Wednesday, April 16, 2014

அபுதாபியில் IPL..!

                       

                            இந்த வருடம் IPL எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் இன்று துவங்குகிறது. தேர்தலை முன்னிட்டு IPL ன் முதல் இருபது விளையாட்டுகள் அபுதாபியிலும், மே இரண்டாம் தேதியிலிருந்து இந்தியாவிலும் நடைபெறும். ஜூன் 1ஆம் தேதி வரை தொடரும் இந்த போட்டிகள் சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கடைசியாக வந்த கொல்கட்டா அணிக்கும் நடக்கும் முதல் போட்டியுடன் இன்று துவங்குகிறது. வழக்கம் போல் அறிமுக நாளன்று விழாவை 'சிறப்பிக்க' தீபிகா படுகோனே மற்றும் மாதுரி தீட்சித் போன்ற இளம் மங்கைகளின்(?!) நடனத்துடன் ஆரம்பமாக உள்ளது.. இந்த வருடம் அணிகளின் அணிவகுப்பை பார்ப்போமா?




மும்பை T20 அணி:


                  ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்க உள்ள அணியில் சச்சின் இல்லாதது அணிக்கு பின்னடைவு என்றாலும் "பொறுப்பு ஆட்டக்காரர்" மைக் ஹஸ்சி, கோரி ஆண்டர்சன் ஆகியோர் வந்திருப்பது புத்துணர்ச்சி தரும். ஹர்பஜன் மற்றும் ஓஜா சுழலை கவனிக்க, ஜாகீர், மலிங்கா வேகத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் : கோரி ஆண்டர்சன்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :  மலிங்கா, ரோஹித், பொல்லார்ட்


மொஹாலி T20 அணி:


                   பஞ்சாப் தன் பெயரை மாற்றிக் கொண்டதோடு புதுப்பொலிவுடனும் வருகிறது. விரேந்தர் சேவாக்கின் வருகை பலம் கொடுக்கலாம். ஜான்சன், பாலாஜி, அவானா, மேக்ஸ்வெல் பந்துவீச்சிலும், பெய்லி, மார்ஷ், புஜாரா பேட்டிங்கிலும் கைகொடுக்கலாம். சாவ்லாவை தவற விட்டது இவர்களுக்கு இழப்பாக இருக்கலாம்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :  ஹென்ட்ரிக்ஸ், பெய்லி, மில்லர்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :            ஷான் மார்ஷ், பெரேரா.


கொல்கட்டா T20 அணி:



                      கம்பீரின் தலைமையில் ஷாருக்கானின் கொல்கட்டா அணி சென்ற முறை படுதோல்வியை சந்தித்தது.. புதுவரவான பியுஷும் மார்னேவும் பலம் கொடுக்கலாம்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :  சுனில் நாராயண், க்றிஸ் லின்.
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :  ஷாகிப் அல் ஹசன், மார்னே மார்கல்


ஜெய்பூர் T20 அணி:


                   ராஜஸ்தான் அணியும் புதிய பெயருடன் களம் இறங்குகிறது. வழக்கம் போல் அதிகம் பிரபலம் இல்லாத அணி வாட்சன் தலைமையில் களமிறங்குகிறது. ஸ்டீவன் ஸ்மித் வழக்கம் போல் ஆல்'தோட்ட' பூபதியாக அதாங்க ஆல்ரவுண்டராக கலக்கலாம்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் : ஜேம்ஸ் பாக்னர்.
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :            வாட்சன், ரஹானே, சஞ்சு சாம்சன்


ஹைதிராபாத் T20 அணி:


                  ஷிகார் தவான் தலைமையில் களமிறங்கும் ஹைதிராபாத் அணி  ஆரன் பின்ச், தவான், வார்னரின் அதிரடியையும், டேல் ஸ்டைன், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சையும் நம்பி இருக்கிறது.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் : பர்வேஸ் ரசூல், ஜேசன் ஹோல்டர்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :           டேல் ஸ்டைன், வார்னர், சமி.


டெல்லி T20 அணி:



                    இம்முறை சரிவிகித பேட்ஸ்மேன் பவுலருடன் களமிறங்குகிறது டெல்லி அணி. ராஸ் டெய்லர், முரளி விஜய், சவ்ரவ் திவாரி, டுமினி, தினேஷ் கார்த்திக், ஷமி, பார்னல், ராகுல் ஷர்மா என நல்ல அணியாய் இருந்த போதிலும் வார்னர் மற்றும் சேவாக்கின் அதிரடியை இழந்தது மைனஸ் தான்.   கெவின் பீட்டர்சன் தலைமை தாங்குகிறார்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :  க்விண்டன் டீ காக்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :            பீட்டர்சன், டுமினி, டெய்லர், முரளி



சென்னை T20 அணி: 


