Saturday, April 19, 2014

ஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்


இன்ட்ரோ  
                         நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலுவின் கம் பேக் மூவி. டிரெயிலர்கள் புலிகேசியை நினைவுபடுத்தும் காட்சிகளை காட்டிய காரணத்தால் கொஞ்சம் பயத்துடனே நுழையும் மக்களுக்கு தெனாலி ராமன் நிச்சயம் ரசிக்க வைத்தான் என்றே சொல்ல வேண்டும். சிறுவயதில் சிறுவர் மலரில் படித்து ரசித்த கதையை படமாக இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்த முயற்சிக்கு நிச்சயம் பாராட்ட வேண்டும்.



கதை         
                  முதல் காட்சியிலேயே சீன வணிகம் பண்ண ஒரு சப்பை மூக்கனும், மொக்கை பிகரும் (வில்லியாமாம்) தப்பு தப்பாய் தமிழ் பேசிக் கொண்டு வர நமக்கு எங்கே போரடிக்க வைத்துவிடுவார்களோ என கிலி பிடிக்க, அருமையான என்ட்ரியோடு கதைக்குள் நுழையும் தெனாலிராமன் படத்தை கடைசி வரைக்கும் கலகலப்போடு கொண்டு செல்கிறான். கதை மற்றும் காட்சிகள் எல்லாமே எண்பதுகளில் அல்லது அதற்கு முன்னால் பிறந்த எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

                   அப்பாவி மன்னனை ஏமாற்றும் அமைச்சர்கள், அவர்களிடமிருந்து மன்னனையும் நாட்டையும் தன் மதியால் எப்படி தெனாலி ராமன் காப்பாற்றுகிறான் என்பதே கதை. இதற்கு இடைச் செருகலாக அந்நிய நாட்டு வணிகம்,  மன்னனின் மகளுடன் காதல், காமெடி என பல அம்சங்களுடன் ஜொலிக்க வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கு தேவையான பல விஷயங்களை சொல்வதுடன் குழந்தைகளையும் களிப்படையச் செய்வான் இந்த தெனாலி ராமன்.
               

ஆக்க்ஷன் 
                      மன்னன் மற்றும் தெனாலிராமன் என இருவேடங்கள் வடிவேலுவுக்கு. இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் தனித்தனியே குணாதிசியங்களை சொல்லி அவற்றை கடைசி வரை உடல்மொழியிலும் காட்டியிருப்பது தேர்ந்த கலைஞனின் நடிப்பு. தன்னை கொலை செய்ய வந்தவனே அதை ஒப்புக் கொண்ட பின் அவரை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வரும் காட்சியில் இரண்டு கதாபாத்திரங்களும் போட்டி போட்டு நடித்திருக்கும். முதல் பாதியில் தெனாலியும் இரண்டாவது பாதியில் மன்னரும் முக்கியத்துவம் பெறுவதால் தான் டபுள் ஆக்ட் போட்டதற்கான காரணத்தை உணர்த்துகிறார்.

                       மீனாட்சி தீட்சித் நாயகி, அறிமுகக் காட்சியிலிருந்தே நமக்கும் அவரை பிடித்துப் போகிறது. படத்தில் சில இடங்களில் வசனங்கள் உதட்டசைவோடு ஒட்டாது போனாலும் தன் எக்ஸ்பிரஷன்கள் மூலம் நம்மை கவர்கிறார். மந்திரிகளாக வரும் எட்டு பேரில் (ஒருத்தர் முதல் காட்சியிலேயே இறந்து விடுகிறார்) ஒருவருக்கு கூட மூன்று நான்கு டயலாக்குகளுக்கு மேல் இல்லை.. சீனாக்காரி கொலை செய்யும் போது கூட நமக்கு காமெடியை தெரிகிறது ஏன்? மன்சூர், ராஜேஷ், ராதாரவி வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள். தேவதர்ஷினி நல்ல நடிப்பு.    
      
                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                           "ரம்பபபா" பாடலும் ஸ்ரேயா கோஷலின் "ஆணழகு" பாடலும் கேட்கும்படி இருக்கிறது.  ஆண்ட்ரியா பாடிய பாடலை கேட்க வந்த ரசிகர்கள் அது இல்லாதது கண்டு ஏமாந்து சென்றதாக சேதி. இசை இமான் அசத்தல். பீரியட் படத்துக்கான பீல் கொடுக்கறார். இயக்குனர் யுவராஜ் முந்தைய படம் போல் அல்லாமல் நன்றாக செய்திருக்கிறார்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                "ஆணழகு" பாடல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சி.. சம்மருக்கு குழந்தைகள் பார்த்து மகிழ நல்ல படம்.

