முந்தைய பதிவுகளுக்கு...
மறுநாள் காலை கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திறந்த போது அங்கே அன்பு நின்றிருந்தான். "டேய், மணி எட்டு ஆச்சு.. சார் இன்னும் எழுந்திருக்கல.. " என்றவாறு என் முன் ஒரு தட்டை வைத்தான். "இந்தா ராகி தோசை செய்திருக்கேன்.. பிரஷ் பண்ணிட்டு சாப்பிட்டு வா போகலாம்.." என்றான். "தேங்க்ஸ் டா.. நீ முன்னாடி போ, நான் சாப்பிட்டு வர்றேன். பாஸ்கரை போய் பார்க்கணும். பையன் ஏதோ லவ்வுல மாட்டியிருக்கான்னு நினைக்கிறேன். வொர்க் ஷாப் சுரேஷோட தங்கச்சி பேரென்ன நித்ரா தானே, அதை தான் பார்த்துகிட்டு இருக்கான் போல.." "என்னடா சொல்றே, அவனுக்கு தான் லவ் எல்லாம் பிடிக்காதே. அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவானே." என்று வியப்புடன் கேட்டான் அன்பு. "ஆமாமா, அதான் என்னன்னு விசாரிக்க போறேன்". "சரிடா, அப்ப நான் கிளம்புறேன்.. காலையிலேயே லேப் இருக்கு.. போகலேன்னா HOD கூப்பிட்டு நிறுத்திவச்சு திட்டுவாரு. நீ பொறுமையா வா" என்று கூறிவிட்டு தன் அறைக்கதவை பூட்டிவிட்டு சென்றான். அவன் சென்றதும் நானும் ரெடியாகி, அன்பு கொடுத்த டிபனை உண்டுவிட்டு பாஸ்கர் வீட்டிற்கு சென்றேன். அவன் சலூனுக்கு சென்றிருப்பதாய் அவன் ரூம்-மேட்கள் கூற அங்கே சென்றேன்.
சலூனுக்கு உள்ளே நுழைந்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. சீட்டில் அமர்ந்திருந்த பாஸ்கரின் தலைமுடிகள் சுருட்டப்பட்டு கிளிப் பொருத்தப் பட்டிருந்தது. அவனைப் பார்த்ததும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனிடம் "என்னடா பண்றே" என்றேன்.. சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்த ராசு (அவனும் எங்கள் வயதை ஒத்தவன் என்பதால் நட்புடனே பழகி வந்தோம்), வா ஆனந்து, நம்ம பாஸ்கர் ஒரு புள்ளைய ரூட் விடுறான்ல.. அதுக்கு சச்சின் டெண்டுல்கர்னா ரொம்ப பிடிக்குமாம்.. அதான் இவனும் அதே மாதிரி ஹேர்ஸ்டைல் வேணும்னு கேட்டான்" என்று தனக்குள் சிரித்துக் கொண்டான். இதற்கு மேலும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. "அந்தப் பொண்ணுக்காகவா?" என்றதற்கு "அதெல்லாம் இல்லை, ரொம்ப நாளா ஒரே ஹேர்ஸ்டைல் வச்சு போர் அடிக்குது.. புதுசா ஹேர்ஸ்டைல் வைக்கலாமேன்னு.." எனவும் இருவரும் மீண்டும் சிரித்தோம். "சிகை" அலங்காரம் முடிந்ததும் "எப்படிடா காலேஜ் வரப்போறே?" என்றேன். "அது ஒண்ணும் ப்ராப்ளம் இல்லே" என்று கூறி கிளிப் கள் வெளியே தெரியாதவாறு ஒரு தொப்பியை போட்டுக் கொண்டான். "இன்னும் நாலு நாள் இப்படியே இருக்கணும் பாஸ்கரு" என்று ராசு கண்டிஷன் வேறு போட்டு வைத்தான்.
