Saturday, April 5, 2014

ஆவி டாக்கீஸ் - மான் கராத்தே


இன்ட்ரோ  
                பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவன் பைனல்ஸ் வரை வர முடியுமா? அப்படியே வந்தாலும் பல வருடங்களாக சாம்பியனாக இருக்கும் ஒருவனை வீழ்த்த முடியுமா போன்ற லாஜிக்கெல்லாம் பார்க்காமல் (கூட சித்தர் சித்து விளையாட்டுகளையும் சேர்த்துக்கோங்க) படம் பார்த்தால் இந்த சம்மருக்கு நல்ல ஜில்-மோர் இந்த மான் கராத்தே.கதை         
                  சத்வம் கம்ப்யுட்டர்ஸ் பணியாளர்கள் ஐந்து பேர் உல்லாசப் பயணமாக "சந்திரகிரி" பாரஸ்ட்டுக்கு செல்கின்றனர். அங்கே ஒரு சித்தரை சந்திக்கும் இவர்கள் அவரை சோதிக்க விரும்பி ஒரு விஷயம் கேட்க, அதை அவரும் கொடுக்க முதலில் நம்ப மறுக்கும் அவர்கள் வாழ்வில் சில விஷயங்கள் சித்தர் வாக்கின்படி நடக்க பின் நம்பிக்கை வந்து ஒரு சாமானியனை பாக்ஸர் ஆக்குவது தான் கதை. இடையில் அந்த சாதாரண பீட்டருக்கும் ஒரு பட்டுக் குட்டிக்கும் ஏற்படும் லவ், மற்றும் அவர் இந்த பாக்ஸிங்கிற்கு தயாராவதை காமெடியாக சொல்லியிருக்கிறார்கள்.

                   காதல் வருவதை இயல்பாக காட்டுவதாய் சொல்லி இவர்கள் காட்டுவது எல்லாமே நிஜ காமெடி. சாதாரண தமிழ் வாத்தியார் பெண் ஐ-போன், ஆப்பிள் லேப்டாப் வைத்திருப்பதில் துவங்கி சூரி வரும் காட்சிகள், இறுதிக் காட்சி என ஏகப்பட்ட அபத்தங்கள்/ லாஜிக் மீறல்கள்.. ஆனாலும் அவற்றை எல்லாம் யோசிக்க விடாதபடி வேகமாக நகரும் திரைக்கதை, சதீஷின் ஒன்-லைனர்கள், சிவாவின் டூமாங்கோலி இங்க்லீஷ், ஹன்சிகாவின் கவிதை பேசும் கண்கள்  என நம்மை இழுத்துச் செல்கிறது. காதலனுக்கு "கிட்னி பேட்" வாங்கிக் கொடுப்பதெல்லாம் டூ மச்.

ஆக்க்ஷன் 
                                 "வருங்கால சூப்பர்ஸ்டார்" பட்டத்தை போட்டுக்கொள்ளாமல் சர்ச்சையிலும் சிக்காமல் நெக்ஸ்ட் டோர் பாய் கதைகளையே கேட்டு நடிப்பதால் விராட் கோஹ்லி போல் ஒவ்வொரு படத்திலும் ஸ்கோர் செய்கிறார். கீப் இட் அப் சிவா..! ஹன்சிகா- "வாட் எ வெள்ளை" என்ற அறிமுகத்துடன் வரும் இவர் ஆங்காங்கே வந்து போகாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். சதீஷ் இன்னும் கொஞ்சம் கேரக்டர் உள்ள படங்களை தேர்வு செய்தால் முழுநீள காமெடியன் (?) ஆகலாம்!

                                     தோழியாக வரும் அந்த "மெத்தை" இனி அடிக்கடி தலை காட்டும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. சூரி கடுப்பேத்தும் காமெடி என்றாலும் கிச்சுகிச்சு மூட்டுகிறது. வில்லர் பாவம் சிவா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அப்படியெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன? போட்டியில் விட்டுக் கொடுக்க முடியாது என்பதற்கு அவர் மனைவியிடம் சொல்லும் இடத்தில் நல்லவராகவும், வெளியில் வந்தபின் "அக்மார்க்" வில்லனாகவும் காட்டியிருக்கிறார்கள். தமிழ் சினிமா திருந்தவே திருந்தாதா?                      

                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 அனிருத்- பாடல்களில் படத்தை நகர்த்தாமல் பின்னணி இசையிலும் மெனக்கெட்டிருக்கிறார். ஒரு பாடலுக்கு நடனம் வேறு. ஐந்து படங்களில் அசுர வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும். ஏ. ஆர் முருகதாஸ் கதை மற்றும் தயாரிப்பு.. சித்தர் சரக்கு இல்லாமல் இது ஒரு வழக்கமான மசாலாவே..! இயக்குனர் அடுத்த படத்திலாவது கொஞ்சம் சீரியஸாக யோசிக்கலாம்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 பாக்ஸிங் போட்டிக்கு சென்றால் தன் உயிரையே இழக்க நேரிடும் என்பதால் காதலியிடம் உண்மையை சொல்ல முயலும் இடத்தில் சென்டிமென்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. "டார்லிங் டம்பக்கு" "ராயபுரம் பீட்டரு"  மற்றும் "உன் விழிகளில்" பாடல்கள் அருமை.

