Wednesday, May 21, 2014

ஆவி டாக்கீஸ் - யான் (Music Review)

ஜீவா, துளசி நாயர் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் சோனி மியுசிக் நிறுவனம் "யான்" படப் பாடல்களை சமீபத்தில் வெளியிட்டது. 1. "நீ வந்து போனது" - கேகே, பாம்பே ஜெய்ஸ்ரீ மற்றும் NSK ரம்யா என்று பாடலுக்கு ஏற்ற குரல் தேர்வுடன் "ஓமகஸியா" டைப்பில் வரும் பாடல். தாமரையின் தித்திக்கும் தமிழ் வார்த்தைகளும் இடையிடையே 'ஹம்மிங்' செய்து போகும் மேகாவின் ஷார்ப்பான வாய்ஸும் பாடலுக்கு அழகு சேர்க்கிறது.

2. "ஹே லம்பா லம்பா" - மறைந்த வாலிபக் கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலை துள்ளலுடன் பாடியிருப்பது தேவன் ஏகாம்பரம் மற்றும் திவ்யா விஜய். தனக்கு பிடித்த பெண்ணை தங்கலீஷில் உருவகப்படுத்தி பாடும் பாடல். 

3. இசையுலகின் "பவர்ஸ்டார்" கானாபாலா பாடியிருக்கும் "ஆத்தங்கரை ஓரத்தில்" பாடல் ஒரு நல்ல முயற்சி. காதலில் பாதிக்கப்பட்ட ஒருவனின் புலம்பலை செம்ம ஜாலியாக "RAP" ஸ்டைலில் சொல்லியிருப்பது புதுமை. கபிலனின் வரிகளும், காதுக்குள் இங்கிட்டும் அங்கிட்டும் மாறி மாறி ஒலிக்கும் ஹாரிஸின் இசையும்  பாடலை தாளம்போட்டு ரசிக்க வைக்கிறது.

              " அந்த வெண்ணிலாக்குள்ளே ஆயா சுட்ட வடகறி நீதானோ"  என்று காதலியை வர்ணித்து பாடும் வரிகள் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்.
                 
4.  "நெஞ்சே நெஞ்சே" - உன்னிகிருஷ்ணன் பாடியிருக்கும் இன்னிசை தாலாட்டு. காதல் தேசம் படத்தில் வரும் "தென்றலே" பாடலின் தாக்கம் ஆங்காங்கே தெரிந்த போதும் மனதிற்கு இதமாக இருக்கிறது.. சின்ன போர்ஷன் என்ற போதும் சின்மயியின் குரல் பாடலை முழுமையடையச் செய்கிறது. கண்களை மூடி ரசித்து கேட்க இதமான பாடல்.

5.  சின்மயி, அர்ஜுன் மேனன் பாடியிருக்கும் டூயட்  "லட்சம் கலோரி". இனி கொஞ்ச நாட்கள் பண்பலைகளில் முதலிடம் பிடிக்கப் போகும் பாடல்.

                           "ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்கள் 
                      ஒன்றாகவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
                      நியுரான்களும் சிணுங்கும், புரோட்டான்களும் மயங்கும் 
                      என் பெண்மையும் கிறங்கும் நீ முத்த வார்த்தை பேசினாலே"
                
         போன்ற பா.விஜயின் வரிகள் காதல் ரசம் சொட்டும் அவதானிப்புகள்.


                 இந்த முறை முந்தைய பாடல்களின் வாசனை அதிகம் வராமல் பார்த்துக் கொண்டதற்காகவே ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு சபாஷ் போடலாம். மொத்தத்தில் யான் - தேனிசை மழையான்.

7 comments:

 1. கேட்டுப் பாக்கிறேன் ஆவி.

  ReplyDelete
 2. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///'பாடல்' கள் விமர்சனம் நன்று!பாடல் "கள்" நன்றாக உள்ளனவா என்று கேட்டுப் பார்க்க வேண்டும்,ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சே நெஞ்சே பாடல் சூப்பர்.. மற்றவை ஓரிரு முறை கேட்டபின் பிடிக்கிறது..

   Delete
 3. நிறைய புதிய பட பாடல்களை கேட்கவே இல்லை! இந்த படப்பாடல்களையாவது டவுன்லோட் செய்து கேட்க வேண்டும்.நன்றி!

  ReplyDelete
 4. ஹே லம்பா லம்பா - ரசிக்க வேண்டும்...

  ReplyDelete
 5. அந்த தேனிசை பாடலை கேட்டுருவோம்.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails