இன்ட்ரோ
ஆதர்ச நாயகன் தம் அடிக்கலாமா? தண்ணி அடிக்கலாமா? ரசிகர்களை கெடுத்து விடாதா என்று மக்கள் கேட்கக் கூடும். அந்த இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கேரக்டருக்கு தேவை என்ன என்பதை மட்டும் பார்த்து நடிப்பது சிறப்பு.. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு தான் போவேன் என்று அமர்ந்திருந்தால் நாட்டில் நிறைய வி.ஐ.பிக்கள் அதிகரித்துவிடுவர். இந்தப் படத்தை இரண்டு மணி நேர பொழுதுபோக்காய் மட்டும் பார்த்தால் இன்ஜினியர்களுக்கு நலம் பயக்கும்.
கதை
வேலை கிடைக்கவில்லை என்பதற்கு காரணம், தான் படித்த துறையிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்று காத்திருப்பது தான். கிடைத்த வேலையை பார்த்து வாழ்வில் முன்னேறியவர்களையும், உடன் பிறந்த தம்பியையும் கூட போட்டியாக நினைக்கும் ஒரு வி.ஐ.பி, தன்னுடைய சொந்த கம்பெனி என்ற போதும் மகனை உடனே வேலைக்கு அமர்த்தாமல் அனுபவம் கிடைத்த பின் பணியில் அமர்த்தும் ஒரு பிஸினஸ்மேனுடன் மோதி அவனுக்கு கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவது எப்படி என உணர்த்தும் கதை/ லாஜிக் நிச்சயம் புதுசு கண்ணா புதுசு.!
இப்படி வெட்டியாக பக்கத்து வீட்டு ஆன்ட்டியுடன் சீரியல் பார்க்கும் ஒரு துடிப்பான பையனை லவ்வ ஒரு லூஸு ஹீரோயின் வேண்டுமே.. அதுவும் இருக்கிறது..! இப்படி எதுவுமே சரியாக இல்லாத ஒரு கதையை ரசிக்க வைப்பது இசையும், தனுஷின் இயல்பான நடிப்பும்..!
ஆக்க்ஷன்
தனுஷ்- தன்னை மட்டுமே நம்பி எடுத்திருக்கும் படம். முதல் பாதியில் ஈகோ இல்லாத ஹீரோயிசம்.. (உதாரணம் : சரண்யாவின் கையால் விளக்குமாறால் அடி வாங்குவது.) காமெடி, ரோமென்ஸ், ஹீரோயிசம் சரிவிகிதத்தில் கலந்து ஆடியன்ஸை திரையிலிருந்து கொஞ்சம் கூட கண்ணிமைக்காமல் ரசிக்க வைத்தது தனுஷின் அசத்தல் நடிப்பு. இருபத்தி ஐந்தாவது படத்தில் இவ்வளவு மெச்சூர்டாக நடிக்கும் இவர் தன் ஐம்பதாவது படத்திற்குள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு தன்னை தகுதியாக்கிக் கொள்வார் என்ற நம்பிக்கை கொடுக்கிறார். அமலா பால்- மைனாவிற்கு பிறகு கொள்ளை அழகு பிளஸ் நடிப்பு. இவர் திருமணத்துக்கு பின்னும் நடிக்கலாமே என்று யோசிக்கும் போதே இரண்டாம் பாதியில் வரும் பாடல் அது தவறு என நமக்கு உணர்த்திவிடுகிறது.
சமுத்திரகனி - நடுத்தர வர்க்க அப்பாவை ஜெராக்ஸ் எடுத்து வைத்தது போல் இருக்கிறார். "என்ன இருந்தாலும் நீ அடிச்சிருக்க கூடாது" என்று சரண்யாவிடம் சொல்லும்போது நெகிழ வைக்கிறார். சரண்யா இதிலும் அம்மா கேரக்டர் தான். ஆனால் இதிலும் போர் அடிக்கவில்லை.. அதிலும் இரண்டாம் பாதியில் இவர் கண்களை வியர்க்க வைக்கிறார். வில்லனைப் பார்த்து தனுஷ் - உன்னை பார்த்த வில்லன் மாதிரியே இல்லன்னு சொல்வார்.. நமக்கும் அதே பீலிங் தான்.
