1) Bang Bang Bang - கமலுக்கு வேட்டையாடு விளையாடு வில் கிடைத்தது போல் ஒரு அருமையான இன்ட்ரோ ஸாங்.. ரிப்பீட் மோடில் போட்டு கேட்டு ரசிக்கலாம்.. ரஞ்சித் கம்பீர குரலில் அசத்தியிருக்கிறார்..
2) ஒரு கண்ஜாடை - காதல் பாடல் பாஸ்ட் பீட்டில்.. பென்னி தயாள் உச்சஸ்தாயியில் காதலை அலற விட்டிருப்பதும் ஸ்வேதா பண்டிட்டின் மென் குரலும் ஓரிரு கேட்டலுக்கு பின் பிடிக்கிறது.. பயணத்தில் அலுப்பின்றி கேட்க சிறந்த பாடல்.
3) சிரிப்பு என் - மானசியின் கவர்ச்சிக் குரலில் ஒரு ஐட்டம் நம்பர்.. சி சென்டர் ரசிகர்கள் ரசித்து மகிழ..
4) ஏக் தோ தீன் - சுமார் ரகம்.. சூர்யா சொந்தக் குரலில் பாடியிருக்கும் பாடல்.. ரஜினி, கார்த்தி, குரல்களோடு ஒப்பிடுகையில் நல்லாவே பாடியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.. அவர் "உயரம்" தெரிந்து தொடர்ந்து பாடாமல் இருப்பது அவருடைய இமேஜுக்கு நல்லது.. ஆண்ட்ரியாவின் குரலில் இது போன்ற பல பாடலை கேட்டு விட்டதால் அவ்வளவாக சிறப்பு ஏதுமில்லை. ஆனால் தியேட்டரில் ரசிகர்களின் ஆர்பாட்டம் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும்..
5) காதல் ஆசை - ஆல்பத்தின் சிறந்த பாடல்.. யுவனின் குரலில் ஜில்ஜில் மெலடி.
மொத்தத்தில் Yuvan Back with a Bang!!
*********** **************
*********** **************
அண்ணா! டவுன்லோட் லிங்க் அப்படியே கொடுத்திங்ணா ,கேட்டுடலாம்
ReplyDeleteகூகிளாண்டவர் கிட்ட கேளுங்க.. எல்லாம் கிடைக்கும்.. மீ டவுன்லோட் ஆன் ஐ-ட்யுன்ஸ் .. :)
Deleteஆறு படப் பாடல்கள் மாதிரி 2 டூயட், ஒரு யுவன், ஒரு இண்ட்ரோ..டவுன்லோடுவோம்.
ReplyDeleteகேட்டுட்டு சொல்லுங்க..
Deleteயுவன் குரலில் மெலடியா..... கடவுளே!
ReplyDeleteஹஹஹா..
Deleteஅடக் கடவுளே! ஸ்ரீராம் அவர்களின் வார்த்தைகளை வழிமொழிகின்றோம்!!!!
Deleteசூர்யாவும் பாட ஆரம்பிச்சுட்டாரா?!! அவர் நடிப்புலருந்து எப்ப பாட்டு பாடத் தொடங்கினாரு? எதுக்கு இந்த விஷப் பரீட்சை? தாங்கலப்பா....ஆவி சொல்லியிருப்பது ரைட்டுப்பா....சூர்யா ஆவியின் வார்த்தையைக் கேட்டுக்குங்க.......இல்லையென்றால் எம்பெருமான் அந்தப் பழனியாண்டவர் எம்மையெல்லாம் ரட்சிப்பாராக.....
ReplyDeleteஹஹஹா.. உண்மைதான் சார்..!
Deleteஅவர் ‘உயரம்’ தெரிந்து தொடர்ந்து பாடாமல் இருப்பது நலம்! இந்த வரிகளில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது!... ஹாஹாஹா! நல்ல பகிர்வு!
ReplyDeleteநடிகராய் ஒக்கே.. பாடகராய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
Deleteவணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///நன்றி!///அவரு ரொம்ப உசரமோ?உங்களுக்குத் தெரியுமோ?மொத பாட்டிலையே எதிர்ப் பாட்டா?ஹூம்!
ReplyDeleteஒரு ப்ளேட் பிரைட் ரைஸுக்கு ஒரு போர்க் பதம் தானே? ஹஹஹா..
Deletewhat a example!!! SirG
Deleteசூர்யாவும் பாட ஆரம்பிச்சாச்சா ஸ்ஸ்ஸ்ஸ் அபா....
ReplyDeleteஇதே பீலிங் தான் எனக்கும் அண்ணே..
Deleteஇன்னும் கேட்கள பார்த்துக்கேட்டுச் சொல்லுகின்றேன் பாடல்க்கருத்து!
ReplyDeleteசொல்லுங்க பாஸ்!
Deleteநன்றி நண்பரே
ReplyDeleteபாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்கிறேன்
கேளுங்க.. கேளுங்க..
Deleteசூர்யா பாடிய பாடலை கேட்க வேண்டும்...!
ReplyDelete/// உயரம் தெரிந்து பாடாமல் இருப்பது... /// ஹா.... ஹா...
:)
Delete