Thursday, April 17, 2014

ஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..




சூப்பர்ஸ்டார் 
(ந.மோ போயஸ் கார்டன் உள்ளே நுழைந்த பின்னர், நாம் ஸ்கூல் பையன் பிறந்த நாள் என்று சொன்னதும் நமக்கு கொடுத்த பேட்டி)

கண்ணா, நாம எவ்ளோ போஸ்ட் தேத்துறோம்ங்கறது முக்கியமில்ல. எவ்ளோ போஸ்ட்லே ஸ்கூல் பையன் மாதிரி பிரபலம் ஆகறோம்ங்கறது தான் முக்கியம். அவர் இந்தளவுக்கு வந்திருக்கார்னா அவரோட பேஷன், டெடிகேஷன், டிகாஷன் இதான் காரணம். நான் அரசியலுக்கு வர்றேனா இல்லையாங்கறது முக்கியமில்ல. ஆனா இவர் அரசியலுக்கு வந்தாச்சுன்னு சொன்னா நாடு நல்லா இருக்கும். அதனால இவருக்கே உங்க ஓட்ட, சாரி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்த சொல்லிக்கிறேன்..

கமலஹாசன் 
(உத்தம வில்லன் ஷூட்டிங்கிற்காக கிளம்பிக் கொண்டிருந்த சமயம் நமக்கு கொடுத்த பேட்டி)

வெல், நாம சின்ன வயசுல தெருவோரத்துல போகும் போது பார்த்திருப்போம். ஒரு சின்ன பையன் பின்னாடி ஸ்கூல் பேக்க மாட்டிகிட்டு சைடு சுவத்துல ஒட்டியிருக்கிற போஸ்டர பார்த்துக்கிட்டே போயிட்டு இருப்பான். அந்த பருவம் மீண்டும் நமக்கு வராதான்னு ஒவ்வொருத்தரும் ஆசைப்படுவோம். என்னால சினிமால இனி ஸ்கூல் பையனா நடிக்க வேணா முடியும். ஆனா நிஜ வாழ்க்கையில எப்பவுமே ஸ்கூல் பையனா இருக்கிறது இவரால மட்டும்தான் முடியும் .. இவருக்கு என் வாழ்த்துகளை சொல்லிக்கிறேன்..


கேப்டன்:
(ரகசியமாய் படமாக்கப்படும் கேப்டன் பிரபாகரன் பார்ட்-2 படப்பிடிப்பு தளத்திலிருந்து)


மக்கழே, பாகிஸ்தான் பார்டர்ல எவ்வளவோ தீவிரவாதிகள பார்த்திருக்கேன்.. சண்டையும் போட்டிருக்கேன். ஆனா மக்களுக்கு குரல் கொடுக்க ஒரு பேஸ்புக் ஐடி போதும்ன்னு புது டெக்னிக்க கண்டுபிடிச்ச நம்ம ஸ்கூல்பையன் தான். 


பவர்ஸ்டார் 

(வெட்டியாக இருந்த ஒரு பொழுதில்)

பார்க்க பார்க்க புடிக்கும் இந்த பவர, பேசாமலே புடிக்கும் இந்த ஸ்கூல. பியூச்சர்ல 'கூல்ஸ்டார் ஸ்கூல் பையன்னு' எனக்கு போட்டியா கூட வரலாம்..  
அவருக்கு எனக்கு சென்னையில் மட்டும் இருக்கும் கோடானு கொடி ரசிகர்கள் சார்பா வாழ்த்திக்கிறேன்..


T.R.
(வாலு பட ஆடியோ ரிலீஸுக்கு இவரை மேடையில் அழைத்துக் கொண்டிருக்க இவர் மேலே செல்லாமல் நமக்கு கொடுத்த பேட்டி)

பேருதான் ஸ்கூலு -இவரு பண்ற
சேட்டையெல்லாம் தூளு..
வெளியே போனா வைடு பாலு - நட்பில் சிக்சர்
அடிக்கும் போது கெய்லு 
ஆறடியில் ஓர் ஆளு - ஆனா மனசு தான்
கலக்காத பாலு..
மாரியம்மன் கோவில்ல ஊத்திடுவான் கூழு- தோனி போல
நம்மாளும் எப்பவுமே கூலு..
பல பேக் ஐடி வச்சிருக்கும் வாலு.. புள்ளகுட்டியோட
எப்பவும் நீ சந்தோசமா தான் வாழு..!