சமுத்திரகனி - நடுத்தர வர்க்க அப்பாவை ஜெராக்ஸ் எடுத்து வைத்தது போல் இருக்கிறார். "என்ன இருந்தாலும் நீ அடிச்சிருக்க கூடாது" என்று சரண்யாவிடம் சொல்லும்போது நெகிழ வைக்கிறார். சரண்யா இதிலும் அம்மா கேரக்டர் தான். ஆனால் இதிலும் போர் அடிக்கவில்லை.. அதிலும் இரண்டாம் பாதியில் இவர் கண்களை வியர்க்க வைக்கிறார். வில்லனைப் பார்த்து தனுஷ் - உன்னை பார்த்த வில்லன் மாதிரியே இல்லன்னு சொல்வார்.. நமக்கும் அதே பீலிங் தான்.
இசை- இயக்கம்
அனிருத்தின் இசைதான் படத்தின் முதல் ஹீரோ, இரண்டாம் பாதியில் ரசிகன் தூங்கி விழும்போதெல்லாம் அடிவயிற்றில் பசியோடு, அரை மணி நேரம் காத்திருந்தவன் "பரோட்டா எங்கடா" என்று கேட்கும் தொனியில் "வேலையில்லா பட்டதாரி" என்று அலறி எழுப்பி விடுகிறார். பாடல்கள் படத்திற்கு பலம்.. வேல்ராஜ் இயக்கம் ஒக்கே.. முதல் பாதியில் ரேஸ் காரில் பயணம் செய்துவிட்டு பெட்ரோல் காலியாகிவிட இரண்டாம் பாதியில் கரகாட்டக்காரன் வண்டியில் ஏற்றி விடுகிறார். "Poetu" தனுஷ் மனதில் இடம் பிடிக்கிறார்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
அம்மா பாடல், போ இன்று நீயாக, ஊதுங்கடா சங்கு எல்லாம் அருமை - பாடல் மற்றும் படமாக்கிய விதம். தனக்கு முதல் ப்ராஜெக்ட் கிடைத்ததும் மொட்டை மாடியில் அமர்ந்து தனுஷ் நடிக்கும் காட்சி சிறப்பு.ஹீரோ தான் பெரிய இஞ்சினியர் என்று ப்ரூவ் பண்ணுவது பக்கத்து வீட்டு பிகரின் பெட்ரூமை எட்டிப் பார்க்க டெலஸ்கோப் செய்வதிலும், மொட்டை மாடியில் கூரை வீடு கட்டுவதிலும் தான்!! அவ்வளவு பெரிய ப்ராஜெக்ட், அஸ்திவாரம் போட்டு பில்லர் எழுப்பி RC போடும் வரை தவறாக இருப்பதை கண்டுபிடிக்காதது நிச்சயம் ஒரு நல்ல இஞ்சினியருக்கு அழகல்ல.. இந்த லாஜிக் எல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் வி.ஐ.பி அடுத்த வீட்டுப்பையன்..!
Aavee's Comments - One Man Show!
தனுஷ்தான் படத்தின் பெரிய ப்ளஸ் ஆக இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே!
ReplyDeleteநானும் எதிர்பார்த்தேன்.. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே நடித்திருக்கிறார்..
Deleteபாடல்களால் மட்டும் ஓடுமா...? என்பது சந்தேகம் தான்...!
