முந்தைய SAW படங்களை பார்க்காதவர்களுக்கு: ஜிக்ஸா (Jigsaw ) என்பவன் ஒரு தொடர் கொலையாளி. (தொலைக்காட்சி தொடர் எடுத்து கொலை செய்பவர் அல்ல..) இவன் யாரையும் நேரிடையாக கொலை செய்வதில்லை.. இவன் கொலை செய்யும் விதத்தில் ஒரு புதுமை இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் மற்றவர்களை கொலை செய்தோ, தமது உடல் உறுப்புகளை அறுத்துக்கொண்டோ இவன் விரித்த வலைகளில் இருந்து தப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு வலைகளில் இருந்து தப்பிய பின்னும் இவனுடைய கர்ண கொடூரமான குரலில் ( நம்ம பீ. எஸ். வீரப்பா குரல் போல்) பதிவு செய்யப்பட்ட ஒரு கேசட்டை கேட்க வேண்டும். அதில் அடுத்த வலைக்கான வழி சொல்லப்பட்டிருக்கும். அவன் விரித்த வலைகளில் எல்லாம் தப்பித்து குற்றுயுரும் குலைவுயுருமாய் பிழைத்தவர்கள் வெகு சிலரே.
இப்போது SAW VII பற்றி.. சென்ற பாகத்தின் தொடர்ச்சியுடன் ஆரம்பிக்கிறது இந்த படம்.. தன் மனைவி பெட்சியின் சதியிலிருந்து தப்பிய ஹாப்மன் அவளை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகிறான். பெட்சி அவனிடமிருந்து தப்பித்து போலீசிடம் தஞ்சமடைகிறாள்.
அதே சமயம் பாபி என்பவன் தான் ஜிக்சாவின் வலைகளில் இருந்து தப்பியவன் என்றும், தான் கஷ்டப்பட்டு தப்பித்த கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்கிறான். அத்தோடல்லாமல் ஜிக்சாவினால் பாதிக்கப்பட்ட பலரையும் பேட்டி எடுத்து தன் தொலைக்காட்சி தொடரில் போடுகிறான்.. இது ஜிக்சாவிட்கு கோபத்தை உண்டாக்குகிறது.
போலீசில் சரணடைந்த பெட்சிக்கு உதவ ஒரு போலிஸ் அதிகாரி முன் வருகிறார். இவர் ஹாப்மனுடன் சில வருடங்களுக்கு முன் ஒன்றாக பணிபுரிந்தவர். ஹாப்மனின் கொடூரத்தை நன்றாக அறிந்த அவர் ஹாப்மனை கைது செய்ய முற்பட அவரும் கொல்லப்படுகிறார்.
பாபியின் செயலால் கோபமடைந்த ஜிக்ஸா அவனை கடத்தி அவனுக்கு பல வலை விரிக்கிறான். ஒவ்வொரு வலையிலும் தன் ஒவ்வொரு நண்பர்களை இழக்கிறான். கடைசியில் தன் மனைவியை காப்பாற்ற தன் உடலில் அலகு குத்திகொல்வது போல் கம்பியை குத்திக் கொள்ள வேண்டும்.
பாபி தன் மனைவியை காப்பாற்றினானா ? பெட்சி ஹாப்மனிடமிருந்து தப்பினாளா- 3டி திரையில் காண்க.. இது முழுக்க முழுக்க ரத்தத்தால் செய்த செல்லுலாய்ட் சித்திரம்...
40 / 100
படம் பர்க்கசொல்வது ,நீங்கள் எங்களுக்கு விரிக்கும் வலையா?
ReplyDelete