Tuesday, April 15, 2014

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (திருட்டுக் கோழியின் சுவை) -16

முந்தைய பதிவுகளுக்கு...

                        "ஏண்டா அவதான் நம்ம கிளாஸ் செந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு?" என்ற பாஸ்கரின் கேள்வி மனதை என்னவோ செய்தது. அதற்கு மேல் அவனிடம் அதைப் பற்றி எதையும் கேட்கத் தோன்றவில்லை. திரைப்படம் காணக் கிளம்பிய போது மனதெங்கும் வியாபித்திருந்த உற்சாகம் இப்போது காணாமல் போயிருந்தது. நாமக்கல் குலோத்துங்கன் காம்ப்ளெக்ஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளே சென்றோம். என் மௌனத்தை பார்த்த பாஸ்கர் "ஏண்டா இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வர்றே" என்றான்.. "ஒண்ணுமில்லடா" என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் மௌனத்தை அணிந்து கொண்டேன். மனம் படத்தில் லயிக்கவே இல்லை. "ரமாவா இப்படி? மாலையில் சென்றவுடன் கேட்டுவிடலாமா? சேச்சே, அப்படி எதுவும் இருக்காது." என்று என் மனம் கேள்விகளையும் சமாதானங்களையும் மாறி மாறி கூறிக் கொண்டிருந்தது.

                         மாலையில் வண்டிகேட் வந்திறங்கியவுடன் பாஸ்கர் நித்ராவை பார்க்கச் சென்றான்.. ரமாவைப் பார்த்து உண்மையை அறிந்து கொள்ள மனம் விரும்பினாலும் அவளைப் பார்க்கும் துணிவு எனக்கு அப்போதைக்கு இல்லை. அசோகன் கடைக்கு சென்று இரவு உணவை முடித்து விட்டு திரும்பி வர வாயிலின் அருகே அன்பு நின்றிருந்தான். நான் சோர்வாக இருப்பதை பார்த்து "என்னடா டல்லா இருக்கே" என்றான். அவனிடம் எதுவும் கூறாமல் மாடிக்கு செல்ல என்னைப் பின்தொடர்ந்து வந்த அவன் "சார், சொல்ல மாட்டீங்களோ?" என்றான். யாரிடமாவது சொல்லித் தீர்க்க வேண்டும் என்றெண்ணிய மனது அவனிடம் முழுவதையும் கொட்டியது. அனைத்தையும் கேட்டுவிட்டு பொறுமையாக என்னைப் பார்த்து சிரித்தான். "லூசாடா நீ.. பாஸ்கர் சொன்னான்னு சொல்லி அந்தப் புள்ள மேல நீ சந்தேகப்படலாமா.. அப்படி எதுவும் இருக்கும்னு எனக்கு தோணலை. கண்டதையும் யோசிக்காமே போய் தூங்கு" என்று சமாதானப் படுத்தினான். கொஞ்சம் ஆறுதல் அடைந்தது மனது.

                           மறுதினம் விடுமுறையாதலால் காலையில் எழுந்து பல் துலக்கியபடியே காம்ப்ளெக்சின் பின்புறம் வந்த போது கவுண்டர் மோட்டரை ஆன் செய்திருந்தார். வழக்கமாக சனிக்கிழமைகளில் மதியம் தான் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவார்.. தண்ணீர் முதலில் ஒரு அகண்ட தொட்டியில் விழுந்து பின்னர் அங்கிருந்து தென்னை மற்றும் பிற வரப்புகளுக்கும் செல்லும். அந்த நேரத்தில் அந்த தொட்டியில் இறங்கிக் குளிக்க பெரும் போட்டியே நிகழும். கவுண்டரின் அந்த செயல் வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் அவரிடம் "ஓனர், என்ன இன்னைக்கு காலையிலையே தண்ணி விட்டுட்டீங்க." என்றேன்.. "அது ஒண்ணுமில்லப்பா, இன்னைக்கு வேலூர்ல ஒரு உறவுக்காரங்க கல்யாணம். அதான் இப்பதே தண்ணி காட்டிட்டு  போறேன்." என்று கூறிவிட்டுச் சென்றார். தொட்டியில் விழுந்த தண்ணீரை தொட்டுப் பார்த்தேன். குற்றால அருவியின் குளுமையை உணர்ந்தேன். உடனே சட்டையை கழட்டிவிட்டு பெர்முடாவுடன் தொட்டிக்குள் இறங்கினேன்.


                          அப்போது அந்த வழியாக வந்த அன்பு "என்னடா ஓனர் இந்நேரத்துலையே தண்ணி விடறாரு" என்றான். விஷயத்தை சொன்னதும் வேகமாக என்னருகே வந்த அவன் "அப்ப ஓனர் இன்னைக்கு வீட்டுல இருக்க மாட்டாரா? இந்த நாளுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்" என்றான். நான் ஒன்றும் புரியாமல் விழிக்கவே "ஓனர் கிளம்பினதும் அவரோட கோழிய ஆட்டைய போடறோம்" என்றான். "டேய், தெரிஞ்சுடுச்சுன்னா?" "நீ சொல்லாம இருந்தா சரி" என்று கூறிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.  அவன் சொன்னபடியே ஓனர் குடும்பத்துடன் புல்லட்டில் கிளம்பியதும் ஒரு பெரிய கூடையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழியை பிடித்து வந்தான். அதன் இரு கால்களையும் ஒரு சேரப் பிடித்து துவைக்கும் கல்லில் அதன் தலையை பலமாக மோதினான். பின்னர் விறுவிறுவென அதன் தலையை அறுத்து பின் தோலை உரித்தான்.. தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, கத்தி, பாத்திரம் போன்றவற்றை எடுத்துக் கொடுக்கும் எடுபுடி வேலை எனக்கு.

                            அன்புவுக்கு நன்றாக சமையல் வரும் என்று தெரியும். ஆனால் ஒரு முழு கோழியை பக்குவமாக சமைக்கும் கலையை கண்டு வியந்தேன். ஒரு பாதியை கரம் மசாலா தடவி பொரிப்பதற்கு வைத்துவிட்டு, மீதியை நான் அரிந்து கொடுத்த வெங்காயம் தக்காளியை எண்ணையில் வதக்கி பின் வெட்டி வைத்திருந்த கோழியையும் சேர்த்து வதக்கி, உப்பு மசாலா சேர்த்து கொஞ்சம் வதக்கிவிட்டு முக்கால் கிளாஸ் தண்ணீர் மட்டுமே விட்டான். பின் எனைப் பார்த்து "கோழி வேக வைக்கும் போது அதிலிருந்து தண்ணீர் சுரக்கும். அதனால நாம தண்ணி அதிகம் விடக்கூடாது" என்று சமையல் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தான். ஒரு மணி நேரத்தில் குழம்பு, சிக்கன் 65, சாதம் என எல்லாவற்றையும் தயார் செய்து விட்டான். சிக்கனை பார்த்ததும் எங்கிருந்துதான் அவ்வளவு பசி வந்ததென்று தெரியாது.. தட்டில் சுடுசோறும், மணக்கும் கோழிக்குழம்பும் அமிர்தம் என்பது என்னவென்று உணரச் செய்தது. காலையும் மதியமும் சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கும்போது கவுண்டர் புல்லட்டில் வரும் சப்தம் கேட்டது.
வயிற்றுக்குள் சென்ற சிக்கன் "பக் பக் பக் பக்" என்று கத்துவது போல் இருந்தது. அவர் வண்டியை நிறுத்தப் போகும்போது தான் கவனித்தேன். நாங்கள் உரித்த கோழியின் இறகு ஒன்று கவுண்டரின் வீட்டு வாசலில் கிடந்தது..


தொடரும்..