இருவரும் கல்லூரியை நோக்கி நடந்தோம். "என்னடா, அந்த நித்ராவ சீரியஸா லவ் பண்றியா?" என்றேன். என்னை ஒரு லுக் விட்ட பாஸ்கர் "அவ ஒண்ணும் லவ்வர் கிடையாது. அவளைத்தான் கல்யாணம் செய்துக்க போறேன்." ஒரு நிமிடம் அதிர்ந்த நான் தெளிவான அவன் பேச்சை கேட்டு "உங்க வீட்டுல எல்லாம் ஒத்துப்பாங்களா?" என்றேன். "எந்த வீட்டுலடா பையன் லவ் பண்றேன்னு சொன்னா ஏத்துக்குவாங்க. அடுத்த வருஷம் பைனல் இயர், கடைசி எக்ஸாம் எழுதினதும் நேரா நாமக்கல் ரிஜிஸ்தர் ஆபிஸ்ல கல்யாணம். நீ சைன் போட வருவியல்ல." எனவும் அவன் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் மனத்திரையில் ஓட ஒரு நிமிடம் ரமாவுடனான என் வாழ்க்கையை இன்னும் திட்டமிடாததை நினைத்துப் பார்த்தேன். "என்னடா வருவியா மாட்டியா" என்று அதட்டியபடி அவன் கேட்க, "கண்டிப்பா வருவண்டா.. பாஸ்கர் நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று கூறுவதற்குள் வகுப்பறை வந்துவிட ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டதால் வேகமாக இருக்கைக்கு சென்றமர்ந்தோம். என் மனம் அப்போதிருந்து நானும் ரமாவும் சேர்ந்து வாழப் போகும் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்று யோசனை செய்ய ஆரம்பித்தது.
இருவரும் டிப்ளமா முடித்ததும் ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டும். பின் ஒரு வருடம் கழித்து பதினெட்டு பூர்த்தியானவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இரு வீட்டாரின் சம்மதங்களையும் வாங்க வேண்டும். பாஸ்கர் என்னை விட இரு வருடம் பெரியவன் ஆதலால் பைனல் இயரிலேயே திருமணம் அவனுக்கு சாத்தியம் தான். இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு பிரம்படி விழுந்தது போலிருந்தது. சுளீரென்று வலித்தது. நிமிர்ந்து பார்த்தபோது எதிரே ஈசி சார் (எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யுனிகேஷன் சார்) பிரம்போடு நின்றிருந்தார். "என்னடா பகல்லையே கனவா? பகல் கனவு பலிக்காது தம்பி. ரெக்கார்டு நோட்டு வைக்க சொல்லி சொல்லிகிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு உக்காந்துட்டு இருக்கியே" என்றார். அப்போதுதான் உரைத்தது, நேற்று ரமாவுடன் சுற்றிவிட்டு ரெக்கார்ட் எழுத மறந்து விட்டேன். "ஸார், ரெக்கார்ட் எழுதிட்டேன்.. கொண்டு வர மறந்துட்டேன்." என்றேன். மீண்டும் சுளீர். பெயர் தான் ஈசி சார், கஷ்டம் கொடுப்பதற்கென்றே அவதரித்தவர். மதியம் வரை கெடு வைத்திருந்தார். அருகில் அமர்ந்திருந்த பாஸ்கர் "என்னடா நீயும் எழுதலையா.. மதியம் கட் அடிச்சுடலாமா, கொண்டாட்டம் ன்னு ஒரு படம் வந்திருக்காம், போலாம்" என்றான். அதே நேரம் ரமா சைகையால் கேட்க நான் எழுதாததை கூறினேன்.
ஆசிரியர் வெளியேறியதும் ரமா என்னிடம் வந்து "ஏம்பா எழுதல?" என்றாள். "மறந்துட்டன் பா" என்றேன். "சரி உங்க ரெக்கார்ட் கொடுங்க.. நான் எழுதித் தர்றேன்" என்றாள். "ஆனா, உன் கையெழுத்து சுமாரா இருக்குமே" என்றவனை முறைத்தவள் "அப்போ நீங்களே எழுதிக்கோங்க"என்று திரும்பினாள். "சாரி சாரி சாரிப்பா, நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்" என்றவாறு ரெக்கார்டை அவள் கைகளில் சேர்த்தேன். பின் திட்டமிட்டபடி நானும் பாஸ்கரும் நாமக்கல் புறப்பட்டோம். பஸ்ஸில் செல்கையில் அவனிடம் ரமாவைப் பற்றி சொல்ல நினைத்து "பாஸ்கர் நம்ம கிளாஸ் பொண்ணுங்கள பத்தி என்ன நினைக்கிறே" என்றேன். "அதுங்கெல்லாம் பொண்ணுங்களே இல்லேன்னு நினைக்கிறேன்" என்றான். "டேய், ஏண்டா அப்படி சொல்றே?" "பொண்ணுங்கன்னா ஒரு அடக்கம் ஒடுக்கம் இருக்கணும். இதுல ஏதாவது ஒண்ணு இருக்குமா இவளுங்களுக்கு.. அதுசரி நீ எதுக்கு அதப் பத்தி கேக்குறே.. அந்த சங்கீதா கூட அடிக்கடி பேசுற.. அளவா வச்சுக்கோ." என்றான்.. "டேய் சங்கீதாவ விடு, அவ ஜஸ்ட் ப்ரெண்ட். ரமா பத்தி என்ன நினைக்கிறே?" "ஏண்டா அவதான் நம்ம கிளாஸ் செந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு?" என்றான். பஸ் சடன் பிரேக் அடித்து நின்றது. என் இதயமும் தான்!
