Monday, April 21, 2014

ஆவி டாக்கீஸ் - வடகறி (Music)

                                       


                    தயாநிதி அழகிரியின் மீகா எண்டர்டெயின்மென்ட் வழங்கும் வடகறி.  ஜெய், சுவாதி நடிக்கும் இந்தப் படத்திற்கு இசை விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன். ( முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் வேறு படங்களில் பிஸியாக இருந்த காரணத்தால் ஒரு பாடலோடு இதிலிருந்து யுவன்ஷங்கர்ராஜா  விலகி விட்டது குறிப்பிடத்தக்கது)

1. ப்ரியா ஹிமேஷ், சத்யன் இணைந்து பாடியிருக்கும் டூயட்  " உயிரின் மேலொரு உயிர்வந்து கலந்தால்" பாடல். தனது வழக்கமான Genre அல்லாமல் மெலடியிலும் ரசிக்க வைக்கிறார் ப்ரியா. யுவனின் இன்னிசை நம்மை மெய்மறக்க வைக்கிறது.

2. "லோ-ஆனா லைப்" -  அனிருத் தன் இசையில் அல்லாது தன் நண்பர்களுக்காக பாடியிருக்கும் பாடல் இது.. பார்ட்டி சாங்காக வரும் இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவின் கவர்ந்திழுக்கும் குரல் பக்க பலமாக இருக்கிறது. திரையில் இந்த பாடலுக்கு தமிழில் முதல் முறையாக அறிமுகம் ஆகும் சன்னி லியோனின் நடனம் ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.

3. விஜயபிரகாஷ், மற்றும் சூப்பர் சிங்கர்ஸ்  அஜீஸ் மற்றும் திவாகர்  பாடியிருக்கும் "நெஞ்சுக்குள்ளே நீ"  உற்சாக மின்னல் வெட்டிச் செல்லும் பாடல். காதலியை கவர்ந்திழுக்க வேண்டி நாயகன் பாடும் பாடல் இது.

4. "உள்ளங்கையில் என்னை வைத்து" பாடல்  செல்பேசியை பயனுள்ள முறையில் பயன்படுத்த சொல்லி நம்மை பயமுறுத்தும் பாடல். சித்தார்த் மகாதேவன் தந்தை ஷங்கர் மகாதேவனை போலவே முயற்சித்திருக்கிறார். "அறிவியலை அழிவிற்கென மாற்றினாய்" போன்ற வரிகள் பாடல் வரிகளாய் இருந்தாலும் நிச்சயம் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும்  வரிகள்.

5. ஹீரோ ஹீரோயின் இல்லாம கூட படம் வரலாம். கானா பாலா பாடல் இல்லாத தமிழ்ப் படமா என்ற விதிக்கு இந்தப்படமும் விலக்கல்ல. "கேளுங்கண்ணே கேளுங்க" என வழக்கம்போல் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி கலந்து தத்துவங்களை பாட்டாய்ப்  படிக்கிறார்.

                              மொத்தத்தில் வடகறி காதுகளுக்கு விருந்தாய் அமைகிறது..

10 comments:

  1. என்னாய்யா பேரு இது... வடகறி! விட்டா ஊத்தப்பம். இடியாப்பம்னு கூட பேரு வெப்பாய்ங்க போலயே... செவிகளுக்கு விருந்தா...? தேவைப்படறப்போ இவைகளைப் போட்டு நிரப்பிக்கறேன். டாங்ஸுப்பா.

    ReplyDelete
    Replies
    1. வடகறி நான் அதிகமா வேற ஊர்கள்ல பார்த்தது இல்ல.. சென்னையில வாழ்ந்த நாட்கள்ல வடகறிய டேஸ்ட் பண்ணியிருக்கேன்.. ரொம்ப பிடிச்சது.. DD சொன்ன மாதிரி படம் வந்தப்புறம் பாருங்க கண்களுக்கும் விருந்து கேரண்டி.. ஹஹஹா :)

      Delete
  2. கண்களுக்கும் விருந்து என்று கேள்விப்பட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. அதான் சன்னி லியோன் பத்தி சொல்லியிருக்கேனே.. அப்புறம் கண்களின் விருந்துக்கு பஞ்சமா இருக்குமா என்ன? :)

      Delete
  3. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?நாங்க நலம்.///பாடல்களை விமர்சித்த விதம் அருமை!///அனிருத்&ஆண்ட்ரியா 'லிப்' பால பாடியிருக்காங்களா,பேஷ்!பேஷ்!!ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. //அனிருத்&ஆண்ட்ரியா 'லிப்' பால பாடியிருக்காங்களா// ஒரு கேள்விக்கு நாம ஆமான்னு சொல்லலாமா, இல்லைன்னு சொல்லணுமான்னு திணறுவோமே, அது மாதிரியான கேள்வி இது.. ஹஹஹா

      Delete
    2. ரிப்ளை...ரிப்ளை.....ஹி!ஹி!!ஹீ!!!

      Delete
  4. புதுப்பட பாடல்களை நிறைய தரவிறக்குவதில்லை! அவ்வப்போது கேட்பதோடு சரி! பார்ப்போம்! நன்றி!

    ReplyDelete
  5. Alteration - refreshing ஆ இருக்கு . Baner அ மட்டும் centre align பண்ணவும் .

    ReplyDelete
  6. கேட்டு பார்க்கறேன் ஆவி.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails