நடைமுறைக்கு கொண்டு வரலாம். இப்போதிருக்கும் ரூபாய்களை செல்லாத பணமாக அறிவித்துவிட்டு ரூபே என்றொரு புதிய பணத்தை அறிமுகம் செய்யப் போகிறேன். இப்போது கையில் வைத்திருக்கும் பணத்திற்கு மாற்றாக இந்த ரூபேயை வங்கிகளில் வந்து பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூபாய்கள் வெளியே வந்துதானே ஆக வேண்டும். ஒவ்வொரு பணத்திற்கும் கணக்கும், அதிகப்படியான பணம் வைத்திருப்பவர்கள் வருமான வரி கட்டியிருப்பதற்கான சான்றையும் காண்பித்தல் அவசியம், இன்னும் ஆறே மாதங்களில் பணவீக்கம் என்ன நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.” அந்த ஏ.ஸி யிலும் தாடிவாலாவின் முகத்தில் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தது. மற்றவர்களுக்கும் உள்ளூர பயம் பரவத் துவங்கியது. “சூப்பரே" என்று கைதட்டி ஆரவாரம் செய்தது கோப்பையின் மேல் நின்றிருந்த ஈ.


டிஸ்கி: இது எனக்குத் தோன்றிய ஒரு கனவு மட்டுமே. இது சாத்தியமா, இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

14 comments:

  1. கருப்பு பணம்
    கரன்சி லே மட்டும் இல்ல தலைவா !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. தாத்தா எஸ் எஸ் ஐ நோ.. பட் கனவில் வந்ததை அப்படியே எழுதியிருந்தேன். :)

      Delete
  2. அந்த ரூபே வந்தாலும் சில மாதங்களில் "கறுப்பு ரூபே" எனும் ரூபமாக மாறிவிடுமே...அப்புறம் அதை வெளியில் கொண்டு வர ரூபேயின் ரூபம் என்னவாகும் ஆவி??!!! ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நிறைய மாற்றங்கள்










      எதார்த்தத்தில் இன்னும் பல சட்டங்கள் அதனோடு சேர்ந்து வர வேண்டும். ஆனால் அதெல்லாம் வாய்ப்பே இல்லை.













      Delete
  3. வாலிப வயதில் இருக்கும் உங்களுக்கு ஆயிரக்கணக்கான கிளு கிளூ ஜிலு ஜிலு கனவகள் எல்லாம் வந்திருக்கும் அதையெல்லாம் சொல்லாமல் சும்மா இந்த அரசியல் கனவுகளை மட்டும் சொன்ன உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹஹஹ் அட கரெக்ட்டுதான் இல்ல...??!! ஆனா அதுக்குத்தான் இந்த மதுரைத் தமிழன் அப்படின்ற வாலிபர் இருக்காரே..ஹஹஹ்

      கீதா

      Delete
    2. //வாலிப வயதில் இருக்கும் உங்களுக்கு ஆயிரக்கணக்கான கிளு கிளூ ஜிலு ஜிலு கனவகள் எல்லாம் வந்திருக்கும் அதையெல்லாம் சொல்லாமல் // ஹிஹிஹீ

      Delete
  4. என்ன ரூபமாக மாறினாலும், பொருளாதாரம் படித்த, இந்த நாட்டின் ஒரு பிரஜையாக உங்கள் கனவை ரசித்தேன் ஆவி!!!
    கீதா

    ReplyDelete
  5. நல்ல கனவு. கனவிலாவது கருப்புப் பணம் வெளியே வரட்டும்!

    ReplyDelete
  6. ஆவி பாராட்டு மழை இந்தச் சேச்சியிடமிருந்து. இப்போது மீண்டும் உங்கள் பதிவை வாசித்து நன்றாக நினைவில் வைத்துக் கொண்டேன்!!!! சீரியஸாகச் சொல்லுகிறேன் இந்தப் பதிவை அப்படியே, மற்றும் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இல்லை என்றால் ஹிந்தியில் மொழி பெயர்த்து மோடிஜிக்கு அனுப்பி வையுங்கள். உண்மையாகத்தான் சொல்லுகிறேன். இந்த லிங்கையும் அனுப்பிக் கூடவே தமிழ் தெரிந்த ஒருவரையும் அங்கு தொடர்பு கொண்டு மோடிக்குச் சொல்லுங்கள் இப்படி ஒரு இளம் குடிமகன் 5,6 மாதங்களுக்கு முன்பே கனவு கண்டேன் என்று

    யார் கண்டா மோடிஜி ஒருவேளை உங்களுக்கு அவரது அவையில் ஒரு பதவி கொடுத்தாலும் கொடுப்பார். ஆவி கனவு காணுங்கள் என்று!!!!!!பேட்டென்ட் பண்ணுங்க!!!! இதுவும் கறுப்பாக மாறாமல் இருக்க இப்போதிருந்தே கடுமையானச் சட்டங்கள் வர வேண்டும்..

    கீதா

    ReplyDelete
  7. இதைச் சுட்டி ஒரு பதிவு போடுங்கள் ஆவி

    கீதா

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...