Friday, August 6, 2010

காதல் எனும் கானல் நீர்!!


அச்சில் வார்த்த அழகுப் பதுமையே! - என் நெஞ்சில்
முள் தைத்து சென்றதென்னவோ?

கனவில் வரும் உனக்காக - நினைவில்
நான் வடித்தேன் கவிதைகளை
நீயோ கனவில் விளைந்த கவிதைகளாய்
கலைந்து போனாயே!

காற்றில் வரும் சுகந்தங்களையெல்லாம் - உன்
நினைவுகளாய் எண்ணியிருந்தேன் நான்!
நீயோ காற்றில் கலைந்த நினைவுகளாய்
மறைந்து போனாயே!

எனக்குப் பிடிக்கும் என்பதற்காக வள்ளுவனின்
வரிகளையும், பாரதியின் கவிகளையும் நீ ரசித்தாய்!!
இப்போதும் அந்த கவிகளையும் வரிகளையும் நான் படிக்கின்றேன்
எனக்குப் பிடிக்கும் என்பதற்காக அல்ல! - நீ ரசித்தாய் என்பதற்காக!!

உனை "என்னவளாய்" நான் கடைசியாய்
சந்தித்த அந்த நாளில்
என் விழியோரம் பூத்திருந்த கண்ணீரை - உன்
பூவிரலால் துடைத்து விட்டாயே!

அது போதும் பெண்ணே எனது
ஆயுள் முழுமைக்கும்!
அந்த ஸ்பரிசம் ஒன்றே போதும் பெண்ணே
எனதாயுள் முழுமைக்கும்!!

அந்த "கடைசி" நாளில் நீ சொன்ன வார்த்தைகள்
உனக்கு நினைவுள்ளதா?

நான் சந்தோசமாக இருப்பதுதான் உன்
சந்தோசம் என்றாயே.. - இப்போது
நான் சந்தோசமாக இருக்கிறேன் பெண்ணே!
நீ சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக!!


.

8 comments:

  1. Anne..anand anne...super nne..

    anga anga konjam touch pannitu poyiteenga..

    ReplyDelete
  2. சரவணா, பின்னூட்டத்திற்கு நன்றி. எல்லா புகழும் காதலுக்கே!!!

    ReplyDelete
  3. நன்றி முனி.

    ReplyDelete
  4. நன்றாக உள்ளது ....தங்களின் inspiration யாரோ ?

    ReplyDelete
  5. நன்றி ஜானு! எனக்கு inspiration தமிழும், என் படைப்புகளுக்கு ஆதரவு தரும் உங்களைப் போன்ற வாசகர்களும் தான்!! ( தப்பிச்சுடோம்லே!!)

    ReplyDelete
  6. நன்றி வழிப்போக்கன்!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails