Monday, April 14, 2014

விஷு...!

             
                          தமிழ்நாட்டில் "தமிழ்ப் புத்தாண்டு" கொண்டாடப்படுவது போலவே கேரளாவில் "விஷு" அல்லது "சித்ரக்கனி" கொண்டாடப் படும். மலையாளிகளின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. உலகெங்கும் வாழும் மலையாளிகள் யாவரும் விஷுவுக்கு முந்தைய தினம் எல்லா வகையான பழங்கள், புத்தாடைகள் எடுத்து கொண்டாட தயாராகுவர். விஷுவுக்கு முந்தைய நாள் இரவு வீட்டிற்கு பெரியவர் பழங்கள், தேங்காய், அரிசி, பருப்பு, புத்தாடைகள், பணம், காசு, தங்க நகைகள் இவற்றை ஒரு தட்டில் வைத்து குருவாயூரப்பன் படம் அல்லது சிலை முன்னே வைத்து விடுவார். (இதற்கு கனி ஒருக்குதல் என்று பெயர்).




                           மறுநாள் அதிகாலை ஒவ்வொருவராக கண் திறக்காமல் வந்து ஒருக்கப்பட்ட கனிகளின் முன் அமர்ந்து முதலில் கடவுளை காண வேண்டும். பின்னர் கண்ணாடியில் முகம் பார்த்து ஒவ்வொரு கனிகளையும் காண வேண்டும். இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் உண்ணக் கனிகளும், உடுக்க உடையும், செலவுக்கு பணமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இதற்கு "கனி காணுதல்" என்று பெயர். எல்லோரும் கனி கண்ட பிறகு வயதில் மூத்தவர்கள் இளையவர்களுக்கு தங்களால் இயன்ற பணத்தை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். இதற்கு "கைநீட்டம்" என்று கூறுவர். குழந்தைகள் ஆர்வமாக தங்களுக்கு கிடைக்கப் போகும் கைநீட்டத்தை எதிர்பார்த்திருப்பர். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதத்துடன் கைநீட்டமும் பெறுவர்.



                                பின்னர் குளித்துவிட்டு வந்து கடவுளைத் தொழுது பாடல் பாடியும், கதை சொல்லியும் களிப்பர். பழங்களில் பலாப்பழம், வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை பிரித்து உண்பர். பின் புத்தாடை உடுத்தி கோவில்களுக்கு சென்று அங்கே கிருஷ்ணனுக்கு வழிபாடுகள் நடத்தி அங்கே கொடுக்கப்படும் கைநீட்டத்தை பெற்று வருவார்கள். அன்றைய தினம் "விஷு சத்யா" எனப்படும் கேரள முறை உணவு பரிமாறப்படும். விஷுக்கஞ்சி அல்லது மாம்பழ புளிசேரி எனப்படும் உணவு வகைகள் அன்றைய சிறப்பு உணவாக இருக்கும். சில வீடுகளில் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவர்.


                                  பழங்களும், கனிக்கொன்னப் பூக்களும் அலங்கரிக்கும் திருநாளாம் விஷு தினத்தை உலகெங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள்..! உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்..!

               

33 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துகள் DD!

      Delete
  2. உளங்க கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  3. பாஸ் கோவை வந்து கை நீட்டுனா எம்புட்டு கொடுப்பீங்க..

    எனிவே விசு வாழ்த்துக்கள்

    ஆமா அரட்டை அரங்க விசுவா மக்கள் அரங்க விசுவா ( பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு ) :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க.. நீட்டமா ஒரு கை கொடுக்கறேன்..

      //அரட்டை அரங்க விசுவா / ஹஹஹா

      Delete
  4. தம ஒரு லக்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது /- :-)

    ReplyDelete
  5. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

      Delete
  6. நண்பரே! இனிய புத்தாண்டு/விஷு நல்வாழ்த்துக்கள்!

    விஷுக் கனி கண்டோ?!!!! கை நீட்டம் கிட்டியோ?!!!! நாங்க விஷுக் கனி கண்டு!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. ராவிலே கனி கண்டு.. அவிடேயும் யாவர்க்கும் எண்ட விஷு ஆஸம்ஷகல்..!

      Delete
  7. இனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. விஷுவை விஷுவலாய் கண்டு மகிழச் செய்த ஆவிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் !
    த ம 5

    ReplyDelete
  9. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்,ஆ.வி சார்!///ஹூம்..........நாங்க "தமிழன்" னு நினைச்சோம்!ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. பாஸு.. அமெரிக்காவ பத்தி கூட எழுதியிருக்கேன்.. அதுக்காக அமெரிக்கனா இருக்கனுமா என்ன? அதைப் பற்றி தெரிந்திருந்தால் போதாதா.. ஹஹஹா..

      Delete
    2. சும்மா கலாய்ச்சேன்,ஹ!ஹ!!ஹா!!!

      Delete
  10. விஷு'ன்ட அஸாம்ஷைகளானு!

    ReplyDelete
    Replies
    1. விஷு ஆஸம்ஷகள் பாஸு..

      Delete
  11. இனிய தமிழ்ப் புத்தாண்டு / விஷு நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஆவி!

    ReplyDelete
  14. விஷுவிற்காக ஒவ்வொரு வருடமும் கேரளத்து நண்பர்களிடம் வாழ்த்துக்கள் சொல்வதுண்டு. ஆனால் விஷு பற்றிய இத்தனை தகவல்களை இப்போது தான் அறிந்தேன். அறியச்செய்த உங்களுக்கு அன்பு நன்றியும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா!

      Delete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. எங்கள் வீட்டிலும் இந்த கனி ஒருக்குதல் உண்டு! :)

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஆவி.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...