கதாப்பாத்திரங்கள் :
சிவன், பார்வதி - "வாத்தியார்" பாலகணேஷ், சரிதா அக்கா
விநாயகர் - ஆவி
முருகன் - சீனு
ஸ்டீவ் ஜாப்ஸ் - அப்துல் பாசித்
சார்ல்ஸ் பாபேஜ்- "குடந்தையூர்" சரவணன்
மற்றும்
நாரதர் - "சேம்புலியன்" ரூபக்
காட்சி 1
நாரதர் : நாராயண.. நாராயண..
சிவன்: வா நாரதா, உன்னைத் தான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்..
நாரதர்: அகிலத்தையே ஆளும் ஈசன் என்னை எதிர்பார்த்து காத்திருப்பதா? என்ன விஷயம் ஸ்வாமி?
சிவன் : என்னுடைய கணினி நேற்று பழுதடைந்து விட்டது. சரிசெய்ய யாரையேனும் அழைத்து வர வேண்டும்..
நாரதர்: டோன்ட் ஒர்ரி பாஸ்.. ஐந்தே நிமிடத்தில் வருகிறேன்.
(ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்த நாரதருடன் இருவர் உடன் வந்திருந்தனர்)
சிவன் : நாரதா, இவர்கள் யார்? கணினி பழுது நீக்குபவர்களா?
நாரதர் : ஸ்வாமி, இடப்புறம் நிற்பவர் பெயர் சார்லஸ் பாபேஜ், கணினியை கண்டுபிடித்தவர். இரண்டாமவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.. நீங்க பயன்படுத்தும் ஆப்பிள் கணினியை வடிவமைத்தவர். இருவரையும் நரகத்திலிருந்து அழைத்து வந்தேன்.
சிவன் : (அதிர்ந்து) நரகத்திலிருந்தா.. மானுடர்கள் அறிவியலில் முன்னேறக் காரணமாயிருந்த இவர்கள் எதற்கு நரகத்திற்கு அனுப்பப்பட்டார்கள்?
நாரதர்: ஸ்வாமி, நீங்கள் சொல்வது சரிதான். இவர்கள் இருவரும் அறிவியல் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தவர்கள் தாம்.. ஆனால் இதோ இந்த சார்லஸ் இருக்கிறாரே, கஷ்டப்பட்டு உழைத்து ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களை கணினி என்ற சாதனம் கொண்டு சோம்பேறிகளாக்கி உடல் உழைப்பின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் ஆக்கிய குற்றத்திற்காக நரகத்திற்கு அனுப்பப்பட்டார்.
சிவன்: அது சரி, வைரஸ் உள்ளே புக முடியாத அருமையான சாதனத்தை வடிவமைத்த இவர் என்ன குற்றம் செய்தார்?
நாரதர்: அதுதான் இவர் செய்த குற்றம் ஸ்வாமி.. ஆண்டி-வைரஸ் எழுதி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் பலரின் வயிற்றில் அடித்தார் இவர். தவிர சாமானிய மக்கள் வாங்கும் விலையில் விற்காத குற்றத்திற்காகவும் இவர் நரகத்திற்கு அனுப்பப்பட்டார்.
சிவன்: அப்படியா.. சரி, சார்லஸ் ஸ்டீவ் இருவரில் யார் இந்தக் கணினியை சரிசெய்து தருகிறீர்களோ அவர்கள் சொர்கத்துக்கு அனுப்பப்படுவீர்கள்.
சார்லஸ்: (மேக் புக்கை எடுத்துப் பார்த்து விட்டு) ஐயா, நான் கண்டுபிடித்த சாதனத்துக்கும் இதற்கும் துளி கூட சம்பந்தமில்லை. இதை சரிசெய்ய என்னால் ஆகாது.
சிவன் : ஓ, சரி ஸ்டீவ், நீர் வடிவமைத்த பொருள் தானே இது.. நேற்றிலிருந்து சரிவர இயங்க மறுக்கிறது. இதை சரிசெய்து கொடுக்க முடியுமா?
