தனுஷ் திரையுலகில் கால் செஞ்சுரி அடிக்கும் படம்.. "3" படத்திற்கு பிறகு தனுஷ்- அனிருத் காம்பினேஷனில் வந்திருக்கும் படம்.. Wunderbar Studio வெளியிட்டிருக்கும் இந்த ஆல்பத்தில் "Poetu" தனுஷே எல்லாப் பாடல்களையும் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது..
1. "வேலையில்லா பட்டதாரி" - அனிருத் மற்றும் அகிலன் இளங்கோவனின் குரல்களில் ஒலிக்கும் தீம் சாங், இப்படத்தின் டீசரில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது..
2. அனிருத் மற்றும் நூர் அஸ்வான் இணைந்து பாடியிருக்கும் சோகம் ப்ளஸ் குத்து "ஊதுங்கடா சங்கு" பாடல். இடையிடையே வணக்கம் சென்னை வாடை அடிக்கிறது. "Poetu" தனுஷுன் தத்துவப் பாடல் லிஸ்ட்டில் மற்றுமொரு பாட்டு.
3. "ஏய், இங்க பாரு" பாடல் பூமி என்ன சுத்துது பாடல் போலவே இருப்பதற்கு காரணம் அனிருத்தின் குரலா, இல்லை இசையா தெரியவில்லை.ரிப்பீட்டு!! படத்துடன் பார்க்கும் போது பிடிக்கலாம்.
4. "போ இன்று நீயாக" - மனதை மெஸ்மரைஸ் செய்யும் மெலடி வகையறா.. தான் எழுதிய காதல் ததும்பும் பாடலை தானே அனுபவித்துப் பாடியிருக்கிறார் பாடகர் தனுஷ். தன் சொந்த பேனர்களை தாண்டி மற்ற படங்களிலும் தாராளமாக பாடலாம்.
5. "அம்மா அம்மா" - தாயின் பிரிவை நினைத்து வருந்திப் பாடும் பாடலை உருகி உருகி பாடியிருக்கிறார் தனுஷ். நீண்ட இடைவெளிக்கு பின் எஸ்.ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடல் இதயத்தின் ஈரத்தை வழியச் செய்யும். தாய்-மகன் பாசத்தின் பேர் சொல்லும் பாடல்கள் வரிசையில் இதுவும் இருக்கும்.
சில பாடல்கள் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மெட்டை நினைவு படுத்துவது சலிப்பை ஏற்படுத்துகிறது. சொந்த தயாரிப்பு என்ற போதும் ஓரிரு பாடல்களை வளரும் கவிஞர்களுக்கு வாய்ப்பாய் கொடுக்கலாமே!! மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி சில பாடல்களில் அரியர் வைத்து பாஸ் செய்கிறார்..!!
விமர்சனம் நன்றாக இருக்கிறது! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களைக் கேட்டுப்பார்க்க வேன்டும்!
ReplyDeleteகேளுங்க அம்மா.. போ இன்று நீயாக பாடல் என் மனம் கவர்ந்த ஒன்று.. :)
Deleteபாஸ் செய்து என்ன பிரயோசனம் ?வேலைக் கிடைக்கலையே !
ReplyDeleteத ம 2
ஹஹஹா.. அதானே..
Deleteபாடல் கேட்டுப் பார்க்கிறேன் ஆவி.
ReplyDeleteகேட்டுட்டு சொல்லுங்க பாஸ்!
Deleteஇனிமேல் தான் கேட்க வேண்டும்...
ReplyDeleteநீங்கள் சொன்ன இரண்டு பாடல்களையும் நான் விரும்பிக் கேட்பதுண்டு.....
ReplyDelete//சில பாடல்கள் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மெட்டை நினைவு படுத்துவது சலிப்பை ஏற்படுத்துகிறது. //
ReplyDeleteசலிப்பை ஏற்படுத்துகிறது
"சில" வா !! ???
அந்த அம்மா பாட்டிலே ஜானகி அம்மா பாடுற முதல் வரி
கதையை ஒட்டி இருக்குமோ ?
சுப்பு தாத்தா.
வாங்க தாத்தா.. ரொம்ப நாள் ஆச்சு நம்ம பஸ்ஸில் ஏறி.. ரொம்ப பிஸியா?? :)
Deleteநன்றி நண்பரே
ReplyDeleteபாடல்களைக் கேட்கிறேன்
வணக்கம்,ஆ.வி சார்! நலமா?///ஓரிரு பாடல்களை வளரும் கவிஞர்களுக்கு வாய்ப்பாய் கொடுக்கலாமே!! ///அப்புடீன்னா.....தனுஷ் வளந்துட்டாரா?(இப்பவும் அதே ஒல்லிக் 'குச்சி' தானே?ஹி!ஹி!!ஹீ!!!)கிட்டும் போது,பாடல்களைக் கேட்டுப் பார்ப்போம்.பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஹஹஹா..அவர் ஒல்லி தான்.. ஆனா நான் சொன்னது வளரும் "கவிஞர்களுக்கு"
Deleteஹ!ஹ!!ஹா!!.......அவரும் வளரட்டும்,ஹி!ஹி!!ஹீ!!!
Deleteபகிர்வுக்கு நன்றி ஆவி!
ReplyDelete.பாட்டு விமர்சனம் பண்றவங்க பாட்டுப் பாடி தான் விமர்சனம் பண்ணனும் ......
ReplyDeleteஅதுக்கென்ன போட்டுடலாமே ..! (தளத்துக்கு வர்ற கொஞ்ச பேரையும் விரட்ட திட்டம் போடுராங்கடா.. உஷாரா இரு ஆவி!!)
Delete