ஏ டண்டணக்கா டனக்குனக்கா..


ஒபாமா 
(ஆமா, அமெரிக்க அதிபரே தான்)

நான் போன தடவ இந்தியா வந்தப்ப தமிழ் கத்துகிட்டேன். ஸ்கூல் பையன் பதிவுகள நான் தவறாம படிப்பேன். பேஸ்புக்ல தினமும் அவர் போடுற கமெண்ட்ஸ்ல இருக்கிற வார்த்தைகள் ஒவ்வொண்ணும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கே தெரியாத வார்த்தைகள். அதை ஒரு உலக மொழியாக "ஸ்கூல் லேங்வேஜ்" ன்னு அன்னவுன்ஸ் பண்ணனும்னு ஐ.நா சபைய கேட்டுக்கறேன். ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஸ்கூல்பையன்..



ஸ்கூல் : தேங்க்யு ஒபாமா, தேங்க்யு..

திருமதி ஸ்கூல்: இன்னைக்குமா கனவோடவே எழுந்துக்கறீங்க.. ஹேப்பி பர்த்டே.. உங்களுக்கு வாழ்த்து சொல்ல பாலகணேஷ் சார், சீனு, ஆவி, அரசன், ரூபக் இன்னும் நிறைய பேர் வந்திருக்காங்க.. எழுந்திருங்க..




                                   ***************** x ****************


51 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்கூல் பையன்..

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு அழகான பதிவு எழுதி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஆவி....

      Delete
  2. ஏ டண்டணக்கா... சூப்பர் ஆவி!

    மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்.பை. சரவணன்! எல்லா நாளும் இனிதாய் அமைந்திட எல்லாம் வல்லவனை பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் ஸார்..

      Delete
    2. பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் அண்ணா...

      Delete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்.பை...

    ReplyDelete
  4. பள்ளிச் சிறுவனுக்கு வாழ்த்துச் சொல்ல பாங்கான முறையைக் கண்டுபிடித்தாய் ஆவி...! அண்ணன் டிஆரு சொன்ன வாழ்த்து ஜோரு. அன்பான ஸ்.பை.க்கு மனம் நிறைய மகிழ்ச்சியுடன் என் இனிய பிறந்ததின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாத்தியாரே!

      Delete
    2. ஆவி எப்படித்தான் யோசிச்சாரோ... வாழ்த்துக்களுக்கு நன்றி வாத்தியாரே....

      Delete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்கூல் பையன்.

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இஸ்கூலாரே... கலக்கல் பதிவு ஆவியாரே.. ரஜினி மற்றும் கமலகாசன் அட்டகாசம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு..

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சீனு...

      Delete
  7. பிறந்த நாள் வாழ்த்துகள்.சரி இன்னைக்கு ஸ்கூலுக்கு டும்மாவா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி அபயா அருணா மேடம்..... டும்மா எல்லாம் இல்லை, வழக்கம்போல் போய் வந்தாச்சு...

      Delete
  8. வரும் ஞாயிறு அன்று பதிவர்களுக்கு பலவகை பிரியாணி விருந்து படைக்க உள்ள ஸ்கூல் பையரை வாழ்த்தும் இந்த வேளையிலே..

    ReplyDelete
    Replies
    1. வரும் ஞாயிறா? படைச்சிருவோம்.....

      Delete
  9. நானும் வாழ்த்துக்கள் சொல்லிகிறேன் ஸ்பை

    ReplyDelete
  10. பிறந்த நாள் சிறப்பு வாழ்த்து வரும் ஓலையிலே
    அந்த பிரியாணியை நானும் சுவைக்க காத்திருக்கும் வேளையிலே...