-தொடரும்..
அட ராமா..ச்சீ இந்த ரமா இப்படியா ? இல்லப்பா அந்த புள்ள ஏதோ தெரியாம சொல்லியிருக்கும்.
ReplyDeleteஅப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. ;-)
Deleteரொம்ப நாள் கழிச்சு ஆரம்பிச்சு ஒரு சடன் ப்ரேக்குடன் நிற்கிறது..
ReplyDeleteஇனி முடிந்த வரை வாரத்திற்கு ஒரு போஸ்டாவது போடறேன்..:)
Deleteநின்ற இதயம் மறுபடி இயங்க ஆரம்பித்ததால் தானோ,இது தொடர்கிறது?ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteஆமா ஆமா..
Deleteபோன யுகத்துல படிச்சதால முந்தைய அத்தியாயம் மறந்து போச்சு. மேல ‘முந்தைய பதிவுகளுக்கு’ன்னு லிங்க் தந்திருக்கயேன்னு க்ளிக்கினா.. இந்தப் பதிவுக்கே வந்து நிக்குது. யப்பா...!
ReplyDelete//போன யுகத்துல படிச்சதால // ஹஹஹா.. அந்த லிங்க் இன்றைய பதிவு மற்றும் கீழே பழசையும் காட்டும் ஸார்..
Deleteஒரு வழியா அதைத் தேடிக் கண்டுபிடிச்சு படிச்சுட்டு இங்க வந்தா... பாஸ்கரோட மெனக்கெடல் நல்ல காமெடி. புன்னகையோட கீழ வந்தா இப்படி ஒரு ஜெர்க்கா...? அடுத்து என்னன்னு.... இந்த வருஷத்துக்குள்ள அடுத்த பதிவு வந்துருமா ஆவி?
ReplyDeleteபாஸ்கரின் சேட்டையை ரசித்த வாத்தியாருக்கு நன்றி.. இனி ரெகுலரா போட்டுடறேன் ஸார்..
Deleteரொம்ப கேப் விட்டு போச்சு போல! கதையிலும்தான்!
ReplyDeleteஆமாம் பாஸ்.. குறைச்சுக்கறேன்..:)
Deleteஅருமையான நடை! அசத்தல்!
ReplyDeleteநன்றி ஐயா.. வருகைக்கும் வாழ்த்துக்கும்..
Delete"ஏண்டா அவதான் நம்ம கிளாஸ் செந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு?" என்றான். பஸ் சடன் பிரேக் அடித்து நின்றது. என் இதயமும் தான்!
ReplyDeleteஇந்த இடத்துல தொடரும் னு போட்டு எங்களையும் நிக்க வச்சிட்டீங்க ஆவி
சரி சரி அடுத்த பாகம் வர்ற வரைக்கும் நிக்க வேண்டாம்.. கொஞ்சம் உட்காருங்க..:)
Deleteசெந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு?" என்றான். பஸ் சடன் பிரேக் அடித்து நின்றது. என் இதயமும் தான்! //ஆஹா இப்படியா இடியை போட்டு நிறுத்துவது !தொடர்கின்றேன்.
ReplyDeleteதொடர்ந்து வாங்க!
Deleteஅருமை
ReplyDeleteநன்றிங்க..
Deleteவில்லன் வந்தாச்சி...!
ReplyDelete(தொடர்ந்து குறிப்பிட்ட கிழமையில் பகிர்ந்து கொள்ளலாம்)
அப்படித்தான் முதலில் யோசித்தேன். அது ஒர்க் அவுட் ஆகலை.. :)
Deleteசடன் பிரேக்கில் நானும் அதிர்ந்து நிற்கிறேன் !
ReplyDelete#நீ சைன் போட வருவியல்ல#
நண்பனுக்கு ஒரு கஷ்டம் என்றால் கைகொடுக்காமல் இருக்க முடியுமா ?
த ம 5
அதானே பிரென்ட்ஷிப்..
Deleteமுன் பதிவு படித்தால் தான் தொடர்பு கொள்ள முடிகிறது ஆவி.... இரண்டுக்கு நடுவே இடைவெளி தேவை தான்! ஆனாலும் இத்தனை இடைவெளி தேவையா! :)
ReplyDeleteஹிஹிஹி.. இனி கொஞ்சம் உஷாரா போட்டுடறேன்..
Deleteஹா ஹா ஹா நல்லா கேளுங்க சார்
Delete//பெயர் தான் ஈசி சார், கஷ்டம் கொடுப்பதற்கென்றே அவதரித்தவர். // ஹா ஹா ஹா
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி சீனு!
Delete