ஸ்டீவ் ஜாப்ஸ்: ஐயா, இதை வடிவமைத்தது என்னவோ நான்தான். இந்த பொருட்கள் எதுவும் பழுதடைந்தால் அவற்றை நாங்கள் சரிசெய்வதில்லை.. பூலோகத்தில் எங்கள் ஆப்பிள் ஸ்டோர் ஏதேனும் ஒன்றிற்கு எடுத்துச் சென்றால் புதிதாய் மாற்றித் தந்து விடுவோம்.
(இதைக் கேட்டதும் அதிர்ந்தபடியே சிவனும் நாரதரும்)
***** காட்சி முடிகிறது ******
காட்சி 2
இடம் : சிவலோகத்தின் சமையல் அறை
(முருகர் கோபமாக உள்ளே வருகிறார்.)
முருகர் : அம்மா, அம்மா இதோ பாருங்கள், அண்ணன் ஐ-பேட் ஐ எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறான்.
பார்வதி : கணேஷ், தம்பியுடன் சேர்ந்து விளையாடு. அந்த ஐ-பேடை அவனுக்கும் கொடு.
விநாயகர்: அம்மா, தம்பி எப்போது பார்த்தாலும் சப்வே சர்பர்ஸ், டெம்பிள் ரன் என ஓடுகின்ற விளையாட்டையே விளையாடிக் கொண்டிருக்கிறான். எனக்கும் ஓட்டத்துக்கும் தான் எப்போதும் ஆகாதே. நின்ற இடத்தில் விளையாடும் ஸ்டிக் கிரிக்கட் விளையாடலாம் என்றால் கேட்க மாட்டேன் என்கிறான்.
சிவன்: இங்கே என்ன சண்டை (என்று கேட்டபடியே சிவன் உள்ளே வருகிறார்)
பார்வதி நடந்ததைக் கூற,
சிவன்: இதற்காக இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.. மினி ஐ-பேட் என்று ஒன்று வந்திருக்கிறதாம். அதை உனக்கு வாங்கித் தருகிறேன் முருகா, இதை அண்ணனுக்கு கொடுத்து விடு. ஆனால் ஒரு கண்டிஷன். இருவரும் ஐ-பேட் ஐ வைத்துக் கொண்டு சதா சர்வ காலமும் விளையாடிக் கொண்டே இருக்காமல் தமிழ் வளம் பெறும் வண்ணம் ஒன்றை செய்ய வேண்டும் சம்மதமா?
விநாயகர், முருகர்: என்ன செய்ய வேண்டும் அப்பா.. ஆணையிடுங்கள்.
சிவன் : இப்போது பூலோகத்தில் டெக்னாலஜி வளர்ச்சியின் காரணமாக எழுத்தாளர்கள் எல்லாரும் "பிளாக்" என்ற ஒன்றை வைத்து அதில் தான் எழுதுகிறார்கள். நானும் நாரதரிடம் சொல்லி கூகிள் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளேன். சிவலோகம் டாட் காம் என்ற பெயரில் ஒரு தளமும் உருவாக்கியிருக்கிறேன். என்ன எழுதுவது என்பதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..
முருகர்: (விநாயகரைப் பார்த்து கண்ணடித்தபடி) அப்பா, உடலை 'பிட்'டாக வைத்துக் கொள்வது பற்றி நான் எழுதுகிறேன். கூடவே மயில் மீது நான் பறந்து சென்ற இடங்களைப் பற்றிய பயணக் கட்டுரைகள் எழுதுகிறேன்.
விநாயகர்: நான் உணவு வகைகளைப் பற்றியும், உணவகங்களைப் பற்றியும் எழுதுகிறேன்..
பார்வதி: நான் சமையல் குறிப்புகளை பற்றி எழுதுகிறேன்..
நாரதர்: (உள்ளே நுழைந்தபடி) வேண்டாம் அம்மா, பிறகு பூலோகத்தில் இருக்கும் பெண்ணியவாதிகள் பெண் கடவுளையும் சமைக்கத்தான் வைக்கிறீர்கள் என்று போராட ஆரம்பித்து விடுவார்கள். ஐயனே, உங்கள் திருவிளையாடல்கள் பற்றி எழுதினாலே பல பதிவுகள் தேறுமே..
பார்வதி: ஆம் நாதா, நீங்கள் ஏன் திருவிளையாடல்கள் பற்றி எழுதக் கூடாது?
சிவன்: ம்ம்.. யோசிக்கிறேன். ஆமாம் நாரதா, காரணம் இல்லாமல் வரமாட்டாயே நீ.. இன்று சமையலறை வரை வந்திருக்கிறாய்?
நாரதர்: பிரபோ, நான் வந்ததன் காரணம் உண்டு, இந்திரலோகத்தில் நேற்று ஒரு பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. சீ-கேட் கம்பெனியை சார்ந்த ஒருவன் அங்கே புதிதாய் நூறு டெரா பைட் கொள்ளளவுள்ள ஒரு பென்-டிரைவை வடிவமைத்துள்ளான். அதை உங்களுக்கு தருமாறு இந்திரன் கொடுத்தனுப்பினார். இந்தாருங்கள்.
சிவன்: என் லேப் டாப்பில் உள்ள கொள்ளளவே எனக்கு அதிகம். இது எனக்கு வேண்டாம்.
நாரதர்: அம்மா, அப்போது நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.
பார்வதி: என்ன நாரதா, விளையாடுகிறாயா? அவர் 7.1 சிஸ்டத்தில் அவர் வைக்கும் பாடல்களை கேட்பதோடு சரி.. எனக்கு வேண்டாம் அது.
சிவன் : சரி பிள்ளைகள் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
நாரதர்: அதில் ஒரு சிக்கல் இருக்கிறது பிரபோ, அந்த பென்-டிரைவை ஒரே ஒரு யூசர் மட்டுமே பயன்படுத்த முடியும்.. ஆகையால் இருவரில் யாருக்கு கொடுப்பது..
சிவன்: அதானே பார்த்தேன்.. நாரதர் கலகத்தோடு வந்து நெடுநாட்கள் ஆகிவிட்டதே என்று.. நீயே சொல்லிவிடு என்ன செய்யலாம் என்று?
நாரதர்: கழகங்கள் செய்யும் கலகத்தை விடவா நான் செய்து விட்டேன்? சரி ஒரு போட்டி வைப்போம்.. அதில் ஜெயிப்பவர்களுக்கே இந்த பென்-டிரைவ்.
விநாயகர், முருகர் : (ஆர்வத்துடன்) என்ன போட்டி நாரதரே?
நாரதர்: பூலோகத்தில் "வில்ஸ்மித்" என்றொரு நடிகர் இருக்கிறார். அவர் வசிக்கும் தெருவின் பெயரைக் கண்டறிந்து கூற வேண்டும்..யார் முதலில் சொல்கிறீர்களோ அவர்களுக்கே இந்த பென்-டிரைவ்.
முருகர்: "அவ்வளவுதானே, இதோ வருகிறேன்" என்று கூறிவிட்டு மயிலில் ஏறி விசாரிக்க புறப்படுகிறார்.
விநாயகர் : "நாரதரே, உங்களுக்கு தெருவின் பெயர் மட்டும் தானே வேண்டும்?"
நாரதர் : ஆமாம் கணேஷா..
விநாயகர் தன் ஐ-பேட் இல் கூகிள் சேர்ச் போட்டு வில்ஸ்மித்தின் வசிப்பிடத்தை கூறுகிறார். கூகிள் மேப்பில் அந்த இடத்தை காட்டவும் செய்கிறார்.
நாரதர் பென் டிரைவை அவரிடம் கொடுக்கவும் முருகர் வந்து சேரவும் சரியாக இருந்தது. கோபமுற்ற முருகர் "பெரியவர்கள் சேர்ந்து நடத்திய நாடகம் சிறப்பு.. நான் போகிறேன்.."
விநாயகர்: தம்பி, இதை நீயே வைத்துக் கொள்..
