Sunday, May 25, 2014

கோச்சடையான்- இந்திய அவதாரா?


            இந்தியாவில் முதல் முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துடன்  வந்திருக்கும் படம் கோச்சடையான். இதனை ஹாலிவுட்டின் சிறந்த  மோஷன் கேப்ச்சர் படமாக கருதப்படும் அவதாருடன் ஒப்பிடலாமா என்பதை பார்ப்போம்..              முதலில் அவதாருக்கும், கோச்சடையானுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடே சூப்பர்ஸ்டார் மற்றும் பிற தெரிந்த நடிகர் நடிகைகள். அவதாரை பொறுத்தவரை நாம் கற்பனையும் செய்து பார்த்திராத உருவ அமைப்புடைய மனிதர்கள் (?!), விலங்குகள், காடுகள், தாவரங்கள், பூக்கள் என எல்லாமே நாம் கிட்டத்தட்ட முதல்முறை பார்க்கக் கூடிய விஷயங்கள் தாம். ஆகையால் இவை இப்படித்தான் இருக்க முடியும் என்று நம் மனத்தால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் கோச்சடையானில் வரும் கதாப்பாத்திரங்களோ, அரண்மனைகளோ, போர்க்களங்களோ, விலங்குகளோ நாம் முன்னரே பார்த்து பழகி இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு உருவகம் பெற்றவை. அவற்றை தொழில் நுட்பத்தின் மூலம் உயிர்பிக்கும் பொழுது நம் மனது அதன் வித்தியாசங்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிறது.

              இரண்டாவது அவதாரை பொறுத்தவரை "மோஷன் கேப்சர்" (Motion Capture) தேவைப்படாத இடங்களில் நிஜ மனிதர்களை வைத்து தான் ஷூட் செய்திருப்பார்கள். நம்முடையது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவானது. இது அவசியம்தானா என்ற கேள்வி எழும் பொழுது ஆம் இல்லை என இரு பதில்களும் சொல்லத் தோன்றுகிறது. நாகேஷ் போன்ற ஒரு சிறந்த நடிகரை (நம்மிடையே இன்று இல்லாதவர்) படம் நெடுக பயணிக்க  வைத்திருக்க இது அவசியமாகிறது. தவிர ரஜினி நடனமாடும் காட்சிகள் சிறப்பானவை. அதற்காகவே இந்த தொழில்நுட்பத்திற்கு வரவேற்பு அளிக்கலாம். தவிர இந்த ஒரு படத்திற்காக கேப்சர் செய்யப்பட்ட ரஜினியின் அசைவுகளை இனி எவ்வளவு படங்களுக்கு வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ள முடியும். அதே சமயம் இவ்வளவு செலவு செய்ததற்கு இன்னும் கொஞ்சம் கூடப் போட்டிருந்தால் அழகான செட்டுகளில் அந்தக் கால "சந்திரலேகா" வாங்கிய பெயரை இந்தக் கோச்சடையானும் வாங்கியிருப்பான். இந்த கேலிக் கூத்துகள் அனைத்தும் ரஜினி படத்திற்கு வாழ்த்துகளாய் மாறியிருக்கும்.

             புராணக் கதைகள் தொலைக்காட்சித் தொடராகவே வந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் அவற்றை வித்தியாசமாக காட்ட நினைத்ததில் தவறில்லை. ஆனால் ஒரு படம் வெளியாகி அரை மணி நேரத்திற்குள் அது எந்த உலகப் படத்தின் தழுவல் என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் படம் பார்க்கும் திறன் வளர்ந்து விட்டது. அந்த ரசிகர்களின் ரசிப்புத் தன்மைக்கு தீனி போட நிச்சயம் மிரட்டலான டெக்னிக்கல் விஷயங்கள் இருக்க வேண்டும். அதற்கு கோடிகளை கொட்டத் தயாராக இருக்கும் புரோடக்க்ஷன் ஹவுஸ்கள் வேண்டும். அதுமட்டுமல்லாது வெளியாகின்ற திரைப்படங்களை குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்க்கும் பழக்கம் ரசிகர்களுக்கும் வர வேண்டும்.
               
              ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டும், நம்முடையதும் ஏணி கிரேன் வைத்தால் கூட எட்ட முடியாது.. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னதாக ஆயிரம் கொடி செலவில் அவதார் எடுக்கப்பட்டது. நம்மால் இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு வேண்டுமானால் அந்த பட்ஜெட்டில் எடுக்க வாய்ப்புண்டு. பட்ஜெட்டைப் பொறுத்து தான் இதுபோன்ற படங்களின் தரம் அமைகிறது. அவதாரில் வேலை செய்தவர்கள் உள்ளூர்வாசிகள்.. கோச்சடையானுக்காக வரவழைக்கப்பட்ட பெரும்பாலான டெக்னிக்கல் ஆசாமிகள் நம்ம ஊர் கிடையாது. தொழில்நுட்பம் வளர்ந்தால் மட்டும் போதாது. அதை நம்ம உள்ளூர் ஆசாமிகள வச்சு 'சிறப்பா' பயன்படுத்த முடியற காலத்துல தான் இதுபோன்ற படங்கள் வரலாம். அதுவரை எடுக்கப்படும் எல்லா முயற்சியும் ஆகச்சிறந்த கார்ட்டூன்களையே உருவாக்கும். ஒருபோதும் அவதார் போன்ற படங்களோடு போட்டிபோடக்கூடிய திறன் இருக்கப்போவதில்லை. அப்படி செய்வது உசேன் போல்ட்டுக்கும் உசிலை மணிக்கும் இடையே ஓட்டப்பந்தயம் வைக்க முயல்வது போன்றதாகும்..!


பி.கு:  அவதாருக்கும் கோச்சடையானுக்கும் பெருமை தரக் கூடிய ஒரு ஒற்றுமை.. இரண்டு படங்களையுமே முதல் முறை திரையரங்கில் பார்க்கும்போது கிளைமாக்ஸ் காட்சியில் நான் தூங்கிவிட்டேன்.. ஹிஹிஹிபடிக்க: ஆவி டாக்கீஸ் : கோச்சடையான் 

33 comments:

 1. அலசல் நல்லாருக்கு, கோச்சடையான் பார்த்தால்தான் தெரியும்.....

  ReplyDelete
  Replies
  1. நல்லாத்தான் இருக்கு.. பாருங்க..

   Delete
 2. அவதாருடன் ஒப்பிடுவதையெல்லாம் ஏற்றுகொள்ளவே முடியாது... அவதார் தொழில்நுட்பங்களை கையாள்வதில் பலம் தின்று கொட்டை போட்டு அந்தக் கொட்டையைக் கொண்டு மரம் வளர்த்த இயக்குனர் இயக்கிய படம்... இது அப்படி அல்ல... எனினும் இந்த முயற்சியை பாராட்டலாம்...

  அவதார் மிக நீள படம், எனக்கும் தூக்கம் வந்தது உண்மை... :-)

  ReplyDelete
  Replies
  1. //பலம் தின்று கொட்டை போட்டு அந்தக் கொட்டையைக் கொண்டு //
   பழம் ன்னு எழுதும் போதே தவறுதா.. சொல்லு ப..ய..ம் பயம்..

   Delete
 3. அம்பாஸடர் காரையும் ஆடி காரையும் ஒப்பிட்டுப் பாக்க ட்ரை பண்றே... அவங்களுக்கு இருக்கற மார்க்கெட் தமிழுக்கும் கிடைச்சா இங்க இன்னும் திறமைக்ள் மேம்பட வாய்ப்புண்டு. அதன் பின்னர் ஒப்பிடுதல் சாலச் சிறந்ததாக இருக்கும் ஐயா....

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊருக்கு அம்பசிடர் தானே இன்றும் பெருமை.. ஆனா படம் நம்ம ஊர் ஸ்கார்பியோ மாதிரி வந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்..

   Delete
 4. ஒப்பிடுதல் சமாச்சாரமே வேணாம் - எதிலும்...! க்கும்...!

  ReplyDelete
  Replies
  1. ஆமா dd.. அதான் சொல்லியிருந்தேனே உசேன் போல்ட்டுக்கும் உசிலை மணிக்கும் இடையே ஓட்டப்பந்தயம் வைக்க முயல்வது போன்றது என்று..! :)

   Delete
 5. படம் எப்படி இருக்குது ?
  நடிப்பு , ம்யூசிக், கதை , க்ளைமாக்ஸ் எல்லாம் எப்படி கீது ?
  காமெடி என்ன விசயம் ?

