Monday, November 8, 2010

சர்தார்ஜி ஜோக்ஸ்- 2



பேருந்தில் நடத்துனரிடம்..


சர்தார்ஜி :      கண்டக்டர், ரெண்டு டிக்கெட்.
நடத்துனர்:    நீங்க ஒருத்தர் தானே ஏறினீங்க, எதுக்கு ரெண்டு டிக்கெட்?
சர்தார்ஜி :     ஒண்ணு தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு.
நடத்துனர்:   அப்போ, இன்னொன்னும் தொலைஞ்சிடுச்சுன்னா?
சர்தார்ஜி :     என்கிட்டதான் பாஸ் (Pass ) இருக்கே!!




தன் பைக்கில் தன்னோடு இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சர்தார்ஜியை வழிமறித்த டிராபிக் போலீசிடம்..


சர்தார்ஜி: ஸாரி சார்! ஆல்ரெடி ரெண்டு பேர் வண்டில இருக்காங்க! உங்களுக்கு இடம் இல்லே..


துப்பறியும் அதிகாரி பணி தேர்வில்..

தேர்வாளர் :  மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?
சர்தார்ஜி:        இந்த பணிக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.. காந்தியை கொன்றவர்களை பற்றி நான் விசாரிக்கிறேன்..


பார்க்கில் ஒரு அழகிய பெண்ணிடம்..


சர்தார்ஜி: சுனிதா உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்.
சுனிதா:     நான் உன்னைவிட ஒரு வயது பெரியவள்!
சர்தார்ஜி: அப்போ, நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்கிறேன்.


பள்ளியில் ஆசிரியரிடம்..


ஆசிரியர்:  தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?
சர்தார்ஜி : HIJKLMNO
ஆசிரியர்: என்ன?
சர்தார்ஜி: நேற்று நீங்கள் தான் "ஹெச்" டூ "ஒ" என்று சொல்லிக்கொடுத்தீர்கள்..


நூலகத்தில்..


சர்தார்ஜி: (நூலகரிடம்) நான் படித்ததிலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான். மிகவும் அதிகமான கதாபாத்திரங்கள்.. சம்பாஷனைகள் யாவும் எண் வடிவில்  இருந்ததால் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது..

நூலகர்: ஓஹோ! நீங்கதான் டெலிபோன் டைரக்டரியை தூக்கிட்டு போன ஆசாமியா?

8 comments:

  1. சூப்பர்... சர்தார்ஜிக்கு பதிலா இளையதளபதி விஜய்ன்னு வச்சி பாருங்க... ஹிட்ஸ் எகிறிடும்...

    ReplyDelete
  2. நல்ல ஐடியாவா இருக்கே!! வருகைக்கு நன்றி பிரபாகரன்!!

    ReplyDelete
  3. ஜோக்ஸ் அனைத்தும் சூப்பர்!

    ReplyDelete
  4. நன்றி எஸ்.கே. வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  5. ஆமாம்.. சர்தார்ஜி ஜோக்ஸ் எல்லாம் விஜய்க்கு கன்வெர்ட் ஆகி ரொம்ப வருசம் ஆச்சு.. இன்னும் அப்படியே போடறீங்களே... ஆனா நல்லா இருந்தது எல்லாமே..

    ReplyDelete
  6. சில "இளையதலவலி" ரசிகர்களும் நம்ம வாசகர்களா இருக்காங்களே!! அவங்க வருத்தப் படக் கூடாதுங்கற ஒரே எண்ணம் தான்! வருகைக்கு நன்றி ரமேஷ்!!

    ReplyDelete
  7. உண்மைதான் புவனா !! எப்போ படிச்சாலும் இனிக்கும் நகைச்சுவை இவை!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails