Friday, August 20, 2010

நான் மகான் அல்ல!! - விமர்சனம்


                   கார்த்தி ஆக்க்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ள படம். அவர் வரும் முதல் காட்சியில் பன்னீர் தெளிக்கிறார். பின்னர் படம் நெடுக இரத்தத்தை தெளித்திருக்கிறார்கள்.



                     தோழியின் திருமண விழாவில் காஜல் அகர்வாலை பார்த்ததும் காதல் கொள்கிறார். இருவருக்கும் காதல் வருகிறது. கார்த்தி காஜல் அகர்வாலின் தந்தையை பார்த்து திருமணம் பேசுகிறார். அவரும் ஆறு மாதத்திற்குள் ஒரு வேலையோடு வந்து பெண் கேட்கும்படி சொல்கிறார். ஆமா, இதிலெங்கே ஆக்க்ஷன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது படத்தின் முதல் பாதி மட்டுமே!! 

                     இரண்டாம் பாதியில் ஐந்து இளைஞர்கள் (காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ்) கொண்ட கும்பல் ஒன்று ஒரு பெண்ணை கொன்று துண்டு துண்டாய் வெட்டி திசைக்கொன்றாய் எறிகிறார்கள். கொலைக்கு சாட்சியாய் இருக்கும் கார்த்தியின் தந்தையை கொல்ல முயற்சித்து இரண்டாம் முறை வெற்றியும் காண்கின்றனர். 

                      தந்தை இறந்ததும் காதல், காமெடி இரண்டையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அந்த கும்பலை பழி(லி) வாங்க கிளம்பி விடுகிறார். பெரிய தாதாக்களையே அசாதாரணமாக கொல்லும் அவர்களை புழுவை நசுக்குவது போல் நசுக்கி உயுருடன் புதைக்கிறார். டைரக்டர் பெருமையுடன் தன் பெயரை போடுகிறார். (என்ன கொடுமை சார் இது!!)

                     கார்த்தியின் நான்காவது படம். பல இடங்களில் சூர்யாவை நினைவு படுத்தினாலும் காமெடியில் கலக்குகிறார். குறிப்பாக வங்கிக் கடனை வசூல் பண்ணச் சென்ற இடத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கட் மேட்ச் பார்ப்பது. பின் மேட்சில் இந்தியா தோற்றதும் வசூல் செய்யாமல் திரும்புவதும் அருமை. அவருடைய நண்பனாக வரும் ( "வெண்ணிலா கபடிக்குழு" புகழ்)  "பரோட்டா" சூரி முத்திரை பதிக்கிறார். காஜல் அகர்வாலுக்கு சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் எதுவும் இல்லை. 

                       இசை யுவன்.. ரீ-ரெக்கார்டிங்கில் கலக்கி இருக்கிறார். டைரக்டர் நல்ல ஒரு விஷயத்தை சொல்ல நினைத்து கொஞ்சம் அளவுக்கு அதிகமான வன்முறையை திணித்திருக்கிறார். சாப்டா ஒரு வெண்ணிலா கபடி குழு கொடுத்த சுசீந்திரன் படமா இது.. 

                       அது சரி, படத்துக்கு இடையில் அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் மங்காத்தா பட டீசர் ட்ரைலர் காண வந்த என் போன்ற "தல" ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான்!!!



4 comments:

  1. இந்தப் படத்திற்கு அந்த டைரக்டர் கொடுத்த பில்டப் இருக்குதே...அப்பவே நினைசேன்...

    ReplyDelete
  2. Yes Ramesh. Karthi did his best in the movie.

    ReplyDelete
  3. தங்களின் விமர்சனமே படத்தை பார்த்த உணர்வை தருகிறது :)

    ReplyDelete
  4. Karthi periya mokkai ah irunthaalum, THALAIVAR trailer ah miss panna poromnu konjam (illa neraiya) varutham irunthuchu...IPPA athu illa.

    BTW it was a good review.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails