Tuesday, October 5, 2010
பலே லக்ஷ்மன்!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா "த்ரில்" வெற்றி பெற்றது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. முக்கிய வீரர்கள் நான்கு பேரை இழந்ததினால் வெற்றி தொலை தூரத்தில் இருந்தது. ஒரே வெளிச்சம் சச்சின் மட்டுமே. ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் அவரும் அவுட்டாகிவிட, இந்தியா பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.
முதல் நாள் ஆட்டத்தில் முதுகு வலியால் அவதிப்பட்ட லக்ஷ்மன் தன் வலியையும் பொருட்படுத்தாமல் களம் இறங்கி இந்தியாவிற்கு நம்பிக்கை அளித்தார். எட்டு விக்கெட் இழந்து இன்னும் 92 ரன்கள் தேவை என்ற நிலையில் இஷாந்த் ஷர்மா இவருடன் ஜோடி சேர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலியாவை கதி கலங்கச் செய்த லக்ஷ்மன் பலே லக்ஷ்மன் தான்!!
.
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி தல
ReplyDeleteசெம திரில் மேட்சுங்க! பயந்துகிட்டே பார்த்தேன். 2 விக்கெட் வச்சு ஜெயிச்சாங்க பாருங்க!!!
ReplyDeleteநன்றி சௌந்தர்!!
ReplyDeleteஆமாங்க எஸ்.கே !! அருமையான மேட்ச்! கொல நடுங்க வச்சுட்டாங்க நம்ம பசங்க! உண்மையில இஷாந்துக்கு தான் "மேன் ஆப் தி மேட்ச்" கொடுத்திருக்கணும்
ReplyDelete