இந்த வார சிறப்பு விருந்தினர் நம்ம யுவராஜ் சிங். சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.சி.சி இருபது ஓவர் உலகக் கோப்பை பைனலில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு விராட் கோஹ்லி தேவையில்லாமல் சிக்ஸர்களும் போர்களுமாய் அடித்து பதினைந்து ஓவர்களில் நூறைத் தாண்டிய போது உள்ளே நுழைந்த நீ-நாம் (You-We) பொறுப்பாக ஆடி "மெல்லத் திறந்தது கதவு" படத்தில் செந்தில் சொல்வாரே "எனக்கு தெரிந்ததெல்லாம் எருமை, கருமை, பொறுமை" என்று அதற்கு உதாரணமாய் நிலைத்து நின்று ஆடி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தியாவின் ஸ்கோரை கஷ்டப்பட்டு மட்டுப்படுத்தினார். இருந்தும் போட்டி முடிந்த பிறகு அவர் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமே. ( போட்டியின் முடிவில் விராட் ஸ்டம்ப்பை பிடுங்கி யுவியை தாக்கியதாக கேள்வி. இதை மீடியா உள்பட எல்லோருமே ரசித்ததால் இச்செய்தி வெளிவரவில்லை.. ஆவி ரசிகர்களுக்காக அந்த எக்ஸ்க்ளுசிவ் படம் இங்கே.. (என்ஜாய் மாடி!!)
யுவராஜ் தன் நிதானமான டெஸ்ட் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தவறா? இல்லை செமி பைனலுக்கு முந்தைய ஆட்டத்திலேயே சொதப்பிய யுவராஜை பைனலுக்கு தேர்வு செய்தது கேப்டன் தோனி மற்றும் கிரிக்கட் போர்டின் தவறா? சொல்லுங்க மக்களே..
***************** X *******************
இனம் - படத்தை திரையரங்கிலிருந்து திரும்ப பெற்றுக் கொண்டார்களாம்.. ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு படம் எடுக்க உரிமை இல்லையா என ஒரு நட்பு வட்டம் கேட்டிருந்தது.. இந்தப் படம் பார்த்தவுடன் விமர்சனம் எழுத ஆரம்பித்து இரண்டு பத்திகள் எழுதியவுடன் நிறுத்திவிட்டேன்.. இதற்கெல்லாம் விமர்சனம் எழுதி ஆவி டாக்கீஸை களங்கப் படுத்திக் கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன்.. (இதற்கு முன் இப்படி முடிவெடுத்தது நய்யாண்டி படத்திற்கு தான்)
தமிழர்களின் வேதனைகளையும், அவலங்களையும் பதிவு செய்ய வேண்டிய இடத்தில் விபத்தில் முடங்கிக் கிடக்கும் ஒரு பெரியவர் பிகினி உடை வெள்ளைக்காரிகளை பார்த்து ரசிப்பதாய் ஒரு காட்சி வைத்தது, படத்தின் மீதும் இயக்குனரின் மீதுமிருந்த மொத்த மதிப்புமே தகர்ந்து விட்டது... காசு பண்ண எப்படி வேணும்னா படம் எடுக்கலாம்.. காயப் படுத்த மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்..!
***************** X *******************
உறவினர் ஒருவர் வாங்கி வந்த ஒரு ஆரஞ்சால் வீட்டில் ஒரு பஞ்சாயத்து. நிறம் ஆரஞ்சாக இருந்த காரணத்தால் என் தங்கையும், அம்மாவும் அதை ஆரஞ்சு என்றார்கள்.. உரித்து சாப்பிட்ட எனக்கு அது சாத்துக்குடி என தோன்றியது. இருவரும் விடாமல் அது "கமலா ஆரஞ்சு" அப்படித்தான் இருக்கும் என்றார்கள். நானோ அது கமலாவும் இல்ல சிவாஜியும் இல்ல.. சாத்துக்குடி தான் என்றேன்.. அத்தோடு நில்லாமல் அதை உரித்து அவர்களுக்கும் கொடுத்தேன். ஆரஞ்சு போல் அல்லாமல் கடினத் தோல், ஒவ்வொரு சுளையும் தனித்தனியாக அல்லாமல் கூட்டுக் குடும்பமாக இருந்தது இதெல்லாம் பார்த்த பின்னும் அவர்கள் இது கமலா ஆரஞ்சு தான் என்றார்கள். போராட்டத்தின் உச்சகட்டத்திற்கு வந்துவிட்ட நான் "சரி உங்களுக்கும் வேணாம், எனக்கும் வேணாம். கமலா சாத்துக்குடி ன்னு வச்சுக்கலாம்" என்றேன்.. சரிதானே!