  ஒன்னுமே இல்லாம, விமர்சனம் டெக்னிகல் பத்தி மட்டுமே இருக்குதே.


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தாத்தா அது நேத்தே போட்டுட்டேன்.. லிங்க் இங்கே..
   http://www.kovaiaavee.com/2014/05/kochadaiyaan.html

   இது அவதாரோடான ஒரு ஒப்பீடு மட்டுமே..

   Delete
 6. இது ஒரு மகா அபத்தமான ஒப்பீடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
  அதுசரி, அவதார் படத்தின் கிளைமாக்ஸில் தூங்கிவிட்டதாக பெருமையுடன் சொல்கிறீர்கள். நான் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடமேஅதைச் செய்துவிட்டேன். எப்பூடி?

  ReplyDelete
  Replies
  1. // மகா அபத்தமான ஒப்பீடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. //
   பாஸ், அதைத்தான் நானே சொல்லிட்டேனே.. :)

   Delete
 7. //இவ்வளவு செலவு செய்ததற்கு இன்னும் கொஞ்சம் கூடப் போட்டிருந்தால் அழகான செட்டுகளில் அந்தக் கால "சந்திரலேகா" வாங்கிய பெயரை இந்தக் கோச்சடையானும் வாங்கியிருப்பான்.//...."உண்மைதான். ஆனால் இது முதல் முறையாக இருப்பதால் பணம் செலவழிக்க தயக்கம் இருந்திருக்கலாம்".

  ReplyDelete
  Replies
  1. ரஜினிங்கிற மாஸ்க்காக படம் சரித்திரம் காணாத வெற்றி பெற்றிருக்கும்.. வசூலும் கடல் கடந்தும் கிடைத்திருக்கும்..

   Delete
 8. க்ளைமாக்ஸில் தூங்கி விட்டேன்..... :)))))

  ReplyDelete
 9. வணக்கம்,ஆ.வி சார்!நலமா?///நானும் பார்த்தேன்.எ(உ)ங்களைப் போன்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.வயசானவங்க(?!) கமெண்டுக்கெல்லாம் அசராதீங்க.முதல் முயற்சிக்கு வாழ்த்துவோம்!

  ReplyDelete
  Replies
  1. அதானே வாழ்த்துவோம்!

   Delete
 10. எனக்கு படம் பிடித்திருந்தது..படம் நன்றாக தான் இருந்தது....

  // ஹாலியுட் படங்களின் பட்ஜெட்டுக்கும் , கோலியுட் பட்ஜெட்டுக்கும் கிரேன் வைத்தாலும் எட்டாது..
  நானும் இதையே தான் நினைச்சேன்....

  ReplyDelete
  Replies
  1. என் கருத்துடன் உங்க கருத்தும் ஒத்துப் போனது மகிழ்ச்சியே! :) வருகைக்கு நன்றிங்க..

   Delete
 11. அவதாரோட வெற்றிக்குக் காரணம் அதோட தொழில்நுட்பம்னா நினைக்கிறீங்க?

  ReplyDelete
  Replies
  1. பல காரணங்கள்ல அது ஒரு காரணம் மட்டும் தான்னு நினைக்கிறேன் சார்.. கேமரூன் நல்ல டைரக்டர்ன்னு தனக்கு கிடைச்ச பெயர தக்க வச்சுக்க வித்தியாசமான பரிட்சார்த்த முயற்சிகள்ல இறங்குபவர்..அவர் படங்களின் மேல் மக்களுக்கு இருந்த ஈர்ப்பு. இரண்டாவதா கற்பனையில் மட்டும் சிந்திக்கக் கூடிய ஒரு இரண்டாவது உலகத்தை மக்களுக்கு படைத்துக் காட்டியது, இதெல்லாமும் காரணம்னு நினைக்கிறேன் சார்..

   பர்சனலா எனக்கு அவதாரை விட கோச்சடையான் (அனிமேஷன் சங்கதி தவிர்த்து) பிடித்திருந்தது. இந்த தொழில்நுட்பத்தை தேவைக்கு மட்டும் உபயோகப் படுத்தி மற்ற இடங்களில் நிஜ மனிதர்களை ஷூட் செய்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

   Delete
 12. ஆவி.பாஸ்,

  இன்னும் கோச்சா பார்க்கலை ,ஆனால் பார்க்க வேண்டிய லிஸ்டில் இருக்கு.

  மோஷன் கேக்ப்சரில் தமிழில் முதல் படம் ,சூப்பர் ஸ்டார் என்ற இரண்டுக்காரணங்களுக்காகவே பார்க்கலாம்.

  மற்றபடி தரம் எல்லாம் ஒப்பிடவே கூடாது, நம்ம தரம் " கோலிவுட் தரம்" மட்டமா தான் இருக்கும் என்பதை ஏற்றே ஆகனும் அவ்வ்.

  #//இரண்டாவது அவதாரை பொறுத்தவரை "மோஷன் கேப்சர்" (Motion Capture) தேவைப்படாத இடங்களில் நிஜ மனிதர்களை வைத்து தான் ஷூட் செய்திருப்பார்கள். நம்முடையது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவானது. இது அவசியம்தானா என்ற கேள்வி எழும் பொழுது ஆம் இல்லை என இரு பதில்களும் சொல்லத் தோன்றுகிறது.//

  அவதார் "பெர்ஃபார்மன்ஸ் கேப்சர்" தொழில்நுட்பம், இது மோஷன் கேப்சர் ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு , சும்மா விளம்பரத்துக்காக அவதார் போலனு அவங்க தான் கிளப்பிவிடுறாங்கனா நீங்களும் அதே போல பேசிட்டு அவ்வ்.

  முழுக்க சிஜி அடிப்படையில் எடுப்பது தான் எளிது, நடுவே மனிதர்களையும் கலந்து எடுக்க ரொம்ப மெனக்கெடனும். ஒவ்வொரு ஃபிரெம் ஆங்கிள்,கோ ஆர்டினேட் என கவனிச்சு செய்யணும் , மோஷன் கண்ட்ரோல் ரிக் வச்சு தான் செய்யனும், அப்படி செய்யும் போது கேமரா மூவ் மெண்ட், அடுத்த காட்சி தொடர்ச்சி என மண்டை இடி கொடுக்கும்.

  # //தவிர இந்த ஒரு படத்திற்காக கேப்சர் செய்யப்பட்ட ரஜினியின் அசைவுகளை இனி எவ்வளவு படங்களுக்கு வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ள முடியும். //

  அப்படிலாம் செய்ய முடியாது, அப்படி செய்யனும் என்றால் "காட்சியில் மேட்ச்" செய்ய தலையால தண்ணிக்குடிக்கணும் அவ்வ்.

  3டி ஸ்கேன் இமேஜை செய்து உருவாக்கின "ஸ்கின்" ஐ தான் மீண்டும் பயன்ப்படுத்திக்கலாம்.

  #//அதே சமயம் இவ்வளவு செலவு செய்ததற்கு இன்னும் கொஞ்சம் கூடப் போட்டிருந்தால் அழகான செட்டுகளில் அந்தக் கால "சந்திரலேகா" வாங்கிய பெயரை இந்தக் கோச்சடையானும் வாங்கியிருப்பான்//

  இந்தப்படத்திற்கு அதிகம் செலவானது போல சொல்லிக்கொண்டாலும் , ஒரு அஜித்,விஜய் படம் அளவுக்கு கூட செலவே செய்யலை என்பது தான் உண்மை அவ்வ்.

  சூப்பர் ஸ்டார் பெயரை வச்சி "பிரமாண்டமாக்கிட்டாங்க"!!!

  அதனால் தான் கொஞ்சம் டல்லாக , மோசமாக காட்சிகள் வந்திருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால் சார், எங்கே ரொம்ப நாளா காணோம்?

   // தரம் எல்லாம் ஒப்பிடவே கூடாது, // நானும் அதே தான் சொல்லியிருக்கேன்..

   //அவதார் "பெர்ஃபார்மன்ஸ் கேப்சர்" தொழில்நுட்பம்,// மோஷன் கேப்சர் என்ற வார்த்தையை நான் முதன் முதலில் கேட்டது அவதார் பட ரிலீஸுக்கு அப்புறம் ஜேம்ஸ் கேமரூன் ஒரு பேட்டியில் சொல்லும்போது தான் தெரிஞ்சுகிட்டேன்.. அவர் motion capture மற்றும் performance capture வார்த்தைகளை மாறி மாறி உபயோகப்படுத்தினார்.

