இன்ட்ரோ
ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மாந்த்ரீக சக்தி கொண்டு இறந்த பிரேதங்களுக்கு உயிர் கொடுத்து, அந்த பிரேதங்களை தங்கள் எதிரிகளை அழிக்க பயன்படுத்திக் கொள்வர். இவ்வகை பிரேதங்களுக்கு ஃஜோம்பி (zombie) என்று பெயரிட்டு அழைத்தனர். மிருக உணர்வும் மனித உடலும் (மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை) கொண்ட இறந்த உயிர்கள் தான் மிருதன்(ர்கள்) அல்லது ஜோம்பிக்கள் என்று இந்தப் படம் கூறுகிறது. ஆங்காங்கே டிராகுலாவின் பண்பு, பேய்களின் அட்டகாசம் என்று எட்டிப் பார்த்தாலும் காதலிக்காக எதையும் செய்யும் தமிழ்க் கலாச்சாரத்தை பின்பற்றும் அக்மார்க் தமிழ் ஃஜோம்பி இது.
கதை
ஊருக்குள் வேகமாக பரவும் வைரஸ் (ஃஜோம்பி வைரஸ்?) ஊட்டி நகரத்தையே ஃஜோம்பிகள் வாழும் நரகமாக மாற்றிவிட அதற்கு மாற்று மருந்து கண்டறிய முயலும் மருத்துவர் லட்சுமி மேனன் மற்றும் மருத்துவர் குழுவை கோவை மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவும் ஒரு ட்ராபிக் போலிஸ் ரவி.
இந்த களேபரத்துக்கு இடையிலும் லட்சுமி மேல் ஒரு தலை காதல், நண்பனுடன் சூர்யா- தேவா நட்பு, தங்கச்சி சென்டிமென்ட், ஒரு லவ் பெய்லியர் சாங், ஹீரோயினுக்கு லவ் வரும் போது ஒரு சாங் (குத்துப்பாட்டு மிஸ்ஸிங்) என தமிழ் சினிமாவின் இலக்கணங்களை துளியும் பிசகாமல் இருக்கிறது. அவ்வப்போது ஃஜோம்பிகள் கொஞ்சம் காமெடிக்கு, கொஞ்சம் காதல் வளர்க்க என ரகரகமாய் வந்து ரவியிடம் குண்டு பட்டுச் சாகின்றன.

ஆக்க்ஷன்
ரவி, தனி ஒருவனுக்கு பிறகு வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம், அதை பூர்த்தி செய்திருக்கிறார். இன்னமும் காமெடி காட்சிகளில் அவ்வளவு இயல்பாய் வரவில்லை என்றே தோன்றுகிறது. பேபி அனிகா நல்ல நடிப்பு. கோடம்பாக்கத்தின் 'அதிர்ஷ்ட' லட்சுமி (மேனன்) நடிக்க பெரிதாய் வாய்ப்பில்லை என்றாலும் இறுதிக் காட்சிகளில் சிறப்பாய் செய்திருக்கிறார். RNR மனோகர் சர்பிரைஸ் காமெடி பேக்கேஜ். காளிவெங்கட் துப்பாக்கி சுடும் காமெடி செம்ம சீரியஸ்..
இசை- இயக்கம்
இமானின் இசையில் 'முன்னாள் காதலி' 'மிருதா மிருதா' பாடல்கள் அருமை. ஆனால் ஒரு ஃஜோம்பி படத்திற்கான மிரட்டல் இசை மிஸ்ஸிங். வெங்கடேஷின் ஒளிப்பதிவில் ஊட்டி அழகாய் காட்சியளிக்கிறது, குறிப்பாய் இன்டர்வல் பிளாக்கில் ஒளிப்பதிவுக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து.
"நான் போகிறேன் மேலே மேலே" என்ற பாடல் இடம்பெற்ற நாணயம் படத்தை இயக்கிய 'நாய்கள் ஜாக்கிரதை' புகழ், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஒரு படி மேலே போயிருக்கிறார். பேய் சீசனில் வித்தியாசமான கதை சொல்ல முயன்றதற்காகவே அவரை பாராட்டலாம். ஃஜோம்பிகளுக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்திருந்தாலும் ஆங்காங்கே டிராகுலாக்கள் நினைவுக்கு வருவது ஏனோ? படம் முடிந்ததும் அப்பாடா என நிம்மதியுடன் எழ முயலும் ரசிகர்கள் வயிற்றில் இரண்டாம் பாகம் எனும் டேமரிண்டை கரைப்பது நியாயமா சாரே?

ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி
பேபி அனிகா இறுதிக் காட்சியில் பேசும் வசனம், 'முன்னாள் காதலி' பாடல்.
Aavee's Comments - Zombie with Tamil Culture!
ஜெயம் ரவி சாதாரணமா நடிச்சாலே ஜோம்பி பேசறா மாதிரிதான் பண்ணுவாரு. அவர்ட்ட போய் காமெடியல்லாம் எதிர்பாத்துக்கிட்டு... ஆவி மனுஷனாகுற வாய்ப்பு இருந்தாத்தான் அதுவும் சாத்தியம். (நான் சொல்றது கோவை ஆவி இல்ல, நெஜ ஆவியாக்கும். ஹி.. ஹி...)
ReplyDelete//ஜெயம் ரவி சாதாரணமா நடிச்சாலே ஜோம்பி பேசறா மாதிரிதான் பண்ணுவாரு//
Deleteஹா.ஹா..கலக்கல்.
கரெக்ட்டா சொன்னீங்க அண்ணா...
Deleteபடம் பார்க்கலாமா னு ஒரு யோசனையில் இருந்தேன்.ஆவியோட review படிச்சதே போதும்😊
ReplyDeleteஒரு தடவைக்கு மூணு தடவ சொன்னதால நம்பறேன்.. ;)
Deleteபடம் பார்க்கலாமா னு ஒரு யோசனையில் இருந்தேன்.ஆவியோட review படிச்சதே போதும்😊
ReplyDeleteபடம் பார்க்கலாமா னு ஒரு யோசனையில் இருந்தேன்.ஆவியோட review படிச்சதே போதும்😊
ReplyDeleteகோர்ட்ல வேலைல சேந்துட்டியா சௌம்ஸ்..? கமெண்ட்டும் மூணு தடவ வந்துருக்கே.... அடடே....
Deleteரவி, தனி ஒருவனுக்கு பிறகு வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம், // அப்போ பூலோகம் என்ன கணக்கு சாரே?
ReplyDelete"பூலோகம்" - வாலு படபூஜைக்கு முன்பே துவங்கப்பட்ட படம். ரொம்ப லேட்டா ரிலீஸ் பண்ணினாங்க. ஸோ லேட்டஸ்ட் னா தனி ஒருவன் தான்.. ஹிஹிஹி
Deleteதமிழ் ஃஜோம்பி... இது, இந்த சொல் புதுசு.....!
ReplyDelete:)
Deleteஜோம்பி படம் சோம்பல் வராமல் போகுதுதானே... பாக்கலாம்தானே...
ReplyDeleteநல்ல விமர்சனம்...
ஒரு முறை பார்க்கலாம்.
Deleteபடம் பற்றிய தகவலுக்கு நன்றி ஆவி. எப்படியும் பார்க்கப் போவதில்லை!
ReplyDeleteமுடிவே பண்ணீட்டீங்களா?
Deleteஆவிக்கு ஜோம்பி பிடிக்காமல் போனால் தான் ஆச்சர்யம்.
ReplyDeleteஹிஹிஹி
Deleteஎனக்கு இந்த படம் பிடிக்கல...
ReplyDeleteஎனக்கு என்னவோ இந்தப்படம் பிடிக்கல அதைவிட பேய்ப்படம் பரவாய்யில்லை சகோ[[[முனி போல [[[
ReplyDeleteபாலக்காட்டில் விசாரணை தவிர, அங்கு பேசப்படும் மற்ற படங்கள் எல்லாம் வந்திருக்கிறது.
ReplyDeleteநேற்றுதான் பார்த்தேன். தமிழுக்கு ஜோம்பி புதிது என்பதால் நல்லாருக்கு என்று சொல்லி வரவேற்கலாம். நல்ல முயற்சி + ஹோம்வொர்க். கொஞ்சம் வித்தியாசம் என்றும் சொல்லலாம் எடுத்தவிதத்தை. அவ்வளவுதான்.