26 comments:

  1. Replies
    1. மீதி அடுத்த பாகத்தில்.. :) :)

      Delete
  2. அச்சச்சோ.... இது தப்பில்லையோ... ஓனர், பைக் என்று படித்ததும் அலைகள் ஓய்வதில்லை தியாகராஜன்தான் நினைவுக்கு வருகிறார்!

    ReplyDelete
    Replies
    1. தியாகராஜனா.. ஹஹஹா..

      Delete
    2. //இது தப்பில்லையோ...//

      கோழிக்கு மோட்சம் கொடுத்து சொர்க்கத்துக்கு அனுப்பி வச்சது எப்படி தப்பாகும்..விட்டா நீங்க எமதர்மராஜனையே வில்லன்னு சொல்லுவீங்க போலிருக்கே? ;-)

      Delete
  3. கோழித் திருட்டு வெளிப்பட்டதா இல்லையா,,,- வாட் எ சஸ்பென்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. ரசித்தமைக்கு நன்றி வாத்யாரே!

      Delete
  4. Replies
    1. வெயிட் எ மினிட் பார் பைவ் டேஸ்..!

      Delete
  5. பக் பக்... திக் திக்...

    என்னாச்சி - ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. காத்திருங்க..காத்திருங்க..

      Delete
  6. சுவாரசியமான எழுத்து. மௌனத்தை அணிந்து கொண்டேன்.. ரசித்தேன்.
    ஒரு மணி நேரத்தில் அத்தனை சமைக்க முடியுமா? கோழியை மசாலாவுல ஊற வைக்கவே அரை மணியாவும்னு சொல்வாங்களே?

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை சார் பாராட்டுறார்னா நிச்சயம் கொஞ்சமாவது நல்லா எழுதறேன்னு அர்த்தம்.. அடியேன் பாக்கியவான் ஆனேன்..

      Delete
    2. //கோழியை மசாலாவுல ஊற வைக்கவே அரை மணியாவும்னு சொல்வாங்களே?//

      ஒரு மணி நேரம் போதும் சார்.. அரை மணி நேரம் ஊர வைக்க.. ஊற வைக்கும் நேரத்தில் குழம்பை தயார் செய்து கொதிக்க விட வேண்டும்.. அதன் பின்னர் மசால் பிரட்டி ஊற வைத்த சிக்கனை பொறிக்க அரை மணி நேரம் அம்புட்டுதான்.. சோறு தனியா குக்கரில்.. அவ்வளவுதான், ஒரு மணி நேரத்தில் எல்லாம் ரெடி! :) :)

      Delete
  7. ஹா ஹா ஹா ஹையோ ஹையோ ம்ம்ம் சீக்கிரம் எழுதுங்கோ ன்னா :-)))

    ReplyDelete
    Replies
    1. பேஷா எழுதிருவோம்..

      Delete
  8. ஹையோ ஹையோ.................ஹ!ஹ!!ஹா!!...........கோழி முழுசா(?!)வெளியே வந்துடப் போகுது,ஜாக்கிரத!!!!!!!!!!!ஹி!ஹி!!ஹீ!!ஹே!ஹே!!ஹே!!!!!!!

    ReplyDelete
  9. அப்புறம் மாட்டினீங்களா இல்லையா? தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி நண்பா!

      Delete
  10. ஆஹா... கோழி பக் பக்குன்னு கத்துதே...
    அப்புறம் என்னாச்சு எங்களுக்கு பக் பக்...

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் பொறுத்திருங்க..

      Delete
  11. கோழியை துவைக்கும் கல்லில் அடித்து.... என்ன ஒரு கொல வெறி!

    உங்கள் வயிற்றில் இருந்து வந்த பக்..பக்..

    அடுத்தது என்ன... காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. Idhan thodarchi eludhavillayo?

    ReplyDelete
  13. Replies
    1. I'll try to finish after the "பிரேதம் பார்த்த ஞாபகம்" தொடர்.. :)

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...