***************** X *******************
நீண்ட நாட்களாய் பார்க்க நினைத்து கொஞ்ஜம் லேட்டாக நேற்று தான் பார்க்கக் கிடைத்தது "பண்ணையாரும் பத்மினியும்" . நல்ல படம் இடைவேளை வரை. அதற்கு மேல் படத்தை கொஞ்சம் இழுவையாய் கொண்டு சென்றது போல் இருந்தது. வழக்கம் போல் தமிழ் சினிமாவின் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இதிலும்.. பண்ணையார் ஜெயப்பிரகாஷின் நடிப்பு ஆறுதல். விஜய் சேதுபதி நிறைவான நடிப்பு. "உனக்காக பொறந்தேனே" பாடல் தேன் மதுரம். இந்த பத்மினியை ஒரு முறை ரசிக்கலாம்.
***************** X *******************
எழுத்து சம்பந்தப்பட்ட ஒரு முயற்சிய தொடங்கலாம்னு இருக்கேன்.. வாத்தியாரும் பச்சைக்கொடி காட்டிட்டார்.. எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்த எல்லாருக்கும் பகிர ஒரு வாய்ப்பா அத நான் பாக்குறேன்.. அது என்னன்னு தெரிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்.. நான் பதிலை அடுத்த நிழற்குடை ல சொல்றேன்.
வர்ட்டா...!
//எழுத்து சம்பந்தப்பட்ட ஒரு முயற்சிய தொடங்கலாம்னு இருக்கேன்.. வாத்தியாரும் பச்சைக்கொடி காட்டிட்டார்.. எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்த எல்லாருக்கும் பகிர ஒரு வாய்ப்பா அத நான் பாக்குறேன்.. அது என்னன்னு தெரிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்.//
ReplyDeleteஅம்மாவின் பிரச்சார உரையை இங்கிலீஷ்ல எழுதி தர போறீங்க. அதான?
நீங்கள் செய்வீர்களா? (Will you do it?) நீங்கள் செய்வீர்களா? (Will you do it?)
அம்மா... ஆவி... இங்கிலீஷ்... சூப்பரு சிவா!::))))
Deleteஒய். திஸ் கொலைவெறி சிவா? நோ அரசியல்.. ஏன்னா எனக்கு அரசியல் தெரியாது.. ஹிஹிஹி..
Deleteயுவராஜ் தன் நிதானமான டெஸ்ட் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தவறா? இல்லை செமி பைனலுக்கு முந்தைய ஆட்டத்திலேயே சொதப்பிய யுவராஜை பைனலுக்கு தேர்வு செய்தது கேப்டன் தோனி மற்றும் கிரிக்கட் போர்டின் தவறா? சொல்லுங்க மக்களே..
ReplyDelete///
ஓமாம் இல்லை ....
ரெண்டும் சொன்னா எப்படிங்க.. ஒண்ணு இப்படி தலை ஆட்டனும்.. இல்லீன்னா அப்படி தலையாட்டனும்.. இது எதுல சேர்த்தி? :)
Deleteகாசு பண்ண எப்படி வேணும்னா படம் எடுக்கலாம்.. காயப் படுத்த மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்..!
ReplyDelete////யாரோட படம் ....
கோவை சிங்கத்தை சீண்டி விட்ட அந்தப் படத்தை எடுத்தது யாரு
சந்தோஷ் சிவன்..
Deleteஎழுத்து சம்பந்தப்பட்ட ஒரு முயற்சிய தொடங்கலாம்னு இருக்கேன்.. வாத்தியாரும் பச்சைக்கொடி காட்டிட்டார்.. ///
ReplyDeleteஜி கவிதையா ,கட்டுரையா .கதையா ...ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம் ஜி ,,,
கணேஷ் அங்கிள் எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா .....
இளவரசி,... ஆனந்து சொன்ன ஐடியா நல்லா இருந்துச்சு. நான் செய்ய விரும்பி முடியானப் போனது. அதான் அவனை என்கரேஜ் பண்ணேன். அதப்பத்தி இப்ப க்ளூ குடுத்தா ஆவி கனவுல வந்து என்னை பயமுறுத்தும்மா... மீ பாவம்.
