Thursday, October 7, 2010
நினைவே ஒரு பறவை!!
விழித்தெழ விரைந்த போதுதான் - உறங்க
மறந்தது நினைவுக்கு வந்தது..
உனை நினைக்க மறந்த போதுதான் - உனை
மறக்க நினைத்தது நினைவுக்கு வந்தது..
மரங்களிலே மழைத்துளிகள் படர்ந்திருப்பதை கண்டு- அதை
ஓடிச்சென்று அசைத்தது சிறுபிள்ளைதனமாய் இருந்தாலும்
இப்போது நீ என்னருகில் இல்லாத போது - அந்த
இலை ஒவ்வொன்றும் உன் முகமாய் காட்சியளிக்கிறதே!
பேரிரைச்சல் கொண்ட பனகல் பூங்கா - பிடித்ததில்லை
எனக்கு எப்போதும்..உன் நினைவுகளை கருவாய்
சுமந்து கொண்டு இருப்பதால் அகல முடியவில்லை
அங்கிருந்து ஒருபோதும்..
எப்படியும் திரும்பி வருவாய் என - மணிகாட்டியின்
முள்போல் காத்திருக்க.. நீயோ
நம் காதல் தண்டவாளத்தின் இரு கோடுகள் என
விளங்க வைத்து சென்றாயே!!
உன் மேல் நான் கொண்ட காதல் நோய் என்
உயிரணுக்கள் ஒவ்வொன்றாய் உருக்குகிறது!
மருந்தாக வேண்டாம் நோயாகவாவது வா
உன்னால் நான் இறந்து போகிறேன்!!!
.
Subscribe to:
Post Comments (Atom)
Very nice choice of words... put together in the manner it should be... superb
ReplyDeleteஎப்போ எழுதிய கவிதை? அருமை!!
ReplyDeleteஇப்போது நீ என்னருகில் இல்லாத போது - அந்த
ReplyDeleteஇலை ஒவ்வொன்றும் உன் முகமாய் காட்சியளிக்கிறதே!
ஆஹா
நன்றி சார்..
Deleteமருந்தாக வேண்டாம்
ReplyDeleteநோயாகவாவது வா... அசத்தலுங்க. வேறென்ன சொல்ல.