இன்ட்ரோ
தமிழில், ஏன் இந்தியாவிலிலேயே முதன் முறையாக மோஷன் கேப்ச்சர் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம். பட்ஜெட் காரணங்களால் படம் துவங்கிய பத்து நிமிடத்திற்கு பொம்மைப் படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தாலும், ரஜினி அறிமுகத்திற்கு பிறகு டேக் ஆப் ஆகிறது. அதிலும் இரண்டாம் பாதியில் கோச்சடையானை மெய் மறந்து ரசிக்கையில் இது ஒரு அனிமேஷன் படம் என்பதையே மறந்து பார்க்க ஆரம்பிக்கிறோம்.
கதை
தன் தளபதியின் வளர்ச்சி பிடிக்காமல் அவர் ஒருமுறை செய்யும் தவறுக்காக சிரத்தை வெட்டிக் கொல்ல மன்னன் உத்தரவிட தன் இரு பாலகர்களின் முன்னிலையில் கொல்லப்படுகிறார். தந்தையின் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைத்து, எதிரியையும் வீழ்த்துவதே கதை. இதற்கிடையில் வழக்கம் போல் வில்லனின் மகளைக் காதலும் செய்கிறார். அம்புட்டுதான் மேட்டரு!
சூப்பர் ஸ்டாருக்கு இதில் கோச்சடையான் மற்றும் ராணா என இருவேடங்கள். கோச்சடையான் கதாப்பாத்திரத்தின் உடல்மொழி, உருவ அமைப்பு (ரஜினியை சிக்ஸ் பேக்குடன் காட்டி ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்கள்) ஆகியவை சிறப்பாக வந்திருக்கிறது. ராணா ஆரம்பத்தில் நம்முடன் ஓட்ட மறுத்தாலும் பின்னணியில் ஒலிக்கும் சூப்பர் ஸ்டாரின் குரலும், ராணாவின் ஸ்டைலும் நம்மை கதாப்பாத்திரங்களை வெறும் அனிமேஷன் பாத்திரமாக பார்க்க முடியவில்லை முடியவில்லை. நாகேஷ் கதாப்பாத்திரமும், அதற்கு பின்னணி குரல் கொடுத்தவரும் சிறப்பாய் செய்திருக்கிறார். ஷோபனா கதாப்பாத்திரமும் அவர் நடன அசைவுகளும் சூப்பர்.
சிறிதே ஆயினும் சரத்குமார் வரும் காட்சிகள் அருமை.. அவரது கணீர் குரல் இன்னும் வலிமையான வசனங்களுக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். தீபிகா படுகோனே கதாப்பாத்திரம் மட்டுமே படு திராபை.. அவர் வரும் காட்சிகள் எதுவுமே காதல் ரசம் பொங்கவில்லை.. இவ்வளவு செலவு செய்து எடுத்தவர்கள் கதாநாயகியின் உருவத்துக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். நடனம், சண்டை எல்லாம் ஐ-ரோபோ படத்தில் வரும் ரோபோட் போடும் சண்டையை நினைவுபடுத்தி செல்கிறது..
இசை-கதை-இயக்கம்
இசை ஏ.ஆர். ரகுமான். இது வேறு யாராவதாக இருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசனை கூட செய்ய முடியவில்லை. பாடல்கள் அருமை. பின்னணி இசை பிரமாதம். இதுபோன்ற படங்களில் பாடல் காட்சிகள் தேவையில்லை என்பது என் கருத்து.கதை, திரைக்கதை, வசனம் கே.எஸ். ரவிகுமார். செட் போட்டு எடுத்திருந்தால் செம்ம மாஸ் படமாக வந்திருக்க வேண்டியது. சௌந்தர்யாவின் ஆராய்ச்சிக்கு எலியாகி விட்டது.. சௌந்தர்யாவின் இயக்கம் முதல் மூன்று நிமிடத்தில் மட்டுமே தெரிகிறது.. (making of கோச்சடையான்)
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
"எங்கோ போகுதோ வானம்", "கர்ம வீரா" பாடல்கள் அருமை... சோட்டா பீம் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து கார்ட்டூன் ரசிகர்களையும் கவரும் இந்த கோச்சடையான்..
பி.கு: ஓரளவு எடுத்திருக்கும் அனிமேஷனையும் படு மோசமான டிரெயிலர் மூலம் ரிவர்ஸ் பப்ளிசிட்டி செய்ததை நம்பி படத்தை பார்க்காம இருந்திடாதீங்க.. முதியவர்கள் நாகேஷுக்காகவும், வயதானவர்கள் சூப்பர்-ஸ்டாருக்காகவும், இளைஞர்கள் ரகுமானுக்காகவும், குழந்தைகள் கார்ட்டூன் வகையறா என்பதற்காகவும் ஒரு தடவை பார்க்கலாம்..