    ReplyDelete
    Replies
    1. அட அட அட... எங்கிருந்துதான் இப்படிக் கவிதைகள் கொட்டுகின்றனவோ!!!

      Delete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்கூல் பையனுக்கு!!!///என்னைப் போல் ஒருவன்,பட் மாசம் தான் டிபரண்ட்!///திருமதி ஸ்கூல்: இன்னைக்குமா கனவோடவே எழுந்துக்கறீங்க.. ஹேப்பி பர்த்டே.. உங்களுக்கு வாழ்த்து சொல்ல பாலகணேஷ் சார், சீனு, ஆவி, அரசன், ரூபக் இன்னும் நிறைய பேர் வந்திருக்காங்க.. எழுந்திருங்க..
    ///என் பெயர் குறிப்பிடாமைக்கு 'திருமதி'க்கு வன்மையான கண்டனங்கள்,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. அண்ணே, முதல்லயே சொல்லியிருந்தா ஆவி உங்க பேரையும் சேர்த்திருப்பாரு.... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

      Delete
  12. நன்றி ஆ.வி சார்!(பேச்சு புக்கில இல்லாததால,எப்புடி வாழ்த்துறது ன்னு யோசிச்சிட்டிருந்தேன்,தாங்க்ஸ்!)

    ReplyDelete
    Replies
    1. ஆமா, இப்போ நீங்க ஏன் பேஸ்புக் பக்கம் வர்றதில்லை?

      Delete
    2. 'அது' கூட "டூ" விட்டுட்டேன்,ஹ!ஹ!!ஹா!!!

      Delete
  13. இந்தநாள் மற்ற எந்த நாளையும் விட ஸ்பெஷலாக அமையவும், அந்த ஸ்பெஷல் இனி வருடம் முழுதும் உங்கள் வாழ்வில் நிறைந்திடவும் வாழ்த்துகள் ஸ்பை!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்துக்கள் பலிக்கட்டும் ஸ்ரீராம் சார்.... மிக்க நன்றி....

      Delete
  14. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள், ஸ்கூல் பையனுக்கு. நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அம்மா...

      Delete
  15. இனிய் பிறந்த நாள் வாழ்த்துகள், ஸ்கூல் பையனுக்கு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அம்மா...

      Delete
  16. பிந்திய பிறந்த நாள் வாழ்த்து. நல்ல கற்பனை....பிரபலங்கள் வாழ்த்து. (came through FB)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றிங்க.. தொடர்ந்து வாங்க.. :)

      Delete
    2. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்....

      Delete
  17. /
    ஆரூர் மூனாApril 17, 2014 at 11:19 AM

    பிறந்த நாள் சிறப்பு வாழ்த்து வரும் ஓலையிலே
    அந்த பிரியாணியை நானும் சுவைக்க காத்திருக்கும் வேளையிலே.../

    அடிக்கு ஒரு கட் அவுட் வைப்போம் அண்ணா சாலையிலே.
    10 அண்டா பிரியாணியை கபளீகரம் செய்து பில்லை கட்டுவோம் ஸ்பை தலையிலே!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, ஒரு கூட்டமே கிளம்பிருச்சே....

      Delete
  18. பிளஸ்ஸில் வாழ்த்துச் சொல்லி விட்டேன்.மீண்டும் இங்கும் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? பிளஸ் பக்கம் போய் ரொம்ப நாளாச்சே சார்.. போய்ப் பார்க்கிறேன். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்....

      Delete
  19. வித்தியாசமான முறையில் ஒர் பிறந்த நாள் வாழ்த்து! நன்றி ஆவி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்.பை

    ReplyDelete
  20. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்...

      Delete
  21. உளங்கனிந்த வாழ்த்து! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா....

      Delete
  22. தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்கூல் பையன்..

    ReplyDelete
  23. உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்.பை (நேற்றே கூகுளில் சொல்லிவிட்டேன்...)

    ஆவி... பதிவு அருமை.

    ReplyDelete
    Replies
    1. கூகிளில் எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.... வாழ்த்துக்கு மிக்க நன்றி...

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...