இன்ட்ரோ
ஆரஞ்சு மிட்டாய் போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை கைவிட்டு சென்ற படம் கொடுத்த வெற்றிக் களிப்பில் களமிறங்கி "நானும் போலிஸ் தான்" என்று விஜய் சேதுபதி ஆடியிருக்கும் கமர்ஷியல் கதகளி தான் சேதுபதி.
கதை
குடும்பப் பகை காரணமாக நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் சேதுபதி, ஊர்ப் பெரியவர் ஒருவருடன் பகைமையை வளர்த்துக் கொள்கிறான். இவர்கள் இருவருக்குமான மோதல் தான் கதை என்றாலும், குழந்தைகள், மனைவி சென்டிமென்ட், ரோமேன்ஸ், ஆக்க்ஷன், பாடல்கள் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அத்தனை பில்டப்புகளோடும் திகட்டாமல் ரசிக்க வைக்கிறான்.
ஆக்க்ஷன்
விஜய் சேதுபதி, முறுக்கிய மீசையும், நிமிர்த்திய தோளுமாய் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு கண்ணியமாக உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்க்ஷன் மட்டுமல்லாது காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என அனைத்திலும் கலக்குகிறார். குறிப்பாக வில்லனின் அடியாளிடம் நீ முறைத்து பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது என்று கூறுகையில் அரங்கில் அனைவரும் சிரிக்கின்றனர். இவருடைய டயலாக் டெலிவரி மட்டும் ஆரம்ப கால ரஜினிகாந்தை நினைவு படுத்துகிறது. நல்ல கதை தேர்வு தொடர்ந்தால் கமல், விக்ரம் சென்ற பாதையில் தொடரலாம்.
ரம்யா நம்பீசன் பீட்சாவில் காதலித்து, இதில் மனைவியாய், இரு குழந்தைகளுக்கு அன்னையாய் வருகிறார். செல்லமாய் கோபிப்பது, பின் கணவனின் கண் பார்த்ததும் சொக்கிப் போவது என டிபிகல் கேரக்டர், திருப்தியாய் நடித்திருக்கிறார். வில்லர்- வேல.ராமமூர்த்தி, பின்பாதியில் அனிருத்தின் குரலில் வரும் 'நான் யாரு' பாடலில் கம்பீரமாக நிற்கிறார். இன்னும் கொஞ்சம் டெர்ரராக காட்டியிருக்கலாம்.
ரம்யா நம்பீசன் பீட்சாவில் காதலித்து, இதில் மனைவியாய், இரு குழந்தைகளுக்கு அன்னையாய் வருகிறார். செல்லமாய் கோபிப்பது, பின் கணவனின் கண் பார்த்ததும் சொக்கிப் போவது என டிபிகல் கேரக்டர், திருப்தியாய் நடித்திருக்கிறார். வில்லர்- வேல.ராமமூர்த்தி, பின்பாதியில் அனிருத்தின் குரலில் வரும் 'நான் யாரு' பாடலில் கம்பீரமாக நிற்கிறார். இன்னும் கொஞ்சம் டெர்ரராக காட்டியிருக்கலாம்.
இசை- இயக்கம்
இசை 'தெகிடி' புகழ் நிவாஸ் பிரசன்னா.பாடல்கள் சுமார் ராகம். பின்னணி இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் பல இடங்களை வெட்ட மறந்து சற்று நீளமாக விட்டுவிட்டது. 'பண்ணையாரும் பத்மினியும்' இயக்குனர் அருண் கொடுத்த கம்ப்ளீட் பேக்கேஜ். ஓரிரு இடங்களில் தடுமாற்றம் என்ற போதும் மொத்தத்தில் ஒரு நல்ல என்டர்டெயினர்.
ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி
போலீஸ் மிடுக்கை மறந்து மனைவியின் கால்களில் விழும் காட்சி, இமேஜ் பற்றி கவலைப்படாத விஜய் சேதுபதியை ஆவி லைக்ஸ் எ லாட்!
Aavee's Comments - Commercial King!
நன்றி நண்பரே
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
Deleteசூப்பர் சிங்கர் ல் விஜய் சேதுபதியைப் பார்த்தபோது நினைத்துக்கொண்டேன். ஆவி கண்டிப்பாக விமர்சனம் இவரது படத்துக்கு எழுதுவார் என்று.
ReplyDeleteஎனது எதிர்பார்ப்பினைத் தப்பாது பூர்த்தி செய்து இருக்கிறீர்கள். வெரி ஹாப்பி.
நான் எப்படி அவர் நடிப்பார் என்று நினைத்தேனோ (அவர் பேசுவதில் இருந்து ) அதே போல் நடித்தும் இருக்கிறார் .
ஒரு நடிகர் தன்னை மறந்து கதை பாத்திரத்தில் முழுகி அதன் படி நடிப்பது என்பது பல காலத்திற்குப் பின் இப்போது தான் பார்க்கிறோமோ !!
இசை !! ??
அது சரி. ! குறும்படங்கள் எப்போது ?
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
தாத்தா, நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை பின்னூட்டத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இசை - பின்னணி இசையில் இன்னும் அனுபவம் தேவைப்படுகிறது. பாடல்கள் சுமார்.
ReplyDeleteகுறும்படம் ஒன்று துவங்கி, படப்பிடிப்பு செல்லும் முன் ஒரு சிறு தடங்கலினால் நின்று விட்டது. மீண்டும் எப்போது துவங்குவோம் என்று தெரியவில்லை.. :(
எனக்கு விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிக்கும்...
ReplyDeleteதமிழ் சினிமாவில் கஷ்டப்படுறவன் பேர் எடுக்க முடியாது....
கையை காலை ஆட்டிட்டு அடுத்த சூப்பர் ஸ்டாருன்னு பேட்டி கொடுப்பானுங்க...
விஜய் சேதுபதி ஒரு எதார்த்த நடிகன்...
படம் பார்க்கணும்... நல்ல விமர்சனம்.
இது நடிப்புக்கான படம் இல்லையென்றாலும் விஜய் சேதுபதிக்காக நிச்சயம் பார்க்கலாம்.
Deleteநான் பார்க்க வில்லை !
ReplyDeleteநன்றி ஐயா
Deleteசுகமான விமர்சனம். ஆவி.கிடைத்தால் பார்க்கிறேன்.
ReplyDelete//கிடைத்தால்// :)
ReplyDeleteநன்றி ஆவி.
ReplyDeleteஇது போன்ற சினிமா பதிவுகள் மூலம் நானும் வெளி வந்திருக்கும் தமிழ்ப் படங்கள் பற்றி தெரிந்து கொள்கிறேன்! :)
எனக்கும் விஜய் சேதுபதியைப் பிடிக்கும். படம் பார்க்க வேண்டும்!
ReplyDeleteவிமர்சனம் போலவே படமும் இருந்தது,நன்றி!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇங்கு பாலக்காட்டில் வந்திருக்கின்றார் சேதுபதி. பார்த்தாச்சு. பிடித்திருந்தது. உங்கள் விமர்சனமும் அதே!
ReplyDelete