Tuesday, April 22, 2014

சுராஜ் வெஞ்சாரமூடு..!

                 ஹலோ, ஹலோ..இப்ப எதுக்கு என்ன திட்ட வர்றீங்க.. அட நான் உங்கள திட்டலீங்க..சுராஜ் வெஞ்சாரமூடுங்கிறது ஒரு மலையாள நடிகரின் பெயர். இவர் காமெடி, குணச்சித்திரம், இப்ப ஹீரோன்னு கிட்டத்தட்ட எல்லா ரோலும் செய்யக் கூடிய திறமையான நடிகர். 2001 ல் காமெடியனா அறிமுகமான இவர் "சேதுராம அய்யர் CBI" படத்தில் மம்மூட்டியுடன் நடித்ததில் இருந்து பிரபலம் ஆனார். தொடர்ந்து ரசதந்திரம், கிளாஸ்மேட்ஸ், அரபிக்கதா, கேரளா கபே, வெறுதே ஒரு பார்யா போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.



                    இவர் காமெடியனாக நடித்த 'ராக் அண்ட் ரோல்' திரைப்படத்தில் வரும் P.P. ஷிஜு கதாப்பாத்திரத்தை ரசிக்காத மலையாளப் பட ரசிகர்களே இருக்க முடியாது எனலாம். காமெடி மட்டுமல்லாது குணச்சித்திர நடிப்பும் 'வாய்' வந்த கலை இவருக்கு. பெரும்பாலும் மம்மூட்டி, மோகன்லால் படங்களில் வரும்பொழுது இவர் கதாப்பாத்திரம் மிளர்வதை காணலாம். நூற்று எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர் சமீபத்தில் வெளியான  "பேரறியாத்தவர்"  படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கொடுக்கப் பட்டுள்ளது.

                       (இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு நேற்று துளசிதரன் அவர்களின் தளத்தில் வெளியான இந்த பதிவை படியுங்கள்.)

17 comments:

  1. // 'வாய்' வந்த கலை // சூப்பர்...!

    ReplyDelete
  2. மலையாளத் திரையுலகில் ஒருசில பிரபலங்களைத் தவிர மற்றவர்களைத் தெரியாத ‘இன்னோசன்ட்’ நான். இப்ப புதுசா ஒரு முக்கிய (முக்காத?) பிரமுகரைத் தெரிஞ்சுக்கிட்டேன். டாங்ஸுப்பா.

    ReplyDelete
    Replies
    1. இவர் படம் பார்த்தா உங்களுக்கும் புடிக்கும் பாஸ்..!

      Delete
  3. வணக்கம் ஆ.வி.சார்!நலமா?///போட்டோலையே சூப்பரா ஈக்காரு நயினா!ஒரு ப்ராப்ளத்த........ச்சீ.......ப்ரபலத்த அறிமுகம் செஞ்சிருக்கீங்கோ,டாங்ஸு!!!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. இதே மாதிரி நிறைய ப்ராப்ளத்த அறிமுகப்படுத்தர ப்ளான் இருக்கு, ஹிஹிஹி..

      Delete
  4. நேற்று துளசி தரன் பதிவை படித்தேன்! மலையாள பட நடிகர்கள் சிலரைத்தான் தெரியும். அறியாத முகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. நல்ல மூடு இருக்கும் போது சுராஜ் வெஞ்சாரமூடு காமெடியை ரசிக்கிறேன் !
    த ம +1

    ReplyDelete
  6. ஸ்டேஜ் புரோகிராம்களும் செம காமெடியாக இருக்கும், திறமையுள்ள நடிகர் மட்டும் இல்லை சிறந்த மிமிக்கிரி ஆசானும் ஆவார் இந்த சுராஜ், திருவனந்தபுரம் ஆள் !

    ReplyDelete
    Replies
    1. கேள்விப்பட்டிருக்கிறேன் அண்ணே..

      Delete
  7. பேர் கேட்டதும் டெர்ரராகிட்டேன். போட்டோ பாத்ததும் தான் அட, பாத்ருக்கோம்ன்னு தெரிஞ்சுது... நல்ல நடிகர்

    ReplyDelete
  8. அறியாத தகவல்கள்! அதுசரி ஆவி, கதாபாத்திரமா, கதாப்பாத்திரமா?

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வவ்.. ப்பா.. கண்டுபிடிச்சுட்டாரே..

      Delete
  9. சுராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.....

    நானும் அவருக்கு விருது கிடைப்பது பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails