இன்ட்ரோ
ஒருமுறை நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறினார் ஒரு மொழியில் வெளிவந்து வெற்றிபெற்ற படத்தினை மற்றொரு மொழியில் ரீமேக் செய்யும் பொழுது அது ஒரிஜினலை போல் சிறப்பாக இருக்காது என்றார். அப்போது நான் அதை ஒத்துக் கொள்ளாமல் சிறப்பான நடிகர்களை தேர்வு செய்து நல்ல இயக்குனர் இயக்கினால் எல்லா படங்களுமே சிறந்த படங்களாக அமையும் என்றேன். ஆனால் தெலுங்கின் "மரியாத ராமண்ணா" படத்தின் ரீமேக்கான இந்த படம் அதன் ஒரிஜினலைப் போல அமையவில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுவிட்டேன்.
கதை
பல வருட குடும்பப் பகையை மனதில் கொண்டு நடக்கும் ஒரு பெரிய குடும்பத்தின் எதிரியாய் இருக்கும் ஒருவன் அந்த வீட்டின் உள்ளே தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ள அவனை கொல்ல அந்த வீட்டின் பெரியவரும் இரு மகன்களும் முயல, அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல முயலும் ஓர் அப்பாவி, அவனைக் காதலிக்கும் பெரியவரின் மகள் என சுழல்கிறது கதை. அவர்களிடமிருந்து ஹீரோ தப்பித்தானா, ஹீரோயினின் காதல் நிறைவேறியதா என்பதே கிளைமேக்ஸ்!
ஆக்க்ஷன்
சந்தானம் முதல் முறை ஹீரோவாக திரையில் அசத்துகிறார். காமெடியனாகவே பார்த்துவிட்டு இப்போது ஹீரோவாக (கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் டைப் ரோலில்) பார்க்கும் போது அவ்வளவாக ஈர்க்கவில்லை என்ற போதும் தன் வழக்கமான ஒன் லைனர்களால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். டான்ஸ் மூவ்மேண்டுகள் முயன்ற போதும் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் மிஸ்டர் நல்லதம்பி. முதல் பாதியில் வரும் ராஜகுமாரன் காமெடி அறுவையிலும் அறுவை.. பெரியவராக வரும் நடிகர் தெலுங்கிலும் தமிழிலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். (நல்லவேளை ஜெயப்பிரகாஷை போட்டு இந்த கதாப்பாத்திரத்தை கெடுக்கவில்லை)புதுமுகம் ஆஷ்னா ஐஸ்வர்யா ராயையும், தீபிகா படுகோனையும் கலந்து செய்த ஐந்தடி அழகுச் சிலை. அதிகம் நடிக்க வாய்ப்பில்லை என்ற போதும் இவர் வரும் காட்சிகள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சி.. தமிழ் பீல்டில் நிச்சயம் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கிறது. பவர் ஒரே ஒரு ஷாட் வந்த போதும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறார். முறைமாமனாக வரும் "சரவணன் மீனாட்சி" செந்தில் நிறைவான நடிப்பு. VTV கணேஷ் இரைச்சல் இல்லாமல் பேசி மனம் கவர்கிறார்.
இசை-இயக்கம்-தயாரிப்பு
இசை சித்தார்த் விபினின் கை வண்ணத்தில் சுமாராக வந்திருக்கிறது. இயக்குனர் ஸ்ரீநாத், ராஜமவுலியின் படத்தை இயக்க இன்னும் கொஞ்சம் ஹோம்ஒர்க் செய்திருக்கலாம். சந்தானத்தின் சொந்தப் தயாரிப்பு சம்மருக்கு கோச்சா பீமும் இல்லாததால் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்ய வாய்ப்பிருக்கிறது.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
"இவள் பார்வை மின்சாரம்" பாடல் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைத்த பாடல். "சிரிப்பே வரல" என்று சந்தானம் செந்திலிடம் சொல்லும் போது தியேட்டர் முழுக்க சிரிப்போ சிரிப்..
Aavee's Comments - Not so wise !
சந்தானம் ஹீரோவா பாஸா இல்லையா? இனி தொடர்ந்து அவர் ஹீரோவா, காமெடியனா? வடிவேலு வேற ரீ என்ட்ரி ஆயிட்டார்....
ReplyDeleteஇது முழுக்க முழுக்க காமெடி படம்ங்கறதால பெரிய வித்தியாசம் தெரியல. கொஞ்சம் டான்ஸ் இம்ப்ரூவ் பண்ணனும். அப்புறம் சீரியசான சீனில் சிரிக்கற மாதிரி முகபாவங்கள் தவிர்க்கணும்.. சிவா (தமிழ்ப்படம்) விட்ட இடத்தை இவர் பிடிச்சுக்கலாம்..
Deleteகாமேடியனாவும் தொடர்ந்து நடிப்பார் என்பது என் எண்ணம்.. அவர் புத்திசாலி..! ஹிஹிஹி..
Deleteகவுண்டமணி ஹீரோவாக தனது பாணியில் நடிச்சதை ரசித்ததை போல ரசிக்கலாம்ன்னு சொல்லுங்க.
ReplyDeleteகவுண்டர் அளவுக்கு வர முடியாதுண்ணே,..!
Deleteஹிஹி... சுமார்னு தோணுது.. இருந்தாலும் பாக்கறேன்..
ReplyDeleteமுடிஞ்சா தெலுங்கு படமும் பார்த்துட்டு சொல்லுங்க..
Deleteஇன்னாபா அக்குறும்பா கீது. ரசினி காமெடி பண்ணா சூப்பங்கறீங்க. சந்தானம் ஈரோவா நடிச்சா இன்னா தப்புன்றேன்? டிவில இந்தப் படத்தோட க்ளிப்பிங்ஸ் பாக்கச் சொல்லா நல்லாருக்கும் போலத்தான் கீது. தெலுங்குப் படம் பாக்க முடியாதவங்களுக்கு இது புடிக்கும்னு நெனக்கிறேன். கரீக்டாப்பா ஆவி?
ReplyDeleteம்ம்ம்.. சந்தானம் பேன்ஸ் க்கு கண்டிப்பா புடிக்கும். ஆனா சில இடங்கள்ல ஜவ்வு போல இழுக்குது.. மொத்தத்துல பார்த்தா ஒக்கே.. அதே ஸ்க்ரிப்ட கொஞ்சம் சந்தானம் ஒன்-லைனர்ஸ் மட்டும் சேர்த்துகிட்டு கலக்கியிருக்காங்க..
Deleteநடிகன்னா டான்ஸ், சீரியஸ் எமோஷன் எல்லாம் வேணும்னு நம்ம தமிழ் மக்கள் எதிர்பார்ப்பாங்களே, ரஜினி, தல விதிவிலக்கு.. மத்தவங்க எல்லாருமே டான்ஸ் ஆடியாகணுமே.. அதை மட்டும் வளர்த்துகிட்டா சந்தானம் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த ஹீரோவா ஜொலிக்க முடியும்.. :)
Deleteநேற்று இந்தப் படத்தைப் பற்றி சந்தானத்துடன் திரைப்பார்வை பார்த்தேன்... பேட்டி (பணிவுடன்) நன்றாகத்தான் இருந்தது... முதல் முறை ஹீரோ என்பதால் பார்க்க வேண்டும்...
ReplyDeleteகண்டிப்பா ரசிப்பீங்க DD.. ஆனா முதல்ல யாமிருக்க பயமே போங்க.. :)
Deleteடிவில போடும்போது பார்த்துக்குறேன் ஆவி!
ReplyDeleteசரிங்க அக்கா..
Deleteபடம் பற்றிய சில விமர்சனங்கள் படித்தேன். பார்க்கும் எண்ணமில்லை.....
ReplyDeleteஉங்கள் விமர்சனமும் நன்று.... நன்றி ஆவி.
ஹஹஹா.. டிவில போடும்போது பார்த்துக்கோங்க..
Deleteதங்கள் தள செய்திகள் அனைத்தும் அருமை tamilcinemafire.com
ReplyDeleteநன்றிங்க..
Delete