   Delete
  2. //முழுக்க சிஜி அடிப்படையில் எடுப்பது தான் எளிது, //

   உண்மை.. ஆயினும் அவதாரில் CG அல்லாத காட்சிகளும் உண்டு என்பதை தான் அங்கே குறிப்பிட்டிருந்தேன்..

   Delete
  3. //3டி ஸ்கேன் இமேஜை செய்து உருவாக்கின "ஸ்கின்" ஐ தான் மீண்டும் பயன்ப்படுத்திக்கலாம்.//

   ரஜினியுடைய மேனரிசங்களை பதிவு செய்துவிட்டால் மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பேட்டியில் பார்த்ததாக ஞாபகம்.. தவறிருப்பின் மன்னிச்சூ.. :)

   Delete
  4. //இன்னும் கோச்சா பார்க்கலை//
   //மோசமாக காட்சிகள் வந்திருக்கு.//

   மோசமாக வந்திருக்குன்னு எப்படி பாஸ் படம் பார்க்காமலே சொல்றீங்க.. என்னை பொறுத்தவரை காட்சிகள் மோசம் என்று சொல்லும் அளவிற்கு இல்லை. இன்னும் நல்லா வந்திருக்கலாமே என்று தான் சொல்வேன்.. ;-)

   Delete
 13. Well said வவ்வால். மேலே சொல்ல எதுவுமில்லை. இவ்வளவு விபரமாக சொல்லும் உங்களின் திறமை கண்டு வியப்பு ஏற்ப்படுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

  ReplyDelete
  Replies
  1. காரிகன், உங்களைப் போல் தான் நானும் அவர் திறமை கண்டு வியந்து போனேன்/போகிறேன்.. எல்லா ஏரியாவிலும் புகுந்து சிக்சர் அடிக்கக்கூடிய ஆசாமி..! :)

   Delete
 14. ஆவி பாஸ்,

  நமக்கு கருத்து சொல்ல எதாவது இருக்கும் போது தான் சொல்வது சும்மா ,நல்லப்பகிர்வு,த.ம.9 ன போட்டு செல்வதில்லை,அதான் அவப்போது வருகிறேன்.

  #அவதார் எடுத்த போது , பெர்பார்மன்ஸ் கேப்சரிங் என பேரு வைக்கலை, அதான் :-))

  மோஷன் கேப்சரிங்க்- உடல் அசைவுகளை மட்டும் கணினி உருவத்துக்கு இடம் மாற்றுவது.

  பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் - முக அசைவுகள்(எக்ஸ்பிரஷன்) சேர்த்து கணினி உருவத்துக்கு கொடுக்கப்பது.

  அவதார் படத்தில் முக அசைவுகளும் பயன்ப்படுத்தப்பட்டது,கோச்சாவில் அது இல்லை.

  # //ரஜினியுடைய மேனரிசங்களை பதிவு செய்துவிட்டால் மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பேட்டியில் பார்த்ததாக ஞாபகம்.. //

  வர்ச்சுவல் என்விரான்மெண்டில் தான் அசைவுகள் பயன்ப்படுது, மேலும் கூட இதற "ஆப்ஜெக்ட்ஸ்" வேற இருக்கும்,அதுக்கு ஏற்ப எடுத்த "மோஷன் கேப்சர்" ஃபைல் அதுக்கு தான் செட் ஆகும்.

  அதையே இன்னொரு வர்ச்சுவல் என்விரான்மெண்ட், வேற ஆப்ஜெக்ட்ஸ் உடன் பயன்ப்படுத்தினால் "கோ ஆர்டினேஷன்" இருக்காது,எனவே "மோஷன் கேப்சர் பாத் ஃபைல்" ஐ எக்ஸ்பாண்ட் செய்து எடிட் செய்யனும், அது " ரொம்ப நேரம் எடுக்கும்" வேலை, அதுக்கு பேசாம புதுசாவே "மோஷன் கேப்சர்" செய்துக்கொள்ளலாம்.

  எங்காவது ஒரு கேரக்டர் மட்டும் தனிச்சு வரும் காட்சிக்கு வேண்டுமானால் "பழைய மோஷன்" கேப்சர் பைலை பயன்ப்படுத்திக்கலாம்.