                  Aavee's Comments - Comedy Karate !34 comments:

 1. விமர்சனம் அருமை
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..!

   Delete
 2. சதீஷ கொஞ்சம் ட்ரை பண்ணா அடுத்த சந்தானமாகலாம்னு சொல்றீங்க ஆவி... ரைடடு. சிவகார்த்திகேயனுக்கு கண்படாம இருக்கணும். அப்புறம்... எனக்கு அந்த மெத்தைய உடனே பாக்கணுமே...1 ஹி...ஹி...!

  ReplyDelete
  Replies
  1. சி.பி. செந்தில்குமார் படம் போட்டிருக்கார்.. பாருங்க.. :)

   Delete
 3. அருமையான விமர்சனம்...:)

  ReplyDelete
 4. கோஹ்லி போலவே தொடரட்டும்... லாஜிக்கெல்லாம் யோசிக்காமல் ஜாலியாக பார்க்கலாம் என்று சொல்லி விட்டீர்கள்.... அதனால் நாளை...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பாருங்க.. சின்ன பசங்க என்ஜாய் பண்ணிப் பார்ப்பாங்க..

   Delete
 5. அழகா விமர்சிக்கிறீங்க ஆவி! ஸோ பார்க்கலாம்னு சொல்லுங்க......ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ், பாருங்க..

   Delete
 6. டூமாங்கோலி என்றால்?

  சினிமாவில் லாஜிக் எல்லாம் எம்ஜிஆர் காலத்தோடு சரி. பாருங்க.. கதானாயகியோ இல்லை வேறு பெண்ணோ பலாத்காரம் செய்யப் படும் பொழுது திடீரென்று வில்லனுக்கு உதை விழும். பார்த்தால். அட எம்ஜிஆர்! முந்தைய காட்சியில் தானே இவர் வெளியூர் போனாரு? இந்த மாதிரி லாஜிக்கோட இப்பல்லாம் படமே வரதில்லை போல.

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. அப்பாதுரை சார்.. தங்கப்பதுமை படம் பார்த்த போது எனக்கு இதே டவுட் வந்தது..:)

   Delete
 7. வணக்கம்

  தங்கள் பார்வையில் விமர்சனம் சிறப்பாக உள்ளது.....

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
 8. சதீஷ் என்று ஒரு ஆக்டரா! பார்த்ததில்லை.

  சிவாவுக்கு உடம்பு பூரா மச்சம் போல. அடுத்தடுத்து வெற்றி! சுக்கிர உச்சம்!


  ReplyDelete
  Replies
  1. எதிர் நீச்சல்ல கூட வருவாரே அவரேதான் சார்..

   Delete
  2. இந்த வெற்றி சிவா வோட கதை தேர்வு செய்து நடிக்கும் திறனால் வந்ததுன்னு நான் நினைக்கிறேன் சார்..

   Delete
 9. இதுவும் ஒரு வெற்றிபடமா....

  ஸ்ரீராம் சார் சொன்னது போல சுக்கிர உச்சம் போல! :) வ. வா. சங்கம் சில காட்சிகள் பார்த்தேன். நல்லாத்தே இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. எங்க ஊர்ல மூணு நாளைக்கு ஹவுஸ்புல்..

   Delete
 10. ஆவி பாஸ்,

  உங்களுக்கு எல்லாப்படமும் நல்லப்படமாவே தெரியுதே அவ்வ்!

  சுருளி ராஜன் ஒரு பொண்னை டாவடிப்பார் ,அந்தப்பொண்ணோட அப்பா என் பொண்ணை ஒரு பாக்சருக்கு தான் கட்டிக்கொடுப்பேன், ஒரு பாக்சிங்க் போட்டியில ஜெயிச்சுட்டு வானு சொல்லிடுவார் , பாக்சிங்கே தெரியாத சுருளி காமெடியா சண்டைப்போட்டு கடைசில ஜெயிச்சுடுவார் ,அவர் சண்டைப்போட்டு அடைஞ்ச பேரரழகி ரோஜாமலர்"குமாரி சச்சு" :-))

  இந்தக்காமெடி டிராக்கை டெவலப் செய்து முழு நீளப்படமாக்கிட்டாங்க போல அவ்வ்!

  ReplyDelete
  Replies
  1. ஆவிக்கு ஒரு மரணமொக்கைப் படத்தை போட்டுக் காட்டினா கூட அதுல தேடிக் கண்டுபிடிச்சு நாலஞ்ச நல்ல அம்சங்களைப் பாராட்டுவார் அவர். அல்லாத்துலயும் பாஸிடிவ்வையே பாக்கற அவ்வ்வ்வ்வளவு நல்லவரு!