ReplyDeleteமுதல் பாதி ஜாலி.. இரண்டாம் பாதி சீரியஸ்.. கொஞ்சம் மிக்ஸிங் நல்லா பண்ணியிருந்தா இன்னும் சிறப்பா வந்திருக்கும்.. பல நகைச்சுவை காட்சிகள் நல்லா வந்திருக்கு DD
Deleteவணக்கம்
ReplyDeleteசிலமாதங்கள் ஓடியபின்புதான் சொல்லமுடியும் வெற்றி தோல்வியை
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்டிப்பாக வெற்றிதான் ரூபன்!
Deleteபார்க்கனும்...நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க..
Deleteதனுஷின் ப்ளஸ் பாயிண்ட் இமேஜ் என்று எதுவும் ஏற்படுத்திக் கொள்ளாமல் நடிப்பதுதான். முதல் பாதி கலகலப்புன்னும் இசை நல்லாருக்குன்னும் கேள்விபட்டதை ஆவி டாக்கீஸ் உறுதிப்படுத்தியிருக்கு. பாக்கலாம். தனுஷ்க்கு இந்தப் படம் ஹிட் வரிசைல சேர்ந்துடும்னுதான் தோணுது.
ReplyDeleteகண்டிப்பா சார்.. தனுஷ் அடுத்த லெவலுக்கு போன மாதிரி ஒரு பீல் இருக்கு.. இரண்டாம் பாதியும் நல்லா இருக்கு.. புதுசா ஒரு விஷயமும் இல்லாததால கொஞ்சம் இழுக்கற மாதிரி பீல் அவ்வளவுதான்..
Deleteதனுஷின் டயலாக் டெலிவரி அசாதாரணமானது. நகைச்சுவையோ, சோகமோ அந்த முகத்தில் அவ்வளவு அருமையா எக்ஸ்பிரஷன் கொண்டு வருவார். ஹிட் தானே!
ReplyDeleteகண்டிப்பா ஹிட் தான் பாஸு!!
Deleteவிமர்சனம் நன்று
ReplyDeleteபார்க்கிறேன் நண்பரே
நன்றி ஐயா!
Deleteதம 6
ReplyDeleteவணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///விமர்சனங்கள் நன்றாக இருப்பதாகவே வருகின்றன,பார்ப்போம்!
ReplyDeleteவாங்க சார்.. நல்லாயிருக்கீங்களா? பாருங்க.. படம் நல்லாத்தான் இருக்கு..
Deleteநல்லாருக்கு......:) :).!
Deleteவிமர்சனம் அருமை!
ReplyDeleteநன்றி அக்கா
Deleteவிமர்சனம் வழக்கம் போல அருமை! தனுஷ் மிக அருமையான நடிகர்! சரண்யா கேட்கவே வேண்டாம்...அவர் ஏற்ற கதா பாத்திரங்களாகவே வந்தாலும் கூட சலிப்பே தட்டுவதில்லை.....அந்த அளவு அதிலேயே மூழ்கிவிடுவார்....சமுத்ரகனியும் நல்ல டைரக்டர் மட்டுமல்ல நடிக்கவும் செய்கின்றார்......தனுஷ் என்ற நடிகருக்காக இந்தப் படம் பார்க்கலாம்...தான்...
ReplyDeleteஇரண்டாம் பாதி கதையை இன்னும் கொஞ்சம் லாஜிக் ஓட்டைகள் இல்லாமல் சொல்லியிருந்தால் இன்னும் நல்லாவே ரசித்திருக்கலாம்..
Deleteஆளாளுக்கு தனுஷை புகழ்ந்து சூப்பர் ஸ்டார் ஆக்கிருவீங்க போல!
ReplyDeleteஇந்த படத்துல தனுஷ் நடிப்பு நல்லா இருக்கு நண்பா
Deleteவிமர்சனம் அருமை! இங்கு [ துபாய்] இந்தப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது! உங்கள் விமர்சனத்தால் தைரியமாகப்பார்த்து விடலாமென்று நினைக்கிறேன்.
ReplyDelete