Deleteஎதிர்பார்க்கிறோம் ஜி ன்னு மேல சொல்லிட்டு அங்கிள் கிட்ட ஒரு கேள்வி கேட்டீங்க பாருங்க.. நீங்க எல்லாம் நல்லா வருவீங்க.. ;-)
Deleteஎழுத்து சம்பந்தப்பட்ட ஒரு முயற்சிய தொடங்கலாம்னு இருக்கேன்.. வாத்தியாரும் பச்சைக்கொடி காட்டிட்டார்
ReplyDeleteok start congrats
நன்றி நண்பா.
Delete• யுவராஜ் சிங்கை தேர்ந்தெடுத்தது யார் தவறாக வேண்டுமானாலும் இருக்கட்டும... அவரின் பொறுமையான சிறந்த ஆட்டம் எனக்கு அவரது முன்னோர்களில் ஒருவரான ரவி சாஸ்திரியை நினைவு படுத்தியது. அதற்காகவேனும் பாராட்டத்தான் வேணும்.
ReplyDelete• இனம் பத்தி ஒரு வார்த்தையும் பேசறதா இல்ல.
• கமலா சாத்துக்குடி ... சூப்பருங்க.
• ப.பத்மினியும் - சின்னக் குறுநாவலை நாவலா வளர்த்தா இப்படித்தான் கொஞ்சம் போரடிக்கற மாதிரித் தோணும்.
• அந்த முயற்சி.... எனக்குப் பிடிச்ச A Cயோட கதைய வெச்சு நான் செய்யணும்னு ஆசைப்பட்டது. நேரம் அனுமதிக்காம என் கையக் கட்டிப் போட்ருச்சு. நீ செய்யப் போறதுல ரொம்ப மகிழ்ச்சி எனக்கு.
நன்றி வாத்தியாரே..
Deleteசந்தோஷ் சிவனா? அப்படி? ம்ம்ம்ம் எல்லாருமே கடைசில காசுக்கு விழுந்துருவாங்க போல!
ReplyDeleteஎழுத்து சம்பந்தப்பட்ட.......கம் ஆன் ஆவி! கெட் செட் ரெடி கோ! ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்!
ம்ம்ம்.. அடுத்த நிழற்குடைல சொல்றேங்க..
Delete;)
1992 வேர்ல்ட் கப்பில் இப்படித்தான் ரவி சாஸ்திரி வெறுப்பேற்றினார். இங்கிலாந்துடன் ஒரு போட்டியில் 115 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் குவிக்க சில ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. இப்போது யுவராஜ். அவரைச்சொல்லிக் குற்றமில்லை! தோனி அவர்மீது வைத்த அதீத நம்பிக்கை காரணம்! எழுத்து சம்பந்தமான புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! எனக்கும் அந்த சாத்துக்கொடி ஆரஞ்சு கன்பியூசன் ஏற்படுவது உண்டு! நன்றி!
ReplyDeleteஉங்களுக்குமா.. ஹாஹஹா..
Deleteபாஸ், எனகென்னமோ யுவராஜ்ஜ திட்டுறதோ இன்சல்ட் பண்ணுறதோ நல்லதா படல... அந்த கடைசி அஞ்சு ஓவருல கோஹ்லி, தோனி, யுவி யாருமே ஒழுங்கா பண்ணல.. இப்போ நமக்கு தோத்ததுக்கு ஒரு காரணம் வேணுங்குரதால யுவராஜை கட்டம் கட்டுறது, கல் எறிவது, நம்மள மடையவர்களாகவே காட்டும்...
ReplyDeleteஸ்ரீலங்கா கூட கடந்த அஞ்சு ஆறு வருசங்களில், நாலு அஞ்சு பைனல்ஸ் போயி தோத்தாங்க, ஆனா அங்க எந்த ஒரு வீரரும் இந்த மாதிரி அவமானபடுத்தபடவில்லை... நாம இன்னும் வளரனுமோ...
ராசு, எனக்கும் யுவி பிடிக்கும்.. ஆறு சிக்ஸர் ஒரே ஓவரில் விளாசிய போது தலையில் வைத்துக் கொண்டாடினேன்.. புற்று நோயிலிருந்து மீண்டு வந்த போது சப்போர்ட் பண்ணினேன்.. மீண்டும் அணியில் வேண்டும் என விரும்பினேன்.. எல்லாம் சரி.. பைனல் மேட்சில் அதுவும் கொஹ்லி மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்.. அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருக்கலாம் அல்லது அடித்து ஆடி அவுட் ஆகியிருக்கலாம்.. இரண்டும் செய்யாமல் பந்துகளை வீணாக்கியது இந்தியாவின் வேகத்தை (Momentum) மட்டுப்படுத்தியது.. அதுவே பின் வந்த வீரர்களாலும் ஆட முடியாமல் போனது.