   Delete
  2. வவ்வால் ஸார், படத்துல லாஜிக்கே கிடையாதுன்னு சொன்னது பாசிட்டிவ் விஷயமா.. நான் அதை நெகட்டிவ் ஆ இல்ல சொல்லியிருக்கேன்..,

   சுருளிராஜன் காமெடி இல்ல சார்.. இது மேட்டர் வேற, கீழே ஒருத்தர் சொல்லியிருக்கார்..:)

   Delete
  3. நல்லதை பார்.. நல்லதை கேள்.. நல்லதை சொல் குரங்கு காட்டின வழில போற ஒரு சாதாரண மனுஷன் நான்.. ஹிஹிஹி :)

   Delete
 11. மான் கராத்தே மரண மொக்கை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் பால கணேஷ் சார்,
  பாவம் ஆவி, ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு. எந்த தயாரிப்பாளரின் மனதையும் புண்படுத்த மாட்டாரு.
  இந்த படத்தின் கதையை அப்படியே, 20 ஆண்டுகளுக்கு முன்பே, பேய்க்கதை மன்னர் பி.டி. சாமி, சுட்டு எழுதி விட்டார்.
  மான்கராத்தே படத்திலிருந்து சுட்டு எழுதப்பட்ட அந்தக் கதைச் சுருக்கம் இதோ.
  கதாநாயகனுக்கு மறுநாளைய தினத்தந்தி பேப்பரை ஒரு ஆவி உருவம் கொடுக்கிறது. அதில் சொல்லப்படும் தலைப்புச் செய்தி, அப்படியே நடக்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் அந்த அந்த ஆவி உருவம் அடுத்தடுத்த நாளைய பேப்பர்களைக் கொடுக்கிறது.
  கடைசியில் கதாநாயகனுக்கு திருமணம் ஆகிறது. தன் மனைவியிடம் இந்த அதிசயத்தைக் காட்ட, முதல் இரவு அன்று, அந்த ஆவி உருவை சந்தித்து, அடுத்த நாள் பேப்பரை வாங்கி வருகிறான்.
  தன் புதுமனைவியிடம் பேப்பரைப் பிரித்துக் காட்டுகிறான். அதில் தலைப்பு செய்தியாக, "புதுமணத் தம்பதிகள் விபத்தில் மரணம்" என்ற செய்தி போட்டு, கதாநாயகன் மற்றும் அவனது மனைவியின் திருமண புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. இனம் னு ஒரு படம் வந்ததே, அதை கழுவி ஊற்றி ஒரு முகநூல் ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன்.. நீங்க படிக்கலைன்னு நினைக்கிறேன்.. நய்யாண்டி ன்னு ஒரு மொக்கை படத்தை பற்றியும் சொல்லியிருந்தேனே..

   Delete
  2. பி.டி. சாமி கதைகள் பிடிக்கும்.. இது படித்ததில்லை.. அருமை.. ஆனா படம் அது மட்டுமே இல்லே.. இன்னும் கொஞ்சம் மசாலாக்கள் சேர்த்திருக்காங்க.. முதல் வருகைக்கு நன்றி பாஸ்!

   Delete
 12. // விராட் கோஹ்லி போல் ஒவ்வொரு படத்திலும் ஸ்கோர் செய்கிறார்//

  Same Thought ...!


  ஆவி உமக்கு ஏகப்பட்ட நல்லவன் பட்டம் கிடைச்சிருக்கு - எனக்கு முன்னாடியே தெரியும் நீ ரெம்ப ரெம்ப நல்லவன்ப்பா .........!

  ReplyDelete
  Replies
  1. "நல்லவன்"னு சொல்லிட்டாங்களே ப்பா.. ஒருவேளை இனம் பட விமர்சனம் போட்டிருந்தா இந்த பேர் வந்திருக்காதோ?

   Delete
  2. //Same Thought ...!//

   Wise people think alike.. :)

   Delete
 13. ஆவி ஒழுங்கா உண்மையா சொல்லணும் படம் நல்லா இருக்குமா இருக்கதாணு ...cd ல பார்க்கலாமா தேயட்டர் போலாமா டவுன்லோட் பண்ணலாமா இல்லை வீட்டுலே படுத்து தூங்கலாமா ன்னு தெளிவா இருக்கணும் ....சிவா மேல இருந்த loves V V B S பார்த்தபோதே காணாம போய்டுச்சி ....இப்போ மான் கராத்தே பார்த்தா diverse தான் ......

  ReplyDelete
  Replies
  1. கலை, படத்துல மருந்துக்கு கூட கதை கிடையாது. வா.வ சங்கம் மாதிரி இருக்காது.. ஆனா இதுல காமெடிக்கு பஞ்சம் கிடையாது.. ஜாலியா சிரிச்சுட்டு வரலாம்.. தியேட்டர்ல பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க..

   Delete
 14. வணக்கம்,ஆ.வி சார்!நலமா?///எல்லா விமர்சனங்களும் பாசிட்டி வாகவே வருகின்றன,பார்ப்போம்!

  ReplyDelete
  Replies
  1. இந்த படத்துக்கு சொல்றீங்களா? ஆவி டாக்கீஸ்ல சொல்றீங்களா ன்னு தெரியலையே..

   Delete
  2. சார்,உங்க டலேண்டுக்கு முன்னால,என்னால ஒண்ணும் சொல்ல முடியாது.........ஹ!ஹ!!ஹா!!!

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...