முருகர்: வேண்டாம்.
சிவன், பார்வதி : முருகா நில்..
முருகன்: முடியாது..
(என்று கூறியவாறு மயில் மீது ஏறிச் செல்கிறார். )
***** காட்சி முடிகிறது ******
-தொடர்ந்தாலும் தொடரலாம்..
நியாயமாப் பாத்தா கோவை ஆவிக்குத்தான் நாரதர் பட்டம் தரணும். என்னமா மாட்டி விட்ருக்கீரு எங்களைல்லாம் நடிகர்களாக்கி... நவீன திருவிளையாடல் ரொம்பவே ஜோரு... அதுசரி... இந்த பில்கேட்ஸ்ங்கறவரு சொர்க்கத்துக்குப் போவாரா... இல்ல நரகத்துக்குப் போவாரான்னு சொல்லவே இல்லையே...?
ReplyDeleteஅவர் அங்கேயும் போய் சித்திர குப்தனின் புத்தகத்தை விலைக்கு வாங்கிவிடுவார் சார்..!
Deleteஅப்புறம்... சிவபெருமானே நினைச்சாலும் பிள்ளையாரும் முருகனும் முதல்ல முகநூல் கணக்கு ஆரம்பிங்க டாடின்னு சொல்வாங்கன்னு மைல்டா ஒரு டவுட்டு எனக்கு... யூத்ஸாச்சே...!
ReplyDeleteசெய்தாலும் செய்வார்கள் ஸார்.. ஹஹஹா..
Delete100 டெரா பைட் பென் டிரைவா...சொக்கா.... இது நிஜமா அல்லது நாடகத்துக்காக கற்பனையா?
ReplyDeleteஹஹஹா.. அது ஆவியின் கற்பனை ஸார்..
Deleteஆவீவவீவீவீவீ.............WOW!!!! Excellent! அனாயாசமான ஒரு கற்பனை! சிவ! சிவ! ப்ளீஸ் தொடருங்கள்! அசாத்தியமாக உள்ளது ரொம்பவே ரசித்தோம்.....டெச்னாலஜி வேறு புகுந்து விளையாடிவிட்டீர்கள்...ஆவி!!!! தொடர்ந்தாலும் தொடரலாம் வேண்டாம்....தொடருங்கள்! ரொமம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே ரசித்தோம்...இதை அப்படியே கற்பனை வேறு செய்து பார்த்தோம் உங்கள் எல்லோருக்கும் காஸ்ட்யூம் வேறு போட்டு......O! GOD! sorry O! Lord Siva!....இதை அப்படியே ஒரு ட்ராமாவாக போட்டால் என்ன ஆவி?!!!!! தயவு செய்து யோசித்துப் பாருங்கள்! கையை கொடுங்கள் ! அப்படியே குலுக்கி விடுகின்றோம்! Congrats!!!!!
ReplyDeleteபார்க்கப் போனால நாங்களும் இது போன்று ஒன்று இப்போது பரீட்சை எல்லாம் முடிந்து admission time ஆரம்பம் ஆகப்போகுது இல்லையா....அதை base பண்ணி எழுதியது தான்....ஆனால் என்னவென்றால் அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது...தமிழ் படுத்த வேண்டும்! போடலாம் என்றிருக்கின்றோம் ! பார்ப்போம்!
இதுஒன்று, மற்றோன்று கடவுள் பற்றியது....இரண்டும் பெண்டிங்க்....
உங்க பாராட்டுக்கு ரொம்ம்ம்ப நன்றி.. ஊக்கம் தருவதாய் உள்ளது.. நாடகமா.. போடலாமே... அடுத்த பதிவர் திருவிழாவுக்கு ட்ரை பண்ணிட்டா போச்சு.. :) :)
Deleteசீக்கிரம் உங்க டிராமா போடுங்க.. படிக்கிறோம்/பார்க்கிறோம்..
பொருத்தமான ஆட்களை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்! சூப்பர்! டெக்னாலஜியை புகுத்திய விதம் அருமை! ஆவி! எங்கேயோ போய்ட்டீங்க போங்க!