Deleteயுவராஜின் வீட்டின் மீது கல் எறிந்ததை நான் நிச்சயம் ஆதரிக்கவில்லை.. அது தவறுதான்.
மேலும் யுவராஜின் பார்ம் நன்கு அறிந்தும் பைனலில் எடுத்தது, முக்கியமான நேரத்தில் ரெய்னா அல்லது தோனி தானே இறங்காமல் யுவியை இறக்கி விட்டது இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக நான் பீல் செய்தது..
எழுத்து சம்பத்தப்பட்ட முயற்சியை தொடங்குங்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி நண்பரே!
Delete//எழுத்து சம்பந்தப்பட்ட ஒரு முயற்சிய தொடங்கலாம்னு இருக்கேன்.. வாத்தியாரும் பச்சைக்கொடி காட்டிட்டார்.. எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்த எல்லாருக்கும் பகிர ஒரு வாய்ப்பா அத நான் பாக்குறேன்.. //
ReplyDeleteவாத்தியார் கிட்ட பெர்மிஷன் வாங்குற அளவுக்கு அப்படி என்ன எழுத்து சம்பந்தப்பட்ட முயற்சி? நினைச்சதை எழுதலாமே! அதுக்குத்தான் உங்க தளம்!!! வாழ்த்துக்கள்.....
இது தளத்தையும் தாண்டிய ஒரு முயற்சி.. வாத்தியோரோட அனுபவம் இதுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.. அதான்! சீக்கிரம் சொல்லிடறேன்.. :)
Deleteயுவராஜ் சிங்... ம்... கதம் கதம்...
ReplyDeleteமுயற்சியை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...
ஏதாவது குறும் படம் எடுக்கப் போகிறீர்களா ஆவி ?(நஸ்ரியா கால்ஷீட் நிச்சயமா கிடைக்காது !)
Deleteத ம 7
கதம் ன்னு சொல்லிட முடியாது DD.. ஒரு ஆறு மாசம் ரஞ்சி விளையாடிட்டு வந்தா பார்முக்கு வந்திடுவான்..
Delete//நஸ்ரியா கால்ஷீட் நிச்சயமா கிடைக்காது !)// ஏன்? அதான் கல்யாணத்துக்கு அப்புறமும் நடிக்க போறேன்னு சொல்லியிருக்கே..
Deleteகுறும்படம் இல்ல பகவான்ஜி.. எழுத்து சம்பந்தப்பட்டதுன்னு சொல்லியிருந்தேனே.. ;-)
Deleteஉங்களால் முடியும்,ஆ.வி சார்!ஜமாய்ங்க!///ப.ப. நீங்க சொன்னது சரி தான்,பின் பாதி கொஞ்சம் இழுவை..............தான்!!அடுத்த நிழற்குடைக்காக வெயிட்டிங்!!!
ReplyDeleteரசித்துப் படித்ததற்கு நன்றி நண்பா!
DeleteWIDE YORKERS !..
ReplyDeletethe latest invention of sri lanka cricketers !...
Any batsman can't do anything against them even in death spells !..
we clearly saw last 4 fours of the finale ,
only 19 runs scored by indian batsmen !.. 5 runs of them are extras !. so only 14 runs from the bat !..
man in form virat , one of the great finisher dhoni , very agressive yuvraj failed against those balls by sri lankan pacers !..
after the match,
virat kohli said
WE CAN'T DO ANYTHING WHEN PACERS BOWLS THOSE YORKERS !..
dhoni said ,
IT IS THE BIGGEST THREAT FOR THE BATSMEN AGAINST SRI LANKA NOW . BATSMEN MUST FIND A WAY TO GET RID OF THOSE DELIVERIES !..
so we must say those three batsmen hwo were on the crease aren't respinsible for low score !.. Actually they hadn't to do anything against wide yorkers !..
How sl bowlers got this specail idea of wide yorkers ?? !..
நிழற்குடை....
ReplyDeleteஇனம் படம் பற்றி ஒன்றும் சொல்வதிற்கில்லை.
புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். கமலா சாத்துக்குடி - அட நல்ல பெயராக இருக்கே. கமலா, சாத்துக்குடி போன்றே அந்த குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பழமும் உண்டு. அதை கின்னு [KINNOW] என்று சொல்வார்கள். வடக்கில் நிறைய கிடைக்கிறது. இப்போது தமிழகத்திற்கும் வந்து விட்டதாக நினைக்கிறேன்.
ஒ.. அப்படியா சார்.. குடும்பத்துல என்ன முறை வரும்னு சொல்லாம விட்டுட்டீங்களே ;-)
Delete