                  Aavee's Comments - Intellectual !

36 comments:

 1. அண்ட்ரியா பாடலை கேட்கச்சென்ற ரசிகர் தாங்களோ..??!! நல்லதோர் விமர்சனம் :)

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. ரசிகர்களில் யானும் ஒருவன்..

   Delete
 2. மொத்தத்திலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்ன்னு சொல்றீங்க...

  ReplyDelete
  Replies
  1. ஆமா DD. ரசிச்சு பார்ப்பாங்க..

   Delete
 3. குழந்தைகளுக்குப் பிடிக்கும்னு ஆவி சொல்றதால எனக்கும் பிடிக்கும்னு புரிஞ்சுட்டுது, ஹி... ஹி... ஹி...

  ReplyDelete
  Replies
  1. பேர்லய "பால " இருக்கே பிடிக்காமல் போகுமா

   Delete
  2. இயற்கை அன்னை மடியில் நாம் எல்லோரும் குழந்தைகள் தானே..அவ்வ்வ்வ்.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.!

   Delete
 4. இதைவிடவும் இண்டெலக்சுவலா இருக்கும்னு நினைச்சேன்.. பார்க்கும் வாய்ப்பு அரிது தான் பாஸ்

  ReplyDelete
  Replies
  1. இல்லப்பா நல்லாயிருக்கு படம்.. பார்க்கலாம்..

   Delete
 5. படம் எப்படியிருந்தாலும் 'வடிவேலுவை நாங்கள் வரவேற்கிறோம்' என்பதைக் காட்ட படத்தை மக்கள் வெற்றி பெற வைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். படம் நன்றாகத்தான் இருக்கிறது என்ற உங்கள் வரிகள் சந்தோஷம் தருகின்றன.

  ReplyDelete
  Replies
  1. நான் குடும்பத்துடன் சென்றேன்.. யாரும் முகம் சுளிக்காமல் நகைச்சுவையை ரசித்துப் பார்த்தனர்.. எனக்கும் பிடித்தது.. திரும்ப வருவதற்கு ஒரு அருமையான படம் இது.. வடிவேலு ஜெயித்துவிட்டார்..

   Delete
  2. நான் குடும்பத்துடன் சென்றேன்.. யாரும் முகம் சுளிக்காமல் நகைச்சுவையை ரசித்துப் பார்த்தனர்.. எனக்கும் பிடித்தது.. திரும்ப வருவதற்கு ஒரு அருமையான படம் இது.. வடிவேலு ஜெயித்துவிட்டார்..

   Delete
 6. வணக்கம் ஆ.வி சார்!நலமா?///விமர்சனம் நன்று!இது வரை வந்த விமர்சனங்கள் பாசிட்டாகவே இருக்கின்றன.இங்கே ரிலீஸ் ஆகாததால்...................வெயிட்டிங் போர் நெட்!(Waiting For NET!!!)

  ReplyDelete
  Replies
  1. நலம் பாஸ். நீங்க எப்படி இருக்கீங்க..

   //ரிலீஸ் ஆகாததால்...................வெயிட்டிங் போர் நெட்//

   அப்ப ஒக்கே..

   Delete
  2. இப்போது தான் பார்த்தேன்,நன்று!இடைவேளைக்குப் பின் கொஞ்சம் தொய்வு இருந்து.விமர்சனம் நூற்றுக்கு நூறு விகிதம் சரியாக இருந்தது!///சம்மருக்கு குழந்தைகள்(கிளி) பார்த்து மகிழ நல்ல படம்.////கரெக்ட்!!!

   Delete
  3. உங்களுக்கும் பிடித்தது மிக்க மகிழ்ச்சி :)

   Delete
 7. இன்னாதான் ரீ என்ட்ரீ கொடுத்தாலும்

  மோடி வந்து இவரை ,மட்டும் பார்க்காம போயிட்டாரே அப்படின்னு

  மனசுக்குள்ள லேசா வருத்தமா கீது.