//படு திராபை// யுவகிருஷ்ணா பதிவுகளை தொடர்ந்து வாசிக்க ஆரம்பிச்சாச்சோ ;-)
ReplyDeleteஇல்லையப்பா, இந்த வார்த்தை நம்ம வாத்தியார்ட்ட இருந்து சுட்டது..
Deleteஅந்த வார்த்தை யுவாவுக்கான காப்பிரைட்டா சீனு? ஹி,,, ஹி....
Deleteமற்றவர்கள் பதிவில் அது இயல்பாய் இருக்கும், யுவா பதிவில் அது அடிக்கடி எட்டிப்பார்ப்பது போன்ற உணர்வு... திராபையை அதிகமாய் கையாண்டிருப்பார் ( அல்லது) வாசித்த பதிவுகளில் எல்லாம் திராபை என்ற வார்த்தையைக் கண்டுள்ளேன்... :-)
Delete//Action மோஷன்// பார்ரா
ReplyDelete//Aavee's Comments - Costly KochaBheem!// பரவாயில்ல பொழச்சு போங்க... :-)
// பரவாயில்ல பொழச்சு போங்க... :-)/
Deleteஅப்படியே ஆகட்டுஞ் ஜாமி..
அம்புட்டுதான் மேட்டரா...?
ReplyDeleteஆமாங்கோவ்!
Deleteட்ரெய்லரை ஏன் அவ்வளவு கேவலமா விட்டாங்கன்னு எனக்கும் இன்னும் புரியலை. :)
ReplyDeleteகோச்சடையான் டான்சை போட்டிருக்கலாம்.. இல்லையா?
Deleteபடம் இன்னும் பார்க்கவில்லை பார்க்கலாம் என்றே தோன்றுகிறது...!
ReplyDeleteகண்டிப்பா பாருங்க அண்ணே!
Deleteமோஷன் கேப்சர் என்ற சொல்லே எனக்கு ஒரு மாதிரி இருக்கு ஆவி!
ReplyDeleteஆக்ஷன் அல்ல மோஷன் = அடப் பாரேன் மறுபடி மோஷன்!!!
//சௌந்தர்யாவின் ஆராய்ச்சிக்கு எலியாகி விட்டது.//
ஹா...ஹா..ஹா..
பார்க்கலாம் என்கிறீர்கள்! அவதார் என் கணினியில் இருந்தும் இதுவரை பார்க்கும் பொறுமை இருந்ததில்லை!
உண்மையை சொல்லணும்னா அவதார் எனக்கு முதல் முறை பார்த்த போது பிடிக்கவில்லை.. ஆனால் கோச்சடையான் முதல் பத்து நிமிடத்திற்கு பிறகு நம்மை நிமிர்ந்து உட்கார செய்கிறது..
Delete//மோஷன் கேப்சர் என்ற சொல்லே எனக்கு ஒரு மாதிரி இருக்கு //
Deleteநான் கூட முதல் முறை கேட்டு மூக்கை பிடிச்சுகிட்டேனாக்கும்!! ;)
முதியவர்கள் நாகேஷுக்காகவும், வயதானவர்கள் சூப்பர்-ஸ்டாருக்காகவும்/// ஏம்ப்பா ஆவி... முதியவர்கள்னாலும் வயதானவர்கள்னாலும் ஒண்ணு தானேய்யா...? அவ்வ்வ்.. பொம்மைப் படம் தான்னாலும் பாத்து வெக்கலாம்கறே... சரி...!
ReplyDeleteமுதியவர்கள் இன்னும் கொஞ்சம் வயசானவர்கள் (60+) எங்க அகராதிப்படி.ஹிஹிஹி..
Deleteகண்டிப்பா பாருங்க ஸார்..
mega beam என்றும் சொல்லலாம் போலிருக்கே !
ReplyDeleteத ம 6
ஹஹஹா.. நான் சொன்ன மாதிரியும் சொல்லலாம்.. நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்..
Deleteபார்க்க நினைத்திருக்கிறேன். தில்லி செல்வதற்குள் பார்க்க வேண்டும்... :)
ReplyDeleteஅப்படியா தமிழ்நாடு வந்திருக்கீங்களா?
Deleteபார்க்கிறேன் நண்பரே
ReplyDeleteபார்த்துட்டு சொல்லுங்க..
Deleteநீங்கள் பார்த்தால் நான் பார்த்த மாதிரி.
ReplyDeleteஹஹஹா.. பிரின்சிபால் சொன்னா சரியா தான் இருக்கும்.. :)
Deleteரஜினிக்காக பார்க்கிறவங்க வயசானவங்களா? ஆட்சேபிக்கிறேன்! ஹாஹாஹா!
ReplyDeleteஹஹஹா நானும் ரஜினிக்காக தான் பார்த்தேன் நண்பா.. :) :)
Delete