  உதாரணமாக ரஜினி மட்டும் நடந்து வரக்காட்சிக்கு பயன்ப்படுத்திக்கலாம், ஆனால் அதுவே டயலாக் உடன் இருந்தால் "மறுபடியும் லிப் சின்க்" மோகேப் தனியா சேர்க்கனும் என இடிக்கும். எனவே சின்னதா ஒரு காட்சியில் புகுத்திக்கலாம், பழைய அசைவுகளை வைச்சு பல படமெல்லாம் எடுக்க முடியாது.

  # இணையத்தில் இலவசமாக பல மோகேப் பைல்கள் கிடைக்குது , அதை தரவிறக்கி நாம செய்த 3டி மாடலுக்கு அப்ளை செய்து ஓட விடலாம், ஆனால் அதனை வச்சு "பெருசா" எதுவும் செய்ய முடியாது. நான் அது போல செய்து பார்த்திருக்கேன் , சரியாவ் வராது அவ்வ்.

  #//மோசமாக வந்திருக்குன்னு எப்படி பாஸ் படம் பார்க்காமலே சொல்றீங்க..//

  ஏன் பாஸ் இணையத்தில கொஞ்சம் கூட பார்க்காமலா இருப்பாங்க, தீபீகா படம் ஒன்னே போதும் ,,என்ன சொதப்பியிருக்குனு சொல்ல,கொஞ்சம் இந்த வேலை தெரியும் என்பதால் "சொதப்பினதை" புரிந்துக்கொள்ள முடியுது,அவ்ளொ தான்.

  தீபீகா வின் கை ,முகம்லாம் சூம்பினாப்போல இருக்கு,ஒரு உருவத்தின் பாடி ஸ்கேன் இமேஜின் "wire frame" இல் nurbs and curves இல் எடிட் செய்தாலே சரியாகிடும் என்ன கொஞ்சம் மெனக்கெடனும்,ஆனால் "raw 3d body scan" அப்படியே ரெண்டர் செய்தாப்போல உருவம் இருக்கு அவ்வ்.

  விரிவா ஒரு பதிவு வருது பாருங்க தெரியும்.

  --------------
  #//Well said வவ்வால். மேலே சொல்ல எதுவுமில்லை. இவ்வளவு விபரமாக சொல்லும் உங்களின் திறமை கண்டு வியப்பு ஏற்ப்படுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை.//

  காரிகன்,நன்றி!

  நாம எல்லாத்துலவும் கொஞ்சம் ஆர்வம் காட்டுறோம் அவ்ளோ தான்.

  ReplyDelete
  Replies
  1. //விரிவா ஒரு பதிவு வருது பாருங்க தெரியும்.//

   எழுதுங்க.. படிக்க ஆவலா இருக்கேன்.. எல்லாமும் புரியலேன்னாலும் சில கம்ப்யுட்டர் டேர்மனாலஜிகள் புரிஞ்சது.. நல்ல விளக்கம்.. நன்றி வவ்வால் அவர்களே!! :) :)

   Delete
 15. குழந்தையை ரஜினி எடுத்து கொஞ்சுவது போல் ஒரு காட்சி (பாடல்) தொலைக்காட்சியில் என் பொன்னு பார்த்துட்டு கொழந்த மாதிரியே இல்ல என்று சொல்கிறார். ஜனங்களோட ரசிப்பு தன்மை நுணுக்கமா மாறிக்கிட்டே வருது. ஏன் ஆங்கில அனிமேசனோட ஒப்பீடுன்னா வேற எதோட ஒப்பிட முடியும் ? Anastasia 1997 ல் வந்த படம் அதில ஏதுனா குறை கண்டுபிடிக்கமுடியுமா ? என்பது கஷ்டம் தான். தமிழில் இந்த முயற்சியை பாராட்டலாம். எனக்கென்னமோ முழுக்க முழுக்க அனிமேசனை தவிர்த்து மிக்ஸடா எடுத்திருக்கலாமோன்னு தோனுது.

  ReplyDelete
  Replies
  1. //முழுக்க முழுக்க அனிமேசனை தவிர்த்து மிக்ஸடா எடுத்திருக்கலாமோன்னு//
   அதான் அப்படி எடுக்கிறது ரொம்ப சிரமம்னு மேலே சொல்லியிருக்கார் படிக்கலையா நீங்க? :)

   // கொழந்த மாதிரியே இல்ல// உண்மைதான் கதாநாயகி முதற்கொண்டு நிறைய சொதப்பல்கள் உண்டு..

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...