  அது சரி. மோகன் குமார் விமர்சனம் படிச்சீகளா ?

  ஹி இஸ் மோர் பாலன்ஸ்டு

  சுப்பு தாத்தா.
  www.wallposterwallposter.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. அவரு ஆவிய பார்க்க கோவை வந்தாரு.. ஆவி பிஸியா இருந்ததால விஜய பார்க்க வந்ததா சொல்லிட்டு போயிட்டார்.. பத்திரிக்கையும் அப்படியே எழுதிடுச்சு..

   மோகன் குமார் விமர்சனம் இன்னும் படிக்கல தாத்தா.. இப்போ படிச்சர்றேன்.. :)

   Delete
 8. ஆவி பாஸ்,

  படம் குழந்தைங்களுக்கு புடிக்கும் சரி ,அந்த குழந்தைங்களை கூப்பிட்டு போறவங்க கதி அவ்வ்!

  # தினத்தந்தி,மாலைமலர் ல எல்லாம் சினிமா விமர்சனம் என இப்படித்தான் எழுதுவாங்க,

  காமிரா கண்களுக்கு குளிர்ச்சி, இசை செவிக்கு இனிமை, நடிப்பு நவரசம் ,நாயகி அளவான கவர்ச்சியை(அளந்து பார்ப்பாங்களோ) தெவிட்டாமல் வழங்கியுள்ளார்,ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது ,மொத்தத்தில் குடும்பத்தினரோடு பார்க்கலாம் என முடிப்பார்கள்.

  இதை ஒரு படத்துக்கு மட்டுமில்லை எல்லா படத்துக்கும், அது எம்புட்டு மொக்கையா இருந்தாலும் எழுதுவாங்க அவ்வ்!

  பால கணேஷர் சரியாத்தான் முன்னர் சொல்லியிருக்காரு :-))
  --------------

  ReplyDelete
  Replies
  1. //இதை ஒரு படத்துக்கு மட்டுமில்லை எல்லா படத்துக்கும், அது எம்புட்டு மொக்கையா இருந்தாலும் எழுதுவாங்க அவ்வ்!//

   ஆமா பாஸ்.. இந்த பேப்பர் காரங்க எப்பவுமே எல்லா படமும் நல்லா இருக்குன்னு எழுதுவாங்க சுத்த மோசம்.. நம்மள மாதிரியா ;-) ;-)

   Delete
 9. குழந்தைகளை மட்டும் கவர்ந்தாலும் வடிவேலுவின் ரீ- எண்ட்ரிக்கு உதவிய வகையில் படம் சிறக்கட்டும்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. படம் பெரியவங்களும் பார்க்கலாம்..

   Delete
 10. நாளை படம் பார்க்க செல்கிறேன் நண்பா

  ReplyDelete
  Replies
  1. பார்த்துட்டு சொல்லுங்க.

   Delete
 11. கடந்த தேர்தலால் காணாமல் போனவர் ,இந்த தேர்தலின் போது ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார் ,அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் உச்சத்தைத் தொட்டு விடுவார் வடிவேலு !
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. ஆனால் படத்தில் அரசியல் பேச வாய்ப்பிருந்தும் அடக்கியே வாசித்திருக்கிறார்..

   Delete
 12. வடிவேலுவின் வரவு தொடரட்டும்
  மகிழ்ச்சி பிறக்கட்டும்
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, குழந்தைகளுக்கு நல்ல படம்.. பெரியவர்களும் பார்த்து ரசிக்கலாம்..

   Delete
 13. நல்ல விமர்சனம்...
  வைகைப் புயல் வரவு இனிதாகட்டும்...

  ReplyDelete
 14. இன்னும் பார்க்கவில்லை பார்க்கலாம் உங்கள் சிறப்பான பகிர்வு மூலம்

  ReplyDelete
 15. ஆணழகு பாடல் இப்பதான் கேட்டேன் அப்படியே மனசை அந்தபுரத்திற்கு திருப்பும் பாடல்...!

  பஹ்ரைனுக்கு படம் இன்னும் வரலை வந்ததும் பார்க்கனும்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பாருங்க அண்ணே!

   Delete
 16. நல்ல விமர்சனம்....

  நன்றி ஆவி. தமிழகம் வரும்போது தான் பார்க்க வேண்டும் போல!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...