                     தோனி தலைமையில் பலமுறை பைனல் சென்ற பலம் வாய்ந்த அணியாக இன்றும் தொடரும் சென்னை அணி அஷ்வின், பத்ரி, ஜடேஜா சுழலையும், ஹில்பானாஸ், பிராவோ, நெஹ்ரா, மோஹித் வேகத்திற்கும், பேட்டிங்கில் கலக்க டூப்லசி, மெக்கலம், ரெய்னா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.. ஆனாலும் 'அணி' சர்ச்சைகளில் சிக்கியதால் மனதளவில் வீரர்கள் சோர்ந்திருக்கலாம்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :  ஈஸ்வர் பாண்டே
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :            தோனி, டூப்லசி, அஷ்வின், ரெய்னா        


பெங்களூர் T20 அணி: 
   

                      'வருங்கால இந்திய கேப்டன்' விராட் கொஹ்லியின் தலைமையில் இந்த வருடமாவது கோப்பையை தட்டிச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. ரவி ராம்பால், மிச்சல் ஸ்டார்க், முரளிதரன், வருண் ஆரோன், அல்பி மார்கல்  என பவுலிங்கிலும், "அதிரடி மன்னன்" க்றிஸ் கெயில், டி வில்லியர்ஸ்,  விராட், பார்த்திவ் படேல் ஆகியோர் பேட்டிங்கிலும் கலக்க அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட யுவராஜ் சிங்கும் "சுழல் அரசன்" சுதீப் தியாகியும் அணிக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :   விஜய் ஜோல்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :             கெயில், விராட், ஏபிடி, முரளிதரன்



                             இந்த வருடமும் ஆவியின் பேவரைட் பெங்களூரு அணிதான்.. விராட்டுக்காக சப்போர்ட் செய்யத் தொடங்கி இன்று வலுவான அணியாக இருக்கிறது. உங்க சப்போர்ட் யாருக்குன்னு சொல்லுங்க..!



21 comments:

  1. எனக்கு விரிவாக அலசி கிரிக்கெட் டீமை சப்போர்ட் செய்கிற அளவுக்கு பொறுமையும் திறமையும் இல்லாத காரணத்தால் சிம்பிளாக நான் ஆவியை சப்போர்ட் செய்கிறேன். ஹி... ஹி...!

    ReplyDelete
  2. //சிம்பிளாக நான் ஆவியை சப்போர்ட் செய்கிறேன். ஹி... ஹி...!
    //
    எனக்கு IPL பிடிக்காது என்பதால் ஆவியையும் சேர்த்து ஸ்கிப் செய்கிறேன் :-)

    ReplyDelete
  3. Replies
    1. ஒக்கே.. அப்ப இப்போதைக்கு
      CSK - 1
      RCB - 2

      Delete
  4. வணக்கம் ஆ.வி.சார்!நலமா?///எனக்கும் பெரிதாக கிரிக்கட்டில் ஆர்வம் இல்லாததால்,'பால கணேஷ்' சாரை வழி மொழிவதுடன்,'சீனு' ஐயாவின் பின்னால் அணி திரள்கிறேன்,ஹ!ஹ!!ஹா!!ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
    Replies
    1. அலோ.. NOTA குரூப் எல்லாம் அலவ்ட் இல்ல பாஸு.. ஹஹஹா..

      Delete
  5. என்ன பாஸ்.... இப்போ IPLன்னா இந்திய பந்தயகார்கள் லீக்ன்னு அர்த்தமாமே.. CSKயா கூட சென்னை சூதாட்ட கழகம்ன்னு சொல்றாங்க...
    எவன் ஜெயிச்ச எனகென்ன பீலிங்க்ஸ்தான், நமக்கு கொஞ்சம் எண்டெர்டயின்மெண்ட் இருந்தா ஓகே...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்.. உங்கள அப்போ எந்த குரூப்ல சேத்தறது ?

      Delete
  6. கலக்கலான அலசல்! அணி அறிமுகம்! என்ன இருந்தாலும் சொந்த ஊரை விட்டுக்கொடுக்க மாட்டோம்! சென்னைதான் என் பேவரிட்!

    ReplyDelete
    Replies
    1. சொந்த ஊர்க்காரர் முரளி கார்த்திக், தினேஷ் கார்த்திக் எல்லாம் டெல்லிக்கு விளையாடராங்களே பாஸ்!

      இருந்தாலும் ஒக்கே..

      CSK - 2
      RCB - 2

      Delete
  7. Ena aanalum CSKA Tha always!! @:D csk 3/ rcb 2! Hahaha!!

    ReplyDelete
  8. சியர் கர்ல்ஸ் எல்லாம் சப்போர்ட் பண்ணக் கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. எந்த ஊர் சியர் கர்ல்ஸ் ன்னு சொல்லுங்க அப்போ?

      Delete
  9. யுவராஜ் சிங் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்பதே அவா...!

    ReplyDelete
    Replies
    1. உங்க அவா, முதல் போட்டியிலேயே நிறைவேறி விட்டது மன்னா!

      Delete
    2. அப்ப csk 3/ rcb 3!

      Delete
  10. அது என்ன வெறும் csk rcb மட்டும்... :)

    DD - 1 [தோற்றாலும் பரவாயில்லை! எங்க ஊர் அணிக்கு தான் சப்போர்ட்!]

    நான் திண்டுக்கல் தனபாலன் பற்றி இங்கே குறிப்பிட வில்லை என்று கொள்க!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails