Sunday, May 11, 2014

ஆவி டாக்கீஸ் - யாமிருக்க பயமே!


இன்ட்ரோ  
                 திகில் படங்களில் காமெடி என்பது அந்த படத்தின் ஒரு மிகப் பெரிய வேகத்தடையாய் அமைந்து விடுவது உண்டு. ஆனால் இந்த யாமிருக்க பயமே படத்தில் திகிலை சிரிக்கச் சிரிக்க ஊட்டியிருக்கிறார்கள்.



கதை         
               
                  கடனில் மூழ்கி அவதிப்படும் நாயகனுக்கு என்றோ தொலைந்து போன  தன் தந்தை வழி ஒரு சொத்து கிடைக்கிறது. அந்த பங்களாவிற்கு நாயகியுடன் வரும் அவன் அதை ஒரு ஹோட்டலாக மாற்றி புதுப்பிக்கிறான். உடன் ஒரு மேனேஜரும், அவன் தங்கை சமையல்காரியும்.  அந்த ஹோட்டலில் தங்க வரும் ஒவ்வொரு விருந்தாளிகளும் இறந்து போக ஹோட்டலுக்கு வெளியே மேனேஜரின் உதவியுடன் புதைக்கிறான் நாயகன். யாரோ தன் சொத்தை கொள்ளையடிக்க வேண்டி இதுபோல் செய்வதாக நினைக்கிறான்.

                    ஒரு கட்டத்தில் புதைத்த பிணங்களை தோண்டிப் பார்க்கையில் அங்கே பிணங்கள் மிஸ்ஸிங். அதிர்ச்சியில் உறையும் நாயகன் அண்ட் கோ விற்கு இரண்டாம் பாதியில் பிரைட் ரைஸ் திருடன் மூலம் விடை கிடைக்கிறது. ஆனால் அந்த பங்களாவின் மர்மம் தொடர்ந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நாயகனின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படுகிறது. அந்த மர்ம பங்களாவிலிருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.

ஆக்க்ஷன் 
                       கிருஷ்ணா ஆக்க்ஷன், காமெடி, ரோமென்ஸ் என எல்லா ஏரியாவிலும் புகுந்து சிக்சர் அடிக்கிறார். இரண்டாம் பாதியில் பேயிடம் மாட்டிக் கொள்ளும் இடங்களில் கண்ணில் நீர் வர சிரிக்க வைக்கிறார்.  ரூப மஞ்சரி கிருஷ்ணாவின் காதலி, சரளமான நடிப்பு. பயம் கலந்த பார்வையில் இவர் பார்க்கும் போது மனம் கவர்கிறார். கொஞ்சம் மேக்கப் போட்டு வயதான லுக்கை தவிர்த்திருக்கலாம். கவர்ச்சிக்கு ஓவியா, சமையல்காரி வேடம் தன் பங்கை சிறப்பாய் செய்திருக்கிறார்.

                           சூதுகவ்வும் புகழ் "கருணாகரன்" மேனேஜராக வந்து முதல் பாதியில் எல்லோருடைய சந்தேகத்திற்கும் ஆளாகிறார். நல்ல உடல்மொழி மற்றும் டயலாக் டெலிவரி.  அறிமுகம் ஆதவ் கண்ணதாசன் சின்ன கேரக்டர் என்ற போதும் நன்றாக செய்திருக்கிறார். அனஸ்வரா அழகுப் பெட்டகம். கிளைமாக்ஸில் மஞ்சள் நிற தேவதையாய் வந்து போகிறார். மனசிலும் சிம்மாசனம் போட்டு அமர்கிறார்.          

                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                           பிரசாத்தின் இசையில் பாடல்கள் சுமார். எல்ரெட் குமார் தயாரிப்பில் திகில் பறக்கும் படத்தை நகைச்சுவையோடு இயக்கியது டீகே. முதல் அரை மணி நேரம் கொஞ்சம் போர் அடித்த போதும் ஜாலி த்ரில்லர். சந்தானத்திற்கு சரியான போட்டி கொடுக்க கூடிய படம். கோச்சடையான் பின்வாங்க ஒருவேளை இந்தப் படங்கள் தான் காரணமாக இருக்குமோ என்று ஒரு சிலர் சந்தேகம் கொண்டதாக கேள்வி.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                               மிரட்டல் த்ரில்லரில் வரும் எல்லா காமெடிகளும் ரசித்து சிரிக்க வைக்கிறது.. குழந்தைகளும் பார்த்து ரசிக்க கூடிய பேய்ப்படம் இது..!

                  Aavee's Comments - Scarily Funny !

31 comments:

  1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு பயம் இல்லீங்க.. ஹஹஹா

      Delete
  2. எனக்குத்தான் முதல் வடை .........

    சரி படத்துக்கு வாறன் ...


    சிரிக்க சிரிக்க திரில் படமா ....

    உங்களை நம்பி பார்க்கலாம் தானே

    ReplyDelete
    Replies
    1. வடை, போண்டா எல்லாம் உங்களுக்குத்தான்.. ஹஹஹா..

      ஆமாங்க.. ஜாலியா போகுது படம். பார்த்து ரசிக்கலாம்.. ஆவி கேரண்டி உண்டு..

      Delete
  3. ஆவி எப்படினாலும் இந்தப் படம் விசய் டிவி ல போட்டுடுவாங்க கூடிய சீக்கிரம் பார்த்து விடுவேன்ன்னு நம்புறேன்

    ReplyDelete
    Replies
    1. டிவில பாக்கறதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?

      Delete
  4. ஆவி சொன்ன பின் பொழுது போக்க நேரம் ஒதுக்கி பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க பாஸ்,

      Delete
  5. ஆவி எப்படினாலும் இந்தப் படம் விசய் டிவி ல போட்டுடுவாங்க கூடிய சீக்கிரம் பார்த்து விடுவேன்ன்னு நம்புறேன்//நெட்டில் வந்து விடும் கவலை வேண்டாம் கலை!ஹாஹ்ஹ்ஹா

    ReplyDelete
  6. சோகக் கதை எழுதினாலும் அதுல ஹ்யூம்ர் இருக்கணும்னு எதிர்பாக்கற ஆள் நான். எனக்கு இந்தப் படம் புடிக்கும்னு நல்லாவே தெரியுது. அவசியம் பார்த்துடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. முதல் அரை மணி நேரம் கொஞ்சம் டல்.. ஆனாலும் அதுதான் பின் பகுதிய தூக்கி நிறுத்துது..

      Delete
  7. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு முன் இதை பார்த்து விடுகிறோம்... ஏனென்றால் குழந்தைகளுடன் பார்க்கலாமே... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமா DD.. குழந்தைகளும் ரசிச்சு பார்த்தாங்க எங்க தியேட்டர்ல..

      Delete
  8. திகில் கதையை காமெடியா சொல்லும் படம்னா முனி, காஞ்சனா - இதைச் சொல்லலாம். கலகலன்னு சிரிச்சிக்கிட்டே பாக்கலாம்னா பாத்திருவோம்...

    ReplyDelete
    Replies
    1. முனி, காஞ்சனா கூட பேய் வரும்போது கொஞ்சம் சீரியஸா காட்டியிருப்பாங்க.. ஆனா இங்க பேய் வரும்போதுதான் காமெடியே.. படம் பார்த்துட்டு சொல்லுங்க ஸ்பை..

      Delete
  9. வணக்கம்,ஆ.வி சார்!நலமா?//இந்தப் படத்த யாருடைய விமர்சனமும் பாக்காம/படிக்காம பாக்கணும் னு நெனைச்சு,நேத்திக்கு வந்த உங்க விமர்சனத்தைப் படிக்காம,நைட்டு பாத்தேன்.உங்க விமர்சனம் கரெக்ட்!('நெட்'டுல தாங்க பாத்தேன்,இந்த மாதிரி 'நல்ல' படங்கள் இங்க தியேட்டர்ல ரிலீஸ் ஆவுறதில்ல!)

    ReplyDelete
  10. கோவை ஆவி said ;குழந்தைகளும் ரசிச்சு பார்த்தாங்க "எங்க தியேட்டர்"ல..///தியேட்டர் பேர் சொல்லுங்க!:) :)

    ReplyDelete
    Replies
    1. //தியேட்டர் பேர் சொல்லுங்க!:) :)// ஆவி டாக்கீஸ் ஹஹஹ்ஹா.. தப்பிச்சுட்டோம்ல..

      Delete
    2. அண்ணே............காலக் காட்டுங்கண்ணே!இல்லேன்னா,கைய காலா நெனைச்சுக்குவேன்,ஹ!ஹ!!ஹா!!!

      Delete
  11. ஆவி பாஸ் உண்மைய சொல்லனும்னா மொதல்ல நீங்க வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்கு final பஞ்ச் என்ன எழுதியிருக்கீங்கன்னு பார்த்தேன். நல்லவேள மோசம்ன்னு எழுதி இருந்தீங்க. படம் பார்த்ததும் நானும் சேம் பீலிங்.. அப்புறமா final பஞ்ச் என்னன்னு பார்த்தேன், கண்டிப்பா பாக்கலாம்னு சொன்னீங்க.. அதான் போனேன்...

    படம் சூப்பர்.. ரொம்ப நாள் கழிச்சி ரசிச்சி பார்த்த படம்.. இன்னும் கொஞ்சம் பெரிய விமர்சனமா எழுதி இருக்கலாம்

    சந்தானத்துக்கு போட்டியா.. போட்டியே இல்லாம வின்..

    கிருஷ்ணா துணிந்து பேய்ப்படங்கள்ல நடிக்கலாம்.. மாஸ்

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. நம்ப விமர்சனம் எப்பவும் நடுநிலைமையா தானே இருக்கும்..

      நீங்களும் ரசிச்சு பார்த்தது சந்தோசம்.. அப்படியே விமர்சனமும் போட்டுடுங்க.. :)

      Delete
  12. எங்களுக்கு...த்ரில்லர், ஹ்யூமர் மிகவும் பிடிக்கும்....பேய் படங்கள் சிரிக்கும்படி இருந்தா ஜாலிதான்...பார்த்துவிட வேண்டியதுதான்....ஆவி!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க ஸார்..

      Delete
  13. ரோமென்ஸ் - ரேமண்ட்ஸ் :))))))))))))))))

    ஆவிக்கு , ஆவி & பேயி படம் பிடித்திருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை .

    ReplyDelete
    Replies
    1. பேயை விட ஒரு சிட்டிகை தூக்கலாக இருக்கும் காமெடி தான் எனக்கு பிடித்தது.. படத்தை பாருய்யா.. ஜாலியா ரசிச்சு பார்க்கலாம் சம்மருக்கு..

      Delete
  14. த்ரில்லர் கலந்த காமெடி.... பார்க்க நினைத்திருக்கிறேன்.....

    விமர்சனம் படித்தேன் - உங்கள் விமர்சனம் செய்யும் பாணி நன்று.

    ReplyDelete
  15. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...