ReplyDeleteதுளசிதரன், கீதா
வாழ்த்துகளுக்கு நன்றிங்க..
Delete// பெண்ணியவாதிகள் .................. போராட ஆரம்பித்து விடுவார்கள்... // அட...!
ReplyDeleteஅங்கங்கே பாடல்களை இணைக்க வேண்டாமோ...?
டிராமாவா போடும்போது போட்டுடலாம் DD..
Deleteவணக்கம்,ஆ.வி சார்!நலமா?///அருமை!உங்கள் மூளையை முதலில்,அந்த (100) நூறு டெரா பைட் கொள்ளளவுள்ள பென்-டிரை வில் சேகரித்து விட வேண்டும்,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteசெய்துட்டா போச்சு பாஸ்..
Deleteஹை டெக் நாடகம் அருமை..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி அம்மா!!
Deleteபடித்தேன் இரசித்தேன்.
ReplyDeleteநன்றிங்க குணசீலன்..
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை நண்பரே தொடருங்கள்
நன்றி பாஸ்!
Deleteஹஹஹா அண்ணா... அட்டகாசம்... விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருந்தேன்... நாடகத்த தொடருங்க... நான் ஷேர் பண்ணிக்குறேன்...
ReplyDeleteதங்கச்சி சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது? தொடர்ந்திடுவோம்.. :)
Deleteஅவ்வ்வ்வ்.... இத ஷேர் பண்ற ஆப்சன் எங்க இருக்குன்னு தெரியலயே...
ReplyDeleteஹஹஹா.. முகநூல்ல தான் ஷேர் பண்ண முடியும்.. :)
Deleteஆமா அண்ணா, எப்.பில ஷேர் பண்ண இங்க ஒரு பட்டன் இருக்குமே பேஸ்புக் சிம்பல் போட்டு... அது எங்க?
Deleteஒ..அதுவா.. நான் அதை கொடுக்கலே.. சாரி..
Deleteஅது யாரு சரிதா அக்கா ,பதிவுலகில் உள்ள நிஜ அக்காக்கள் யாரும் கிடைக்கலையா ?
ReplyDeleteத ம 6
அடி வாங்கறது யாரு பாஸ்? ஹஹஹா..
Deleteநல்ல கற்பனை வளம். மூஞ்சிப் புக்குல இதுக்குதான் அண்ணா படம் வரைஞ்சிருக்காரா!?
ReplyDeleteஆமாம் அக்கா..
Deleteஜூப்பருப்போய் ... !
ReplyDelete:) :) :)
Deleteநல்ல கற்பனை ஆவி. பொருத்தமான ஆட்களைத் தான் தேர்ந்தெடுத்து இருக்கீங்க! Especially விநாயகர்! :)
ReplyDeleteஹஹஹா..
Deleteநல்லாருக்கே இந்த கான்செப்ட் தொடர்ந்து கலக்குங்க ஆவி
ReplyDeleteதேங்க்ஸ் பாஸ்!
Deleteமாம்பழம் பென் டிரைவாக மாறியது நல்ல ஐடியா! ஒவ்வோரு வாரம் ஒவ்வொரு பதிவரை எழுதச் சொல்லுங்கள், தொடர்ந்து. அசத்தலாக இருக்கும்.
ReplyDeleteநல்ல ஐடியாவா இருக்கே.. நன்றி அம்மா..
Deleteவிஜய், ரொம்ப நாள் முன்னாடி, திருவிளையாடல் கதையை உல்டா செய்து அப்படியே வேறு ஒரு கதையாக ன் பள்ளிகூட நாடகத்தில் பார்த்துள்ளேன்.. அதை நினைவுவுக்கு கொண்டுவந்து விட்டீர்கள்..!!! நன்றிகள் பல.....
ReplyDeleteவருகைக்கு நன்றி விமல்.. என்னை ஆவி என்றே நீங்கள் அழைக்கலாம்..
Deleteஆவியின் திருவிளையாடல் அசத்தல்
ReplyDelete